
Post No. 14,847
Date uploaded in London – 9 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முதலில் முக்கிய சொற் பிரயோகத்தை அறிவோம் ; பிரம்மம் வேறு, பிரம்மா வேறு, பிராமணன் வேறு ; நிறைய பேருக்கு இந்த வேறுபாடு தெரியாது ; ஆங்கிலத்திலும் இந்தியிலும் வடக்கத்தியர்களின் பேச்சு வழக்கிலும் ‘பிரம்மன்’ குழப்பம் உண்டானது .
பிரம்மா என்பவர் படைப்புத் தெய்வம் ; அவர் த்ரி மூர்த்திகளின் ஒருவர் – பிரம்மா விஷ்ணு சதாசிவம் என்று மும்மூர்த்திகளை அழைக்கிறோம் .
பிரம்மாவுக்கு நான்கு தலைகள் ; அவருக்கு நான்கு கைகள் ; அவருடைய மனைவி சரஸ்வதி; அவர்கள் வசிக்கும் இடம் சத்ய லோகம். அவர்கள் இருவருக்கும் வாஹனம் அன்னம் என்னும் பறவை ; பிரம்மாவின் வாயிலிருந்து வேத முழக்கம் வந்துகொண்டே இருக்கும். மனிதனின் பேச்சு, அறிவு, விவேகத்திற்கான கடவுள் சரஸ்வதி; இந்தக் கருத்துக்கள் வேத காலம் முதல் இமயம் முதல் குமரி வரை வழங்கி வருகிறது . பிரஜாபதி என்பது பிரம்மாவின் இன்னுமொரு பெயர் ஆகும்.
பிரம்மாவின் நான்கு கைகளில் கமண்டலம் என்னும் தண்ணீர் பாத்திரம் , ருத்ராக்ஷ மாலை , வேத புஸ்தகம், யாகத்தில் நெய் அல்லது சாதத்தைப்போட உதவும் ஸ்ருவம் என்னும் கரண்டி ஆகியன இருக்கின்றன. வேதமும் வேள்வியும் படைப்பு முதலே உள்ளன என்பதை இவை குறிக்கும் .
இந்துக் கடவுளர் எல்லோரும் தண்ணீருடன் சம்பந்தப்பட்டவர்கள் ; இது ஆரிய -திராவிட வாதம் பேசும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கு செமை அடி கொடுக்கிறது சிவன் தலையில் கங்கை; விஷ்ணு இருப்பதோ கடல் நடுவில்; பிரம்மா வைத்திருப்பது தண்ணீர் பாத்திரம்; வேத கால முக்கிய நதியின் பெயரோ சரஸ்வதி ; பனி நிறைந்த மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் வந்திருந்தால் ஆப்ரஹாமிக் மதங்கள் (யூத, கிறிஸ்தவ முஸ்லீம்) போல தண்ணீர் வாசனையே இல்லாமல் இருக்கும். இந்துக்கள் இந்த நாட்டிலியேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை வேத புராண இதிகாசங்களும் சங்கத் தமிழ் நூல்களும் தெளிவாகச் செப்புகின்றன.
****

சங்கத் தமிழ் நூல்களில் பிரம்மா
நீலநிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண் வரத்தோன்றி — பெரும்பாணாற்றுப்படை வரிகள் 402-404
***
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவர் கட்டி — முருகு. வரிகள் 164-5
***
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ– பரி 5-22
இதை முதல் திருக்குறளில் வள்ளுவன் பயன்படுத்தயுள்ளார்
***
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் – கலி 2-1
இது அப்படியே காளிதாசனின் மொழிபெயர்ப்பு .
படைப்புத் தொழில் துவங்குவதற்கு முன்னர் தோன்றியதால் அவன் ஆதி அந்தணன்..
