Post No. 15,127
Date uploaded in London – 28 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற துதியில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி- பதில் வடிவத்தில் ஆதி சங்கரர் பதில் அளிக்கிறார் . அவற்றில் மேலும் 30 பதில்களை இந்த மாத காலண்டரில் காண்போம். சென்ற அக்டோபரில் 31 மேற்கோள்களைக் கண்டோம்.
நவம்பர் பண்டிகைகள் – நவம்பர் 1 ஏகாதசி , 2 துளஸி விவாகம் , 5 குருநானக் ஜயந்தி , தேவ தீபாவளி , பெளர்ணமி தமிழ் நாட்டுக் கோவில்களில் அன்னாபிஷேகம், 14 குழந்தைகள் தினம் , 15 ஏகாதசி, 17 சபரிமலை கோவில் திறப்பு 20 அமாவாசை,
அமாவாசை-20; பௌர்ணமி-5; ஏகாதசி- .1,15.
நவம்பர் முகூர்த்த தினங்கள்-10, 27, 30.
(P R Ramachandran’s translation is used from shastra.com; thanks)
நவம்பர் 1 சனிக்கிழமை
மனிதன் தவறான முடிவுக்கு என் வருகிறான் ?
அகந்தையால் கர்வத்தால்.
****
நவம்பர் 2 ஞாயிற்றுக் கிழமை
இன்பம் தருவது எது?
நல்லோருடைய நட்பு.
***
நவம்பர் 3 திங்கட் கிழமை
துக்கங்களை நீக்கும் நிபுணர் யார்?
எல்லாவற்றையும் துறந்தவனே அத்தகைய நிபுணர் .
***
நவம்பர் 4 செவ்வாய்க் கிழமை
மரணத்துக்குச் சமமானது எது?
முட்டாளாக இருப்பது
***
நவம்பர் 5 புதன் கிழமை
விலை மதிக்க முடியாதது எது?
மிகவும் தேவையான ஒன்றினை அந்த நேரத்தில் கொடுப்பது.
****
நவம்பர் 6 வியாழக் கிழமை
மரணம் வரை நமது மனத்தை உறுத்துவது என்ன?
ரகசியத்தில்l செய்த தவறு / பாவச் செயல்
***
நவம்பர் 7 வெள்ளிக் கிழமை
எதனை அடைய பெரு முயற்சி எடுக்க வேண்டும்?
கற்பதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தர்மம் செய்யவும் பெரு முயற்சி தேவை.
***
நவம்பர் 8 சனிக்கிழமை
எதை எதை ஒதுக்க வேண்டும் ?
கெட்ட மனிதர்கள், மற்றவரின் மனைவியர், அடுத்தவர்களின் செல்வம்
***
நவம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை
அல்லும் பகலும் அனவரதமும் சிந்திக்க வேண்டியது என்ன?
வாழ்க்கையிலும் பெண்களிடத்திலும் பற்றுவைப்பதில் பொருளே இல்லை
***
நவம்பர் 10 திங்கட் கிழமை
எதில் பற்று தேவை?
துன்பம் அடைந்தோருக்கு கருணை காட்டு; நல்லோரின் நட்பினில் பற்று வை.
***
நவம்பர் 11 செவ்வாய்க் கிழமை
யாரைச் சீர்திருத்த முடியாது?
தீயோர், சந்தேகப்படுவோர் , எப்போதும் வாடிய முகம் உடையோர் , நன்றி மறந்தோர்.
***
யார் நல்ல மனிதன் ?
ஒழுக்கம் உள்ளவன் நல்ல மனிதன்
***
நவம்பர் 12 புதன் கிழமை
கெட்டவன் யார்?
தீய ஒழுக்கம் உடையவன்
***
நவம்பர் 13 வியாழக் கிழமை
யாரை தெய்வமே வணங்கும்?
கருணை உள்ளவனை.
***
நவம்பர் 14 வெள்ளிக் கிழமை
எதைக் கண்டு அஞ்சவேண்டும்?
இல்லற வாழ்வு என்னும் காட்டினில் நுழைய அஞ்சவேண்டும்.
***
நவம்பர் 15 சனிக்கிழமை
எல்லா உயிரினங்களையும் கட்டுப்படுத்த வல்லவன் யார்?
உண்மை விளம்பி, இனிமையாகப் பேசுபவன், பணிவுடையோன்.
****
நவம்பர் 16 ஞாயிற்றுக் கிழமை
கண்டதும் காணாததும் உள்ள இடத்தில் நாம் எங்கே நிற்கவேண்டும்?
நீதியின் பாதையில் .
***
நவம்பர் 17 திங்கட் கிழமை
யார் கண்ணிருந்தும் குருடன்?
தீய செயல்களைச் செய்யும் கற்ற மனிதன்
***
நவம்பர் 18 செவ்வாய்க் கிழமை
காதிருந்தும் செவிடன் யார்?
நல்ல சொற்களைக் கேளாதவன்
***
நவம்பர் 19 புதன் கிழமை
வாயிருந்தும் ஊமை யார் ?
உரிய தருணத்தில் ஆறுதல் தரும் சொற்களைச் சொல்லாதவன்.
***
நவம்பர் 20 வியாழக் கிழமை
எது விவேகம்?
கேளாமல் கொடுப்பது .
***
நவம்பர் 21 வெள்ளிக் கிழமை
யார் நண்பன்?
பாவச் செயல்களைச் செய்யாமல் நம்மைத் தடுப்பவன்
***
நவம்பர் 22 சனிக்கிழமை
எது அழகானது?
நன்னடத்தை
***
நவம்பர் 23 ஞாயிற்றுக் கிழமை
அழகான சொல் எது?
சத்தியம்/ உண்மை
***
நவம்பர் 24 திங்கட் கிழமை
மின்னல் போல மறைவது என்ன?
தீயோருடனும் பெண்களுடனும் உள்ள நட்பு.
***
நவம்பர் 25 செவ்வாய்க் கிழமை
ஜாதி தர்மத்திலிருந்து விலகாதவர்கள் யார் ?
கற்றறிந்த மக்கள் .
***
நவம்பர் 26 புதன் கிழமை
விரும்பியதைக்கொடுக்கும் சிந்தாமணி போன்றது எவை?
இனிமையான சொற்களுடன் செய்யும் தர்மம்; அகந்தை இல்லாத அறிவு; பொறுமை மிக்க வீரம்; தியாகம் செய்யும் செல்வம்
***
நவம்பர் 27 வியாழக் கிழமை
பரிதப்படவேண்டிய செயல் என்ன?
கருமித்தனம் .
***
நவம்பர் 28 வெள்ளிக் கிழமை
செல்வம் உள்ளவர்களிடம் புகழத்தக்கது எது?
வாரி வழங்கும் வள்ளன்மை
***
நவம்பர் 29 சனிக்கிழமை
புத்திசாலிகள் யாரை வணங்க வேண்டும்?
இயற்கையிலேயே பணிவுடைய மனிதர்களை.
***
நவம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை
சூரியனைக் கண்ட தாமரை மலர்வது போல எவரைக்கண்டவுடன் ஒரு குலமே மலரும்?
நல்ல குணமும் பணிவும் உள்ளோரைக் கண்ட குலம் தாமரை போல மலரும்
–subham–
Tags- நவம்பர் 2025 காலண்டர், ஆதிசங்கரர் மேற்கோள்கள்,
பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா,