Post No. 14,908
Date uploaded in London – 27 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவ பாதிரிகளும் , இந்தியாவிலுள்ள மார்க்சீய , திராவிட அரை வேக்காடுகளும் திராவிடர்களை ராக்ஷசன்/ அரக்கன் என்று முத்திரை குத்தினர் ;இதே போல தஸ் யூக்களையும் இந்த நாட்டு பூர்வகுடிகள் எண்டு முத்திரை குத்தினர். ஆனால் சங்கத் தமிழ் நூல்களும் சம்ஸ்க்ருத நூல்களும் அரக்கர்கள்- அவுணர்கள் நர மாமிசம் புசிப்பவர்கள் என்றும் வலியச் சென்று நல்லோர்களை இம்சிப்பவர்கள் என்றும் பாடுகிறது . தஸ்யூக்களை காளிதாசனும் மனு நீதி நூலும் திருடர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர். அதாவது திருடர் என்பதற்கான சொல் அது .
ராவணனை காளிதாசன் பத்து தலை உடையவன் என்றும் அரக்கன் என்றும் ரகு வம்சத்தில் பாடியுள்ளார். புறநானுறு பாடிய சங்க புலவரும் ராவணனை அரக்கன் என்றே பாடியுள்ளார். பத்து தலை என்பது பத்து தீய குணங்களைக் குறிக்கும் இதே போல தசர தன் என்றால் பத்து என்று பொருள். அவன் பத்து தேர் அல்ல; ஆயிரம் தேர் உடையவன்; உண்மைப்பொருள்- அவன் ஒரே நேரத்தில் பத்து தேர்களை ஓட்ட வல்லவன் என்பதாகும் தமிழ் நாட்டில் ஒரே நேரத்தில் பத்து செயல்களை செய்ய வல்லவரை / தசாவதானி என்பர் ; இதிலும் ‘தச’ என்ற சொல் வருவதைக் காணலாம்.
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் 20
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. –புறம் 378
கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது.
****
तत्रेश्वरेण जगताम्प्रलयादिवोर्वीं
वर्षात्ययेन रुचमभ्रघनादिवेन्दोः।
रामेण मैथिलसुताम्दशकण्ठकृच्छ्रा
त्प्रत्युद्धृताम्धृतिमतीम्भरतो ववन्दे॥ १३-७७.
விமானத்தில் இருந்த மிதிலா நகர ராஜாவின் மகளான சீதா தேவியை பரதன் வணங்கினான்; பிரளய காலத்தில் நீரில் மூ ழ்கிக்கிடந்த பூமியை எப்படி வராஹ அவதாரம் எடுத்து விஷ்ணு காப்பாற்றினாரா, மழைக்காலம் முடிந்த பின்னர் சந்திரன் எப்படி பிரகாசிக்குமோ அது போல பத்து தலையனிடமிருந்து சீதையை ராமன் காப்பாற்றினார். tatreśvareṇa jagatāmpralayādivorvīṁ
varṣātyayena rucamabhraghanādivendoḥ |
rāmeṇa maithilasutāmdaśakaṇṭhakṛcchrā
tpratyuddhṛtāmdhṛtimatīmbharato vavande || 13-77 Raghu.
****
இதோ மனிதர்களைத் தின்னும் லவணன் என்ற அரக்கன்- காளிதாசன் எழுதிய ரகு வம்சத்தில் வருகிறான் :
नातिपर्याप्तमालक्ष्य मत्कुक्षेरद्य भोजनम्।
दिष्ट्या त्वमसि मे धात्रा भीतेनेवोपपादितः॥ १५-१८
इति संतर्ज्य शत्रुघ्नम् राक्षसस्तज्जिघांसया।
प्रांशुमुत्पाटयामास मुस्तास्तम्बमिव द्रुमम्॥ १५-१९
போதுமான உணவு எனக்கு இன்று கிடைக்கவில்லை. பிரம்மா எனக்குப் பயந்துகொண்டு உன்னை அனுப்பி இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே சத்ருக்கனனைத் தாக்கிக் கொல்ல வருகிறான் லவணன் என்ற அரக்கன்.
***
विधेरधिकसंभारस्ततः प्रववृते मखः।
आसन्यत्र क्रियाविघ्ना राक्षसा एव रक्षिणः॥ १५-६२
vidheradhikasaṁbhārastataḥ pravavṛte makhaḥ |
āsanyatra kriyāvighnā rākṣasā eva rakṣiṇaḥ|| 15-62
ராமர் பட்டாபிஷேகத்தின் போது செய்த யாகத்துக்கு வழக்கமாக இடையூறு செய்யும் ராக்ஷஸர்கள், ரக்ஷகர்களாகள் ஆனார்கள்.
****
கயிலை மலையை ராவணன் தூக்க முயன்றதும் பின்னர் கை நசுங்கிக் கதறிப்போய் சிவனை மகிழ்விக்க சாம கானயிசையை வீணையில் வாசித்ததும் தேவாரம் முழுதும் வருகிறது; இது காளிதாஸனிலும் கலித்தொகையில் முன்னரே வந்துள்ளது விட்டது.
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
கலித்தொகை 38
இமய மலையை வில்லாக்கி வளைத்தவன் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன் இராவணன் தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான். எடுக்க முடியாமல் துன்புற்றான். அதுபோல வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை.
***
निर्वर्त्यैवम् दशमुखशिरश्छेदकार्यम्
सुराणाम्विष्वक्सेनः स्वतनुमविशत्सर्वलोकप्रतिष्ठाम्।
लङ्कानाथम् पवनतनयम् चोभयम् स्थापयित्वा
कीर्तिस्तम्भद्वयमिव गिरौ दक्षिणे चोत्तरे च॥ १५-१०३
nirvartyaivam dashamukhashirashChedakAryam surANAm
viShvaksenaH svatanumavishatsarvalokapratiShThAm |
la~NkAnAtham pavanatanayam cobhayam sthApayitvA
kIrtistambhadvayamiva girau dakShiNe cottare ca || 15-103
விஸ்வசேனர் என்னும் விஷ்ணுவானவர் தேவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்ற ராவணனின் பத்து தலைகளையும் வெட்டிய பின்னர் /கொன்றபின்னர் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு வெற்றித் தூண்களாக விபீஷண னையும் அனுமனையும் நிறுத்திவிட்டு தன் சுய ரூபத்தை எடுத்தார் (அதாவது ராமாவதாரம் முடிந்து விஷ்ணுவாக மாறிவிட்டார்)
பத்து தலை அரக்கன் என்பது இரு மொழி இலக்கியத்திலும் உள்ளது .
தொடரும்……………………….
Tags–காளிதாஸன் ,சங்க இலக்கியம், அவுணர்கள், அரக்கர்கள், ராவணன், கயிலை மலை -Part 1