சங்க இலக்கிய புலவர் பெயர்களில் நரசிம்மன், விஷ்ணுதாசன், ருத்ரன்! (Post.14,996)

Written by London Swaminathan

Post No. 14,996

Date uploaded in London –  17 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கிய புலவர் எண்ணிக்கை சுமார் 450 ஆகும். சிலர் அதை 540  ஆகக் காட்டி மகிழ்வர் ; காரணம் அவர்களுடைய பெயர்களுக்கு முன்னாலோ பின்னாலோ ஊர்ப்பெயர் அல்லது ஜாதிப் பெயர் அல்லது தொழில்பெயர்  சேர்ந்துவிட்டால் அவரைத் தனியான புலவர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் ; அப்படிச் செய்வதில் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை .

விந்தை என்னவென்றால் நாகர்கள் என்ற பெயரில் சுமார் இருபது புலவர்கள் உள்ளனர்! கண்ணன் என்ற பெயரில் முப்பதுக்கும் மேலானோர் உள்ளனர்!!  புலவர் பெயர் இல்லாத பாடல்களும் நிறைய உள்ளன. புலவர் பெயர் தெரியாத இடத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் உவமை எடுத்திருக்காட்டு, சொல்லாக்கம் ஆகியவ ற்றைப் பயன்படுத்தி  சங்கப் பாடல்களைத் தொகுத்தோரே நாமகரணம் செய்துவிட்டனர் இப்படி ரிக் வேதத்தைத் தொகுத்த வியாசரும் செய்ததால் அவரைப் பின்பற்றி தமிழிலும் செய்துவிட்டனர் .

எல்லோருக்கும் சிவப்புக் கண்கள் இருப்பதில்லை; ஆனால் செங்கண்ணன் என்ற பெயரில் பல புலவர்கள் உள்ளனர் இது சிவந்த கண்ணுடைய ருத்ர சிவன் பெயராக இருக்கலாம் அல்லது விஷ்ணுவின் நான்கு தோற்றங்களில் ஒன்றான சங்கர்ஷணன் ஆக இருக்கலாம். புலவர் பெயர்களில் ஆராய்ச்சி செய்வதற்கு நிறைய இடம் இருக்கிறது நாகர்கள் பெயர் குப்தர் கல்வெட்டிலும்  இருக்கிறது கணபதி நாகன் என்பவர் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் வரும் முக்கியப்புள்ளி ஆகும்.

இதோ நாகன் பெயர்களில் முடியும் புலவர்கள் 

Madhurai Maruthan Ilanākanār           மதுரை மருதன் இளநாகனார்

Ammeyyan Nākanār         அம்மெய்யன் நாகனார்

Ilanakanār    இளநாகனார்

Inisanthanākanār  இனிசந்தநாகனார்

Madhurai Kallin Kadaiyathan Vennākanār    மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

Madhurai Kollan Vennākanār (also known as Madhurai Pon Sey Kollan Vennākanār)            மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

Madhurai Perumaruthan Ilanākanār  மதுரைப் பெருமருதன் இளநாகனார்

Madhurai Ponseykollan Vennakanār  மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்

Madhurai Poothan Ilanākanār  மதுரைப் பூதன் இளநாகனார்

Muppēr Nākanār   முப்பேர் நாகனார்

Muranjiyūr Mudinākanār           முரஞ்சியூர் முடிநாகனார்

Ponnākanār பொன்னாகனார்

Purathinai Nannākanār   புறத்திணை நன்னாகனார்

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்,

Theenmathi Nākanār       தீன்மதி நாகனார்

Vellaikudi Nākanār           வெள்ளைக்குடி நாகனார்

***

அடுத்ததாக கண்ணன் பெயர்களைக் கொண்ட சங்கப்புலவர்களைக் காண்போம் ; பெரும்பாலோரின் கண் தோன்றும் விதத்தை வைத்துப் பெயர்களை வைத்தார்களோ  அல்லது  அவர்கள் குடும்பத்தில் தாத்தா, கொள்ளுத்தாத்தா பெயர்களை வைத்தார்களோ தெரியவில்லை.  வேறு சில இடங்களில் விஷ்ணுவின் பெயர் அல்லது கிருஷணன் பெயர் என்பது தெளிவாகவே உள்ளது ராமாயண, மஹாபாரத, பாகவதக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சங்க இலக்கியத்தில் இருப்பதும் தாமோதரன், கேசவன் முதலிய பெயர்களில் புலவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது .

