ஆதி சங்கரர் கேள்வி- பதில்கள்;  அக்டோபர் 2025 காலண்டர் (Post.15,038)

Written by London Swaminathan

Post No. 15,038

Date uploaded in London –  29 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற துதியில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி- பதில் வடிவத்தில் ஆதி சங்கரர் பதில் அளிக்கிறார் . அவற்றில் 31 பதில்களை இந்த மாத காலண்டரில் காண்போம்.

அக்டோபர் மாத பண்டிகைகள் – 1-ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை; 2- விஜய தசமி, காந்தி ஜெயந்தி; 10-கர்வா சவுத்  20- தீபாவளி; 22- கந்தஷஷ்டி துவக்கம்; 27-கந்தசஷ்டி சூரசம்ஹார விழா.

அமாவாசை-21;  பௌர்ணமி-6;  ஏகாதச- 3, 17.

முகூர்த்த தினங்கள்- 19, 20, 24, 27,31.

**************

அக்டோபர் 1 புதன் கிழமை

ஏற்க வேண்டியது என்ன?

குருவின் போதனையை ஏற்கவேண்டும்

***

அக்டோபர் 2 வியாழக் கிழமை

தவிர்க்க  வேண்டியது என்ன?

கெட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும்

***

அக்டோபர் 3 வெள்ளிக் கிழமை

யார் குரு?

எவர் ஒருவர் சத்தியத்தை அறிகிறாரோ, எவர் ஒருவர் மாணவர்களின் நலனைச் சிந்திக்கிறாரோ அவர்தான் குரு

***.

அக்டோபர் 4 சனிக் கிழமை

அவசரமாக செய்ய வேண்டியது என்ன ?

ஜனன மரணச் சூழலிலிருந்து  விடுபட்டு முகிதி அடைய வேண்டிய செயலை உடனே செய்யவேண்டும்.

***

அக்டோபர் 5 ஞாயிற்றுக் கிழமை

நன்மை பயப்பது என்ன?

தர்மம்

***

அக்டோபர் 6 திங்கட் கிழமை

கற்றவர் யார் ?

யார் புத்திசாலியா அவரே கற்றவர்

***

அக்டோபர் 7 செவ்வாய்க் கிழமை

விஷம் உடையது ?

மூத்தோர் புத்திமதியைப் புறக்கணிப்பது விஷம் நிறைந்தது.

***

அக்டோபர் 8 புதன் கிழமை

சாதாரண வாழ்க்கையில் முடிவான விஷயம் எது?

இறுதியாக நிலைத்து நிற்பவனை நினைப்பது.

***

அக்டோபர் 9 வியாழக் கிழமை

எதைப்பெறுவதற்கு ஏங்க வேண்டும்?

தன்னுடைய பிறருடைய நலனுக்காக ஏங்க வேண்டும்.

***

அக்டோபர் 10 வெள்ளிக் கிழமை

மதுபானம் போல போதை தருவது எது?

ஆசையே அத்தகைய போதைப்பொருள்.

***

அக்டோபர் 11 சனிக் கிழமை

இல்லற வாழ்க்கையில் எல்லோரும் பற்றிக்கொள்வது இது?

ஆசையே கொழுகொம்பு.

***

அக்டோபர் 12 ஞாயிற்றுக் கிழமை

யார் ஒருவரின் எதிரி?

சோம்பேறித்தனம்

***

அக்டோபர் 13 திங்கட் கிழமை

எல்லோரும் அஞ்சுவது எது?

மரண பயம்.

***

அக்டோபர் 14 செவ்வாய்க் கிழமை

குருடனுக்கும் மேலான குருடன் யார்?

ஆசையுள்ள மனிதன் குருடன்

***

அக்டோபர் 15 புதன் கிழமை

யார் வீரன் ?

மனத்தைக் கட்டுப்படுத்துவோன் மாவீரன்

***

அக்டோபர் 16 வியாழக் கிழமை

காதால் பருகும் அமுதம் எது?

பெரியோரின் போதனை.

***

அக்டோபர் 17 வெள்ளிக் கிழமை

ஒருவரை நம்புவதற்கு எது வேராக அமைகிறது?

எவரிடமும் சலுகையை எதிர்பார்க்காததே வேர்.

***

அக்டோபர் 18 சனிக் கிழமை

எதை அளக்க முடியாது ?

அழகியின் அன்ன நடையை  எடை  போட முடியாது.

***

அக்டோபர் 19 ஞாயிற்றுக் கிழமை

யார் புத்திசாலி?

பெண்களைக்கண்டு ஏமாறாதவன் புத்திசாலி

***

அக்டோபர் 20 திங்கட் கிழமை

எது துக்கம்?

