Post No. 14,871
Date uploaded in London – 15 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சூரியனையும் சந்திரனையும் இருசுடர் என்று புறநானூறு (65 ) போற்றுகிறது
நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய
ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல,
சேரன், சோழன் ஆகிய இருவரில் ஒருவன் வெளிப்பட
மற்றொருவன் மறைந்தான்.
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
இது அப்படியே குமார சம்பவ நூலில் எட்டாவது சர்க்கப் பாடல்களில் வருகிறது.
***
சூரியன் எழ, சந்திரன் மறையும் காட்சி – சாகுந்தலம் 4-12
ரகு வம்சம் 8-15
ராமன் சூரியன், பரசுராமன் சந்திரன் 11 -82 ரகு
***
சூரியன் -தாமரை, சந்திரன்- அல்லி – ரகு 17-75
சூரியனைக் கண்டால் பாவம் அழியும் – ரகு17-74
பகவான் சூர்ய – விக்ரம 3-18; 4
புறநானூற்றில் நிலவும் கதிரவனும் வரும் பாடல்கள்
சூரியன் சந்திரன் – இரு கண்கள் 365;
6, 8, 25, 231, 362, 365, 376, 27, 55, 56, 59, 65, 174.
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! –6
xxx
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்
தண் கதிர் மதியம் போலவும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!—56
xxx
ஒரு புலவர் சூரியனை எழச் செய்யும் ஆற்றலும் உடையவன் மன்னன் என்று புகழ்கிறார்
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,—38
***
சேரமான் கடுங்கோ வாழியாதன் என்பவன் சூரியனைப் போலவே செயல்படுகிறான் என்கிறார் கபிலர்.
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக,
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை,
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.–8
****
சூரியன் முன் இருள் போல- சாகுந்தலம் 5-15; புறம் 90, 4; முருகு 1/2
***
விக்ரம ஊர்வசி நாடகத்தில் சூரியனைக் கடவுள் என்று கூறுவதைத் தமிழர்களும் ஞாயிற்றுப்புத்தேள் என்று கலித்தொகையில் 108-13 குறிப்பிடுகின்றனர் .
xxx
அகநானூற்றில்
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு என்று போ றப்படுகிறார் -99
ஞாயிற்றுக்கு ஒரு சக்கரத் தேர்- 360
xxx
கிரகணங்களைப்பற்றி வரும் இடங்களில் எல்லாம் சூரியனும் சந்திரனும் பாம்பால் விழுங்கப்படுவதாகக் கூறும் கதை சங்க நூல்களிலும் காளிதாசன் நூல்களிலும் வருகிறது ; இதில் சந்திரன் பெயர்தான் அதிகம் அடிபடுகிறது .
***
பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் கதிரவன் வரும் இடங்கள் எண்ணிலடங்கா. இவற்றைத் தொகுத்து காளிதாசன் நூல்களுடன் ஒப்பிட்டால் தனி புத்தகமே தேவைப்படும்
***
நிலவு, கதிரவன் செய்திகளை காளிதாஸனிலும் சங்கநூல்களிலும் ஒப்பிட்டு ஆராய நிறைய விஷயங்கள் உள்ளன . நான் இந்தக் கட்டுரையில் விரிவாக எழுதவில்லை.
***
உலகில் சூரியனுக்குப் பல இடங்களில் கோவில்கள் உண்டு ஆனால் ஒரிஸ்ஸாவில் கொனாரக், காஷ்மீரில் மார்த்தாண்ட், குஜராத்தில் மதெரா முதலிய 13 சூரியன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இவைகளில் பல முஸ்லீம்களின் தாக்குதலால் அழிந்தன; பூஜைகள் நின்றன. ஆயினும் இந்துக்களின் சூரிய வழிபாடு நிற்கவில்லை.
சந்தியாவந்தன மந்திரத்தில் சூரியன்
1.பிராமணர்கள் நாள்தோறும் மூன்று முறை வேத மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு த்ரி கால சந்தியா வந்தனம் என்று பெயர்.
2.சூரியனார் கோவில் முதலிய கோவில்களில் இன்றும் வழிபாடு நடக்கிறது. எல்லா தென்னிந்திய கோவில்களிலும் சூரிய, சந்திரர், நவக் கிரஹ சந்நிதிகள் உண்டு.
