சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-2 (Post.14,867)

SUN GOD SURYA IN DACCA MUSEUM

Written by London Swaminathan

Post No. 14,867

Date uploaded in London –  14 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

சூரியனுக்கு ஒரு சக்கர தேர் உண்டு அதை ஏழு குதிரைகள் இழுக்கும் என்பதை வேதம் முதல் சங்கத்தமிழ் நூல்கள் வரை காண்கிறோம்

இதோ  பரிபாடல்,  பதிற்றுப் பத்து  வரிகள் 

மாசில் ஆயிரம்கதிர் ஞாயிறு தொகூஉம்  – பரி.3-22;

உலகிருள் அகற்றிய பதின்மரும்  இருவரும் – பரி.8-4;

ஞாயிறு பழகிய மாயமொடு சுடர்திகழ் -பதிற்றுப் பத்து  62-6

நிலம்பொறை பெயரா அநீர் ஞாமறவந் தீண்டி

……………….

ஞாயிறு பட்ட அகன்றவாறு கூட்டத்து  பதிற்று -பதிற்றுப் பத்து.72-9 

சூரியனுடன் எண் 12 – தொடர்புப்படுத்தும் சொற்கள், 12 மாதங்கள் 12 ராசிகளை ஆகியவற்றை அறிந்து புலவர்கள் பாடியிருப்பதைக் காட்டுகிறது; இது வேதத்திலேயே உள்ளது.

***

ஞாயிற்றின் ஒற்றைச் சக்கர தேர்,  குதிரை

ஒருகால் ஊர்தி பருதியஞ்செல்வன்

குட வயின் மாமலை மறைய  -அகம் 360;

நிரைசெலல் இவுளி  விரைவுடன் கடை இ

அகலிரு விசும்பில்  பகல்செலச் சென்று – அகம். 363

காயசினத்தகதிர்ச் செல்வன்

தேர்பூண்ட மா போல

வைக்கள்தோறும் அசைவின்றி -பட்டினப்பாலை 122-124;

****

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி

உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .(5)

–திருமுருகாற்றுப்படை

****

ஞாயிறு என்ற சொல்லும் அதன் உதயமும் சுமார் பத்து இடங்களில் வருகிறது இதில் சூரியனை மன்னரின் ஆண்மைக்கு ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது . இதை ரகுவமத்திலும் கண்டோம்.

ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,

புறநானூறு  55 .

காளிதாசன் கால மன்னனின் பெயர் விக்ரம ஆதித்தன் = விக்ரமாதித்தன் ;  இதைப் புறநானுற்று ஆண்மையில் கண்டோம்.

****

மலைபடுகடாம் நூலிலும் இதே கருத்து வருகிறது

பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும்

ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் . . . .[85]

இருள் நீக்க எழும் இளஞாயிறு போன்ற புகழைக் கொண்டவன் நன்னன் என்று புலவர் புகழ்கிறார்.

****

மண்டிலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் சூரிய சந்திரனுடன் வரும் பாட்டுகள் பல உண்டு.

அகம். 11;31; புறநானூறு 31. பரி.19-19;

காளிதாசனும் மண்டலம் என்ற சொல்லை வட்டம் என்ற பொருளில் பயன்படுத்துகிறான்

Sanskrit dictionary

[«previous (M) next»] — Mandala in Sanskrit glossary

Maṇḍala (मण्डल).—a. [maṇḍ-kalac] Round, circular; मण्डलाग्रा बृसीश्चैव गृहान्याः पृष्ठतो ययुः (maṇḍalāgrā bṛsīścaiva gṛhānyāḥ pṛṣṭhato yayuḥ) Rām.5.18.12.

-laḥ 1 circular array of troops.

2) A dog.

3) A kind of snake.

