Post No. 15,091
Date uploaded in London – 15 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அர்ஜுனன் சொன்னான் …………………….
‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான்
பாஞ்சாலி சபதம் பாரதி பாடல்- ARJUNA SAID IT.
மகாபாரத முடிவுரை English Version will be posted tomorrow.
பஞ்ச பாண்டவர்கள் – யுதிஷ்டிரன் பீமன், அர்ஜுனன் , நகுலன் சகாதேவன் !
முதல் மூவர் குந்திக்குப் பிறந்தவர்கள் ; கடைசி இருவர் மாத்ரிக்குப் பிறந்தவர்கள். இவர்கள் யமதர்மன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தவர்கள் அதற்கான மந்திரத்தை துர்வாச முனிவர், குந்திக்கு அளித்தார் . அதை அவள், மாத்ரிக்குச் சொல்லிக் கொடுத்தாள் பாண்டுவின் இரண்டு மனைவியிடையே அற்புதமான ஒற்றுமை! சக்களத்தி சண்டை இல்லை !!
யுதிஷ்டிரன் என்னும் தர்மனின் பெரிய வீக்னஸ் Weakness – பலவீனம் சூதாட்டம்.. பீ மனின் குணம் அசுர பலம்! பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியான திரெளபதி அ ஞ் ஞாதா வாசத்தின் போது கீசகனால் துன்புறுத்தப்பட்டாள்; அவனை பீமன் கிழித்தெறிந்தான் ; திரெளபதியின் கூந்தல் முடியும் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனின் தொடைட்யைக் கிழித்து பீமன் உதவினான் ; அர்ஜுனன் மூலம் நமக்கு பகவத் கீதை கிடைத்தது. ஜயத்ரதன் பீஷ்மன் ஆகியோரைக் கொல்வதற்கு கண்ணன் போ ட்ட திட்டங்களுக்கு ஆமாம் சாமி போட்டான் ; வில்லுக்கு விஜயன் என்ற பெயர் எடுத்தான் சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்றான் தென்னாடு வரை வந்து அல்லி ராணியை மணந்தான் சுபத்ரா வைக்க கடத்தி வந்து திருமணம் புரிந்தான் ஆயினும் போர் என்பதன் கொடுமைக்கு மகன் அபிமன்யுவையே பாலி கொடுத்தான் நகுல சஹா தேவர்கள் வீரர்கள் மட்டுமின்றி ஜோதிடத்தில் வான சாத்திரத்தில் வல்லவர்கள் இதனால் சூரிய கிரகண நாளை பயன்டுத்தி ஜயத்ரதனை வீழ்த்த உதவினார்கள். தர்மன் சொன்ன ஒரே பொய் அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்பதாகும். அவர் யானை என்ற சொல்லினை சன்னக்குரலில் சொன்னது மகா பொய்! தன்னுடைய மகன் அஸ்வத்தாமன் இறந்தான் என்ன்று தவறாக எண்ணிய துரோணர் வாழ்வு போர்க்களத்தில் முடிந்தது உலகில் எத்தனை சூது வாதுகள் உண்டோ அத்தனையையும் மஹாபாரதத்தில் காணலாம் இத்தனை வஞ்ககங்களுக்கும் மூல காரணம் கிருஷ்ணன் ; முடிவு நன்றாக இருக்குமானால் வஞ்சக வழிகளை பின்பற்றுவது தவறில்லை END JUSTIFIES MEANS என்பது அவனது பாலிசி. ஆயினும் அவதார புருஷன் என்பதால் அவன் செய்த அற்புதங்களையும் சமாதான தூதுகளையும் மறக்கக்கூடாது. திரெளபதியின் மானத்தைக் காக்க மழை போல புடவைகளை அருளினான். போரில் ஆயுதம் எடுக்காமலேயே வெற்றி பெற்றான். இறுதி முடிவு பரிதாபமானதே!
கிருஷ்ணன் வேடனால் கொல்லப்பட்டான்; பஞ்ச பாண்டவர்களும் திரெளபதியும் புனித வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக வீழ்ந்து இறந்தனர்; மாத்ரி பாண்டுவின் சிதையில் தீப்பாய்ந்து இறந்தாள் ; காந்தாரி திருத ராஷ்ட்ரன் குந்தி– காட்டுத்தீயில் கருகி இறந்தனர்; கர்ணனும் போர்க்களத்தில் மறைந்தான்.
