லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)


Written by London Swaminathan

Post No. 15,124

Date uploaded in London –  27 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் (GEM STONES) ரத்தினைக் கற்களை முந்தைய கட்டுரையில் கண்டோம் ; ஹயக்ரீவர் இதை அகஸ்தியருக்கு உபதேசித்தபோது புண்ணிய நாகரங்களின் பெயர்களையும் (HOLY CITIES) சேர்த்துள்ளார். தேவியின் நாமங்களை மக்கள் தங்களுடைய நகரங்களுக்கு, குறிப்பாக மன்னர்கள், சூட்டிக்கொண்டார்கள் என்பதே சரியான கருத்தாகும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீவிஜயம் என்ற நாமத்தைச் சூட்டிக்கொண்ட  தென் கிழக்கு ஆசிய  நாகரீகம்  நீண்ட காலத்துக்கு கொடி கட்டிப் பறந்தது. அதைப்  போல ஆதிசங்கரரும் ஹயக்ரீவரும்   பெயர் சூட்டிய ஸ்ரீநகர் இன்றுவரை காஷ்மீரின் கவர்ச்சிமிகு தலைநகராக இருந்து வருகிறது.

முதலில் எல்லா நகரங்களின் பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரி ஸ்லோகத்தை எடுத்துக்கொள்வோம்.

விஶாலா கல்யாணீ ஸ்புடருசிரயோத்யா குவலயை:

க்ருபாதாராதாரா கிமபி மதுராபோகவதிகா ।

அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகரவிஸ்தாரவிஜயா

த்ருவம் தத்தன்னாமவ்யவஹரணயோக்யா விஜயதே ॥ 49 ॥

தேவியின்  கண்கள் அகன்று இருப்பதால் – விசாலா ;

கல்யாணங்களை நடக்கச் செய்வதால் கல்யாணி ;

குவளை மலர்களாலும் வெல்லமுடியாத அழகுடையவள் என்பதால் அயோத்யா ;மழை போல் கருணை பொழிவதால் தாரா ;

இனிமையானவள் என்பதால் மதுரா;

போகத்தைத் தரும் பார்வையுடன் சிவனை நோக்குபவள் அல்லது

அபோகவதீ =நீண்ட பார்வை / நெடுநோக்குள்ளவள்  போகவதீ;

காக்கும் சக்தி உடையவள்  அவந்தீ ;

வெற்றியைத் தருபவள் விஜயா;

विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः

कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका।

अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया

ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते॥

viśālā kalyāṇī sphuṭarucirayodhyā kuvalayaiḥ

kṛpādhārādhārā kimapi madhurābhogavatikā |

avantī dṛṣṭiste bahunagaravistāravijayā

dhruvaṁ tattannāmavyavaharaṇayogyā vijayate ||

Meaning:-“All glories to Thy eyes which are wide (vishaalaa); auspicious (kalyaani) because of being brilliantly clear; undefeated (ayodhyaa) even by blue lillies; shedding a continuous flow of grace (kripaadhaaraa-dhaaraa); subtly sweet (madhura); long (abhogavathi); and offering protection to the world (avanthee). Surpassing all these great cities in their uniqueness, Thy glance is fit to be reffered to by the respective appellations.”

முதலில் ஆதிசங்கரரின் வியத்தகு பூகோள அறிவினை மெச்ச  வேண்டும் . எட்டு நகரங்களின் பெயர்களின் வாயிலாக தேவியின் அபூர்வ குணங்களை நமக்கு எடுத்துரைக்கிறார் . அயோத்தி, காசி முதல் விஜயவாடா வரை நமக்கு புவியியலையும் கற்பிக்கிறார் அப்படிப்பட்ட அறிவியல் நோக்கு இருந்ததால்தான் நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு சங்கர மடங்களை நிறுவினார்; காலடியில் துவங்கி  காஷ்மீர்  வரை கால் நடையாகவே சென்று நாட்டினை வலம் வந்தார்

எந்த அசட்டுப்பிச்சுக்களாவது வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டினை ஒற்றுமைப்படுத்தினான் என்று சொன்னால் புறநாநூற்றின் இரண்டாவது பாடலையும் இந்த ஸ்லோகத்தையும் அவர்கள் முகத்தில் வீசலாம்; இமயம் முதல் பொதியம் வரை என்று பாடினார் மிஸ்டர் நாகராஜன் புறநானூற்றில்! அதாவது முடிநகராயர்! இங்கு சங்கரர் அயோத்தியில் துவங்கி விஜயவாடா வரை வந்து விட்டார் என்பது எனதுரையாகும்.

