குருக்ஷேத்ரம் பற்றி பத்து சுவையான செய்திகள் (Post No.15,119)

துருவ நாராயணன் கோவிலும் பிரம்ம சரோவரும் 

Written by London Swaminathan

Post No. 15,119

Date uploaded in London –  25 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1

தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே என்ற இரண்டு சொற்களுடன் உலகப் புகழ்பெற்ற பகவத்த் கீதை ஏன் துவங்குகிறது?

விடை; அங்கே கிருஷ்ணபகவான் வழிகாட்டுதலின் பேரில் அரக்கர்களை போன்ற குணம் படைத்த துர்யோதானாதிகளை அழித்து தர்மம்  நிலை நாட்டப்பட்டது .

धृतराष्ट्र उवाच |

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः |

मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ||1-1||

(Dhritrashtr uvaach) 

Dharmkshetre, Kurukshetre, samvetaH, yuyutsavH,

MamkaH, PandavaH, ch, ev, kim’, akurvat, Sanjay ||1-1||

***

2

இப்போது குருக்ஷேத்திரம் எங்கே உள்ளது?

ஹரியானா மாநிலத்தில் பிரம்ம ரிஷி தேசம் என்று அழைக்கப்பட்ட பூமியில் உள்ளது  பழங்கால சரஸ்வதி மற்றும் த்ருஷத்வதி நதிக்களுக்கு இடையே அமைந்த இந்த இடம் மிகவும் புனிதமான பிரதேசம்

***

கீதா மந்திர்கள் 

3

குருக்ஷேத்திரத்தில் கோவில்கள் உள்ளனவா?

பல கிருஷ்ணன் கோவில்கள் இருக்கின்றன ஒரே கோவிலில் முன்னூறுக்கும் அதிகமான பகவத் கீதை உரைகளைக் கண்டு மகிழலாம் . துருவ நாராயணன் கோவிலும் , சங்கர் மஹாதேவர் என்ற சிவன் கோவிலும் உள்ளன.

***

4

வேறு எங்கும் இல்லாத சிறப்பு ஏதேனும் உண்டா?

உண்டு. 360 ஏரி, குளங்கள் உள்ளன அத்தனையும் புனிதம் பெற்றவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

5

மிகவும் புகழ் பெற்ற புனித நீர்நிலை எது?

பிரம்ம சரோவர் என்னும் மிகப்பெரிய ஏரி ஆகும்.

பிரம்ம சரோவர் என்னும் ஏரி மூன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பு உடையது . 20 லட்சம் பேர் குளிக்கலாம். பெண்களுக்காக தனியாக 20,000 படித்துறைகள் இருப்பதால் , அங்கு ஒரே நேரத்தில் இருபதாயிரம் பேர் புனித ஸ்னானம் செய்யலாம்

6

வேறு புகப்பெற்ற குளம், கிணறுகள் ?

சன்னிஹித குளம், சந்திர கூபம் கிணறு, பீஷ்ம குண்டம், பிர்லா கோவில், தயால்பூர் வன கங்கா  முதலியவற்றை யாத்ரீகர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

7

அங்குள்ள ஆல மரம் ஏன் புகப்பெற்று விளங்குகிறது ?

அந்த ஆல மரத்தின் கீழ் நின்றுதான் பகவான் கிருஷ்ணன் , பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் அது 5000  ஆண்டு பழமையான மரம். எப்படி புத்தர் ஞானோதயம் பெற்ற அரச மரத்தின் கன்றுகள் இலங்கையின் தென்கோடிவரை சென்றதோ அது போல பழைய ஆல மரத்தின் கன்றுகள் காலம் காலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது; உலகத்திற்குப் பகவத் கீதையை வழங்க உதவிய ஆல மரத்தை நாம் வணங்குவது சாலப்பொருத்தமே.

8

குருக்ஷேத்திரத்தை யார்  உருவாக்கினார் ?