செஞ் சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக கர்ணன் இறுதிவரை தீய துரியோதனனுக்கு உதவினான்; கொடைக்கு அடையாளமாக விளங்கினான் அவனுடைய கவச குண்டலங்கள் இருந்தால் அவனை வெல்ல முடியாது என்பதை அறிந்த கண்ணன் பிராமண வேடத்தில் இந்திரனை அனுப்பி அதையும் கவர்ந்தான் இத்தனைக்கும் காரணம் கர்ணன் தேர்ப்பாகன் மகன், ஆகையால் அவன் அரசர் போட்டியில் பங்கேற்க முடியாது என்று பாண்டவர் ஆட்சேபித்த போது அவனை அங்க தேச மன்னனாக அறிவித்தான் துரியோதனன்; இது அவனது அரசியல் அறிவினைக் காட்டுகிறது.
கர்ணனை சூரிய தேவன் அருளால் பெற்ற குந்தி தேவி அவனை ஆற்றில் விட்டது முதல் தப்பு ; முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்தது. அவள் முன்கூட்டியே உண்மையை அமபலப்படுத்தி இருந்தாலும் மகா பாரதம் நடந்திருக்காது விதி செய்த சதி; கடைசி நேரத்தில் கர்ணனுக்கு மட்டும் உணமையைச் சொன்னாள் அவன் உப்பிடாதவரலாய் வரை உள்ளவையும் வு நினைப்பேன் என்று சொல்லி தாய் சொல்லினையே தட்டினான் ; அற்புதமான நன்றி உணர்வு!
தீயோரிடமும் ஒவ்வொரு நற்குணம் இருப்பதைக் காண முடிகிறது. துரியோதனன் மனைவி பானுமதியுடன் கர்ணன் சூதாட்டம் ஆடியபோது தாயக்கட்டத்தைப் பறிக்க பானுமதியை தொட்டதில் அவள் முத்துமாலை அறுந்தது. உள்ளே நுழைந்த துரியோதணன் சிறிதும் இருவர் நடத்தையில் சந்தேகம் அடையாமல் எடுக்கவோ கோர்க்கவோ – முத்துக்களைக் கோர்த்து தரட்டுமா? என்று கேட்டான்! எத்தனை அருமையான குணம். ஒவ்வொரு மாபாரதச் செய்தியும் அந்தக்காலத்தில் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக அமைந்திருக்கும்.
துரியோதனாதிகள் பொறாமைத் தீயில் வெந்து மாண்டார்கள். பொறாமை என்பது ஒரு குலத்தையே அழிக்கும் என்பதுதா ன் மாபாரத்தின் முக்கிய அறிவுரை என்று சொன்னாலும் மிகை ஆகாது. மனித குலத்துக்கு மஹாபாரதம் எண்ணற்ற பாடங்களைக் கற்பிக்கிறது. இத்தனைக்கும் அப்போது கலியுகம் கூடத் துவங்கவில்லை. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தர்ம- அதர்மப் போராட்டம் மகாபாரதம்.
அர்ஜுனன் சொன்னான் ,
‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான்
பாஞ்சாலி சபதம் பாரதி பாடல்
—என்று பாரதி சொன்னது சரியே. இறுதியில் தர்மம் வென்றது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற மர்மத்தை உலகம் கற்க வழி தேடி விதி செய்தான்
விஷ்ணு சஹஸ்ர நாமம், பகவத் கீதை, யக்ஷப் ப்ரச்னம் (பேயின் கேள்விகளுக்கு தர்மன் அளித்த பதில்), இன்னும் பல கீதைகளை உள்ளடக்கியது மகாபாரதம். இரண்டு லட்சம் வரிகளில், சொல்ல வேண்டிய அனைத்தையும் வியாசர் சொல்லச் சொல்ல அதை விநாயகன் எழுதித் தரவே உலகின் மிகப்பெரிய இதிகாசம் உருவானது!
To be continued…..
Tags- ‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்,பாஞ்சாலி சபதம், பாரதி பாடல், Hinduism through 500 Pictures in Tamil, English, படங்கள், இந்து மதம் கற்போம்- part 14