திருப்தி ஏற்பாடாதபோது உண்டாவது துக்கம்

(ஆசை நிறைவேறாத போது )

***

அக்டோபர் 21 செவ்வாய்க் கிழமை

மிகவும் கீழ்தரமானது எது?

கீழ்மட்டத்தில் உள்ள ஒருவனிடம் பிச்சை கேட்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவது .

***

அக்டோபர் 22 புதன் கிழமை

உயர்ந்த வாழ்க்கை எது ?

குறைகளே இல்லாமல் வாழ்வது

***

அக்டோபர் 23 வியாழக் கிழமை

அறியாமை என்பது என்ன ?

எந்த ஒரு விஷயத்திலும் பயிற்சி இல்லாமை

***

அக்டோபர் 24 வெள்ளிக் கிழமை

விழிப்புள்ளவன்  யார்?

புத்திசாலி விழிப்புடன் இருப்பவன்

***

அக்டோபர் 25 சனிக் கிழமை

வருந்தத்தக்கது எது?

முட்டாள்தனம் என்பது வருந்தத்தக்க விஷயம்.

***

அக்டோபர் 26 ஞாயிற்றுக் கிழமை

தாமரை இலைத் தண்ணீர் போல நிலையற்றது எது?

இளமை, செல்வம்,வாழ்நாள் ஆகியன நிலையற்றவை.

***

அக்டோபர் 27 திங்கட் கிழமை

சந்திர கிரணம் போல ஏனையோருக்கு நல்லது செய்வோர் யார்?

நல்ல மனிதர்கள்.

***

அக்டோபர் 28 செவ்வாய்க் கிழமை

நரகம் என்பது என்ன?

மற்றவர்களின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிப்பது நரகம்.

***

அக்டோபர் 29 புதன் கிழமை

சரியான பாதை எது?

எல்லாவற்றையும் துறப்பதே.

***

அக்டோபர் 30 வியாழக் கிழமை

அடைய வேண்டியது என்ன?

எல்லோருக்கும் நல்லதே செய்யவேண்டியது ..

****

அக்டோபர் 31 வெள்ளிக் கிழமை

உயர் வாழும் எல்லோருக்கும், பிராணிகளுக்கு பிரியமானது என்ன?

ஆன்மா

प्रश्नोत्तररत्नमालिका (Following is taken  from Sanskritdocuments.org

कः खलु नालङ्क्रियते दृष्टादृष्टार्थसाधनपटीयान् ।

अमुया कण्ठस्थितया प्रश्नोत्तररत्नमालिकया ॥ १॥

भगवन् किमुपादेयं गुरुवचनं हेयमपि किमकार्यम् ।

को गुरुः अधिगततत्त्वः शिष्यहितायोद्यतः सततम् ॥ २॥

त्वरितं किं कर्तव्यं विदुषां संसारसन्ततिच्छेदः ।

किं मोक्षतरोर्बीजं सम्यक्ज्ञानं क्रियासिद्धम् ॥ ३॥

कः पथ्यतरो धर्मः कः शुचिरिह यस्य मानसं शुद्धम् ।

कः पण्डितो विवेकी किं विषमवधीरणा गुरुषु ॥ ४॥

किं संसारे सारं बहुशोऽपि विचिन्त्यमानमिदमेव ।

किं मनुजेष्विष्टतमं स्वपरहितायोद्यतं जन्म ॥ ५॥

मदिरेव मोहजनकः कः स्नेहः के च दस्यवो विषयाः ।

का भववल्लि तृष्णा को वैरी यस्त्वनुद्योगः ॥ ६॥

कस्माद्भयमिह मरणादन्धादिह को विशिष्यते रागी ।

कः शूरो यो ललनालोचनबाणैर्न च व्यधितः ॥ ७॥

पान्तुं कर्णाञ्जलिभिः किममृतमिह युज्यते सदुपदेशः ।

किं गुरुताया मूलं यदेतदप्रार्थनं नाम ॥ ८॥

किं गहनं स्त्रीचरितं कश्चतुरो यो न खण्डितस्तेन ।

किं दुःखं असन्तोषः किं लाघवमधमतो याच्ञा ॥ ९॥

किं जीवितमनवद्यं किं जाड्यं पाठतोऽप्यनभ्यासः ।

को जागर्ति विवेकी को निद्रा मूढता जन्तोः ॥ १०॥

नलिनीदलगतजलवत्तरलं किं यौवनं धनं चायुः ।

कथय पुनः के शशिनः किरणसमाः सज्जना एव ॥ ११॥

को नरकः परवशता किं सौख्यं सर्वसङ्गविरतिर्या ।

किं सत्यं भूतहितं प्रियं च किं प्राणिनामसवः ॥ १२॥

–subham—

Tags- ஆதி சங்கரர் கேள்வி பதில்கள்; அக்டோபர் 2025  காலண்டர், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா

Leave a comment

Leave a comment