போகவதி என்ற நகரம் நாகலோகத்தில் உள்ள நாகர்களின் தலை  நகரம் ; நல்ல அனுபவம் மிக்க பெண் என்பதால் பெண்களின் பெயர்களாகக் கதைப்புஸ்தகங்களில் காண்கிறோம்.

கல்யாணி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம் ;

மதுரா என்பது கிருஸ்ணன் பிறந்த பூமி; மதுரை மீனாட்சி அம்மனின் நகரம் என்றும் சொல்லலாம்

தாரா DHARA வில் ஒரு மசூதிக்குள் சரஸ்வதி கோவிலும் சித்திரக் கல்வெட்டும் உள்ளது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான உரையாற்றியுள்ளார்

ராமர் பிறந்த அயோத்தியின் பெருமை இப்போது உலகெங்கும் பரவிவிட்டது கோடிக்கணக்கானோர் அந்த ராமர் கோவிலுக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.

விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர்

காசியில் உள்ள விசாலாக்ஷி சமேத விஸ்வநாதரைத் தரிசிக்க ஆயிரக்கக்கான ஆண்டுகளாக இந்துக்கள் காசி யாத்திரை சென்று வருகின்றனர்

இதற்கு ஆதரவான சில நாமங்களை சஹஸ்ரநாமத்தில் காண்போம். லலிதா சகஸ்ரம் நாமத்தில் உள்ள  எல்லா  பெயர்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.

இதில் டாக்கீஸ்வரி கோவில் உள்ள பங்களாதேஷ் தலைநகரம் டாக்கா வருகிறது

பஞ்சாபில் உள்ள ஜலந்தரும் வருகிறது

ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகரும் வருகிறது

சண்டிகர் என்ற நாமத்தில் சண்டியைக் காணலாம்; சிம்லா  என்ற ஹிமாசலப்பிரதேச தலை நகர் சியாமளா என்பதன் மருவு ஆகும்.

கல்கத்தா என்பது காளிகாட் என்பதிலிருந்து வந்ததை நாம் அறிவோம்

மும்பை என்பது மும்பாயி தேவி பெயர்; சென்னை என்பது சென்னம்மா தேவியின் பெயர் காமரூபம் என்னும் அஸ்ஸாம் காமாக்யா தேவி கோவில்கொண்ட இடம் ; கன்னியாகுமரியின் பெயரிலேயே பகவதி உறைகிறாள் காஸ்மீர் முதல் கன்யாகுமரிவரை தேவியின் பூமி என்று சொன்னாலும் மிகை ஆகாது ; இதோ உங்கள் பார்வைக்கு சில நாமங்கள்-

கல்யாணீ – நாமத்தின் எண் 324; காமகோடிகா / காஞ்சி – 589; சண்டிகா-755டாகினீஸ்வரி – டாக்கா -484; துர்கா /துர்காபூர் – 190; திரிபுரா -626; பவானி-112; பாபநாசிநீ-பாபநாசம் – 167;  புவனேஸ்வரீ – புவனேஸ்வர் -294; புஷ்காரா – புஷ்கர் -804; மஹாகாளி – காளிகாட்-கல்கத்தா – 751; மாயா /ஹரித்வார் – 716; விஜயா / விஜயவாடா – 346; வைஷ்ணவீ ; வைஷ்ணவிதேவீ- 892; ஜயா  – ஜெயப்பூர் – 377; ஜாலந்தர ஸ்திதா -ஜலந்தர்– 378;ஸ்ரீ என்ற எழுத்துடன் துவங்கும் 12 பெயர்கள் அம்மனுக்கு உள்ளது ; இதன் தமிழ் வடிவம் திரு என்பதாகும் ; ஆகவே ஸ்ரீநகர் முதல் திருநகர் வரை உள்ள எல்லா ஊர்ப்பெயர்களையும் அம்பாளின் நகரங்களாகவே சொல்லலாம் .

–சுபம்—

Tags- லலிதா சஹஸ்ரநாமத்தில், புண்ணிய நகரங்கள் , ஆதி சங்கரரின், செளந்தர்ய லஹரி

Leave a comment

Leave a comment