Post No. 15,024
Date uploaded in London – 25 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 2
அதர்வண வேத மந்திர எண்கள் பின்வருமாறு
அக்சத – காயமடையாத 4-9-8
அன்ய -த்யூஸ் -ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சல் 7-116-2
அபான – வெளிவிடும் மூச்சுக் காற்று 10-2-
பிராண, வியான ஆகிய காற்றுகளை ரிக்வேதத்தில் கண்டோம்
அப்வா – வயிற்று நோவு – 3-2-5
அருந்ததி – ஒரு மூலிகையின் பெயர் ; 4-13-1
கீழ் ஜாதியில் அக்ஷமாலா என்ற பெயருடன் பிறந்த பெண் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது ;அவள் வசிஷ்ட மகரிஷிக்கு மனைவியாகி சப்தரிஷி மண்டல நட்சத்திரங்களுள் ஒன்றானாள் ; அதை அராபியர்கள் ஆல்கால் ALCOL என்றனர் ; திருவள்ளுவர் குறளில் அது அலகை என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
அகண்டு – ஒரு வகைப் பூச்சி 2-31-2
அல்பஸயு – ஒரு வகைப் பூச்சி 4-36-9
அசரிக- (முடக்கு வலி) முடக்கு வாதம் 19-34-10
உபய– த்யூஸ் – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் மலேரியா போன்ற காய்ச்சல் 1-26-4; 7-116-3;
இந்த உபய என்ற சொல் இன்று வரை வைஷ்ணவர் கடி தங்களிலும் திருமண அழைப்பிதழ் களிலும் இடம் பெறுகிறது இரண்டும் என்பது பொருள்
கிலாச – வெண் குஷ்டம் 1-23-1,2;
க்ளிவத்வ/- ஆண்மையின்மை , அலி 6-138;
கண்டமாலா – கழுத்தில் வீக்கம்
கண்ட என்பதை கழுத்துக்குத் தமிழர்களும் ஏனையோரும் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்
நீல கண்ட – சிவனுக்கும் மயிலுக்கும் பெயர்
ஜடிங்கா – வலியைக் குறைக்கும் , மயக்கம் தரும் மூலிகை; பலாச நோய்க்கு மருந்து
(பலாச கீழே வருகிறது )
ஜ்வர – காய்ச்சல் 5-30-8
இன்று வரை நாடு முழுதும் பயன்படுத்தும் சொல்
த்ரிதியாக – 3 நாட்களுக்கு ஒரு முறை வரும் காய்ச்சல் /மலேரியா 1-25-4; 7-116-2;
பலாச – காசநோய் 4-98;6-14-1
யக்ஸ்மா – காசநோய் 5-38 and 16;
வருண கிரஹித – ஜலோதர நோய் / மகோதரம்
வித்ரியாக – இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு வரும் காய்ச்சல் 5-22-13;
சீர்சாமய – தலைவலி ;ஆமய என்றால் நோய்; சிரஸ் என்றால் தலை 5-4-10;9-8-1;
சதாம் -தி – தினமும் வரும் மலேரியா ஜுரம் 1-2-13
ஹரிமா- மஞ்சள் காமாலை 19-44-2
***
ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் ஆண்- பெண் புணர்ச்சி பற்றிய சூக்தம் 10-85-37 உள்ளது
கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு செய்யவேண்டிய பும்ஸவன சீமந்தக் கிரியைகளை அதர்வண வேதம் விவரிக்கிறது . கர்ப்பவதிக்கு குளிகை மருந்து தருவதையும் குறிப்பிடுகிறது. அங்கே வரும் ஒரு அருமையான உருவகம் சொல்கிறது: AV 3-23
தாவரங்களே தந்தை, பூமியே தாய், சமுத்திரம் வேர், கடவுள் கொடுத்த மூலிகைகள் உனக்கு ஒரு நல்ல மகனை ஈன்ற உதவட்டும்
யாசாம் த்யெளவ பிதா, ப்ருத்வீ மாதா, சமுத்ரோ மூலம், விருதாம் பபூவ .
தாஸ்த்வா புத்ரவித்யாய தைவீ ப்ராவாந்த்யோ பவஹ
The plants which has been the father, earth the mother, ocean the root, let those herbs of the god favour thee, in order to acquire a son.
Yaasaam dhyau pithaa prthvee maathaa samudro moolam viroodhaam bhaboova.
Thaasthvaa putravidhyaaya dhaivee praavathyopavah –AV 3-23
தொடரும்…………………..
Tags- கர்ப்பம் அடைந்த பெண், ரிக், அதர்வண வேதங்கள், மருத்துவ சொற்கள், அபூர்வ தகவல்கள்- 2