Post No. 14,889
Date uploaded in London – 21 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மிகவும் அதிசயமான விஷயம் உமா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் அப்படியே சங்கத்தமிழ் நூல்களில் வந்தது ஆகும். காளிதாசன் சங்க காலத்துக்கு முந்திய புலவர் என்று நான் மற்றும் ரெவரென்ட் ஜி யு போப் போன்றோர் சொல்வதற்கு இது மேலும் ஒரு சான்று !
இதற்குக் காரணம் காளிதாசன் எழுதிய அற்புதமான குமார சம்பவம் என்னும் காவியமா!கும் .
அதில் முழுக்க முழுக்க உமாவின் மஹிமை வருகிறது . உ+மா என்றால் நீ (தவம்) செய்யாதே என்று பொருள் கண்டுள்ளனர் . சிவன் என்னும் காதலனை அடைவதற்காக உமா செய்த தவத்தை மிக அழகாக வருணிக்கிறார் காளிதாசன் ; சப்த ரிஷிகளும் அவளைக் கண்டு வியக்கின்றனர் !
சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உள்ளன. வேதம், யூபம் காலம், மனம் , காம, உலகம் , வால்மீகி, பிரம்ம , தாமோதரன் கேசவன் வாதுல கோத்ரம் சாண்டில்ய கோத்ரம் கெளசிக கோத்ரம், காப்பிய கோத்ரம் போன்ற சொற்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆனால் பெண் தெய்வங்களில் உமா என்ற ஒரு பெயர் மட்டுமே அப்படியே வருகிறது. சம்ஸ்க்ருதத்தில் ஆ என்ற சப்தத்தில் முடியும் சொற்களை தமிழில் ஐ என்ற சப்தத்துடன் முடிப்பது இலக்கண விதி சீதா= சீதை; பகவத் கீதா= கீதை ; அதே போல உமா =உமை !
உலகப் புகழ்பெற்ற கலை வரலாற்று நிபுணர் சிவராம மூர்த்தி சொல்லுவது போல, குப்தர் கால சிற்பங்களிலும் தங்க நாணயங்களிலும் காளிதாசனின் காவியங்களின் செல்வாக்கு பிரதிபலிக்கிறது . பரம பாகவதர்கள் என்று தங்களைக் கல்வெட்டுகளிலும் தங்க நாணயங்களிலும் எழுதிக்கொண்ட குப்தர்களையே குமார குப்தன், ஸ்கந்த குப்தன் முதலிய ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சூட வைத்தது ; 1600 ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டசோர் கல்வெட்டுக்கள் காளிதாசனின் கவிதை பாணியில் எழுதப்பட்டுள்ளன . நிற்க . உமாவின் கதைக்கு வருவோம் .
சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் பெண் தெய்வங்கள் உள்ளனர் ; ஆயினும் காளி, துரக்கா , லட்சுமி என்று சொல்லாமல் கொற்றவை, காடுகிழாள், பழையோள், திரு, தவ்வை என்றெல்லாம் சுற்றி வளைத்து மொழிபெயர்த்தனர் ! உமாவுக்கு மட்டும் விதி விலக்கு ! அப்படியே குறைந்தது நான்கு இடங்களில் உமை என்று எழுதிவிட்டனர் !
அகம் -0-7
கலி. 38-2
முருகு.153
பரி.5-28
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் – கலித்தொகை 38-2
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூ-எயில் முருக்கிய முரண்மிகு செல்வன் – முருகு.153/4
கயிலை மலையில் – இமய மலையில் — சிவனுடன் உமை அமர்ந்து இருக்கும் காட்சி இது அதைச் சொல்லும்போதும்கூட வேறு அதிசயச் செய்திகளையும் சேர்க்கிறார் நக்கீரர் ; மூன்று கண்கள் இருந்தும் ஒன்றும் இமைக்கவில்லை அதுமட்டுமல்ல வானில் தொங்கிய அரக்கர்களின் மூன்று ஸ்பேஸ் ஷட்டில்களைப் பார்வையிலேயே பஸ்மம் ஆக்கிவிட்ட செய்தியும் உளது
காளிதாசனின் குமார சம்பவம் அற்புதமான இமயமலை வருணனையுடன் துவங்குகிறது ; அதை புறநானூற்றில் உள்ள மிகப்பழைய பாடல்கள் அப்படியே மொழிபெயர்த்துள்ளன. என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நான் எழுதிய ஒப்பீடுகள், மூன்று நூல்களாக அச்சில் வெளிவந்துள்ளன.
