காசியில் தங்க அன்னபூரணியின் அற்புத தரிசனம்! (Post No.15,102)

Written by London Swaminathan

Post No. 15,102

Date uploaded in London –  19 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காசியில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தங்கத்தினால் ஆன அன்னபூரணி  விக்கிரகத்தை தரிசனம் செய்யலாம். ஐந்து நாட்களுக்கு மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும். ஏனைய நாட்களில் கிட்டத்தட்ட ஆண்டு முழுதும் பாதுகாப்பு கருதி அன்னபூரணி கோவில் பூட்டிவைக்கப்படுகிறது .

தங்கத்தினாலான அன்ப்பூரணிக்கு அருகில் பூமிதேவி, லட்சுமி தங்க விக்கிரகங்களும் வெள்ளியினால் ஆன சிவன் விக்கிரகமும் உள்ளன

அதிகாலை ஐந்து மணிக்குத் திறக்கப்படும் இந்தக் கோவில் ஐந்து நாட்களுக்கு இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் அன்னபூரணி  என்பவள் மக்கள் எல்லோருக்கும் உணவினை வாரி வழங்குபவள்.  சிவனே ஒரு முறை அன்னபூரணியிடம் உணவுக்காக பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது காசியில் வரும் எவரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பது அன்னபூரணியின் பிரதிக்ஞை இப்போதும் தினமும் அன்னதான ட்ரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்ககப்படுகிறது.

தீபாவளியின் முதல் நாள் அன்று கோவிலில் உள்ள மஹந்த் என்னும் அர்ச்சககர் எல்லோருக்கும் கோவிலில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட காசுகளை வழங்குகிறார் இது கஜானா எனப்படும் காசுடன் பொரியும் கொடுக்கப்படுகிறது.

ஐந்தாவது நாளில் அன்னக்கூட வைபவமும் நடக்கிறது அன்று உணவுக்குவியலை உண்டாக்குவார்கள் .இனிப்புகளும் தின்பண்டங்களும் மலை  போல குவிந்து  இருக்கும்

மிகவும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் பின்னால் இந்தக் கோவில் அமைந்துள்ளது. முதல் மாடியில் உள்ள அன்னபூரணி விக்ரகத்தைக் காண தற்காலிக படிகள் அமைக்கப்பட்டுள்ளன .

சுவர்ண  அன்னபூரணி தாமரையில் அமர்ந்து இருக்கிறாள் ; சிவன் பிச்சைப்பாத்திரத்துடன் வெள்ளி விக்கிரகமாக நிற்கிறார் அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவி (லெட்சுமி), பூதேவியும் நிற்கின்றனர்.

காசியில் திவோதாசன் என்ற மன்னன் ஆண்ட காலத்தில் பஞ்சம் ஏற்பட்டதாகவும் அப்போது தனஞ்செயன் என்பவன் செய்த தவத்துக்கு மெச்சி அன்னை தங்க வடிவில் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. அவரங்க சீப் இடித்த கோவிலை சுமார் 200  ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் கட்டியபோது கூட அன்னபூரணி கோவில் அப்படியே இருந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காசி விஸ்வநாதர் கோவிலின் ஈசான மூலையில் — வடகிழக்கில் — மூல விக்ரகம் மீண்டும் நிறுவப்பட்டது. உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதற்கு ஏற்பாடு செய்தார். மூல விக்ரகம் திருடப்பட்டு கனடாவில் ஒரு மியூஸியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 108 ஆண்டுகளுக்கு கனடாவில் இருந்த தங்க விக்கிரகத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவந்தது 2021- ஆம் ஆண்டில் தான்.

மூல தங்க விக்கிரகத்துக்குப் பக்கத்தில் கல்லில் வெள்ளி முலாம் பூசப்பட்ட அன்னபூரணியும் இருக்கிறாள் அதன் மீதும் பின்னர் தங்க முலாம் பூசப்பட்டது.

கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் காவலுடன் சி சி டி  வி காமெராக்களும் நிறுவப்பட்டுள்ளன

தந்தேரா என்னும் தீபாவளி முதல் நாள் தன்வந்திரி  வழிபாட்டுக்கும் தன லெட்சுமி வழிபாட்டுக்கும் உரியது

ஆயிரக் கணக்கான மக்கள் தங்க விக்கிரககங்களைத் தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர் . பல அமைப்புகள்  இலவசமாக உணவினையும் வழங்கி வருகின்றனர் .

வருடம் முழுதும் இந்த தங்க விக்கிரகங்கள் ரிசர்வ் பாங்கு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுகின்றன இவற்றின் எடை, விலை மதிப்பு ஆகியன ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது . 

–subham—

Tags காசி, தங்க அன்னபூரணி, தரிசனம் ,

Leave a comment

Leave a comment