
Indra images in South East Asia.

Post No. 14,860
Date uploaded in London – 12 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

Indra , Copper idol from Nepal.
தமிழ் நிகண்டில், குமார சம்பவத்தில், இந்திரன்
தமிழ் மொழியில் மிகப்பழைய நிகண்டு (அகராதி) திவாகரம். உலகின் முதல் நிகண்டாகிய அமரகோசத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இது எழுதப்பட்டது . அமரகோச ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளது; கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத அகராதி வரிசையை பயன்படுத்தியுள்ளது; திவாகரம் தொகுத்தவர் சில விஷமங்களையும் செய்துள்ளார் . நூலில்
ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் உள்ளன. ஆகையால் சம்ஸ்க்ருத நிகண்டுகளின் தமிழ் வடிவம் என்றே சொல்ல வேண்டும் . அமர கோசம் படித்தவர்களுக்கு இது விளங்கும்.
இந்திர ன் பற்றி திவாகரம் நிகண்டு சொல்லும் சொற்கள் :-
அமராவதியோன், ஆயிரங்கண்ணன் , சதமகன், கோபதி, போகி, சங்கிராந்தனன், பாகசாதனன், வச்சிரப்படையோன், மேகவாகனன், விண்முழுதாளி, வாசவன், மகவான், வானவன், கெளசிகன்,ஆகண்டலன், அயிராவதன், வலாரி, புருகூதன், சக்கிரன், புரந்தரன், மருத்துவன், மருதக்கிழவன், வரைசிறை க்கரிந்தோன், அரி , சசீவல்லவன், திருமலி, சுவர்க்கம், வேள்வி நாயகன், புலவன், வேந்தன், புரோகிதன், சுனாசி, கரியவன், புனிதன், காண்டாவனன், மால், வெள்ளைவாரணன், தேவர் வேந்தன், பொன்னகர்ச் செல்வன், ஐந்தருநாதன்.
பின்னர் சம்ஸ்க்ருத அமரகோச நூலில் உள்ளத்தைப் போலவே அவரது மனைவி, வாகனம் , மகன், நகர் முதலியவற்றை அதே வரிசையில் சொல்கிறார்; பொதுவாக சம்ஸ்க்ருத நூலை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். சில இடங்களில் சொற்களைத் தமிழ்ப் படுத்தியுள்ளார்; அதிலும் சம்ஸ்க்ருதம் உளது!
உதாரணத்துக்கு சஹஸ்ராக்ஷன்= ஆயிரங்கண்ணன் ; இதில் ஆயிரம் என்பது சம்ஸ்க்ருத சஹஸ்ரம் என்பதன் மருவு என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
****
இனி காளிதாசனின் குமார சம்பவத்தில் வரும் இந்திரனைக் காண்போம்: இந்திரன் வரும் இடங்கள்—1-20; 2-11; 2-63/4; 3-2; 3-11;3-22;7-45;7-71
“பிறகு ஆகண்டலன் / இந்திரன் தனது கால்களைத் தொடையின் மீதிருந்து அகற்றி STOOL ஸ்டுலின் மீது வைத்துவிட்டு மன்மதனிடம் பேசினான்.
ஐராவதத்தைத் தொட்டுத் தடவிக் கொடுத்தாததால் சொர சொரப்பாகிப் போன கைகளால் தொட்டு மன்மதனை ஆசீர்வதித்தான் 3-11
இதில் இந்திரன் மட்டுமின்றி அவனது ஐராவதம் என்னும் யானை ஆகியவற்றையும் சேர்த்துவிட்டான் கவிஞன் 3-22
****
இந்திரன் தலைமையில் வந்த லோகபாலர்கள் எளிய உடைகளை அணிந்துகொண்டு அதிக படம் காட்டாமல் கூப்பிய கரங்களுடன் சிவ பெருமானச் சந்திக்க நந்தி தேவனிடம் அனுமதி கோரினார்கள் .