***
அர்த்தநாரீஸ்வரர்
உலகிலேயே பெண்களுக்கு முதலிடம் கொடுத்தவர்கள் இந்துக்கள் மட்டுமே . ஆங்கிலத்தில் THE OTHER HALF தி அதர் ஹாப் — இன்னும் ஒரு பாதி- என்று மனைவியைச் சொல்லுவார்கள் . இது வேதத்தில் உள்ள சொற்கள் .
சிவன் பாதி , பார்வதி பாதி என்பதை ரகுவம்ச முதல் ஸ்லோகத்திலேயே சொல்லும் பொருளும் போல பிரிக்க முடியாதவர்கள் என்று பாடிய காளிதாசன், ஜகதப்
பிதரெள பார்வதி பரமேஸ்வரெள என்று முதல் ஸ்லோகத்தை முடிக்கிறான்; உலகிற்கே பார்வதி பரமேஸ்வரன்தான் பெற்றோர்கள் என்றும் சொல்கிறான் அதிலும் கூட பார்வதியின் பெயர்தான் முதலில்; இன்று வரை ஆங்கிலத்திலும் கூட முதலில் மனைவியின் பெயரைச் சொல்லி பின்னர் கணவர் பெயரைச் சொல்லுவார்கள் ஹில்லரி கிளிண்டன் என்றுதான் சொல்கிறார்கள் ; இதையெல்லாம் கற்பித்தவன் காளிதாசன் . இதோ சங்க இலக்கிய வரிகள் —
மாயவள் மேனிபோல் தளிர் என – கலி.35-3
சிவபெருமானுடைய செம்மேனிக்கு மாறான கருமையும் பச்சையும் உடையவள் இவள் .
இறைவனுடைய ஒருபாகத்தில் உமை விளங்குதலை
மிக்கு ஒளிர் தாள் சடை மேவரும் பிறைநுதல்
முக்கண்ணான் – கலி 104-11/12
படர் அணி அந்தி பசுங்கட் கடவுள் – கலி 101-24
வரிகளிலும் காணலாம்.
உமா என்னும் பார்வதியை மலைமகள் என்றனர்; இவள் இமவான் புத்ரி ஆதலால்தான் காளிதாசன் குமார சம்பவத்தை இமயமலையின் இயற்கைக்காட்சி வருணனையுடன் துவங்குகிறான் ; இதே போல லெட்சுமியை அலைமகள் சரஸ்வதியைக் கலைமகள் என்றெல்லாம் வருணிப்பதைத் தேவார பாடல்களில் காணலாம் . இவையெல்லாம் சங்க இலக்கியத்திலே துவங்கிவிட்டன
மலைமகள் – முருகு.257
முருகப்பெருமானை வருணிக்கும் பாடல்களில் இவள் மகன்தான் முருகன் என்பதையும் புலவர்கள் சொல்கிறார்கள்.
***
…………………………
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, 30-
பரிபாடல்-5
சிவன் முப்புரத்தை அழித்தான். அப்போது, பிரமன் (ஆதி அந்தணன்) தேர் ஓட்டினான்.
வேதங்கள் குதிரை. நிலவுலகம் தேர். நாகம் வில்லிலுள்ள நாண். மேரு மலை வில். அழலும் தீ அம்பு.
ஒரே அம்பில் மூன்று கோட்டைகளையும் தீப்பற்றி எரியச்செய்தவன்.
இந்தச் சினம் தணிய, தேவர்கள் வேள்வி செய்தனர்.
அவர்கள் அளித்த வேள்விப் பாகத்தை வாங்கி உண்டவன்.