சுமார் 34  பெயர்களில் கண்ணன் வருகிறது  கிருஷ்ணனை வடக்கில் கன்னையா என்பார்கள்; அதிலிருந்து கண்ணன் வந்திருக்க வேண்டும். பல புலவர் பெயர்களில் உடல் உறுப்பான கண் என்பதையே காகணமுடிகிறது . இதோ ஒரு பட்டியல்

Vilikatpēthai Perunkannanār      விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்

Vēttakannanār        வேட்டகண்ணனார்

Vēmpatrūr Kannan Koothanār   வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்

Venkannanār           வெண்கண்ணனார்

Vāyililankannanār  வாயிலிளங் கண்ணனார்

Uraiyūr Muthukannan Sāthanār உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Umparkattu Ilankannanār           உம்பற்காட்டு இளங்கண்ணனார்

***

Thāyankannanār    தாயங்கண்ணனார்

இது கட்டாயம் நாம் வழிபடும் கிருஷ்ணன் பெயர்தான்;

கண்ணதாசன் போல.  ஏனெனில் தாயன் என்பது தாசன் ஆகும். தமிழில்  வரும் விதங்களில்  வரும். ய=ச

SA=YA; Ja= SA or YA

Thankāl Āthireyan Chenkannanār        தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

இது ஆத்ரேய கோத்ராப் புலவரின் பெயர்சிவப்புக் கண் என்பதால் ருத்ரனாகவோ சங்கர்ஷண வடிவ திருமாலாகவோ இருக்கலாம்.

***

Thāmarpal Kannanār        தாமற்பல் கண்ணனார்

இது நரசிம்ம அவதாரப்பெயர்; ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஸ்ட்ராய தீமஹி என்பது நரசிம்ம காயத்ரீ மந்திரம். நரசிம்மத்திலுள்ள கூர்மையான பற்கள் தாமற்பல் ஆகும்.

Thāmarpal Kannanār        தாமற்பல் கண்ணனார்

Narasimha Gayatri Mantra is “Om Vajranakhaya Vidmahe Tiksnadamstraya  தீக்ஷ்ண தம்ஸ்ட்ராய  =கோரமான பற்களுடைய

***

Senkannanār    செங்கண்ணனார் சங்கர்ஷண ( விஷ்ணுவின் நான்கு வடிவங்களில் ஒன்று)

***

Sellūr Kōsikan Kannanār    செல்லூர் கோசிகன் கண்ணனார்

இவர் கெளசிக கோத்ரப் புலவர்.;

Pothumpil Kilān Vennkannanār பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்

Poothankannanār  பூதங்கண்ணனார்

Poonkannanār        பூங்கண்ணனார்

            Perunkannanār       பெருங்கண்ணனார்

Pāndiyan Enāthi Nedunkannanār          பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

Pāndarankannanār   பாண்டரங்கண்ணனார்

Ollaiyan Chenkannanār   ஒல்லையாயன் செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர்

Nāmalār Makanār Ilankannanār நாமலார் மகனார் இளங்கண்ணனார்

Muthuvenkannanār          முதுவெங்கண்ணனார்

Marungūr Kilār Perunkannanār மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்

Madhurai Thathankannanār      மதுரைத் தத்தங்கண்ணனார்

இது தத்தாத்ரேயரின் பெயராக இருக்கலாம்.

Madhurai Pullankannanār           மதுரைப் புல்லங்கண்ணனார்

Madhurai Maruthankilār Makanār Perunkannanār மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்

Madhurai Kathakkannanār         மதுரைக் கதக்கண்ணனார்

Madhurai Kannanār          மதுரைக் கண்ணனார்

Madhurai Chenkannanār/ Red Eyed   மதுரை செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர் .  சிவப்புக்கண் ருத்ரனுக்கே உண்டு

Kuttuvan Kannanār            குட்டுவன் கண்ணனார்

Kumattoor Kannanār        குமட்டூர் கண்ணனார்

Koodalūr Palkannanār      கூடலூர்ப் பல்கண்ணனார். விஷ்ணுவின் அவதாரம் நரசிம்மன்

Kolli Kannanār         கொல்லிக் கண்ணனார்

Kidangil Kulapathi Nakkannanār         

Good Eye= SuLochana in Sanskrit; கிடங்கில் குலபதி நக்கண்ணனார்சுலோச்சனார்  என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில் உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் Good Eye= SuLochana in Sanskrit;; சுலோச்சனார்  என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில். உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் ;

சு+ லோசன் = நல்ல கண்

Kidangil Kāvithikeerankannanār கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

Kāviripoompattinathu Kārikkannanār  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

Kāviripoompattinathu Chēntham Kannanār  காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார்

Kāviripoompattinathu Chenkannanār  காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

Kathaiyankannanār           கதையங்கண்ணனார்

Kārikkannanār        காரிக்கண்ணனார்

Kanthakkannanār  கந்தக்கண்ணனார்

Kannankotranār     கண்ணங் கொற்றனார்

Kannanār      கண்ணனார்

***

Kadiyalūr Uruthirankannanār    கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ருத்ராக்ஷக் கண் என்பது சிவ பெருமானின் பெயர் என்பதில் சந்தேகமில்லை

செங்கண்ணனார்.

Irunkōn Ollaiyān Chenkannanār           இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார்/ Red Eyed may mean Vishnu or Shiva.

Ilankannanār           இளங் கண்ணனார்

Erukkattūr Thāyankannanār எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் + தாசன் கண்ணன்

Chēnthankannanār            சேந்தங் கண்ணனார்

Āvūr Kilār Makanār Kannanār    ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்

Āsiriyar Perunkannanār    ஆசிரியர் பெருங்கண்ணனார்

—Subham—

Tags- Sangam Tamil Poets, Names, Wonders, Lord Krishna, Naga names

Leave a comment

Leave a comment