ரிக், அதர்வண வேதங்களில் மருத்துவ சொற்கள்! அபூர்வ தகவல்கள்!! -1 (Post.15019)

Written by London Swaminathan

Post No. 15,019

Date uploaded in London –  23 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நாலாயிரம் முதல் எடடாயிரம் ஆண்டுகள் பழமையுடையவை என்று பேராசிரியர் வில்சன், ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் தேதியிட்ட ரிக், அதர்வண வேதங்களில் மருத்துவ சொற்கள் நிறைய உள்ளன. அவை இடம்பெறும் சூக்தங்களை ஆராய்ந்தால் புதிய, புதிய அதிசயச் செய்திகள் கிடைக்கின்றன ! முதல் அதிசயம் அந்த சூக்தங்களில் உள்ள நிறைய சொற்களை  தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்.

அதர்வண வேதத்தில் அதிக மருத்துவ சொற்கள் உள்ளன; ஏனெனில் அந்த வேதம் மருந்துகள், மூலிகைகள், நோய் தீர்க்கும் தாயத்துகளைப் பற்றி நிறையவே பேசுகிறது .

பிற்காலத்தில் எழுந்த சதபத பிராமணம் , அதைத் தொடர்ந்து வந்த பிருஹத் ஆரண்யக உபநிஷத் முதலியவற்றிலும் மருத்துவக் குறிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் சமய சம்பந்தமான புஸ்தகங்கள் ; இதற்குப் பின்னர் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட சுஸ்ருத, சரக சம்ஹிதைகளில் முழுக்க முழுக்க மருத்துவ விஷயங்கள் உள்ளன; அவைகள் குறிப்பிடும் எலும்புகள், தசைகளின் எண்ணிக்கையும் இருதயம் பற்றிய வருணனையும் இன்றைய மருத்துவ நூல்களில் உள்ளவைகளைப்   போலவே இருப்பது வியப்புக்குரிய விஷயம் ஆகும் .

விந்தையிலும் விந்தை என்னவென்றால் உலகில் வேதங்கள் எழுந்த காலத்தில் ஏனைய பழைய  மொழி  எதிலும்  நூல்களே எழுதப்படவில்லை; செத்துப் போனா சுமேரிய, எகிப்திய மொழிகளில் கூட அதிகம் இல்லை.. அதைவிட உலக அதிசயம்  என்னவென்றால் பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் இன்றுவரை இதை வாய்மொழியாக பயின்றும் பரப்பியும் வருகின்றனர் ;அதனால்தான் பாரதியாரும் வேதம் என்றும்  வாழ்க என்று கொட்டு முரசே என்று பாட்டு பாடி மகிழ்ந்தார். அதர்வ  வேதம் 2-33. துதியில் உடலின் உறுப்பு ஒவ்வொன்றிலிருந்தும் நோயை அகற்ற  வேண்டுகோள் வருகிறது.

ரிக்வேதத்தில் ஒரே பாடலில் 27 உடல் உறுப்புகள் வந்து விடுகின்றன! அனைத்து மருத்துவர்களும் அந்த சூக்தத்தை மனப்பாடம் செய்யவேண்டும். 

முதலில் ரிக்வேத பட்டியலைக் காண்போம்; அதில் பத்தாவது மண்டல எண்ணுள்ள உறுப்புகளைக் கணக்கிடுங்கள் ; துதிப்  படாலில் இவ்வளவு என்றால் மருத்துவ நூல்களில் எவ்வளவு இருக்கிறது  என்பது விளங்கிவிடும்.

Rig Veda Mandala 10 Hymn 163

अक्षीभ्यां ते नासिकाभ्यां कर्णाभ्यां छुबुकादधि |
यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||


गरीवाभ्यस्त उष्णिहाभ्यः कीकसाभ्यो अनूक्यात |
यक्ष्मं दोषण्यमंसाभ्यां बाहुभ्यां वि वर्हामि ते ||


आन्त्रेभ्यस्ते गुदाभ्यो वनिष्ठोर्ह्र्दयादधि |
यक्ष्मम्मतस्नाभ्यां यक्नः पलाशिभ्यो वि वर्हामि ते ||
ऊरुभ्यां ते अष्ठीवद्भ्यां पार्ष्णिभ्यां परपदाभ्याम |
यक्ष्मं शरोणिभ्यां भासदाद भंससो वि वर्हामि ते ||


मेहनाद वनंकरणाल लोमभ्यस्ते नखेभ्यः |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||


अङगाद-अङगाल लोम्नो-लोम्नो जातं पर्वणि-पर्वणि |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||

akṣībhyāṃ te nāsikābhyāṃ karṇābhyāṃ chubukādadhi |
yakṣmaṃ śīrṣaṇyaṃ mastiṣkājjihvāyā vi vṛhāmi te ||


ghrīvābhyasta uṣṇihābhyaḥ kīkasābhyo anūkyāt |
yakṣmaṃ doṣaṇyamaṃsābhyāṃ bāhubhyāṃ vi vṛhāmi te ||