அவன் இளங்கண் ஒன்றும் கொண்ட பார்ப்பான் (சிவன்).
சிவன் உமையுடன் கூடிக் காமப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தான்.
அது புணர்ச்சி இல்லாத புணர்ச்சி.
அப்போது அவன் நெற்றிக் கண் ஒரு வரம் தந்தது……………..
இந்தப் பரிபாடலில் உள்ள கதைகள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளவை.
****
குமார சம்பவத்தில் சில பாடல்கள்
உமாவின் பெயர்க் காரணம்
तां पार्वतीत्याभिजनेन नाम्ना बन्धुप्रियां बन्धुजनो जुहाव।
उ मेति मात्रा तपसो निषिद्धा पश्चादुमाख्यां सुमुखी जगाम॥ १-२६
ஹிமவான் என்னும் இமயமலை அரசனின் புதல்வி என்பதால் – பர்வத ராஜ குமாரி என்பதால்– பார்வதி என்பதுதான் அவளின் இயற்பெயர் ; ஆனால் அவள் காட்டிற்குத் தவம் செய்ய விரும்பியபோது அம்மா சொன்னாள் உ = நீ , மா =செய்யாதே /போகாதே -1-26
tāṁ pārvatītyābhijanena nāmnā bandhupriyāṁ bandhujano juhāva |
u meti mātrā tapaso niṣiddhā paścādumākhyāṁ sumukhī jagāma || 1-26
As a dear child of kith and kin she was affectionately called by her patrilineal name pArvati for she is the daughter of a parvata-rAja; when her mother trying to dissuade this girl with a delicate lineament from high ascesis addressed her as u mA, meaning “oh, girl, don’t do it”; later this sobriquet remained her proper name. [1-26]
2b) Umā (उमा) was named so because “she was prevented from going to forest by Menā” [derived from ‘u’ ‘mā’—‘O (child) do not (practise austerities)’], according to the Śivapurāṇa 2.3.22 (“Description of Pārvatī’s penance”).—Accordingly, after Menā spoke to Pārvatī: “Thus, in various ways, the daughter was dissuaded by her mother. But she did not find any pleasure except in propitiating Śiva. Pārvatī acquired the name Umā since she was prevented from going to forest by Menā and forbidden to perform penance. O sage, on realising that Pārvatī was quite dejected, Menā, the beloved of the mountain, permitted her to perform penance. […]”.
****
உமா என்றால் ஓம் அ +உ+ம
Umā is the combination of three letters of OM – U + M + A, the praṇava. U refers to creation, M refers to destruction and A refers to sustenance. Therefore Umā also means the three acts of the Brahman.
****
उमारूपेण ते यूयं संयमस्तिमितं मनः|
शम्भोर्यतध्वमाक्रष्टुमयस्कान्तेन लोहवत्॥ २-५९
உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் (தாரகாசுரனை அழிக்க முருகன் பிறக்க வேண்டுமானால் ) உமாவையும் சிவனையும் காந்தமும் இரும்பும் கவர்வது போல ஆக்க வேண்டும் (அதாவது இருவரிடையே காமத்தைக் /காதலை உருவாக்க வேண்டும் ) . ஆனால் சிவ பெருமானோ கடும் தவத்தில் இருக்கிறார். 2-56
umārūpeṇa te yūyaṁ saṁyamastimitaṁ manaḥ |
śambhoryatadhvamākraṣṭumayaskāntena lohavat || 2-59
“In order to achieve your mission you all have to do your best to magnetize Uma, as it were, who in turn can magnetize the iron-like stubborn mind of Shiva which is now wedged into his iron-bound ascesis… [2-59]
umArUpeNa te yUyaM saMyamastimitaM manaH |
shambhoryatadhvamAkraShTumayaskAntena lohavat || 2-59
குமார சம்பவம் முழுதும் உமாவின் கதை என்பதால் ஓரிரு உதாரணங்களைக் கொடுத்தேன்.
–subham—
Tags- குமார சம்பவம், சங்க இலக்கியம் ,காளிதாசன், உமா ,உமை