பிரம்மா வாயிலிருந்து வேதங்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்…
மாநில மியலா முதன்முறை அமையத்து
நாம வெள்ள நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனோடு மலர்ந்த தாமரை…………….. பரி 3-91/4
இதில் மலர்மிசை ஏகினான் பிரம்மா என்ற வள்ளுவர் கருத்தினைக் காணலாம் ; எல்லோரும் காளிதாசனிலிருந்து எடுத்திருக்கலாம்
***
உலகு படைத்தோன் என்ற கருத்து –குறள் 1062, பரி. கலி 106-17; 129-2. நற்றிணை 240 , புறம்.194 ஆகியவற்றில் பல இடங்களில் வருகிறது.
பூவினுட் பிறந்தோன் என்ற கருத்து பரிபாடலில் பல இடங்களில் உள்ளது..
****
காளிதாசன் குமார சம்பவத்தில்தான் பிரம்மா பற்றி அதிகம் பாடியிருக்கிறார் ; ரகு வம்ச காவியத்தில் பிரம்மா இருக்கிறார்.
ஆத்ம பூ , ஸ்வயம்பு, கமலாசன / மலர்மிசை ஏகினான் , பிதாமஹ, பிரஜாபதி , வாகீச, விஸ்வயோநி முதலிய பெயர்களை காளிதாசன் பயன்படுத்தியுள்ளார்.
தமிழில் திருக்குறளில் மூன்றாவது குறளிலேயே இவருடைய பெயர் (மலர்மிசை ஏகினான்) வருவது குறிப்பிடத் தக்கது.
यज्ञाङ्गयोनित्वमवेक्ष्य यस्य सारं धरित्रीधरणक्षमं च।
प्रजापतिः कल्पितयज्ञभागं शैलाधिपत्यं स्वयमन्वतिष्ठत्॥ १-१७
yajñāṅgayonitvamavekṣya yasya sāraṁ dharitrīdharaṇakṣamaṁ ca |
prajāpatiḥ kalpitayajñabhāgaṁ śailādhipatyaṁ svayamanvatiṣṭhat || 1-17
இமய மலையை வருணிக்கும் காளிதாசன் அதுதான் வேத விளைவிக்க பொருள்களை அளிக்கிறது என்றும் அவைகளை பிரம்மாவே சோதித்து வேள்வியின் பலனை இமவானுக்கும் அளித்தார் என்கிறார் — குமார சம்பவம் 1-17
பிரஜாபதி என்ற சொல் இங்கே வருகிறது
****
तस्मिन्विप्रकृताः काले तारकेण दिवौकसः|
तुरासाहं पुरोधाय धाम स्वायम्भुवं ययुः॥ २-१
tasminviprakṛtāḥ kāle tārakeṇa divaukasaḥ |
turāsāhaṁ purodhāya dhāma svāyambhuvaṁ yayuḥ || 2-1
தாரகன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்தியவுடன் அவர்கள் பிரம்மாவிடம் சென்றனர்.