āntrebhyaste ghudābhyo vaniṣṭhorhṛdayādadhi |
yakṣmammatasnābhyāṃ yaknaḥ plāśibhyo vi vṛhāmi te ||


ūrubhyāṃ te aṣṭhīvadbhyāṃ pārṣṇibhyāṃ prapadābhyām |
yakṣmaṃ śroṇibhyāṃ bhāsadād bhaṃsaso vi vṛhāmi te ||


mehanād vanaṃkaraṇāl lomabhyaste nakhebhyaḥ |
yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||


aṅghād-aṅghāl lomno-lomno jātaṃ parigvedaaṇi-parigvedaaṇi |
yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||

***

அதர்வ  வேதம்  10-8-43 துதியில் இருதயத்தை ஒன்பது வாயில்கள் உடைய தாமரை என்று வருணிக்கிறது; இருதயத்தை ஒரு கோணத்தில் பார்த்தால் தாமரை மொட்டு போலவும் ரத்தக் குழாய்களுடன் பார்த்தால் மலர்ந்த  தாமரை மலர் போலவும் தென்படும் . தமனி போன்ற ரத்தக்குழாய்களை கூட வேத மந்திரங்கள் குறிப்பிடுகின்றன உடல் நலத்தில் அவ்வளவு அக்கறை!

சதபதப்  ப்ராஹ்மணம் (1000 BCE) என்னும் நூலில் எலும்புகள் தண்டுவடம் பற்றிய சொற்கள்  வருகின்றன; துதி  12-3-2-3/4 ல் என்ன என்ன இடத்தில் எவ்வ்ளவு எலும்புகள் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறது நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது இதைப்  பார்த்திருக்கலாம்.

சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூலில் 300 எலும்புகளைக் கணக்கிடுகிறார் ; சரகர் 500 தசைகளைக் குறிப்பிடுகிறார் .

சரகர் 200 ரத்த நாளங்களையும் அவைகளிலிருந்து பிரிந்து செல்லும்  700 நுண்ணிய குழாய்களையும் எண்ணி இருக்கிறார் ; இன்றைய மருத்துவ நூல்களில் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையை எழுதியுள்ளனர் .

அகதா  – cured 10-97-2 குணம் அடைந்த.

அஞ்சஸ்  – ointment, a mixture 1-132-2 களிம்பு /மை.

ஆயிண்ட்மென்ட் என்னும் ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்தது.

அஜ்னாத  யக்ஸ்மா  – இனம் தெரியாத காச நோய் 19-61-1; in AV 3-11-௧

அனானிமஸ் என்னும் ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்தது

அப்வா – வயிற்று நோய் 10-193-12; in AV 3-2-5

அறுகுன – healthy 6-39-2 ஆரோக்கியமான;

ஆரோக்கியம் என்ற சொல்லின் மூலம் இது ;

ஓஷதி – medicine 10-97- மருந்து

அவுடதம் என்று தமிழ் வைத்திய நூல்கள் எழுதுகின்றன .

குசும்பக  –1-191-16 விஷப் பூச்சி

ஜலாச  –2-33-7; 7-35-6 மருந்து

பிராண  – air inhaled 1-48-10 உள்வாங்கும் மூச்சு

பிஷஜே  – physician 2-33-4, 6; 9-112-1; 10-97-6; மருத்துவன்

பேஸஐ – மருந்துகளை அறிந்தவன்

1-23-19; 2-33-7; 5-53-14;6-74-3;

மன/ ம்  – mind 1-25-3; மன/ ம் 

விஸ்வபேஸஐ  – சகல கலா வல்லவன் / மருந்து விஷயத்தில்

10-60-12; 10-137-3;

விசூசி – வயிற்றுப் போக்கு 6-74-2; 8-14-15;visarmaan- dissolving 5-42-9;

வ்யான  – உடல் முழுதும் வியாபிக்கும் காற்று 6-74-4; 7-88-7;

ஹ்ரூதய  – heart 6-53-8 இருதயம்

இதில் மனம், இருதயம் என்பதை தமிழர்களும் ஆங்கிலேயர்களும் பயன்படுத்துகிறார்கள்

மனஸ் = மைண்ட்

ஹ்ருத் – ஹார்ட்

****

அறுவைச் சிகிச்சை surgery சொற்கள்

ரிக் வேதத்தில் உள்ள பத்து மண்டலங்களில் உள்ளவை

அம்சேள – தோள்கள்  – shoulder blades 1-158-5;

அணூக்யா – முதுகு எலும்பு 10-163-2;

