
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,913
Date uploaded in London – —29 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (30)
ராமாயணத்தில் வரங்கள் (30) ஸ்வயம்பிரபைக்கு பதில் உதவி செய்ய ஹனுமான் முயன்றது!
ச. நாகராஜன்
கிஷ்கிந்தா காண்டத்தில் ஐம்பத்திரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘‘குகையினுள் வந்த காரணத்தைச் சொல்வது’ என்ற ஸர்க்கமாகும்.
ஸ்வயம்பிரபை ஹனுமானிடம், “நீங்கள் வந்த காரியம் என்ன?” என்று கேட்கவே ஹனுமான் தாங்கள் சீதாதேவியைத் தேடி வந்தது பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறார். அத்துடன் தன்னுடன் வந்த அனைவருக்கும் உணவு அளித்தமைக்கு நன்றி கூறி பதில் உதவியாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் ஸ்வயம்பிரபையோ தனக்கு எதுவும் தேவை இல்லை என்கிறார்.
அதை இங்கு பார்க்கலாம்.
அதித்யதர்ம தத்தானி மூலானி ச பலானி ச |
அஸ்மாபிருபயுக்தானி புபுக்ஷாபரிபீடிதே ||
அதித்யதர்ம தத்தானி – அதிதி பூஜையின் தர்மத்தால் கொடுக்கப்பட்ட
மூலானி ச – கிழங்குகளும்
பலானி ச – பழங்களும்
புக்ஷாபரிபீடிதே – பசியினால் மிக்க வருந்திய
அஸ்மாபி – எங்களால்
உபபுக்தானி – திருப்தியாய் புசிக்கப்பட்டன
யக்த்வயா ரக்ஷிதா: ஸர்வே ம்ரியமானா பபுக்ஷயா |
ப்ரூஹி ப்ரத்யுபகாரார்த கிம் தே குர்வந்து வானரா: ||
த்வயா – உம்மால்
புபுக்ஷயா – பசியினால்
ம்ரியமானா: – உயிர் மாய்ந்திருக்கும்
ஸர்வே – எல்லோரும்
ரக்ஷிதா: – காப்பாற்றப்பட்டவர்களாக ஆனோம்
யத் ஆனதால்
தே – உமக்கு
வானரா: – வானரர்கள்
ப்ரத்யுபகாரார்த – பிரதி உபகாரமாக
கிம் – யாது
குர்வந்து – செய்ய வேண்டும்
ப்ரூஹி – சொல்லும்
கிஷ்கிந்தா காண்டம், 52வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 17, 18

இவ்வாறு ஹனுமான் ஸ்வயம்பிரபையிடம் கேட்கிறார்.
உயிர் போகும் தருணத்தில் இருந்த வானரர்களுக்கு உணவு கொடுத்து உதவியமைக்கு என்ன பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று ஹனுமார் கேட்க ஸ்வயம்பிரபை எனக்கு ஒருவராலும் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்று பதில் உரைக்கிறார்.
ஸர்வேஷாம் பரிதுஷ்டாஸ்மி வானரானாம் தரஸ்வினாம் |
சரந்த்யா மம தர்மேண ந கார்யமிஹ கேனசித் ||
தரஸ்வினாம் – மிக்க பராக்ரமுடைய
வானரானாம் – வானரர்கள்
ஸர்வேஷாம் – எல்லோரிடத்திலும்
பரிதுஷ்டா அஸ்மி – சந்தோஷமடைந்தேன்
தர்மேண – தெய்வ பக்தியுடன்
சரந்த்யா – காலம் கழிக்கின்ற
மம – எனக்கு
இஹ – இங்கு
கேனசித் – ஒருவராலும்
கார்ய – ஆக வேண்டிய காரியம்
ந – ஒன்றும் இல்லை
கிஷ்கிந்தா காண்டம், 52வது ஸர்க்கம் ஸ்லோகம் 19
இவ்வாறு தனக்கு பதில் உதவியாக எதுவும் தேவை இல்லை என்று ஸ்வயம்பிரபை கூறுகிறார்.
வால்மீகி முனிவர் இங்கு வரம் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால்
ப்ரத்யுபகாரார்தம் என்ற சொல்லால் வரம் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஸ்வயம்பிரபையால் ஏற்கப்படவில்லை
.***