சிறுநீரகக் கோளாறா? மாலெகைட் இருக்கிறதே! (Post.14,896)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,896

Date uploaded in London – 24 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

சிறுநீரகக் கோளாறாமாலெகைட் இருக்கிறதே!

ச. நாகராஜன் 

சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு மாற்றுவழி மருத்துவம் இருக்கிறது. மாலெகைட் என்ற உபரத்தினத்தை அணிவது தான் அது.

கோளாறு படிப்படியாக நீங்க உடனே வழி பிறக்கும். மூட்டு வீக்கம், ஆஸ்த்மா போன்ற நோய்களையும் நீக்கும் ஆற்றல் படைத்தது மாலெகைட்.

ஆழ்ந்த பச்சை வர்ணத்தில் சுருள் சுருளான வட்டங்களுடன் இருக்கும் இந்த உபரத்தினக் கல் இதை அணிபவரின் வாழ்வில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாளை என்ன நடக்குமோ என்று கதிகலங்கிப் பயப்படுவர்களுக்கான அதிசயக் கல் இது. அணிந்தவுடன்  உள்ளும் புறமும் மாற்றத்தை ஏற்படுத்தும்!

இது எதிர்மறை ஆற்றலை நீக்கி உடனடியாகப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும். நம்பிக்கையை உருவாக்கும். செல்வத்தையும் வளத்தையும் ஈர்க்கும்.

மாலெகைட் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதன் பொருள் பச்சை என்பதாகும். மயில்தோகையில் பார்க்கும் பச்சை நிறத்தை இது ஒத்திருக்கும். இது மயிலின் கூரிய கண்களையும் ஒத்திருக்கும்,

பழங்கால எகிப்தியர்கள் இதை ‘ காட் ஸ்டோன்’ – கடவுளின் ரத்தினம் – GOD STONE-   என்றே அழைத்தனர்.

அரிதாகக் கிடைப்பது என்பதால் இதன் விலையும் சற்று அதிகம் தான்.

ஆன்மீக சாதகர்களுக்கு இது ஒரு விசேஷமான ரத்தினக் கல். அனாஹத என்ற இதய சக்கரத்தையும் (HEAR CHAKRA) விசுத்தி சக்கரத்தையும் (THROAT CHAKRA) இது தூண்டிவிட்டு ஆன்மீக வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.

சீன வாஸ்து கலையான பெங்சுயி படி இது உடல் மற்றும் உள்ளரீதியாக பிராண சக்தி எனப்படும் சி’ யை   (CHI) தரும்.

மாலெகைட் மோதிரம்மாலெகைட் கங்கணம்மார்பில் சங்கிலியில் பதித்துக் கொள்வது போன்று இப்படி எப்படி வேண்டுமானாலும் இதை அணிந்து கொள்ளலாம்.

அதிகமாகப் பயணப்படுபவர்கள் அதனால் பாதிக்கப்படுபவர்கள் என்றால் அவர்கள் இதை அணிந்து நிவாரணம் பெறலாம்.

ஒருமுனைப்படுத்தும் சக்தி இல்லாதவர்கள் தங்கள் மேஜையில் இதை வைத்துக் கொள்ளலாம். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இது நல்ல அதிர்வலைகளை உடனடியாக தோலுக்குள் புகுத்தி விடும்.

கவசம் போன்ற இதை அணிந்தால் நினைக்கின்ற நல்ல விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதே இதைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும்!

***

Leave a comment

Leave a comment