இந்திரன் ஹனுமானுக்கு வரம் அருளியது! (Post No.14,917)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,917

Date uploaded in London – 30 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (33)    

ராமாயணத்தில் வரங்கள் (33) இந்திரன் ஹனுமானுக்கு வரம் அருளியது!

ச. நாகராஜன் 

கிஷ்கிந்தா காண்டத்தில்  அறுபத்தி ஆறாவது ஸர்க்கமாக உள்ள ‘‘ஸமுத்திரத்தைத் தாண்ட ஜாம்பவான் ஹனுமாரைத் தூண்டுவது’ என்ற ஸர்க்கத்தில் இன்னொரு வரம் பற்றிய விவரத்தையும் காண முடிகிறது. 

பிரம்மா எந்த ஆயுதத்தினாலும் மரணம் ஏற்படாது என்ற வரத்தை ஹனுமானுக்கு அருளினார்.

உடனே இந்திரனும் தன் பங்கிற்கு ஒரு வரத்தை அருளினார்.

அதை கீழ்க்கண்ட ஸ்லோகங்களில் காணலாம்: 

வஜ்ரஸ்ய ச நிபாதேன விருஜம் த்வாம் சமீக்ஷய ச |

சஹஸ்ரநேத்ர ப்ரீதாத்மா த்தௌ தே வரம்சமுத்தமம் ||

ஸ்வச்சந்ததஷ்ச மரணம் தே பூயாதிதி வை ப்ரபோ ||

கிஷ்கிந்தா காண்டம், 66வது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 30,31

வஜ்ரஸ்ய  – வஜ்ராயுதத்தினுடைய

நிபாதேன ச – அடியினாலும்

விருஜம் – செயல்மாறாத

த்வாம் – உம்மை

சஹஸ்ரநேத்ர: ச – இந்திரனும்

சமீக்ஷய – உற்று நோக்கி

ப்ரீதாத்மா – உள்ளம் களித்தவனாய்

ப்ரபோ – வல்லவரே!

தே மரணம் – உனக்கு மரணம்

தே – உனது

ஸ்வச்சந்தத: ச – இஷ்டப்படியே

பூயாத் – உண்டாகக்கடவது

இதி – என்ற

உத்தமம் – உத்தமமான

வரம் சை – வரத்தைக்

ததௌ – கொடுத்தார் 

ஆக ஹனுமானுக்கு இப்படி பிரம்மாவிடமிருந்து ஒரு வரமும் இந்திரனிடமிருந்து ஒரு வரமும் கிடைத்தது.

** 

Leave a comment

Leave a comment