Post No. 15,060
Date uploaded in London – 6 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

Part Five
கிராம தேவதைகள் Village Gods (English version posted yesterday)
இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன ; ஆயிரக் கணக்கில் நகரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தெய்வம் உண்டு. வால்மீகி ராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அந்தந்த நகர தேவதைகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகையால் கிராம தேவதைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா . மூன்று முக்கிய விஷயங்களை உலகப் புகழ்பெற்ற வரலாற்று, தொல் பொருட் துறை நிபுணர் டாக்டர் இரா. நாகா சாமியும் , நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் தெளிவு படுத்தியுள்ளனர்.
கிராமதேவதைகள் என்பவர்களின் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களின் சுருக்கமே !:
காத்யாயனி- காத்தாயி
மூகாம்பிகை – மூக்காயி
மஹா மாயா – மகமாயி
ராகா தேவி – ராக்காயி
இரண்டாவது விஷயம், கிராம தேவதைகளையும் நடு கல் வழிபாட்டையும் பிரித்துப் பார்ப்பது கடினம் ; ஏனெனில் ஊரைக் காத்த ஆண்களையும் பெண்களையும் மக்கள் தெய்வமாக வழிப்பட்டனர்; பல இடங்களில் நடு கல் இருந்த இடங்களில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் உருவாகிவிட்டன .
மூன்றாவது விஷயம், இறந்த கணவநின் சிதையில் தீப்பாய்ந்து உயிர் நீத்தபெண்களும் தெய்வமாகக் கொண்டாடப்பட்டனர் ; அவர்ளையும் கிராம தேவதைகளாக வழிபடுகிறோம் .
இவை தவிர வேறு சில விஷயங்களும் உள்ளன . கிராமக் கோ வில்களில் பிராமணர் அல்லாதோர் பூஜை செய்வதும் கிராமக் கோவில்களில் மிருகங்களைப் பலியியிட்டு வழிபடுவதையும் காண்கிறோம் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை பீடி , சுருட்டு , கள், சாராயம் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்கின்றனர் இது கிராம மக்களின் அன்றாட உணவு ஆகையால் அவற்றை இறைவனுக்குப் படைத்தனர்
இன்னுமொரு முக்கிய விஷயம் ஏராளமான பிராமண குடும்பங்களுக்கு இந்த கிராம தேவதைகள் குல தெய்வம் ஆகும். கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் அவர்கள் குடும்பத்தோடு சென்று கிராம தேவதைகளுக்கு படையல் வைக்கின்றனர்; கிறிஸ்தவ பிரச்சாரத்துக்காக வந்த வெளிநாட்டினரும் திராவிடர்களும் மார்க்சீய பேர்வழிகளும் இந்த உண்மைகளை மறைத்துப் பொய்யுரை பரப்பினர் .
எல்லா இடங்களிலும் கிராம தேவதைகளின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருக்கும்; அல்லது புராண இதிஹாச புருஷர்களுடன் தொடர்பு இருக்கும். எண்ணற்ற திரவுபதி அம்மன் கோவில்கள், ரேணுகா தேவி கோவில்கள் இவைகளுக்குச் சான்று
இமயம் முதல் குமரி வரை இந்த தெய்வங்கள் இருக்கின்றன. கண்ணகி போன்ற புதிய பத்தினி தெய்வங்களையும் இந்துக்கள் உருவாக்கினார்கள. ஐயப்பன், அய்யனார் சாஸ்தா என்பன ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் ஆர்யா ஏன்பது அஜ்ஜ என்று பிராக்ருதமாக மருவி அய்யன் , அய்யனார் என்று ஆகியது ஆரியங்காவு என்ற கேரளா தலம் ஐயப்பன் கோவில் !ஆர்யை, சிலப்பதிகாரத்தில் ஐயை என்ற கதா பாத்திரமாக வருகிறாள்.
திருக்குறளில் தெய்வங்கள் யார் என்று வள்ளுவர் கூறுகிறார். யார் யார் எல்லாம் தார்மீக வாழ்வு வாழ்ந்தனரோ அவர்கள் எல்லோரும் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் இதைக் கடவுள் வாழ்த்தில் சொல்லவில்லை; துறவற இயலில் சொல்லவில்லை இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் சொல்வதால் கிரஹஸ்தர்களும் கடவுள் ஆகலாம் என்கிறார்; ராமர், கிருஷ்ணர், கண்ணகி வாழ்க்கையில் இதைக் காண்கிறோம்
இதோ வள்ளுவன் குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்— குறள் 50:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
மேலும் இதே அதிகாரத்தில் மனு ஸ்ம்ருதி சொல்லும் பஞ்ச யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளையும் சொல்கிறார் இதுவும் இல்லறத்தார் தினமும் செய்வது.
கிராம தேவதைகள் வழிபாடு ஊருக்கு ஊர் வேறுபடும்; இருந்த போதிலும் சில பொதுவான அம்சங்களைக் காணலாம் :
தீ மிதித்தல்; பூக்குழி இறங்கல்;
குடை எடுத்தல் ;
கஞ்சி, கூழ் வார்த்தல்;
பல இடங்களில் வேப்ப இலையை அணிந்து வழிபடுதல்;
சில இடங்களில் ஆண்களும் பெண் வேடம் தரித்தல்;
சாமி ஆடுதல்;
முடி இறக்கல் ;
ஊர் வழக்குகளை நீதி மன்றத்துக்குச் செல்லாமல் சாமி முன் நின்று தலையில் அடித்து சத்தியம் செய்தல் மூலம் தீர்த்துக் கொள்ளல்.
