சங்க இலக்கியத்திலும் காளிதாசன் நூல்களிலும் பிறை வழிபாடு (Post No.14,886)

Written by London Swaminathan

Post No. 14,886

Date uploaded in London –  20 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சூரியனையும் சந்திரனையும் மன்னருக்கு ஒப்பிடுவதை தமிழில் புறம் 6, 38, 56  மற்றும் மதுரைக்காஞ்சி 7,8 , கலி 100  ஆகிய பாடல்களில் காணலாம். மன்னரின் ஆண்மைக்கும் இருள் அகற்றி ஒளி தரும் ஆற்றலுக்கும் சூரியனை ஒப்பிட்டனர். சந்திரனை குளுமையான ஒளிதரும் தன்மைக்கு மன்னர்களை ஒப்பிட்டனர்.

நிலவினை பாம்பு விழுங்குதல்– கிரகணம்–நிலவில் குறு முயல் இருத்தல் போன்றவற்றையும் புலவர்கள் குறிப்பிட்டனர் . ஆயினும் சந்திரனை வழிபடும் வழக்கம் தனிச் சிறப்பானது; சுமேரியாவில் நன்னா என்ற பெயரில் வழிபட்டனர் இந்துக்கள் மட்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தனர் அதாவது பிறைச் சந்திரனையும், அதைத் தலை முடியில் சூடிய சிவனையும் ஒரே நேரத்தில் வணங்கினர்.

திங்கள், மதியம், பாற்கதிர் , நிலவு, நிலா என்ற பெயர்களில் சந்திரனைப் போற்றுகின்றனர்

தமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; முழு நிலவு-புறம் 60.

****

அயிரை பரந்த அம்தண் பழனத்து

ஏந்தெழில் மலர தூம்புடைத் திரள்கால்

ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்

இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்

தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்கு

அரியம் ஆகிய காலைப்

பெரிய நோன்றனிர் நோகோ யானே.– குறுந்தொகை 178

தொழுதுகாண் பிறை = கன்னிப்பெண்கள் தொழுது காத்திருந்து பார்க்கும் மூன்றாம் பிறை.

****

வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்

செவ்வாய் வானத் தையெனத் தோன்றி

இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ

மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்

உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது

நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி

வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்

தழுங்க னெஞ்சமொடு முழங்கும்

அத்த நீளிடை அழப்பிரிந் தோரே–. குறுந்தொகை 307

 சங்கு வளையல் உடைந்ததைப் போன்ற தோற்றத்தோடுபலரும் தொழசிவந்த வானத்தில்மாலைநேரத்தில்மூன்றாம் பிறை விரைந்து பிறந்து தோன்றியது.

***

திங்கள்/நிலவு  அவர் வருகையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது) என் சுணங்கணி மார்பிலுள்ள முத்தாரம் போலவும், சிலம்பில் வழியும் அருவி போலவும் திங்கள் தரும் நிலா வெளிச்சம் உள்ளது என்கிறாள் தலைவி. —அகம் 362

***

மதுரைக்காஞ்சி

அரசியல் பிழையா தறநெறி காட்டிப்

பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது

குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்

வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்

குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் . . . .[195]

மேற்கில் தோன்றும் பிறைநிலா வளர்வது போல் உனது வெற்றிமுகம் வளரட்டும். கிழக்கில் தோன்றும் முழுநிலா தேய்வது போல உன் பகைவரும் அவர்களின் செல்வமும் தேயட்டும்.

****

புறம் 27.

தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்

மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்

அறியா தோரையு மறியக் காட்டித்

திங்கட் புத்தே டிரிதரு முலகத்து

வல்லா ராயினும் வல்லுந ராயினும் —என்ற வரிகள் மூலம்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார், வாழ்க்கையின் உண்மை இயல்பினை எடுத்துரைக்கிறார் . இதில் புத்தேள் என்ற அடைமொழி மூலம் சந்திரனின் தெய்வத்  தன்மையையும் எடுத்துக்காட்டுகிறார்.

****

पितुः प्रयत्नात्स समग्रसंपदः शुभैः शरीरावयवैर्दिने दिने|

पुपोष वृद्धिं हरिदश्वदीधितेरनुप्रवेशादिव बालचन्द्रमाः॥ ३-२२

சூரியனின் கதிர்கள் பட்டு நிலவின் பிறை நாளுக்கு நாள் வளருவது போல தந்தை திலீபனின் கவனிப்பால் அஜன் வளர்ந்தான் ; இதை மேலே சொன்ன முதுகண்ணன் சாத்தனார் பாடலுடன் ஒப்பிடலாம்

pituḥ prayatnātsa samagrasaṁpadaḥ śubhaiḥ śarīrāvayavairdine dine|

pupoṣa vṛddhiṁ haridaśvadīdhiteranupraveśādiva bālacandramāḥ || 3-22

***

தமிழ் இலக்கியத்திலும் காளிதாஸனிலும் பெண்கள்தான் பிறையை வழிபட்ட செய்தி வருகிறது ; காளிதாசன் எழுதிய விக்ரம ஊர்வசீயத்தில் மஹாராணி நிலா வழிபாட்டுக்கான பூஜைப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்கிறாள் ; தோழிமார் சந்தனம் , பூ, இனிப்புகளைக் கொண்டுவருகிறார்கள். பூஜை முடிந்தவுடன் இனிப்புகளை மாணவகன் என்பவரிடம் கொடுக்கச் சொல்கிறாள் – (விக்ரம ஊர்வசீயம்- மூன்றாவது காட்சி)