இந்திரன், சப்த ரிஷிக்கள், சிவ கணங்கள் எல்லோரும் வந்தார்கள். புரூஹூதா என்ற சொல்லினையும் வ்ருத்ர ஹன் என்ற சொல்லினையும் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் காண்கிறோம் 7-45; 7-46
இரண்டாவது சர்க்கத்தில் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் பாகசாசன , சதமகம் இந்திரன் 2-63;2-64 என்ற சொற்களைக் காளிதாசன் பயன்படுத்துகிறான் இதில் சதமகம் இந்திரன் என்று சொல்லினுக்கு உரை எழுதியோர் க்ரது என்றால் யாகம் என்றும் ஞானம் என்றும் பொருள் என்கிறார்கள் சதக்ரது என்பதற்கு நூறு அஸ்வமேத யாகம் செய்தவர் என்ற பொருள் பிற்காலத்தில் வந்ததென்றும் வேதகாலத்தில் நூறு குணங்கள் /ஞானம் என்றே பொருள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
குமார சம்பவ நூலில் இந்திரனுக்குப் புதிய சொற்களை காளிதாசன் பயன்படுத்தியதை கண்டோம்; இவை தமிழில் பரிபாடலில் அதிகம் பயன்படுத்தப்பட்டன .
Sanskrit slokas are taken from sanskrtdocuments.org
तत्र निश्चित्य कन्दर्पमगमत्पाकशासनः|
मनसा कार्यसंसिद्धि त्वराद्विगुणरंहसा॥ २-६३
tatra niścitya kandarpamagamatpākaśāsanaḥ |
manasā kāryasaṁsiddhi tvarādviguṇaraṁhasā || 2-63
***
अथ स ललितयोषिद्भ्रूलताचारुशृङ्गं
रतिवलयपदाङ्के चापमासज्य कण्ठे|
सहचरमधुहस्तन्यस्तचूताङ्कुरास्त्रः
शतमखमुपतस्थे प्राञ्जलिः पुष्पधन्वा॥ २-६४
atha sa lalitayoṣidbhrūlatācāruśṛṅgaṁ
rativalayapadāṅke cāpamāsajya kaṇṭhe |
sahacaramadhuhastanyastacūtāṅkurāstraḥ
śatamakhamupatasthe prāñjaliḥ puṣpadhanvā || 2-64
-****

ரகுவம்சத்தில் 2-75, சந்திரனையும் கார்த்திகேயனையும் உவமையாகச் சொல்லிவிட்டு சுதக்ஷிணையின் கர்ப்பத்தில் லோகபாலகர்களின் அம்சங்களும் புகுந்தன என்கிறார் காளிதாசன்
மஹாராணிகள் கர்ப்பம்தரித்தால் இந்திரன் முதலான எட்டு தேவர்களும் கர்ப்பத்தில் பிரவேசிப்பார்கள் என்று மனு கூறுகிறார்; அதாவது எட்டு லோகபாலகர்கள் எண்திசைகளை ஆளுவது போல பிறக்கப்போகும் ராஜ குமாரனும் எட்டுத் திசைகளை வெல்வான் என்பது பொருள்.
अथ नयनसमुत्थं ज्योतिरत्रेरिव द्यौः
सुरसरिदिव तेजो वह्निनिष्ठ्यूतमैशम्।
नरपतिकुलभूत्यै गर्भमाधत्त राज्ञी
गुरुभिरभिनिविष्टं लोकपालानुभावैः॥ २-७५
atha nayanasamutthaṁ jyotiratreriva dyauḥ
surasaridiva tejo vahniniṣṭhyūtamaiśam|
narapatikulabhūtyai garbhamādhatta rājñī
gurubhirabhiniviṣṭaṁ lokapālānubhāvaiḥ || 2-75
குப்தர்களின் அலஹாபாத் சமுத்திர குப்தன் கல்வெட்டும் மதுராவிலுள்ள சந்திர குப்தன் கல்வெட்டும் மன்னரின் வெற்றியை இந்திரனோடு ஒப்பிடுகின்றன
***
கிழக்கு திசைக்கு அதிபன்
स ययौ प्रथमं प्राचीं तुल्यः प्राचीनबर्हिषा|
अहिताननिलोद्धूतैस्तर्जयन्निव केतुभिः॥ ४-२८
sa yayau prathama.n praacii.n tulyaH praaciinabarhiShaa |
ahitaananiloddhuutaistarjayanniva ketubhiH|| 4-28
இந்திரனுக்கு ப்ராசீனபர்ஹி – கீழ்திசைக்கு அதிபதி என்று பெயர் உண்டு; அதைக் கவிஞன் இங்கு பயப்படுத்தக் காரணம் ரகுவும் இந்திரனைப்போன்றவன்; ஆகையால் முதலில் கிழக்கு திசையிலுள்ள மன்னர்களை வெல்லப்புறப்பட்டான் என்பது காளிதாசனனி பாடல் .