-lam 1 A circular orb, globe, wheel, ring, circumference, anything round or circular; न्यग्रोधं च सुमण्डलम् (nyagrodhaṃ ca sumaṇḍalam) Mahābhārata (Bombay) 12.169. 12; करालफणमण्डलम् (karālaphaṇamaṇḍalam) R.12.98; आदर्शमण्डलनिभानि समुल्लसन्ति (ādarśamaṇḍalanibhāni samullasanti) Ki. 5.41; स्फुरत्प्रभामण्डलया चकाशे (sphuratprabhāmaṇḍalayā cakāśe) Kumārasambhava 1.24; so रेणुमण्डल, छाया- मण्डल, चापमण्डल, मुखमण्डल, स्तनमण्डल (reṇumaṇḍala, chāyā- maṇḍala, cāpamaṇḍala, mukhamaṇḍala, stanamaṇḍala) &c.

2) The charmed circle (drawn by a conjurer); मण्डले पन्नगो रुद्धो मन्त्रैरिव महाविषः (maṇḍale pannago ruddho mantrairiva mahāviṣaḥ) Rām.2.12.5; जानन्ति तन्त्रयुक्तिं यथास्थितं मण्डलमभि- लिखन्ति (jānanti tantrayuktiṃ yathāsthitaṃ maṇḍalamabhi- likhanti) Mu.2.1.

3) A disc, especially of the sun or moon; तेनातपत्रामलमण्डलेन (tenātapatrāmalamaṇḍalena) R.16.27; अपर्वणि ग्रहकलुषेन्दुमण्डला (aparvaṇi grahakaluṣendumaṇḍalā) (vibhāvarī) M.4.15; दिनमणिमण्डलमण्डन भवखण्डन  (dinamaṇimaṇḍalamaṇḍana bhavakhaṇḍana e) Gītagovinda 1.

FROM WISDOMLIB.ORG

**** 

SUN GOD SURYA IN DELHI AIRPORT

சாகுந்தலத்திலும் குமார சம்பவ நூலிலும் சவிதா,  ரவி, பானு , ஹரி , சப்தசப்தி முதலிய சொற்களை காளிதாசன் பயன்படுத்துகிறான் அவனுடைய பச்சைக் குதிரைகளையும் ரகுவம்ச காவியத்தில் சொல்கிறான்.

சப்த =ஏழு , சப்தி=குதிரை  (சாகுந்தலம் 6-30;

குமார சம்பவத்தில் ஆறு, ஏழு பாடல்களில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார் 8-40 to 8-54 

***

முதல் பகுதியில் சூரியனுக்குள்ள இருபது தமிழ்ப் பெயர்களைக் கண்டோம்; இதோ சம்ஸ்க்ருதத்திலுள்ள 37 பெயர்கள்:

சூரியனுக்கு 37 பெயர்கள்!

அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகராதி;   .அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபானு:= சித்ரபானுஹு)

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா = 12 உருவங்களை உடையவன்

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

 ****

SUN AND NAVA GRAHAS IN OXFORD MUSEUM

தமிழ்நாட்டில் தினமணிதினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ SUN  போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வோருக்கு மித்ர, ரவி, சூர்ய, பானு, கக, பூஷண, ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்ய, சவித்ர, அர்க்க, பாஸ்கர என்ற பன்னிரெண்டு நாமமங்களும் நன்றாகத் தெரியும். பிராமணர்கள் மூன்று வேளைகளிலும் சூரியனை நோக்கிச் சொல்லும் மந்திரங்களும் சூரியனை நண்பகலில் கைவிரல் இடுக்கில் காண்பதும் அறிந்ததே

 ***

வியப்பான விஷயம் என்ன வென்றால் ரிக்வேத காலத்திலிருந்து சுமார் 5000 ஆண்டுகளாகத் தினமும் சூரிய வழிபாடு நடப்பது இந்தியாவில் மட்டுமே. அதுமட்டுமல்ல கோவில் கட்டிய சிற்பிகள் நூற்றுக் கணக்கான கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி புகுந்து (சுவாமி) விக்கிரகத்தின் மேல் விழச்செய்யும் என்ஜினீயரிங் அற்புதத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது . இதனால் ஆதிசங்கரர் ஆறு சமயம் நிறுவிய பொழுது சூரியன் வழிபாட்டினை செளரம் என்று அறிமுகப்படுத்தினார்