***

सुते शिशावेव सुदर्शनाख्ये

दर्शात्ययेन्दुप्रियदर्शने सः।

मृगायताक्षो मृगयाविहारी

सिंहादवापद्विपदम् नृसिंहः॥ १८-३५

இந்துக்கள் உள்ளதை உள்ள படியே எழுதுவார்கள். த்ருவஸந்தி என்ற மன்னனை சிங்கம் அடித்துக் கொன்றுவிட்டது இதே போல வீர பாண்டியன் என்ற மன்னனை புலி அடித்துக் கொன்றதைத் திருவிளையாடல் புராணத்தில் காண்கிறோம் பரீட்சித் மன்னனை பாம்பு கடித்து  இறந்ததாக பாகவத புராணம் சொல்கிறது . இந்த ரகுவம்ச பாடலில் வேட்டையாடும்போது த்ருவஸந்தி என்ற மன்னனை சிங்கம் கொன்றதைச் சொல்லும்போது அவனுக்கு அப்போதுதான் காணுதற்கினிய பிறை சந்திரன் போல ஒரு மகன் பிறந்தான் என்று காளிதாசன் சொல்கிறான் . இது சுக்ல பக்ஷ பிறை தரிசனத்தைக் காட்டுகிறது

sute śiśāveva sudarśanākhye

darśātyayendupriyadarśane saḥ |

mṛgāyatākṣo mṛgayāvihārī

siṁhādavāpadvipadam nṛsiṁhaḥ || 18-35

இதே கருத்து ரகுவம்ச 2-73 பாடலிலும் உள்ளது

****

குமார சம்பவத்தில் உமையம்மையை வருணிக்கையில் சந்திரனுடன் ஒப்பிடுகிறார் ; அங்கே சிவ பெருமானிடத்தில் ஏற்கனவே ஒருபிறைச் சந்திரன்  இருப்பதையும் குறிப்பிடுகிறார்.

உமாவுக்குத் திருமண அலங்காரம் செய்யும் தோழி காலில் செந்நிறச் சாயம்பூசி விட்டு உன் கணவன் சிவன் தலை  மீதுள்ள சந்திரனை இதனால் அடி/ தொடு என்று ‘ஜோக்’ JOKE அடிக்கிறாள் . உடனே உமா அவளை ஒரு மலர்ச் சீண்டினால்  அடிக்கிறாள் — குமார சம்பவம்  7-19

***

“atha nayanasamutthaṃ jyotiratreriva dyauḥ surasaridiva tejo vahniniṣṭhayūtaimaśam |

marapatiku labhūtyai garbhamādhatta rāñjī gurubhirabhiniviṣṭaṃ lokapālānubhāvaiḥ || ”- Raghuvaṃśa of Kālidāsa: II/ 75

**

“tadanvaye śuddhimati prasūtaḥ śuddhimattaraḥ |

dilīpa iti rājendurinduḥ kṣīranidhāviva || ”- Raghuvaṃśa of Kālidāsa: I/ 12

Here both of the śloka says that the genesis of moon from the eyes of Atrī and the oceans.

சந்திரன் என்பது அத்ரி முனிவரின் கண்களிலிருந்து பிறந்ததாகவும் கடல் கடைந்த போது பாற்கடலிலிருந்து தோன்றியதாகவம் இரண்டு கதைகள் உண்டு இரண்டினையும் பாடல்களில் குறிப்பிடுகிறான் கவி; இவைகளும் நிலவின்  தெய்வீகத் தோற்றத்தைக் காட்டுகின்றன

****

பெண்களை வருணிக்கும் போது அவளுடைய முகம் சந்திரன் போல இருந்ததாக வருணிப்பது சங்கத் தமிழ் மற்றும் காளிதாசன் நூல்களில் வருகிறது

– 3-25- குமார சம்பவம், சாகுந்தலம்   Act 2-10,11, ருது சம்ஹாரம்  3-24/26`

தமிழ் :-கலி.  55, 56 ; இந்தக் குறிஞ்சிக் கலியை கபிலன் பாடியுள்ளார்

***

சந்திரனுக்கு நெருக்கமான பெண் ரோகிணி என்றும் தமிழர்கள் அந்த நாளில் கல்யாணம் செய்ததாகவும் அகநானூற்றில் காண்கிறோம். இதையும் காளிதாசன் விக்ரம ஊர்வசீயத்தில் சொல்கிறான் ; ஆக நல்ல நாள் பார்த்துக் கல்யாணம் செய்வது அந்தக்காலத்திலேயே இருந்துள்ளது. இவையெல்லாம் நிலவினை தெய்வ நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டும் சான்றுகள் ஆகும்

***

சுமேரியர்கள் நன்னா என்று பெயரில் சந்திரனை வணங்கினர் . சங்கத் தமிழ்  நன்னன் என்ற  மன்னர் பெயர் இருக்கிறது 1300  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராஷ்டிர கூட மன்னரின் பெயர் நன்ன ராஜன் !

—subham—–

Tags- பிறை வழிபாடு, நிலவு, நன்னன், காளிதாஸன், moon worship

Leave a comment

Leave a comment