****
तेषामाविरभूद्ब्रह्मा परिम्लानमुखश्रियाम्|
सरसां सुप्तपद्मानां प्रातर्दीधितिमानिव॥ २-२
பிரம்மா ஒளியிழந்த தேவர்கள் முன்னர் தோன்றினார் ; பிரேமா என்ற சொல் இங்கே பயிலப்படுகிறது
teṣāmāvirabhūdbrahmā parimlānamukhaśriyām |
sarasāṁ suptapadmānāṁ prātardīdhitimāniva || 2-2
***
अथ सर्वस्य धातारं ते सर्वे सर्वतोमुखम्|
वागीशं वाग्भिरर्थ्याभिः प्रणिपत्योपतस्थिरे॥ २-३
இந்த ஸ்லோகத்தில் அவர் நான்கு முகம் உடையவர், எல்லாவற்றையும் படைப்பவர் , சொற்களுக்கு இறைவன் என்றும் அவர் தோன்றியவுடன் எல்லோரும் துதித்தனர் என்றும் சொல்லப்படுகிறது
atha sarvasya dhātāraṁ te sarve sarvatomukham |
vāgīśaṁ vāgbhirarthyābhiḥ praṇipatyopatasthire || 2-3
***
नमस्त्रिमूर्तये तुभ्यं प्राक्सृष्टेः केवलात्मने|
गुणत्रयविभागाय पश्चाद्भेदमुपेयुषे॥ २-४
பிரம்மாவைப் புகழும் தேவர்கள் அவரே படைப்புக்கும் முன்னால் வந்தார் என்றும் மும்மூர்த்தி என்றும் முக்குணங்கள் சேர்க்கை என்றும் பாடுகினறனர்
namastrimūrtaye tubhyaṁ prāksṛṣṭeḥ kevalātmane |
guṇatrayavibhāgāya paścādbhedamupeyuṣe || 2-4
***
स्त्रीपुंसावात्मभागौ ते भिन्नमूर्तेः सिसृक्षया|
प्रसूतिभाजः सर्गस्य तावेव पितरौ स्मृतौ॥ २-७
இன்னும் ஒரு ஸ்லோகத்தில் அவரே இரண்டாகி ஆண் பெண் ஆனார் என்று போற்றுகின்றனர்
strīpuṁsāvātmabhāgau te bhinnamūrteḥ sisṛkṣayā |
prasūtibhājaḥ sargasya tāveva pitarau smṛtau || 2-7
***
पुराणस्य कवेस्तस्य चतुर्मुखसमीरिता|
प्रवृत्तिरासीच्छब्दानां चरितार्था चतुष्टयी॥ २-१७
purāṇasya kavestasya caturmukhasamīritā |
pravṛttirāsīcchabdānāṁ caritārthā catuṣṭayī || 2-17
முந்திய ஸ்லோகத்தில் பிரம்மாவை வேதாஹா என்று சொல்லிவிட்டு அடுத்த ஸ்லோகத்தில் புராண கவி- பழம்பெரும் கவி –என்கிறான் காளிதாசன்
****
ரகுவம்சத்திலும் வேதாகா 1-29 என்று சொல்கிறார்.
ब्राह्मे मुहूर्ते किल तस्य देवी कुमारकल्पं सुषुवे कुमारम्|
अतः पिता ब्रह्मण एव नाम्ना तमात्मजन्मानमजं चकार॥ ५-३६ ராகு வம்சம்
பிரம்ம முஹுர்த்த நேரத்தில் பிறந்த ரகுவின் பிள்ளை முருகனைப்போல இருந்தான். அவனுக்கு பிரம்மாவின் பெயரான அஜன் என்ற பெயரைச் சூட்டினான்
brāhme muhūrte kila tasya devī kumārakalpaṁ suṣuve kumāram
ataḥ pitā brahmaṇa eva nāmnā tamātmajanmānamajaṁ cakāra || 5-36
****
வேத கால இலக்கியங்களில் 300- க்கும் மேலான இடங்களில் பிரம்மாவின் பெயர் வருகிறது.
Please go to wisdomlib.org for more details
***
அமரகோசத்தில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள்
1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்
2.ஆத்மபூ= தான் தோன்றி
3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்
4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.
5.பிதாமஹர்= பாட்டனார்
6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)
7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்
8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)
9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )
10.தாதா = உயர் தலைவன்
11.த்ருஹினஹ= படைப்போன்
12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்
13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்
14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்
15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்
16.வேதா= வேதம் உடையோன்
17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)
18.விதாதா= உயர் தலவன்
19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்
20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்
21.பூர்வ= முன்னோன்
22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்
23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்
24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)
25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்
26.சத்யக = உண்மை விளம்பி
27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்
28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்
29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்.
–subham—
Tags- காளிதாசன் காவியங்கள், சங்கத் தமிழ் நூல்கள், பிரம்மா, படைப்போன், ஆதி அந்தணன், முதியவன்