சங்கப்புலவர்களில் விசித்திரப் பெயர்கள், அந்தணர் கோத்திரங்கள், பெண்பாற் புலவர்கள்! (Post No.15,000)

Written by London Swaminathan

Post No. 15,000

Date uploaded in London –  18 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ரிக் வேதத்தில் பெயர் தெரியாத புலவர்களுக்கு கற்பனைப் பெயர்களைக் கொடுத்தனர். அது போல சங்க நூல்களைத் தொகுத்தோர், பல புலவர்களுக்குப் பெயர் தெரியவில்லை என்றும் மேலும் பல புலவர்களுக்கு அவர்கள் பாடல்களில் உள்ள வினோத விசைத்திர உவமைகள் அல்லது சொல்லாக்கங்களையே புலவர் பெயர்கள் என்றும் சூட்டினார்கள். இந்தப்பெயர் பட்டியல்களில் உறுதி செய்ய முடியாத பெயர்களும் இருப்பதால் எதிரும் புதிருமாக விளக்கம் தருவதும் உண்டு.

இதோ ஒரு பட்டியல்

Anilādu Mundriyār   அணிலாடு முன்றிலார்

Immen Keeranār   இம்மென் கீரனார்

Kookai Kōliyār     கூகைக் கோழியார்

Kuppaikōliyār குப்பைக்கோழியார்

Meeneri Thoondilār  மீனெறி தூண்டிலார்

Ōr Ēr Uluvanār    ஓர் ஏர் உழவனார்

Ōrampōkiyār  ஓரம்போகியார்

Ōril Pichaiyār ஓரில் பிச்சையார்

Sempulapēyaneerār  செம்புலப் பெயனீரார்

Thēypuri Palankayitrinār    தேய்புரிப் பழங்கயிற்றினார்

Thippu Tholār திப்புத்தோளார்

Vittakuthiraiyār விட்டகுதிரையார்

****

நிறைய புலவர்களுக்கு ஸம்ஸ்க்ருதப் பெயர்களும்  உள்ளன ; இதோ ஒரு பட்டியல்

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் :– தாமோதரன் , கேசவன் , மஹாதேவன் , விஷ்ணுதாசன் (விண்ணன் தாயன்), கண்ணதாசன், (தாசன் கண்ணன் ), வால்மீகி ,  சகாதேவன் , கவுதமன் , கௌசிகன்  (விஸ்வாமித்திர ), காவ்ய (written as காப்பிய ), ஆச்சார்யா  (ஆசான் ),ப்ரஹ்மச்சாரி Brahmachari, பிரம்மா , பெரி  சாத்தன் , மோதம்கிழார்,தேவகுல, பாலியாதன் , சாஸ்தா  or சார்தன் , நாகன் ருத்ர , ருத்ராக்ஷ/  உருத்திரன் கண்ணன்  ,

கோத்ர  பெயர்கள் : கௌசிக , காஸ்யப , காப்பிய , கவுதம , வாதுல்ய  , கார்க்ய  , ஆத்ரேய, மாமுலன் , பாரதிவாஜத்   etc.,ஆச்சார்யா  (ஆசிரியர் in Tamil), காமாக்ஷி  (காமக்கண்ணி  in Tamil), சுலோச்சனா/ நக்கண்ணை  in Tamil), உலோச்சன , கபிலர் , பரணர் , மார்க்கண்டேயர்  and ப்ரஹ்மதத்த, வணிக ,தத்த 

குண்டுக்கட்  பாலியாதான்  பெயர் பிராக்ருத  நூலான காதா சப்த சதியிலும் உளது

பெண்பாற்புலவர்கள்

இவர்களில் பெரும்பாலோர் பெண்களா அல்லது பொதுவான பெயர்களா என்ற சர்ச்சையும் உண்டு ; ஆனால் இதற்கு 2000  ஆண்டுகளுக்கு முன்னர் ரிக்வேதத்தில் இருபது பெண்பாற்புலவர்கள்  பெயர்கள் இருப்பதால் ஐயுற வேண்டியதில்லை.

Allūr Nanmullaiyār     அள்ளூர் நன்முல்லையார்

Āthimanthiyār               ஆதிமந்தியார்

Avvaiyār             ஔவையார்

Kachipēttu Nannākaiyār        கச்சிப்பேட்டு நன்னாகையார்

Kākkai Pādiniyār Nachellaiyār            காக்கை பாடினியார் நச்செள்ளையார்

Kāmakkani Pasalaiyār             காமக்கணிப் பசலையார்

Kāvarpendu     காவற்பெண்டு

Kumili Gnālalār Nappasalaiyār          குமிழி ஞாழலார் நப்பசலையார்

Kuramakal Ilaveyini    குறமகள் இளவெயினி

Kuramakal Kuriyeyini குறமகள் குறியெயினியார்

Madhurai Nalvelliyār (also known as Nalvelliyār)   மதுரை நல்வெள்ளியார் (நல்வெள்ளியார்)