குப்தர் கால கல்வெட்டுகளில் சூரியன் கோவில் செப்பனிடப்பட்ட செய்தி உளது. மேலும் மூல்டான் நகரிலிருந்த புகழ்பெற்ற சூரியன் கோவிலை சீன யாத்ரீகர்கள் குறிப்பிடுகின்றனர்; அதை ஒளரங்க சீப் அழித்த  செய்தியையும் பிற்கால யாத்ரீகர்கள் எழுதி வைத்தனர் அந்தக்கோவிலில் பல அற்புதங்கள் இருந்தததையும் எழுதி வைத்துள்ளனர் ; குஷான மன்னர்கள் தங்களுக்கே உரித்தான ஆடைகள், காலணிகளுடன் சூரிய பகவானைச் சித்தரித்துள்ளனர் . தமிழ்நாட்டின் கும்பகோணம் ,தாராசுரம் போன்ற இடங்களில் சூரியன் ரத வடிவில் மண்டபங்கள் உள்ளன .

அதிசயத்திலும் அதிசயம் திருஞான சம்பந்தர் கோளறுபதிகத்தில் முதல் பாடலில் ஞாயிறு -திங்கள் -செவ்வாய்- என்று வரிசைப்படுத்தி 9 விண்வெளி பிரகாசங்களைக் கூறுகிறார் இன்று உலகம் முழுதும் சண்டே- மண்டே- SUNDAY -MONDAY …. என்று அதே வரிசையில் காலண்டரை வெளியிடுகின்றனர்; சம்பந்தர் இப்படிப் பாடியதற்கு காரணம் அவர் பிராமணர் என்பதால்தான் ஏனெனில் பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று வேளைகளில் ஆதித்யம் தர்ப்பயாமி என்று துவங்கி அதே வரிசையில் ராகு கேது வரை நீரை விட்டு வணங்குகின்றனர் இதையே சம்பந்தர் பாடினார் அதையே இன்று நாம் ஆங்கிலத்தில் சொல்லி வருகிறோம் அதில் சூரியனுக்கே முதலிடம்- ‘சண்டே’!

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை. பிரபாகரன், அருணன், ரவி, ரஸ்மி , மித்ரா, ஜோதி சூர்யா, பானு ஆதித்தனார் சவிதா முதலியன

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

சூர்ய சாரதியின் பெயர்கள்:- சூர்யசுத:, அருண:, அனூரு:, காஸ்யபி, கருடாக்ரஜ:

கிரணங்களின் பெயர்கள்:– கிரண:, உஸ்ர:, மயூக:, அம்சு:, கபஸ்தி:, க்ருணி:, க்ருஷ்ணி:, பானு:, கர:, மரீசி:, தீதிதி:

சூர்யப் பிரபைக்கான பெயர்கள்:- ப்ரபா, ருக், ருசி:, த்விஷ், பா:, சவி:, த்யுதி:, தீப்தி:, த்யுதிமதி, ரோசி:, சோசி:

தீப்தி போன்ற பெண்களின் பெயர்கள் இந்தப் பிரபை (ஒளி மண்டலம், ஒளிவட்டம்) யிலிருந்து வந்தவையே.

சூரிய வெப்பத்துக்கான பெயர்கள் முதலிய விஷயங்களையும் அமரம் உரைக்கும். உரைகாரர்களின் உரைகளுடன் படித்து இன்புறவேண்டிய நூல்.

SUN GOD IN BRITISH MUSEUM.

*****

 to be continued………………………….

tags- சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில், சூரியன் வழிபாடு-2 , சூரியனுக்கு 37 பெயர்கள் ,நிகண்டு, அமரகோசம், ஏழு குதிரை , SUN GOD IMAGES

Leave a comment

Leave a comment