London Karpaga Vinayakar Temple
Post No. 14,904
Date uploaded in London – —26 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விநாயக சதுர்த்தி 27-8-2025
பிள்ளையாரின் 32 திருநாமங்கள்!
ச. நாகராஜன்
மனித வாழ்க்கையில் எந்த சுப காரியம் தொடங்கினாலும் அது விக்னம் இன்றி நல்லபடியாக நடக்க அருள் புரிபவர் விநாயகர்.
அவரைக் கும்பிட்ட பின்னரே சுப காரியங்களைத் தொடங்குவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.
பிள்ளையாருக்கு 32 திருநாமங்கள் உள்ளன.
அவற்றை ஒருமுறை நினைத்தாலேயே அவரது பெருமையும் ஆற்றலும் அருளும் புலப்படும்.
கீழே அவரது 32 திருநாமங்களைக் காணலாம்.
பால கணபதி
தனது துதிக்கையோடு சேர்ந்து ஐந்து கரங்களைக் கொண்டுள்ள பிள்ளையார் மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றை அதில் தாங்கி இருக்கிறார்.
தருண கணபதி
சிவந்த திருமேனி படைத்தவர்
பக்த கணபதி
வெண்ணிறம் படைத்தவர்
வீர கணபதி
பதினாறு திருக்கரங்கள் கொண்டவர். சிவந்த மேனி படைத்தவர்.

சக்தி கணபதி
இளமஞ்சள் நிறம் படைத்தவர். பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கரங்களில் தாங்கியவர்.
த்வஜ கணபதி
நான்கு திருமுகங்கள் கொண்டவர். சந்திர வண்ணத்தில் உள்ளவர்.
சித்தி கணபதி
பசும்பொன் நிறத் திருமேனியைக் கொண்டவர்.
உச்சிஷ்ட கணபதி
முக்கண் கொண்டவர். நான்கு கரங்களைக் கொண்டவர்.
விக்ன புவநேச கணபதி
சங்கு, கரும்பு, வில், மலரம்பு, கோடரி, பாசம், சக்ரம், அங்குசம், பூங்கொத்து ஆகியவற்றை எண்கரங்களில் தாங்கியவர். அலங்காரங்கள் கொண்டவர். பொன்னிறத் திருமேனி உடையவர்
க்ஷிப்ர கணபதி
துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம் ஏந்தியவர். அங்குசம் கொண்டவர். செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான மேனியைக் கொண்டவர்.
ஹேரம்ப கணபதி
முன்னிரு திருக்கரங்களைல் அபய வரத முத்திரைகளைத் தரித்தவர்.
ஐந்து திருமுகங்களைக் கொண்டவர். சிம்மத்தை வாகனமாகக் கொண்டவர்.
லக்ஷ்மி கணபதி
இரு தேவியருடன் இருப்பவர். பொன்னிறத் திருமேனி கொண்டவர்.
மஹா கணபதி
யானை முகம் கொண்டவர். பிறைச் சந்திரனைத் தரித்தவர். சிவந்த மேனி கொண்டவர்.
விக்ன ராஜ (விஜய) கணபதி
செவ்வண்ண மேனி கொண்டவர். இடர்களைக் களைபவர்.
மூஷிக வாகனம் கொண்டவர்.
நிருத்த கணபதி
கற்பக மரத்தடியில் நடமிடத் தூக்கிய திருப்பாதத்துடன் காட்சி தருபவர். பொன்னிறத் திருமேனி கொண்டவர்.
ஊர்த்வ கணபதி
செங்கழுநீர் புஷ்பம், நெற்கதிர்க் கொத்து, தாமரை மலர், கரும்பு வில், அம்பு, தந்தத்தில் தாங்கிய கதி கொண்டவர். பொன் போல மின்னும் திருமேனி கொண்டவர்.
ஏகாக்ஷரகணபதி
செந்நிறத் திருமேனி கொண்டவர். பத்மாசனத்தில் அமர்ந்தவர். சிவந்த பட்டாடையை அணிந்திருப்பவர்.
வர கணபதி
செந்நிறத் திருமேனி கொண்டவர்.மூன்று கண்கள் உடைஅவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில் ஏந்தியவர்

Pilaiyarpatti Ganesh Temple
த்ரிமுக கணபதி
மூன்று வலக்கரங்களில் அங்குசம், அக்கமாலை, வரத முத்திரை கொண்டவர். பாசம், அமுத கலசம். அபயம் இடக்கரங்களில் கொண்டவர். தாமரைப் பீடம் கொண்டவர். மூன்று முகம் கொண்டவர்.
க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
ஆறு திருக்கரங்கள் கொண்டவர். சிவந்த மேனியர்.
ஹரித்ரா கணபதி
மஞ்சள் நிறத் திருமுகம் கொண்டவர். ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். பக்தருக்கு அடைக்கலம் தந்து தடைகளை நீக்குபவர்.
ஏகதந்த கணபதி
பெருவயிறுடன் கூடியவர் நீல நிறம் உடையவர்.
சிருஷ்டி கணபதி
மூஷிக வாகனம் கொண்டவர். தடைகளை நீக்குபவர். பாசம். அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைக் கொண்டவர்.
உத்தண்ட கணபதி
நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைப் பத்துக் கரங்களில் தரித்தவர். மங்களம் அருள்பவர்
ருணமோசன கணபதி
பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கியவர். வினகளை அகற்றுபவர். ஸ்படிக நிறத் திருமேனி கொண்டவர்.
டுண்டி கணபதி
ருத்ராட்ச மாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவற்றைத் தாங்கியவர். தடைகளை அகற்றுபவர்.
த்விமுக கணபதி
தந்தம், பாசம், அங்குசம், ரத்தின பாத்திரம் தாங்கியவர். செந்நிற ஆடை கொண்டவர். நீல நிறத் திருமேனி உடையவர். ரத்ன கிரீடம் தரித்தவர்.
த்ரயாக்ஷர கணபதி
யானை முகம் கொண்டவர். பொன்னிற மேனியுடன் நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் தரித்தவர்.

ஸிம்ஹ கணபதி
வீணை, கற்பகக் கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ன கலசம், மலர்க் கொத்து, அபய முத்திரை ஆகியவற்றை இடக்கரங்களிலும் தாங்கியவர்.
யோக கணபதி
யோகாசனத்தில் யோகபட்டம் தரித்த திருக்கோலம் கொண்டவர். இளஞ்சூரியன் போன்ற திருமேனியுடன் நீல நிற ஆடை அணிந்தவர்.
துர்க்கா கணபதி
உருக்கிய பொன்போன்ற திருமேனியுடன் எட்டுக் கரங்கள் கொண்டவர். பெரிய உருவம் கொண்டவர்
சங்கடஹர கணபதி
பாலசூரியன் போன்ற நிறம் கொண்டவர். பச்சை மேனிகொண்ட தேவியை இடது தொடையில் அமர்த்தி இருப்பவர். தாமரைப் பீடம் கொண்டவர்.
அனைத்து நலன்களையும் அருளி, இடர்களைக் களையும் விக்னராஜனைத் துதிப்போம். நலம் பெறுவோம்.
***