அதிசய மனிதர் அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் நிகழ்த்திய அதிசயங்கள்! (Post.15,112)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,112

Date uploaded in London –   23 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

2-8-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

அதிசய மனிதர் அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் (ABBE ALEXIS MERMET) நிகழ்த்திய ரேடிஸ்தீசியா அதிசயங்கள்! 

ச. நாகராஜன் 

உலகையே வியக்க வைத்த அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் (Abbe Alexis Mermet) என்னும் ஒரு அதிசய மனிதர் தனது பெண்டுலத்தை வைத்துக் கொண்டு பல சாதனைகளைச் செய்து காட்டியவர் ஆவார்.

 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார்.

 இவர் 1866ம் ஆண்டு நவம்பர் மாத்ம் 11ம் தேதி பிறந்தார்.

இவர் தனது பெண்டுலத்தை வைத்துக் கொண்டு அதிசயமான சாதனைகளைச் செய்து காட்டினார்.

 எடுத்துக் காட்டாக போலீஸாருக்கு இவர் செய்த உதவியைச் சொல்லலாம். யாரைக் கண்டுபிடிக்க வேண்டுமோ அவர் பயன்படுத்திய ஒரு பொருளை இவர் கையில் கொடுத்தால் போதும், அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து உடனே சொல்லி விடுவார். அந்தப் பொருளானது அவரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்!

 தனது இந்தக் கலைக்கு அவர் ரேடிஸ்தீசியா (RADIESTHESIA) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

 அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு ரேடியேஷன் எனப்படும் கதிர் இயக்க அலை இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் இவர் அதை வைத்து சுலபமாக

எதையும் கண்டுபிடித்து விடலாம் என்று கூறுவார்.

 வியாதி உள்ள ஒருவர் இவரிடம் வந்தால் அவரது அங்கத்தின் மீது தன் பெண்டுலத்தைப் பயன்படுத்தி அவரது வியாதி என்ன என்பதைத் துல்லியமாகக் கூறி விடுவார். அதற்குத் தக சிகிச்சை அமையும்.

இவரது ரேடிஸ்தீசியா முறை இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டது.. இவர் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது.

 இவரது அதிசயிக்கத் தக்க சாதனைகளுள் ஒன்று பெட்ரோல் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தது.

நிலத்தடியில் உள்ள நீரைக் கண்டுபிடிப்பது பலரும் அறிந்த ஒன்று,

இவர் ஒரு பெரிய நதியையே கண்டுபிடித்தார்.

 பிரான்ஸ்- இத்தாலி எல்லையில் உள்ள மிகப் பெரிய மலையான மாண்ட் ப்ளாங்க் பகுதியில் நிமிடத்திற்கு 50000 காலன் நீர் பாயும் ஒரு பெரிய நதியையே இவர் கண்டுபிடித்தார்.  சலீவ் மற்று ஜுரா ஆல்ப்ஸ் மலைகளுக்கு இடையே இது பாய்கிறது. இதற்கு இயக்ஸ – பெல்லஸ் (EAUX-BELLES) என்று பெயர் சூட்டப்பட்டது. மலைக்கு அடியில் 75 முதல் 150 அடி ஆழத்தில் இருந்த இந்த நதியை இவர் கண்டு உலகிற்கு அறிவித்தது பெரும் பரபரப்பை ஊட்டியது.

 காலம் காலமாக dowser என்று சொல்லும் நிலத்தடி நீர் கண்டுபிடிப்பாளர்களுக்கு இவர் ஒரு புதிய அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தார்.

நிலத்தடியில் புதைந்திருக்கும் கனிவளத்தைக் காண இவரது ஆற்றல் பெரிதும் உதவியது.

முதல் உலகப்போர் முடிந்தவுடன் இவரை நாடி ஏராளமானோர் வந்து தங்கள் டெபாசிட் எங்கிருக்கிறது என்றும் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரைப் பற்றியும் கேட்க ஆரம்பித்தனர். தூரத்தில் உள்ளதைப் பார்க்கும் டெலி ரேடிஸ்தீசியா என்பதைப் பயன்படுத்தி இவர் அனைவருக்கும் உதவி வந்தார்.

இவர் Principles and Practice of Radiesthesia என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

 1937ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் நாளன்று இவர் மறைந்தார்.

உலகம் கண்ட அதிசய மனிதர்களுள் அப்பே மெர்மட் சற்று வித்தியாசமானவர் தான்!

**

Leave a comment

Leave a comment