சங்க இலக்கியத்தில் தர்ம, அர்த்த, காம மோக்ஷ ! (Post14,970)

Written by London Swaminathan

Post No. 14,970

Date uploaded in London –  11 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவள்ளுவர்  இந்துமத வாழ்க்கை குறிக்கோள்களான தர்ம- அர்த்த- காம= மோக்ஷ என்பதில் முதல் மூன்றை எடுத்துக்கொண்டு  தனது நூலுக்கு முப்பால் என்று பெயரிட்டார் . அறம் பொருள் இன்பம் என்று மூன்று பகுதிகளாக நூலையே பிரித்தார் அவர் ஒரு பக்கா இந்துத்வா பேர்வழி!

அவருக்கு முன்னால்  தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைச் செய்து அவரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டார்கள்.

தொல்காப்பியத்தில் குறைந்தது இரண்டு இடங்களில் அவர் இதைச் சொல்கிறார் . அவரே மந்திரம், சூத்திரம் உவமை, காமம் ,அதிகாரம் , தேசம், போன்ற சம்ஸ்க்ருத சொற்களை நூல் முழுதும் பயன்படுத்தியதால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை !அவருடைய பெயர் த்ருண தூம அக்கினி என்று உரைகாரர் மதுரை பாரத்வாஜ கோத்ர நச்சினார்க்கினியர் செப்புவதால் தொல்காப்பியர் சம்ஸ்க்ருத அறிஞர் என்பதையும் நாம் அறிய முடிகிறது . வேதத்தையும் குறிப்பிட்டு மனு நீதி நூல் ஸ்லோகங்களையும் நமக்குத் தமிழில் கொடுத்துள்ளார். மறையோர் தேசம் என்று சொல்லி எட்டுவகைத் திருமணங்களை மனு நீதி நூலில் இருந்து நமக்களித்தார் ; பிராமணர்களின் அறுவகைத் தொழிலையும் குறிப்பிட்டு அரசர்களின் ஐந்துவகை கடமைகளையும் அப்படியே மனுநீதி நூலில் இருந்து கொடுத்தார் . இதோ அவர் சொல்லும் தர்ம அர்த்த காம ! தமிழ் மரபின்படி வீடு என்னும் மோட்சத்தை அவர்கள் தர்மத்தின் அதிகாரத்தில் சேர்த்துவிட்டார்கள்.

தொல்காப்பியத்தில்

தொல்காப்பியம் (சூத்திரம்1038, 1363),

அந்நிலை மருங்கின் ஆறாம் முதலாகிய

மும்முதற் பொருட்கும்  உரிய என்ப 1363

பொருள்

அந்த நான்கு வகைப்பாக்களும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருள்களை இயற்றுவதற்கு உரியன என்று பகர்வார்கள்.

***

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்போடு புணர்ந்த ஐங்கிணை மருங்கின்

சூத்திரம் 1038

பொருள்

இன்பமும் பொருளும் அறமும்  என்று சொல்லப்பட்டு அன்போடு புணர்ந்த நடுவண் ஐந்திணையிடத்து  நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயின், அது மறையவர் நூல்களில் கூறப்பட்ட எட்டுவகை மணங்களுள் இசைக்கு ஏற்ற நல்ல யாழினை  உடைய  கந்தருவர் மணத்தைப் போன்றதாகும்.

MANU 3-20

चतुर्णामपि वर्णानं प्रेत्य चैह हिताहितान् ।
अष्टाविमान् समासेन स्त्रीविवाहान्निबोधत ॥ 3-२० ॥

caturṇāmapi varṇānaṃ pretya caiha hitāhitān |
aṣṭāvimān samāsena strīvivāhānnibodhata || 3-20 ||

Understand briefly these (following) eight forms of marriage of girls, among the four castes,—which are beneficial and not-beneficial here (in this life) and also after death.—(20)

***

புறநானூற்றில் 

பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்

ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;

அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும், பெரும! நின் செல்வம்;

ஆற்றாமை நிற் போற்றாமையே. புறம் 28

***

புறநானூறு 31 Purananuru 31

புலவர் கோவூர் கிழார்.

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,

இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,

உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,

நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்   5

பாசறை அல்லது நீ ஒல்லாயே;

****

திருக்குறளில்

திருக்குறளிலும் (501, 754, 760, முப்பால்) காண்கிறோம்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்– குறள் 501

அறம், பொருள், இன்பம்,   உயிருக்கு அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

***

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்- 754

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

***

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு. குறள் 760

சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

–SUBHAM—

TAGS- சங்க இலக்கியத்தில், தர்ம, அர்த்த, காம மோக்ஷ, திருக்குறளில், புறநானூற்றில், தொல்காப்பியத்தில் , அறம் பொருள் இன்பம்

Leave a comment

Leave a comment