இந்த பூக்குழி இறங்குதல் சதி என்னும் பார்வதி தேவி, கணவனின் பெருமையைக் காக்க தந்தை வளர்த்த யாக குண்டத்தில் பாய்ந்து உயிர் நீத்ததைக் குறிக்கும் வழக்கம் ஆகும்
டாக்டர் நாகசாமி எழுதிய கிராம தேவதை கட்டுரையில் இன்றும் கூட பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் மதுரைச் சித்திரத் திருவிழாவில் பழங்கால பாணியில் உடை அணிந்து வருவதைக் காணலாம் என்கிறார் இந்த உடைகளையும் தண்ணீர் பீச்சும் குழாய்ப் பைகளையும் அவர்கள் காலம் காலமாகக் காத்து வருகின்றனர்
இது போல ஒவ்வொரு ஊரிலும் பல வினோத வழக்கங்கள் உண்டு.
மேலும் பெரிய கோவில்களின் நுழை வாயிலில் அல்லது எதிர்ப்புறத்தில் ஊர்த்தெய்வங்கள் இருப்பதைக் காணலாம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கருப்பணசாமி, மாளிகை புரத்து அம்மன் கோவில், மதுரையில் மீனாட்சி கோவிலில் மதுரைவீரன்,மொட்டைக்கோபுர முனி, அழகர் கோவிலில்18 படி கருப்பண சாமி என்று நீண்ட பட்டியல் உள்ளது
அந்தந்தப் பேட்டை மக்கள் கூடி, தெரு மூலையில் உள்ள காளியம்மனுக்கும், மாரி அம்மனுக்கும் ஆண்டுதோறும் திருவிழா வைத்து கஞ்சி வார்ப்பார்கள்
மதுரையில் வசித்த நான் பேச்சி அம்மன் கோவில், சிட்டுக்குருவி காளி ஆத்தா கோவில், செல்லத்தம்மன் கோவில் புகழ் பெற்ற மாரி அம்மன் கோவிலுக்குச் செல்வது வழக்கம் ; மாரி அம்மனுக்கு ஆண்டுதோறும் மாவிளக்கு வைப்பது என் தாயாரின் வழக்கம்; மேலும் அம்மை நோய் வராமல் இருக்க உடலின் பாகங்களை வெள்ளியால் செய்து உண்டியலில் காணிக்கையாகப் போடுவதும் வழக்கம்; இந்த மாதிரி உடலின்பாகங்களை செய்து இறைவனுக்கு காணிக்கை செலுத்துவது உலகின் பல பகுதிகளில் இருந்தாலும் இன்று நாடு முழுதும் உள்ள ஒரே நாடு இந்தியாதான்!
டாக்ட்டர் இரா நாகசாமி எழுதிய இன்னுமொரு கட்டுரை, சுவையான விசயத்தைத் தருகிறது ஆகம சாஸ்திரத்தில் நடுகல் எடுத்தல் பற்றிய தகவல் அது; ரௌத்திர ஆகமத்தில் விவரங்கள் உள்ளன!
புனித இமய மலையில் கல் எடுத்து அதை புனித கங்கை நதியில் குளிப்பாட்டி சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எழுப்பியது இந்து மத வழிபாடு!
இந்துக்களில் வைஷ்ணவப் பெரியார்கள் சமாதி அடைந்தால் துளசிச் செடி பிருந்தாவனங்களையும் சைவப் பெரியார்கள் இறந்தால் சிவலிங்கத்தை எழுப்பி அதி ட்டானங்களையும் கட்டுவார்கள்; இப்போதும் காஞ்சி மடத்த்துக்குச் சென்றால் இரண்டு பெரியார்ககளின் அதிஷ்டானங்களைக் காணலாம். இப்படி ஊருக்கு ஊர் பெரியோரின் சமாதிகள் உண்டு மகாராஷ்டிரத்தில் சமாதி ஆன மஹான்களின் சமாதிகளிலிருந்து மிகப்பெரிய ஊர்வலங்கள் புறப்பட்டு பண்டரி புரத்துக்குக் கால்நடையாகச் செல்கின்றனர்
கிராம தேவதைளைப் பற்றி வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை புறக்கணித்து ஆழமாகப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விழாக்கள் பற்றி பலர் எழுதிய போதிலும் நாடு தழுவிய அளவில் இந்த கிராம தேவதைகளைப் பற்றி யாரும் இதுவரை எழுதவில்லை .
நேற்று டாக்டர் நாகசாமியின் ஆங்கிலக் கட்டுரையை வெளியிட்டேன் இன்று மேலும் இரண்டு கட்டுரைகளை இணைத்துள்ளேன். டாக்டர் நாகசாமியும் தொல்பொருட் துறை அறிஞர் எச் சாஸ்திரியும் எழுதிய கட்டுரைகள் அவை .
நாடு முழுதும் இந்துக்களை பின்பற்றி முஸ்லீம்களும் கூட புனித மகான்களுக்கு தர்கா எழுப்பி வழிபாடு செய்கின்றனர்.
To be continued…………………….
Tags- Hinduism through 500 Pictures in Tamil and English – படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-5 , கிராம தேவதைகள், Village Gods