சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) (Post No.15,078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,078

Date uploaded in London –   12 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

15-7-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

MOTIVATION

சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) 

ச. நாகராஜன்             

உடல் பயிற்சி போல மனப் பயிற்சியும் மிக முக்கியமானது தான்! 

சிரிக்கும் மனமே சிறந்த மனம்!

அது என்ன சிரிக்கும் மனம்?

சுருக்கமாக இதை MENTAL FITNESS என்று சொல்லலாம்! 

இதை ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகச் சிறப்பாக அமையச் செய்வது தான் என்று சொல்லலாம்!

 உங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை நீங்கள் எப்படி எதிகொள்கிறீர்கள்? 

எரிச்சலுடனா? ஏமாற்றத்துடனா? கோபத்துடனா? திருப்தியுடனா? மகிழ்ச்சியுடனா?

 MENTAL FITNESS இருந்தால் எந்த நிலையையும் சிரித்த முகத்துடன் எதிர் கொள்வீர்கள். MENTAL FITNESS  என்பது சிரித்த மனதுடன் எப்போதும் இருப்பது தான்! 

இதற்கும் உடல்பயிற்சி போல மனப் பயிற்சி தேவை!

 நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் திறம்பட மனம் நோகாது எதிர்கொள்ளும் திறமை…….

முடிவுகளை எடுக்கும் போது நமக்கு பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையும் படைப்பாற்றல் மனமும் வேண்டும்.

 மற்றவர்களுடன் மிக அருமையான ஒரு தொடர்பை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்.

 நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை உணர்வதோடு அதனால் சமுதாயத்தில் மதிப்பு மிக்க ஒரு இடத்தைப் பிடிக்கும் திறமைகளை வளர்க்க வேண்டும் 

செயல்படும் போதும் ஓய்வாக இருக்கும் போதும் தூங்கும் போதும்

நமது மனதையும் உடலையும் அரவணைத்துச் சிறப்பாக வைத்திப்பதற்கான திறன்கள் வேண்டும். 

MINDFULNESS என்று சொல்கிறோமே அதையும் தாண்டி ஒரு படி மேலே போய் நமக்கு இருக்கும் மனம் சம்பந்தப்பட்ட கருவிகளுடன் அவற்றைச் சரியாகச் செயல்படுத்தும் உன்னதமான ஒரு வாழ்க்கையை அமைப்பது தான் ஸ்மைலிங் மைண்ட் அதாவது MENTAL FITNESS. 

சரி, இதை எப்படி நாம் பயிற்சி செய்து மாஸ்டர் ஆவது?

இதோ வழிகள்:

 ஒவ்வொரு எண்ணமும் உண்மை என்றோ அல்லது உதவிகரமான ஒன்று என்றோ நம்பி விடாதீர்கள். 

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாற்பதினாயிரம் எண்ணங்களை நாம் எண்ணுகிறோம். எல்லாமே உண்மை அல்ல; உதவி செய்வதும் இல்லை. ஆகவே எதிர்மறை எண்ணங்களை இனம் கண்டு அவற்றின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் கேள்வி கேட்டு அலசி ஆராயுங்கள்.

 ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் சீக்கிரமே நெகடிவ் எண்ணங்களை அண்டவிடாமல் செய்து விடலாம்.

 தியானம் மனதை ஒருமுகப்படுத்தும். சிந்தனையை நல்ல விதமாகத் தூண்டும்.

 கவலைப்படும் போதோ அல்லது மன அழுத்தம் ஏற்படும் போதோ உங்கள் சிந்தனை உங்களை எப்படியெல்லாம் பயமுறுத்தி கடைசி எல்லைக்கு இட்டுச் செல்கிறது பார்த்தீர்களா? உடனடியாக மனதை இந்தக் கணத்திற்கு அழைத்து விடுங்கள். ஐந்து புலன்களையும் நிகழ்காலத்தில் இருக்க வையுங்கள். மனதை ஆக்கபூர்வமான சிந்தனைக்குத் திருப்புங்கள்.

 சரியான திருப்திகரமான ஓய்வு மூளைக்குத் தேவை. ஓய்வு எடுத்தால்  நமது திறமை குறைவாக மதிப்பிடப்படுமோ என்று பயப்பட வேண்டாம். ஓய்வு நமது படைப்பாற்றலை மேம்படுத்தும். புத்திகூர்மையை அதிகரிக்கும். ஆற்றலைக் கூட்டும்.

 சோம்பேறித்தனத்தை உதறி சரியான ஓய்வு எடுக்க பயிற்சி தேவை.

 எத்தனை எத்தனை மெஸேஜ்கள்?எத்தனை எத்தனை சோஷியல் மீடியா அழைப்புகள்! எத்தனை தேவையற்ற யூ டியூப் காட்சிகள், மின்னஞ்சல்கள்…. இவற்றைத் துடைத்து எறிவதே ஒரு பெரிய வேலை. இதில் அன்றாட குட் மார்னிங் வேறு பலரிடமிருந்து!!!

 இவற்றைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

 அன்றாடத் தூக்கம் மிக மிக இன்றியமையாதது. ஒரே நேரத்தில் படுத்து ஒரே நேரத்தில் எழுந்து விடும் பழக்கம் மிக மிக அருமையான ஒரு பழக்கம். அது உடலையும் மனதையும் ரீ சார்ஜ் செய்யும் நேரம்.

 அன்றாடம் ஒரே மாதிரியாகச் செய்யும் சடங்குகளை விட்டு விட்டு சற்று மாற்றி புதிய வழிகளையும் தொடர்புகளையும் கொள்ளலாம்.

ஒரே ரூட்! ஒரே ஷெட்யூல்… இதைச் சற்று மாற்றுங்கள்.

 சிறிது காலப் பயிற்சிக்குப் பின்னர் உங்கள் மனம் சிரிக்கும்.

 அந்த சிரிக்கும் மனம் தான் MENTAL FITNESS!!

***

Leave a comment

Leave a comment