Māripithiyār    மாரிப்பித்தியார்

Mārōkathu Nappasalaiyār மாறோக்கத்து நப்பசலையார்

Mudatthāmak Kanniyār          முடத்தாமக்கண்ணியார்

Nannākaiyār  நன்னாகையார்

Okkūr Māsāthiyār       ஒக்கூர் மாசாத்தியார்

Oon Pithaiyār ஊண் பித்தையார்

Pāri Makalir     பாரி மகளிர்

Puunkan uththiraiyaar பூ ங்கண் உத்திரையார்

Ponmudiyaar பொன்முடியார்

Uraiyūr Ēnichēri Mudamōsiyār           உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

Velliveethiyār  வெள்ளிவீதியார்

Venni Kuyathiyār          வெண்ணிக் குயத்தியார்

Veri Pādiya Kāmakanniyār    வெறி பாடிய காமக்கண்ணியார்

Thāyankanniyār           தாயங்கண்ணியார்

பூங்கனுத்திரையார்

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

****

கோத்திர பெயர்களைச் சொல்லும் பிராமணர்கள்:–

Ilankousikanār இளங்கௌசிகனார்

Iraniyamuttathu Perunkundrūr Perunkousikanār   இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

Kallil Āthiraiyanār   கள்ளில் ஆத்திரையனார்

Kāppiyan Chēnthanār காப்பியஞ் சேந்தனார்

Kāppiyātru Kāppiyanār     காப்பியாற்றுக் காப்பியனார்

Kāsipan Keeranār   காசிபன் கீரனார்

Kavuthaman Sāthēvanār   கவுதமன் சாதேவனார் (ஆமூர் கவுதமன் சாதேவனார்)

Kondimankalathu Vāthuli Narchēnthanār  கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

Kōthamanār  கோதமனார்

Madhurai Ilankanni Kōsikanār    மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்

Madhurai Ilankousikanār   மதுரை இளங்கௌசிகனார்

Madhurai Kavuniyan Poothathanār மதுரைக் கவுணியன் பூதத்தனார்

Neythal Kārkkiyār   நெய்தல் கார்க்கியர்

Pālai Gouthamanār  பாலைக் கெளதமனார்

Perunkousikanār    பெருங்கௌசிகனார்

Sellūr Kōsikan Kannan    செல்லூர் கோசிகன் கண்ணனார்

From other sources we know Chandilya, Bharadvaja Gotras. Most famous commentator Nachchinarkiniyar , and Nedum Bharatayanar, Teacher of a Chera king, belong to Bharadwaja Gotra.

சாண்டில்ய ,பாரத்வாஜ கோத்திரப்பெயர்கள் தொகுப்பில் காணப்படுகின்றன.

கபிலர் ,பரணர் ,மாமூலனார் நக்கீரர், மதுரைக் கணக்காயனார் முதலிய புலவர்கள்  கோத்திரப் பெயர்களை சொல்லவில்லை ; ஊரறிந்த பார்ப்பானுக்குப் பூணுல்  எதற்கு? என்ற பாலிசி உடை யவர்கள் போலும்?

தன்னை மதுரை பாரத்வாஜ கோத்திரக்காரன் என்பதை புகழ்பெற்ற உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஒவ்வொரு உரையிலும் சேர்த்து இருக்கிறார்

சங்க இலக்கியத்தில் உள்ள 30000 வரிகளில் பத்தாயிரம் வரிகள் பிராமணப் புலவர்கள் எழுதியவை ஆகும் ; அதாவது மூன்றில் ஒரு பகுதி ; இதோ அவர்கள் எழுதிய நூலகள்:

தொல்காப்பியம் N (Pre Cankam period)

குறிஞ்சி  பாட்டு  (lines 261)

திரு  முருகாற்றுப்படை  (lines 317)

பட்டினப்  பாலை  (Lines 301)

பெரும்பாணாற்றுப்  படை  (Lines 500)

மலைபடுகடாம்  (lines 583)

நெடுநல்  வாடை  (lines 188)

பதிற்றுப்  பத்து  (all except one)

ஐங்குறுநூறு  (கபிலர்  100  மட்டும் )

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் நாக சாமி  எழுதிய யாவரும் கேளிர் என்ற நூலில் மன்னர்களின் கோத்திரப் பெயர்களையும் தந்துள்ளார்; பிராமணர்களின் 32  கோத்திரங்கள் கல்வெட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மகா வம்சமும் விஜயன் வந்த காலத்தில் இலங்கையில் பிராமணர்கள் வசித்ததையும் அசோகன் அனுப்பிய தூதர்களைப் பிராமணர்கள் வரவேற்ற செய்தியையும் சொல்கிறது.

—SUBHAM—

TAGS– சங்கப்புலவர்கள் , விசித்திரப் பெயர்கள், அந்தணர் கோத்திரங்கள், பெண்பாற் புலவர்கள், பிராமணர் எழுதிய நூல்கள் 

Leave a comment

Leave a comment