
Post No. 14,977
Date uploaded in London – —13 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரதி போற்றி ஆயிரம்
முதல் பாகம்
ச. நாகராஜன்
(இந்த நூலைத் தொகுத்தவர்)
22 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 254 பாடல்கள் இந்த முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.
அடுத்த இரு பாகங்களில் 746 பாடல்கள் இடம் பெறுகின்றன.
**
முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள முன்னுரையின் ஒரு பகுதி
முன்னுரை
என்னுடைய குடும்பமே பாரதி பற்றுடைய குடும்பம் என்றால் அது மிகையாகாது.
எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் பாரதியார் பாடல்களை ஜெயபாரதியில் வெளியிட்டு பாரதியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்.
அவர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடும் போது பிரமித்துப் போய் மெய்மறந்து அதைக் கேட்போம். எனது சகோதரர்கள் அனைவரும் பாரதியார் பாடல்களைப் பரப்பும் பணியில் இடைவிடாது ஈடுபட்டவர்கள்.
அடுத்து சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு வி.ஜி. சீனிவாசன் சிறந்த பாரதி பக்தர். எங்கள் குடும்ப நண்பர். அவர் எங்களை பாரதியார் வழியில் நன்கு ஊக்குவித்தவர்.
ஆக இயல்பாகவே பாரதியாரைப் போற்றியவர்களை நாங்கள் போற்றி வந்தோம். இந்த வகையில் பாரதியாரைப் போற்றி வெளிவரும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்பொழுது படித்து இவற்றைத் தொகுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் அவ்வப்பொழுது என் மனதில் எழுவதுண்டு.
மகாகவி பாரதியாரை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்திய எனது கட்டுரைகளின் தொகுப்பு இரு பாகங்களாக புஸ்தகா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. (மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1 மற்றும் பாகம் 2)
அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றி அவ்வப்பொழுது எழுதிய எனது கட்டுரைகளின் தொகுப்பையும் புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
(அதிசய மஹாகவி பாரதியார்)
பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஒராயிரம் கவிதைகளை சேகரித்து, தொகுத்து www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் 11-12-2017 முதல் வெளியிட ஆரம்பித்தேன். இந்தப் பணி 7.5.2018இல் முடிவு பெற்றது.
*
முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள
கவிஞர்கள், பாடல்களின் பட்டியல்
பகுதி
எண் கவிஞர் பாடல்கள் பாடல்களின்
தொடர் எண்
1 வி.ஜி.சீனிவாசன் 6 1 முதல் 6
2. இரகுபதி சாமிநாதன் 1 7
இரா. இளங்குமரன் 5 8 முதல் 12
3. கலைமோகன் 3 13 முதல் 15
மு. சதாசிவம் 2 16, 17
கா. தேவராசக்கனி 1 18
4. சூ. கிரிதரன் 6 19 முதல் 24
5. ம.க.சிவசுப்பிரமணியன் 6 25 முதல் 30
6. பாரதிதாசன் 6 31 முதல் 36
7. பாரதிதாசன் 6 37 முதல் 42
8. பாரதிதாசன் 9 43 முதல் 51
9 . நாமக்கல் கவிஞர் 10 52 முதல் 61
10. நாமக்கல் கவிஞர் 13 62 முதல் 74
11. நாமக்கல் கவிஞர் 8 75 முதல் 82
12. நாமக்கல் கவிஞர் 5 83 முதல் 87
13. நாமக்கல் கவிஞர் 5 88 முதல் 92
14. நாமக்கல் கவிஞர் 3 93 முதல் 95
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் 1 96
15. அழ.வள்ளியப்பா 5 97 முதல் 101
16. கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை 6 102 முதல் 107
17. கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை 6 108 முதல் 113
18. கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை 6 114 முதல் 119
19. கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை 6 120 முதல் 125
20. கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை 6 126 முதல் 131
21. கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை 3 132 முதல் 134
22. பாரதிதாசன் 2 135,136
23. பாரதிதாசன் 5 137 முதல் 141
24. பாரதிதாசன் 5 142 முதல் 146
25. பாரதிதாசன்̀̀ 6 147 முதல் 152
26. பாரதிதாசன் 4 153 முதல் 156
27. பாரதிதாசன் 3 157 முதல் 159
28. கண்ணதாசன் 5 160 முதல் 164
29. கண்ணதாசன் 4 165 முதல் 168
30. கண்ணதாசன் 5 169 முதல் 173
31. கண்ணதாசன் 6 174 முதல் 179
32. கண்ணதாசன் 8 180 முதல் 187
33. கண்ணதாசன் 6 188 முதல் 193
34. கண்ணதாசன் 4 194 முதல் 197
35 பண்டித ஜனாப் K. அப்துல்
சுகூர் (1933) 8 198 முதல் 205
36. பண்டித ஜனாப் K. அப்துல்
சுகூர் (1933) 18 206 முதல் 213
37. நா.சீ. வரதராஜன் 4 214 முதல் 217
38. சங்கு கணேசன் 1 218
மதிவண்ணன் 2 219, 220
ஆர்.பி.சாரதி 1 221
39. கவிஞர் தமிழழகன் 10 222 முதல் 231
40. கவிஞர் K.ராமமூர்த்தி 9 232 முதல் 240
41. கவிஞர் K.ராமமூர்த்தி 9 241 முதல் 249
42. திருமதி சௌந்தரா கைலாசம் 5 250 முதல் 254
****
கவிஞர்கள்
1 வி.ஜி.சீனிவாசன்
2. இரகுபதி சாமிநாதன்
3. இரா. இளங்குமரன்
4. கலைமோகன்
5. மு. சதாசிவம்
6. கா. தேவராசக்கனி
7. சூ. கிரிதரன்
8. ம.க.சிவசுப்பிரமணியன்
9. பாரதிதாசன்
10. நாமக்கல் கவிஞர்
11. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
12. அழ.வள்ளியப்பா
13. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
14. கண்ணதாசன்
15 பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர்
16. நா.சீ. வரதராஜன்
17. சங்கு கணேசன்
18. மதிவண்ணன்
19. ஆர்.பி.சாரதி
20. கவிஞர் தமிழழகன்
21. கவிஞர் K.ராமமூர்த்தி
22. திருமதி சௌந்தரா கைலாசம்
to be continued…………………………….
**********