3.சூரிய சஞ்சாரம்: இது எல்லா ஜாதியினருக்கும் முக்கியமானது. சூரியனின் வடதிசைப் பயணத்தை (உத்தராயண புண்ய காலம்/மகர சங்கராந்தி/ பொங்கல்) எல்லோரும் கொண்டாடுகிறோம். சூரியனின் தென் திசைப் பயணத்தையும் (தட்சிணாயன புண்ய காலம்) எல்லோரும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு நேரங்களில் தை, ஆடி அமாவசைகளில் எல்லா ஜாதியினரும் புனித நதி, கடற்கரைகளில் நீத்தாரை நினைந்து நீர்க்கடன் செலுத்துவர். தமிழர்கள் இன்று வரை இதைச் செய்துவருகின்றனர்.
இதே தான் ஸ்டோன்ஹெஞ்ச்சிலும் நடை பெற்றது. பிரிட்டன் என்பது குளிர் நாடாகையால் தட்சிணாயன புண்ய காலத்தை (தென் திசைப் பயணம்) பெரிதாகக் கொண்டாடினர். இப்பொழுதும் மிக நீண்ட பகல் பொழுதுடைய ஜூன் 21–ஆம் தேதி த்ரூய்ட்ஸ் என்ற பெயரில் வெள்ளாடை தரித்த ஒரு குழு விநோதச் சடங்குகளைச் செய்கின்றது.இந்துக் கோவில்கள் பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையாஇ நோக்கியே இருக்கும்.
நவக்கிரஹ சந்நிதிகள் வரும் முன்னரே சூரியன், சந்திரன் சந்நிதிகள் நம் கோவில்களில் உள.
மேலும், ஒரு கோவில் தட்சிணாயணத்திலோ, உத்தராயணத்திலோ கட்டப்பட்டால் அதற்குத் தக முகப்பு, சந்நிதிகளை அமைக்கும் வழக்கமும் உண்டு.
யாக சாலை பூஜைகளில் காலையில் துவங்கும் போது சூரிய பூஜை முதலில் செய்ய்ப்படும்.
இவை அனைத்தும் இன்று வரை நாம் செய்யும் சூரியவழிபாட்டுக்கு சான்று பகரும்.
****
சூரியனார் கோவில் குலோத்துங்க சோழன் காலத்தில் உருவானது; ஆனால் ஆந்திரத்துள்ள அரசவல்லி சூரியநாராயணன் கோயில் (Arasavalli Sun Temple) என்பது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் ஆகும் .கதார்மல் சூரியக் கோயில் (Katarmal) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில்அமைந்த புகழ்பெற்ற பழமையான கோவில் ஆகும்
அதர்வண வேதத்தில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.
***
இதோ அதர்வண வேத மந்திரமும் Griffith கிரிப்பித் விமர்சனமும்
காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)
மந்திரம் 7
“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.
நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன் பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு காணக்கிடக்கிறது
கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு
சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :
இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic ரிபப்ளிக் என்ற நூலில் உளது
அக்காலத்திலேயே, வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.
***
My articles on the same subject:—
சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது!(Post No.10,301)
Post No. 10,301
Date uploaded in London – – 5 NOVEMBER 2021
DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …
https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…
8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …
Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature
https://tamilandvedas.com › tamil-arti…
29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … ‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179) …
Was Jayadratha killed by a Solar Eclipse? | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2012/…/…
·
3 Jan 2012 — The earliest reference to a solar eclipse occurs in the Rig Veda. Atri Maharishi speaks of the wonders of the solar eclipse (RV5-40-5).
TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS – Tamil and …
https://tamilandvedas.com › two-rare…
4 Jan 2020 — TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS– Part 1(Post No.7418). Research article Written by London Swaminathan.
TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS
https://swamiindology.blogspot.com › 2020/01 › two-r…
4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …
TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) – Tamil …
https://tamilandvedas.com › 2020/01/05 › hydrotherap…
5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article
–subham—
Tags- சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல், சூரியன் வழிபாடு, Part 3