ரிக், அதர்வண வேதங்களில் மருத்துவ சொற்கள்! அபூர்வ தகவல்கள்!!- 3 (Post.15,31)


Written by London Swaminathan

Post No. 15,031

Date uploaded in London –  27 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part three

அதர்வண வேத மருத்துவ அகராதியைத் தொடர்ந்து காண்போம்

சர்ஜரி/ அறுவைச் சிகிச்சை தொடர்பான சொற்கள்

அஸ்திய்வந்தவ் – மூட்டு 10-2-2

உச்சலங்கவ் – கணுக்கால்- குதிங்காலுக்கு இடைப்பட்ட பகுதி 10-2-1;

ககாடிக – வாய்ப்பு பகுதி எலும்புகள் 10-2-8

வ்கபந்த  – தலைக்கு கீழுள்ள பகுதி 10-2-3;

கபால  – மண்டை ஓடு  10-2-8

இப்போதும் உலகம் முழுதும் இந்த  ஸம்ஸ்க்ருதச் சொல்லை பயன்படுத்துகிறோம் ; மருத்துவ அகராதியில் கபால என்பதை செபாலஸ் cephalas என்று எழுதுவார்கள் க — என்பதை ச — என்று தவறாறாக உச்சரிப்பார்கள்

குசிந்த – இடுப்பு, இடுப்பின் கீழ்ப் பகுதி  10-2-3

க   – துளை  10-2-6;

குல்பாவ் – கணுக்கால் 10-2-1;

க்ரீவ – கழுத்து  10-2-4

சதுஷ்டய  – மூட்டுக்கு மேலேயுள்ள எலும்புகள்  10-2-1, 2;

சித்ய  ஹனோவ்-  மோவாய், முகவாய் (முகரகட்டை பேச்சுவழக்கு) தாவாய் கீழ் தாடை  10-2-8;

ஜங்கா  – தொடை  10-2-1

ஜராயு – கருவினை மூடியுள்ள ஜவ்வு  1-27-1;

பர்ஸு – விலா 9-7-6;

பார்ஸ்னி – குதிங்கால்  10-2-1;

ப்ரதிஷ்ட   – பாதம் 10-2-1;

லலாட  – நெற்றி  10-2-8;

வீர்ய  – விந்து  10-2-5;

சிதிர  – குருத்தெலும்பு – 10-2-3;

சப்த கனி சீர்சானி  – தலையிலுள்ள ஏழு ஓட்டைகள்  10-2-5;

சுரோணி –  ஆசனவாய், குதம்  10-2-3;

பகவான்  சிங்  எழுதிய THE VEDIC HARAPPANS  தி  வேதிக்  ஹரப்பன்ஸ் என்ற நூலில் மிகவும் பிரயாசை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு துறையிலும் நீண்ட பட்டியலை வேதங்களிலிருந்து மட்டும் கொடுத்துள்ளார் அதைக் காணும்போது வேத கால இந்துக்கள் அறியாத விஷயமே இல்லை என்று தெரிகிறது . மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருப்பதை அறியலாம்; அனைவரும் அந்த நூலைப் படித்து அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாக்ஸ் முல்லர் கும்பல்களிலிருந்தும் கால்டுவெல் கும்பல்களிலிருந்தும் விடுபட வேண்டும்.

நான் NUMBER / எண் கொடுத்துள்ள  ஒவ்வொரு துதிக்கும் சென்றால் பல ரகசியங்களை அறியலாம் . அதர்வண  வேத பத்தாவது காண்டத்தில் நிறைய மருத்துவச் செய்திகள் உள்ளன. இவைகளை சரக, சுஸ்ருத சம்ஹிதைகளோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும்; அதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது

எல்லோரும் முன்னரே அறிந்த வேத கால அதிசயங்களை மீண்டும் ரிக் வேதத்திலிருந்து தருகிறேன்; வேத கால அதிசய டாக்டர்கள் அஸ்வினி தேவர்கள் ; கன்னா பின்னா என்று எழுதும் வெளிநாட்டுக் கழிசடைகளும் கூட இந்த அஸ்வினி தேவர்களை எங்களால் யார் என்று சொல்ல முடியவில்லை. இவர்கள் தெய்வங்களா அல்லது மாஜிக் செய்த மானுடர்களா என்று வியந்துள்ளனர்! இதோ அவர் கள் செய்த முன்னேறிய மருத்துவ சிகிச்சைகள் :–

ஸ்யவனருக்கும் பு ரந்தியின் கணவருக்கும் மீண்டும் இளமையை மீட்டுத் தந்தது ;

விஸ்பலாவுக்குச் செயற்கைக் கால்களை பொருத்தியது ;

ரிஜஸ்வனின் குருட்டுத் தன்மையை நீக்கியது

போன்ற பல அற்புதங்கள் !

Rejuvenation of Cyavana (RV 10-39-4) and Purandhi’s husband (RV 1-116-13), setting the fractured thigh of Vispala through support (RV 1-116-13) and curing of the blindness of Rjrsva (RV 1-116-17).

இப்போது நாம் விநாயக கவசம், கந்த சஷ்டிக் கவசம் போன்ற எண்ணற்ற கவசங்களைப் படிக்கிறோம் இதற்கெல்லாம் மூலம் ரிக் வேதமாகும் . முன்னர் குறிப்பிட்ட ரிக்வேத 1-163  துதியில் 25-க்கும் மேலான உடல் உறுப்புகளைக் கண்டோம்; அதுவும் ஒரு கவசம் ஆகும்.

இன்னொரு துதிப் பாடல் என்னுடைய விரல்களால் தொட்டு நோயை  நீக்குகிறேன் என்று முடிகிறது; சிலருக்கு உடலில் நோயுள்ள பாகங்களைத் தொட்டு நோயை நீக்கும் அபூர்வ சக்தி உண்டு. இதை HEALING TOUCH ஹீலிங் டச் என்பார்கள். நோயை நீக்கும் கைராசியான பேர்வவழிகள் அவர்கள்!  இதையும் ரிக்வேதத்தில் காண்கிறோம்.

எல்லா வேதங்களும் ஆங்கிலத்தில் வெப்ஸைட்டில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஆராய்ச்சிகளைத் தொடங்கலாம். ஆயினும் வேதத்தை முழுக்கப் படிக்காமல் ஆராய்ச்சியில் இறங்கிவிடாதீர்கள்.

நான் அதர்வ வேதத்தையும் ரிக் வேதத்தையும் முழுக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்தேன்; பக்கத்திற்குப் பக்கம் மார்ஜின் முழுவதும் நோட்ஸ்களை/ குறிப்புகள் எழுதுவதோடு கடைசி பக்கத்தில் நானாக இன்டெக்ஸ்சும் தயார் செயதேன் . மருத்துவக் குறிப்புகளை எழுத மட்டுமே தனி புஸ்தகம் தேவைப்படும்! அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!

–subham—

Tags- ரிக், அதர்வண வேதங்களில் மருத்துவ சொற்கள்! அபூர்வ தகவல்கள்!!- 3

Leave a comment

Leave a comment