Written by London Swaminathan
Post No. 14,911
Date uploaded in London – 28 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
TRI PURA ASURA DAHANAM WITH LASER ARROW.
காளிதாசன் எழுதிய மேக தூதம் என்னும் அற்புதமான காவியம் உலகின் முதல் பயண நூல் world’s oldest travelogue ஆகும்; அதுமட்டுமல்ல உலகின் முதல் பருவக்காற்று oldest monsoon reference நூலாகும் . அந்த நூலே யக்ஷன் ஒருவனை வைத்து எழுதப்பட்டுள்ளது . தமிழில் “ய” எழுத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் இதை இயக்கர் என்று எழுதினார்கள்.
இயக்கர் முதல் ராக்ஷசர் வரை காளிதாசன் குறிப்பிடும் எல்லாம் தமிழில் இரண்டே பாடல்களில் வந்து விடுகின்றன. அதைத் தவிர மேலும் பல பாடல்களில் அவுணர்/அரக்கர் அர மகளிர்/அப்சரஸ் முதலியன வருகின்றன
புறநானூற்று முதல் பாடல்
பதினெண் கணம்
பாடியவர்: பெருந்தேவனார் (மிஸ்டர் மஹாதேவன்)
பாடப்பெற்றோர்- சிவபெருமான்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்
வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.
முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!
பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.
இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?
தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.
நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.
இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-
கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்
பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்
முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்
தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ
டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்
திருமுருகாற்றுப்படையில் 18 கணம்
ஒன்பதிற்று இரட்டை உயர்நிலை பெறீ இயர்= 168
பதினென் வகையாகிய உயர்நிலை பெற்றவரும் .
இதற்கு உரை எழுதிய உ.வே.சாமிநாத அய்யர் முதலானோரும் 18 கணங்களைச் சொல்லிவிட்டு சிலப்பதிகார, பிங்கலந்தை நிகண்டு மேற்கோள்களைத் தருகின்றனர்
தொல்காப்பியமும் பொருள் அதிகார 256- சூத்திர, பேராசிரியர் உரையில், இதைத் தருகிறது
பேயும் பூதமும் பாம்புமீறாகிய பதினெண்கணம்
***
அவுணர் = அசுரர் , மஹாபலி என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது
தமிழ் இலக்கியத்தில் இந்தச் சொல் பயிலப்படும் இடங்கள் :-
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59 (முருகன் எதிர்த்த அவுணர்)
கணம்_கொள் அவுணர் கடந்த பொலம் தார் – மது 590 (ஒணம் நன்னாளில் விஷ்ணு எதிர்த்த அவுணர்)
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த – குறு 1/1 (முருகன் எதிர்த்த அவுணர்)
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் – பதி 11/4 (முருகன் எதிர்த்த அவுணர்)
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல் – பரி 5/7 (முருகன் எதிர்த்த அவுணர்)
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என – புறம் 174/1 சூரிய கிரகணம் பற்றிய குறிப்பு ; ஜெயத்ரதனை வீழ்த்த சூரிய கிரகணத்தை கிருஷ்ணன் பயன்படுத்திய சம்பவம் )
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ – பரி 3/56 (முருகன்)
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்/மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும் –
பரி 8/8,9 (முருகன்)
****
Destruction of flying space shuttles (from Alien Civilization?)
THREE SPACE SHUTTLES DESTROYED BY SHIVA WITH LASER ARROW.
இடம் விட்டு இடம் செல்லும் மூன்று ஸ்பேஸ் ஷட்டில்களை — தற்காலிக விண்வெளி நிலையங்களை– அயல் கிரக வாசிகள் அமைத்து தொல்லை கொடுத்தனர்; அவர்களை சிவன் ஒரே LASER லேசர் ஏவுகணையால் வீழ்த்தினார் ; இந்த விண்கல சம்பவம் வேதம் முதல் தேவாரம் வரை பாடப்படுகிறது.
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்-கலித்தொகை 2
இயங்கு எயில் flying space shuttles – கலி.150-1
****
புறநானூறு – 55. பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
***
ஆதி அந்தணன் (Brahma) அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் (Shiva)– பரிபாடல் 5
****
இவையெல்லாம் அரக்கர்களை சிவன் அழித்த செய்தியாகும்.
காளிதாசன் தரும் சில செய்திகளைக் காண்போம்:
குமார சம்பவ முதல் காண்டத்தில் இமய மலை வருணனையில் காதல் கடிதங்கள் எழுதும் வித்தியாதரப் பெண்கள் பற்றி ஒரு குறிப்பு வருகிறது.1-7
இன்னுமொரு பாடலில் குதிரை முகம் கொண்ட கின்னரப் பெண்களைக் குறிப்பிடுகிறார்.1-11, 1-54
கின்னரர் பாடல்களை எட்டாம் பாடலும் குறிக்கிறது.
ரகு வம்சத்தில் ராமாயணம் வரும் மூன்று காண்டங்களில் ராக்ஷஸன் பற்றிக் காளிதாசர் பாடுகிறார் .
தொடரும்…………………….
TAGS-காளிதாசன் நூல், சங்க இலக்கியம் அசுரர்கள், ராக்ஷஸர்கள் PART —2, TRIPURA ASURA DAHANAM