பிரம்மா இந்த ஊரினை உண்டாக்கியதாகப் புராணங்கள் பகர்கின்றன

9

சூரிய கிரகணத்தின்போது லட்சக் கணக்கான யாத்ரீகர்கள்  குருக்ஷேத்திரத்துக்குச் செல்வதன் ரகசியம் என்ன?

சூரிய கிரகணத்தின்போது அங்குள்ள பிரம சரோவர் ஏரியில் புனிதக் குளியல் செய்தால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுமாம். ஆகவே ஒவ்வொரு கிரகணத்தின்போதும் கூட்டம் அதிகரிக்கிறது.

***

10

பாஸ்கராச்சார்யார் என்ற கணித மேதை செப்பிய ரகசியம் என்ன ?

குருக்ஷேத்திரம் வழியாக முக்கியக்கோடு செல்வதாகவும் இது ரோதக், உஜ்ஜைனி, மதுரா நகரங்களை இணைப்பதாவும் ஒரு புறம் மேரு சிகரத்தினையும் மறுபுறம் இலங்கையையும் தொடுவதாகவும் சித்தாந்த சிரோன்மணி நூல் உரைக்கிறது. அதிசயம் என்னவென்றால் திருமூலரும் இதைப்பாடியுள்ளார்

பல இடங்களுக்கு புனிதத்துவம் ஏற்படுவதற்குக் காரணம் அவை அனைத்தும் சில அதிசயக் கோடுகள் (Lay lines)செல்லும் பாதையில் இருப்பதாக மேலை நாடுகளிலும் ஒரு கருத்து உள்ளது.

LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES (Nearly on the same line)

75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்

79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்

79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்

79.0669° E KEDARNATH  கேதார்நாத் சிவன் கோவில்

81.3119° E MOUNT KAILASH கயிலாயம்

***

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.- 2701

xxx

இடைபிங் கலையிம வானோ டிலங்கை,

நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,

படர்வொன்றி யென்றும்  பரமாம்பரமே“- 2708

நாம் வாழும் பூமியை , புவியியல் அறிஞர்கள்,  கற்பனைக் கோடுகளால் பிரிப்பார்கள். பூமியை 360 பாகைகளாகப் பிரிக்கும் நெடுங்கோடுகளை தீர்க்க ரேகை LONGITUDE என்றும் படுக்கைவாட்டில் பிரிக்கும் 180 கோடுகளை அட்ச ரேகை LATITUDE என்றும் பிரிப்பார்கள்.

தீர்க்க ரேகையை 180 கிழக்குக் கோடுகளாகவும் 180 மேற்குக் கோடுகளாகவும் பிரித்து  லண்டன் அருகிலுள்ள கிரீனிச்சில் பூஜ்ய டிகிரியில் துவங்குவதாகச் சொல்லுவார்கள் இதே போல படுக்கைக்கோடுகளை 90 வட கோடுகளாகவும்  ,90 தென்  கோடுகளாகவும்  பிரிக்கிறார்கள். பூமியின் நடுவில் செல்லும் கோட்டை பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு (Equator) என்று அழைக்கிறோம்.

இவைகளில் அட்ச ரேகைகளை முதல் முதலில் எகிப்திய வான நூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். கி.பி 150-ல் வாழ்ந்தவர் அவர். ஆனால் தீர்க்க ரேகைகளை 18-ஆவது  நூற்றாண்டில்தான்  காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருமூலர் இவற்றை அறிந்திருக்கிறார்.

அவர் இரண்டு திருமந்திர பாடல்களில் மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை மூன்றும் ஒரே நேர் கோட்டில்  இருப்பதாகப் பாடுகிறார்.

–SUBHAM—

Tags- திருமூலர், தீர்க்கரேகை, அதிசயக்கோடு, ஆலமரம், பகவத் கீதை குருக்ஷேத்ரம் , பத்து சுவையான செய்திகள், தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே

Leave a comment

Leave a comment