அங்க  -உடல் உறுப்பு 10-85-3

தமிழிலும் பயன்படுத்துகிறோம்

அங்குலி  விரல்கள்  10-85-30;10-97-12; 10-163-6;

அப்சஸ் – உடலின் முன்பகுதி 1-122-15;

அஸ்தி -எலும்பு  1-84-13;

இறந்தவர்களின் எலும்பினையும் சாம்பலையும் கரைக்கும் போது இந்துக்கள் பயன்படுத்தும் சொல்இதிலிருந்து ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற ஆங்கிலச் சொற்கள் உதித்தன

அண்டெள – விதைக் கொட்டை  1-104-8; 10-86-7;

ஆத்மன் -தலையற்ற உடற் பகுதி  9-74-4; 10-163-3;

அந்த்ராணி – குடல்   4-18-13; 10-153-௩

இன்டெஸ்டைன் என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம்;

உபஸ்த  – மூடிய பகுதி  2-35-9;2-41-21;7-6-6;

உரஸ்   மார்பெலும்பு, விலா  1-158-5; 10-155-4;

ஊரு – தொடை  10-90-11;

உஷ்ணிதா – பிடரி  10-163-2, 4;

கர்ண – காது  2-39-6;

மஹாபாரத கர்ணனை நினைவு படுத்தும் சொல்;

கிகாச  – விலா அல்லது  முதுகெலும்பின் ஒரு கண்ணி 10-163-2;

சக்ஷு  – கண்கள்  1-22-20;

ஜானு  – மூட்டு 1-116-15; 1-118-8; 10-119-10;

ஜாயிண்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம்

ஜத்ரு – விலா எலும்பு  8-1-12;

ஜானுவோ சாந்தி -அடி வயிற்றெலும்பு 10-15-6;

ஜிஹ்வா  –நாக்கு   1-87-5;2-1-13; 3-35-9;

த்வக் – தோல்  1-28-9;3-21-5; 8-1-௩௨;

தந்த  – பல்  4-6-8;

டென்டல் க்ளினிக், டென்டிஸ்ட் போன்ற சொற்களை ஆங்கிலத்தில் காண்கிறோம் .

நக  – நகம் 10-28-10;

நாச  – மூக்கு  2-39-6;

நாசிகா  – மூக்குத்துவாராம்  10-163-1;

நோஸ் நேசல் போன்றவை ஆங்கிலத்தில் வழங்குவது ஸம்ஸ்க்ருதமே.

பவனஹ  – spondyls 10-68 9; தண்டுவட எலும்புப் பாதிப்பு

பாயு – குதம், ஆசனவாய்  1-31-12/13;2-2-4; 6-15-8;

ப்ரஸ்டிஹ்  –விலா எலும்புகள்  10-87-10;

ப்ரஸ்த  – முதுகு  1-58-2;

பிளாசி  – குடலின் பகுதி  10-163-3;

பாஹு  – முன்கை 1-95-7; 6-51-12;

வாகு வளையம் என்ற சொல் சங்க இலக்கியத்திலும் உண்டு

பாஷத்  – அடி வயிற்று எலும்பு  6-3-4; 6-14-1;  10-86-7;

மஸ்திகா  – மூளை  10-163-1;

முகம்  – வாய்ப் பகுதி  6-75-15;; 10-90-11/12;

தமிழுக்கு முகம் இல்லை ஸம்ஸ்க்ருதத்துக்கு வாய் இல்லை என்பது கிண்டல் மொழி ; அதாவது வேறு சொற்கள் இல்லை

முஷ்கயோஹ் – விதைப்பை 10-38-5;

மேதஸ்  – எலும்பு மஜ்ஜை அல்லது நிணம் 3-21-1, 2, 4;

யோனி  – பெண் உறுப்பு 1-79-3;

லோம / ரோம – மயிர் 10-163-5, 6;

வனிஸ்த்து – மலக்குடல் ,  அல்லது குடலில் ஒரு பகுதி

வ்ராஸ் நவ் – விதைப்பை  10-66-7;

சிரஸா  – தலை d 7-18-19; 10-87-16;

சேகம்  – விந்து   3-31-1; 4-16-3;

சிரஸ், ரோமம் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும்.

 செப  – \ஆன் குறி   1-23-22; 10-85-37;

ஸ்கந்த  – தோள் 1-32-5;

ஸ்தன – தாய்ப்பால் சுரக்கும் உறுப்பு  2-39-6;

சிரமம் – எலும்பு முறிவிவு அல்லது காயம்  1-117-19’

சுரோணி  -இடுப்பு, ஆசனவாய்  10-163-4;

ஹனு  – தாடை 4-18-9;5-36-2;

ஹனு/ மன் எல்லோருக்கும் தெரிந்த கடவுள்

To be continued…………………………..

Tags- ரிக், அதர்வண வேதங்களில், மருத்துவ சொற்கள், part 1

Leave a comment

Leave a comment