கலபாகஸ் தீவின் அதிசயங்கள்! எனது மருமகள் கண்ட காட்சிகள்! -2 (Post No.15,047)

Written by London Swaminathan

Post No. 15,047

Date uploaded in London –  2 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கலபாகஸ் தீவு ஆமைகள் 420 கிலோ எடை வரை இருக்கும். சுமார் 200 ஆண்டுகள் வாழ்கின்றன ஒரு காலத்தில் 250,000 ஆமைகள் a low of இருந்தன இப்போது  20,000 ஆகக் குறைந்துவிட்டது ஆமை மாமிசம் சாப்பிடுவோர் அதைக் கபளீகரம் செய்துவிட்டனர். இப்போது கடுமையான பாதுகாப்பு விதிகள்  பின்பற்றப்படுகிறது.

இந்தத் தீவுகளில் உள்ள பிராணிகளோ பறவைகளோ மனிதர்களைக் கண்டு அஞ்சுவதே  இல்லை; அரசாங்கப் பாதுகாப்பு இருப்பது அவைகளுக்கும் தெரியும் போல் இருக்கிறது! ஆனால் எதையும் மனிதர்கள் தொட்டுப்பார்க்கக்கூட  முடியாது. அவைகளுக்கு அவ்வளவு பாதுகாப்பு

JAWS ஜாஸ் போன்ற திரைப்படங்கள் வந்ததால் சுறாமீன்களைப் பற்றி ஒரு பயம் நிலவியது ஆனால் கடலுக்கு அடியில் வீர தீர விளையாட்டுகளில் ஈடு படுவோர் அவற்றின் அருகில் சென்றாலும் ஒன்றும் செய்வதில்லை.

பறக்க முடியாத சோம்பேறிப்பறவைகளும் இருக்கின்றன. நீர்க் காக (CORMORANTS) வகையைச் சேர்ந்த ஒரு  வகைப் பறப்பதில்லை பறப்பதில்லை ஏன் இப்படி சோம்பேறிகளாயின என்பதும் ஒரு புதிர்.

இகுவானா IGUANA

இகுவானா  என்பது உடும்பு போன்ற அல்லது ராட்சதப் பல்லி வகை என்று சொல்லலாம். இவைகளுக்குப் பொன்னிறம் வந்தது ஏன்  என்பதும் ஒரு புதிர்  உலகில் வேறு இடங்களில் இப்படி இல்லை அது மட்டுமால்லாமல் நிலத்தில் மட்டும் வசிக்கும் இவைகளில் கடல் இகுவானாவும் உள்ளன  இப்படிப்பட்ட விநோதங்களை பார்த்த சார்ல்ஸ் டார்வின் சிந்திக்கத் துவங்கிப் பரிணாமக்கொள்கையை நமக்கு கொடுத்தார்

பெங்குவின் பறவைகள் பனி மூடிய தென் துருவமான அண்டார்ட்டிகாவில் மட்டும் வாழக்கூடியவை. கலபாகஸ் தீவுகளோ வெப்பம் மிக்க பூமத்திய ரேகையில் உள்ளன இங்கு எப்படி பெங்குவின்கள் வசிக்கின்றன என்பதும் ஒரு அதிசயமே

பிரிகேட் FRIGATE BIRDS  பறவைகளுக்கு மூக்கின் கீழே பைகள் இருக்கும் அவைகளை அவை ஊதும் போது வாய்க்குக்கீழே பலூனைக் கட்டித் தொங்கவிட்டது போல இருக்கும்

லாவா பாறைகளின் மீது பல வண்ணம் நிறைந்த பெரிய பல்லி களும் வசிக்கின்றன

MOCKING BIRDS மாக்கிங் பேர்ட்  என்னும் பறவைகள் பறக்க முடிந்தாலும் கூட இரையின் பின்னால் ஓடிச் சென்று அவைகளைப் பிடிக்கின்றன. மேலும் இவை தீவுக்கு தீவு மாறுபடுகின்றன அவை  அவை தேவைக்கு ஏற்ப பரிணாமம் அடைகின்றன என்பது டார்வினின் கணிப்பு

இங்குள்ள வெட்டுக்கிளிகள் கடல் நண்டுகள் கூட பல வண்ணம் தீட்டிய ஓவியங்கள் போல இருக்கின்றன!

நேரில் போக முடியாதவர்கள் YOU TUBE யு ட்யூபிலும் காணலாம்.

என்னுடைய மருமகள் எடுத்த வீடியோக்களிலிருந்து சில படங்களை இணைத்துள்ளேன்.

-SUBAHAM—

TAGS- கலபாகஸ் தீவின் அதிசயங்கள்! எனது மருமகள் கண்ட காட்சிகள்! -2

Leave a comment

Leave a comment