Post No. 14,964
Date uploaded in London – 10 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் உள்ள கதை பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கும். காலவர் என்பவர் விச்வாமித்ரரிடம் கல்வி கற்றார். குருகுல வசம் முடிந்தது. குருவே ! என்ன தட்சிணை கொடுக்க வேண்டும் ? என்று பணிவுடன் கேட்டார். காலவர் ஏழை மாணவர் என்பதால் போய் வா! சீடா ! போய் வா சீடா! என்று இருமுறை கூறினார்; பொருள் விளங்காத காலவர் குரு தட்சிணை எவ்வளவு வேண்டும்? என்று மீண்டும் மீண்டும் வினவ , கோபத்தில் குரு விச்வாமித்தார் சொன்னார்,
“போ! 800 வெள்ளைக் குதிரைகளைக் கொண்டுவா; அதன் காதுகள் ஒருபுறம் மட்டும் கருப்பாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார் .
காலவர் கவலையுடன் குதிரை தேடி அலைந்தபோது கருடன் வந்து, “வா உன்னை யயாதி மன்னரிடம் அழைத்துச் செல்கிறேன்; அவர் உதவிடுவார்” என்று சொல்லி கூட்டிச் சென்றார் யயாதி , “எதையும் கேள்” தருகிறேன்” என்றார்; வினோதமான 800 குதிரைகள் தேவை என்றவுடன் அவருக்குத் திகில் ஏற்பட்டது. இரு நூறு குதிரைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் என் மகள் மாதவி பேரழகி. அவளை அடுத்த நாட்டு மன்னரிடம் அழைத்துச் சென்று உன் கோரிக்கையைச் சொல்; சரி என்று சொன்னால் உனக்குக் குதிரைகள் கிடைக்கும் என்றார்.
அந்தப் பெண்ணரசி மாதவி, யாருடன் படுத்தாலும் கன்னித் தன்மையை இழக்காமல் குழந்தை பெரும் பாக்கியத்தை—வரத்தைப்– பெற்றிருந்தாள். கடைசியாக அவள் திவோதசன் என்ற மன்னருடன் படுக்கச் சென்றபோது இந்தக் கதை வருகிறது.
மன்னர்கள் பல பெண்களை மணப்பதும் ஒரு மன்னன் போரில் தோற்றால் அவனுடைய மனைவியர், கொள்ளையிட்ட செல்வத்தின் பகுதியாக மாற்றானுக்குச் சொந்தமாவதும் இந்தியா முழுதும் வழக்கில் இருந்தது . ஆகவே மாதவி பல மன்னர்களுடன் படுத்தது தவறில்லை என்ற கட்டத்தில் புகழ்பெற்ற கணவன்- மனைவி பட்டியல் வருகிறது
சூர்யா – பிரபாவதி ,
அக்னி – ஸ்வாஹா ,
இந்திரன் -சசி ,
சந்திரன் – ரோகிணி ,
எமன் – தூமோர்னா -5
வருணன் – கவுரி ,
குபேரன் – ரித்தி ,
பூமிபதி – பூமி ,
தர்மதேவன் – திரிதி ,
நாராயணன் -லட்சுமி ,-10
ருத்ரன்- ருத்ராணி ,
பிரம்மா – வேதி ,
வசிஷ்டன் – அருந்ததி ,
ச்யவனன் – சுகன்யா ,
புலஸ்தியன் – சந்தியா ,15
அகஸ்தியன் – லோபாமுத்ரா ,
பிருகு — புலோமா ,
காஷ்யபன் — அதிதி ,
ஜமதக்னி — ரேணுகா ,
பிரஹஸ்பதி — தாரா , –20
சுக்ராச்சார்யா – சதபர்வா
ரிஷிகன் – சத்தியவதி ,
மனு – சரஸ்வதி ,
நாரதன் — சத்தியவதி ,
புலஸ்தியன் — பிரதிசயா , 25
சத்தியவான் — சாவித்ரி ,
புருருவன் — ஊர்வசி ,
துஷ்யந்தன் – சாகுந்தல ,
நளன் — தமயந்தி
தனஞ்சயன் — குமாரி – 30
கிருஷ்ணன் — ருக்மினி
திவோதாச – மாதவி – 32
—- உத்யோக பர்வ .
***
என் கருத்துக்கள்
ருத்ர – ருத்ராணி மற்றும் வருண -வருணாணி ஆகியன 2700 ஆண்டுகளுக்கு முந்திய பாணினி நூலில் உள்ளது
அருந்ததியின் பெயர் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது
வினோதம் என்னவென்றால் மேற்கண்ட பட்டியலில் ராமர் – சீதா தேவி ,திரௌபதி – பஞ்ச பாண்டவர், குந்தி – ஐந்து தேவர்கள், திரிதராஷ்ட்ரன் -காந்தாரி பெயர்கள் இல்லை.
கச்ச – தேவயானி , அஷ்டவக்ர – சுப்ரபா ,
ஸ்வேதகேது – சுவர்ச்சலா ஜோடிகள் பாரத நூலின் ஏனைய பகுதிகளில் வருகிறது
****
My previous post on Legendary Lovers
அம்பிகாபதி – அமராவதி கதையை முன்னரே எழுதியுள்ளேன்.
ரோமியோ அண்ட் ஜூலியட் , சாருதத்தன் – வசந்த சேனா உதயணன் – வாசவாதத்தா , ஆதி மந்தி – ஆட்டனத்தி ஜோடிகளை யும் நாம் அறிவோம்.
–SUBHAM—
TAGS- நல்ல மனைவி யார்?, மஹாபாரதம், அற்புத மனைவியர், பட்டியல்!