இது மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும், கால்டுவெல் கும்பலுக்கும் மரண அடி கொடுக்கும் பாடல். இன்று வரை யாகங்களிலும் பூஜைகளிலும் இந்திரன் கிழக்கு திசைக்கு அதிபன் என்றே புரோகிதர்கள் பூஜை செய்து வருகிறார்கள் . இது இந்துக்கள் கங்கைச் சமவெளியிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று சுமேரியா, எகிப்தில் நாகரீகத்தை நிலைநாட்டிவிட்டுப் பின்னர் இன்னும் மேற்கேயுள்ள கிரேக்கம் ரோமானிய பிரதேசங்களில் நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்று காட்டுகிறது. ஏனெனில் ரிக்வேதத்தில் முப்பது நதிகளின் பெயர்கள் இருந்தாலும் நதிகள் ஸுக்தத்தில் கிழக்கிலுள்ள கங்கையில் துவங்கி மேற்கில் ஆப்கானிஸ்தான் வரையுள்ள நதிகளைக் குறிப்பிடுகிறார்கள். இதனால் இந்திரனை கிழக்குத் திசையோன் என்று கவியும் சொல்கிறார்.
********************

என்னுடைய பழைய கட்டுரைகள்
இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்!
(This article is available in English as well in my blogs: INDRA FESTIVAL IN THE VEDAS AND TAMIL EPICS: swami.) 11 -8-2012
சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!
ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1289; தேதி:– 15th September 2014.
This article was already published in English.
தொல்காப்பியத்தில் இந்திரன் 14 -6-2013
Indra in the oldest Tamil Book 14-6-2013
AINDRA GRAMMAR, PANINI AND TOLKAPPIAR (Post No.7266)
Date: 26 NOVEMBER 2019
‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179)
Date uploaded in London – 5 OCTOBER 2021
AMAZING TAMIL HINDUS! INDRA’S ‘AMRIT’ IN 40 PLACES in 2000 YEAR OLD TAMIL BOOKS! (Post.9331) Date uploaded in London – –2 MARCH 2021
இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.
சிந்து சமவெளியில் இந்திரன்!
லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1269; தேதி: 6 செப்டம்பர் 2014
உலகின் முதல் சிவில் எஞ்சினீயர் இந்திரன்!
– லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண்:–1267; தேதி 5 செப்டம்பர் 2014
இந்திரன் நரியாக மாறியது ஏன்? நாஸ்தீகர்களுக்கு எச்சரிக்கை! (Post.14,341)
Date uploaded in London – 3 April 2025
இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு?
தொகுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்
தொகுப்பு எண்: 1175; தேதி: 16 ஜூலை 2014.
சங்க இலக்கியத்தில் அமிர்தம், அமிழ்தம், இந்திரன் (Post No.9330)
Date uploaded in London – –2 MARCH 2021
பிராமணர்களை இந்திரன் கொலை செய்தது ஏன்?
கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1071; தேதி:- 29 May 2014.
(இக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் என்னால் வெளியிடப்பட்டது)
–subham—
Tags- நிகண்டு, திவாகரம், காளிதாசன், காவியங்கள், இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள், ஒப்பீடு, Part-3, Indra images, statues