Post No. 14,927
Date uploaded in London – 1 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected from popular national dailies and edited for broadcast.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு .

warning to Kerala, Tamil Nadu Chief Ministers

Brass Plate Ganesh

Annamalai warning to Anti Hindu Politicians
15 சதவீதம் சரிவை கண்ட ஹிந்து மக்கள் தொகை: சம்பல் வன்முறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி
சுதந்திரத்திற்கு பின்னர் உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஹிந்து மக்கள் தொகை, 15 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக, 2024- சம்பல் வன்முறை குறித்த குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பல் வன்முறையை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர அரோரா தலைமையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.கே. ஜெயின் மற்றும் அமித் பிரசாத் உறுப்பினர்களாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக்குழு, தனது அறிக்கையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்துள்ளது. 450 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, நவம்பர் 24, 2024 மோதல்களை மட்டுமல்ல, சம்பலில் நடந்த கலவரங்களின் வரலாறு, சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் வகுப்புவாத அரசியலின் பங்கு ஆகியவற்றையும் உள்ளடக்கி குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1947 முதல் இப்பகுதியில் ஹிந்து மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்தின் போது, சம்பல் நகராட்சிப் பகுதியில் ஹிந்துக்கள் 45 சதவீதம் பேர் இருந்தனர். அது தற்போது15 லிருந்து 20 சதவீதமாக சரிந்துள்ளது. சுதந்திரத்தின்போது, 55 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள், தற்போது 85 சதவீதம் பேர் உள்ளனர்.
1947 முதல் சம்பல் 15 கலவரங்களைக் கண்டுள்ளது,
சம்பலில் ஒரு காலத்தில் 68 புனித யாத்திரைத் தலங்களும் 19 புனித கிணறுகளும் இருந்ததாகவும், அவற்றில் பல காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் அவற்றை மீண்டும் கட்டுவதற்கான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
*****
பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், வணிகவளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட போவதில்லை என அறநிலையத்துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையில், திருவண்ணாமலை ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், கோயிலுக்கு அருகே அரசு புறம்போக்கு நிலமாகவே இருந்தாலும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவுறித்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
****
எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது.. கூடாது! ஐகோர்ட் உத்தரவு
மதுரை : பழனி தண்டாயுதபாணி கோவில் நிதியில் இருந்து திருமண மண்டபம் கட்டும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட் கிளையின் உத்தரவை சுட்டிக்காட்டி, ‘கோவில் நிதியை, அரசு நிதியாக கருத முடியாது. அந் நிதியை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் என, பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்களை அமைக்கும் தமிழக அறநிலையத்துறையின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க அறநிலையத்துறை, 2021 – 2022ல் அறிவிப்பு வெளியிட்டது; இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது.
கோவில் நிதியை, ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச் சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோவில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை, கல்லுாரியை நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லங்கள், பக்தர்களின் நலனுக்கான மருத்துவமனைகள், மருந்தகங்கள் நிறுவ பயன்படுத்த வேண்டும்.
திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுபோல், மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து கோவில்களுக்கு நிதி வசூலிக்கப்படுகிறது. மத நோக்கங்களுக்காக அல்லது திருவிழாக்கள் நடத்த அல்லது கோவில்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நன்கொடை வழங்கப்படுகிறது.
கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. அதை பொது நோக்கங்களுக்காக அரசின் நிதியாக பயன்படுத்த முடியாது.
எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது.. கூடாது!
****
குருவாயூர் கோவில் குளத்தில் முஸ்லீம் பெண் கால் கழுவி வீடியோ வெளியிட்டார்
குருவாயூர்: மாற்று மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோவில் குளத்தில் இறங்கி வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்டதை தொடர்ந்து குருவாயூர் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியுள்ளது
.குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோவில் புனித குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற இளம் பெண் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டார்.சோசியல் மீடியா பிரபலமான அந்தப் பெண் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். குருவாயூர் கோவிலில் ஹிந்து அல்லாத பிற மதத்தவர்களுக்கு அனுமதி கிடையாது.
அப்படி இருந்தும் ஜாஸ்மின் ஜாஃபர் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் வெவ்வேறு வகையான பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் மதியம் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நாட்களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
.
***
அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு: பாரதீய ஜனதாக கட்சி எதிர்ப்பு
கேரள மாநிலம், பம்பையில் செப்டம்பர் 20 ஆம் தேதி நடக்கும் உலக அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்மாநில அரசுக்கு பாரதீய ஜனதாக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
,அடுத்த மாதம் 20ல் கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார்.
‘இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்’ என தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், கடந்த 21ல் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி, சென்னை வந்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அய்யப்ப சங்கம விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இதற்கு கேரள பாரதீய ஜனதாக கட்சி தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
********
1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துகளை இழந்துள்ளோம்: அண்ணாமலை
”1986 ஆம் ஆண்டிலிருந்து இப் போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடுகளைக் காணவில்லை,” என தமிழக பாரதீய ஜனதாக கட்சி முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவில் அண்ணாமலை பேசியதாவது:
விநாயகர் சிலையை உடைத்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் சாதி பார்ப்பது கிடையாது. பணக்காரன் பார்ப்பது கிடையாது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழாவாக உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் பம்பாவில் அனைத்துலக ஐயப்பன் மகாநாட்டினை கம்யூனிஸ்ட் அரசு நடத்துகிறது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர். அவரை கேரளாவில் கால் வைக்க விட மாட்டோம் என்றோம். உடனே ஒரு அரசு விழாவை ஏற்பாடு செய்து எனக்கு பதிலாக அமைச்சர் தியாகராஜன் கலந்து கொள்வார் என ஸ்டாலின் சொல்கிறார்.
4.78 லட்சம் ஏக்கர் கோவில் சொத்தினால் வரக்கூடிய வருமானம் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் ஹிந்து அறநிலைத்துறை இதுவரை சி.ஏ.ஜி.க்கு எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. ஆய்வு நடத்தப்படவில்லை. கோவில்களில் தங்கம் எவ்வுளவு உள்ளது போன்ற சொத்துக்களின் விவரங்களை யும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். என்று அண்ணாமலை கூறினார்.
****
திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயிலுக்குள் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கோயிலில் கூடுதல் காவலர்களைப் பணியமர்த்த தூத்துக்குடி எஸ்.பி-க்கு உத்தரவிட்டதோடு, சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
****
பித்தளைத் தட்டுகள் மூலம் விநாயகர்ச் சிலை !
சென்னை கொளத்தூரில் பித்தளைத் தட்டுகள் மூலம் செய்யப்ப்டட விநாயகர் சிலைக்கு பூஜை நடத்தப்பட்டது.
2 ஆயிரத்து 300 பித்தளைத் தட்டுகள், ஆயிரத்து 500 குங்கும சிமிழ்கள் மூலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட 42 அடி விநாயகர்ச் சிலை வைக்கப்பட்டுப் பூஜை செய்யப்பட்டது.
இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தனர்.
***
ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்காக மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 15,000 விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க, மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இவ்வாறு நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது பற்றி சுவையான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
xxxx
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
TAGS- World Hindu news bulletin, 31-8-25, Gnanamayam Broadcast