November 2025 Calendar with More Adi Shankara Quotes (Post No.15,128)

Written by London Swaminathan

Post No. 15,128

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Last month we saw 31 beautiful Quotations from Shankara’s Prasnottara Ratna Malika.  Prasnothara rathna malika is a Garland of Gems of Questions and Answers composed by Shankaracharya. Here are 30 more quotations from that hymn. 

November 2025 Festivals:- 2-Tulsi Vivaha;5-Guru Nnak Jayathi and Annabisheka in Tamil Nadu Temples; 14-Children’s Day; 17- Sabarimalai Temple opens.23- Sri Sahya Sai Baba Birth Day. (23 November 1926 – 24 April 2011)

New Moon Day-20;   Full Moon Day-5;  Ekadasi- Hindu Fasting Days .1,15.

Auspicious Days- November 10, 27, 30.

***

November 1 Saturday

32. What leads to wrong results?

Pride leads to wrong results.

***

November 2 Sunday

33. What leads to pleasure?

Friendship with good people leads to pleasure.

***

November 3 Monday

34. Who is expert in removing all sorrows?

He who forsakes everything is such an expert.

***

November 4 Tuesday

35. Which is equivalent to death?

Being a fool is equivalent to death.

***

November 5 Wednesday

36. Which is invaluable?

Giving anything at the time when it is required badly is invaluable.

***

November 6 Thursday

37. What hurts till you die?

The sin committed in secret hurts you till death.

***

November 7 Friday

38. For what should you take effort?

To learn, to be healthy and to give in charity needs great effort.

***

November 8 Saturday

39. What should be disregarded?

Bad people, other’s wife and other’s wealth.

***

November 9 Sunday

40. What should you think of always during day and night?

You should think that there is no meaning in life and not about women.

***

November 10 Monday

41. To what should you get attached?

To mercy towards sad people and towards friendship with good people.

***

November 11 Tuesday

42. Whose soul cannot be reformed?

Bad people, doubting Thomases, people with an ever sad face and ungrateful people.

***

November 12 Wednesday

43. Who is good man?

The one with good character is a good man.

***

November 13 Thursday

44. Who is debased?

The one with bad character is a bad man.

***

November 14 Friday

45. Whom will Gods worship?

Gods will worship those who have mercy.

***

November 15 Saturday

46. Seeing which, should we be afraid?

Seeing the forest of domestic life, we should be afraid.

***

November 16 Sunday

47. Who can control all living beings?

He who tells truth, speaks pleasantly and has humility can control all beings.

***

November 17 Monday

48. For getting things that we see and things that we cannot see, where should we stand?

In the path of justice.

***

November 18 Tuesday

49. Who is blind?

The learned man who does evil acts.

***

November 19 Wednesday

50. Who is deaf?

He who cannot hear good words.

***

November 20 Thursday

51. Who is dumb?

He who cannot speak comforting words at appropriate time.

***

November 21 Friday

52. What is wisdom?

Giving without asking is wisdom.

***

November 22 Saturday

53. Who is a friend?

He who prevents us from doing sin.

***

November 23 Sunday

54. What is beautiful?

Good character is beautiful.

***

November 24 Monday

55. What are beautiful words?

Truth is the most beautiful word.

***

November 25 Tuesday

56. What is as transient as the lightning?

Company of bad people and friendship with women.

***

November 26 Wednesday

57. Who do not slip from obeying rules of the caste?

Learned people.

***

November 27 Thursday

58. What is difficult to get in this world like, chinthamani – the wish giving gem?

The good four (chathur pathram)

***

November 28 Friday

59. What is Chathur pathram (the good four) which drives away the darkness of ignorance?

1. Charity coupled with sweet words.

2. Knowledge without pride.

3. Valour with patience.

4. Wealth with sacrifice.

These four rare things are called the good four.

***

November 29 Saturday

60. What should be pitied?

Miserliness.

***

November 30 Sunday

61. What is fit to be praised when one has wealth?

Philanthropy.

–subham—

Tags- November 2025, Calendar, Adi Shankara quotes, Prasnottara Ratna Malika Hymn.

நவம்பர் 2025 காலண்டர்- ஆதிசங்கரர் மேற்கோள்கள் (Post.15,127)

Written by London Swaminathan

Post No. 15,127

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற துதியில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி- பதில் வடிவத்தில் ஆதி சங்கரர் பதில் அளிக்கிறார் . அவற்றில் மேலும் 30 பதில்களை இந்த மாத காலண்டரில் காண்போம். சென்ற அக்டோபரில் 31 மேற்கோள்களைக் கண்டோம்.

நவம்பர் பண்டிகைகள் – நவம்பர் 1 ஏகாதசி , 2 துளஸி விவாகம் , 5 குருநானக் ஜயந்தி , தேவ தீபாவளி , பெளர்ணமி தமிழ் நாட்டுக் கோவில்களில் அன்னாபிஷேகம்,  14 குழந்தைகள் தினம் , 15 ஏகாதசி, 17 சபரிமலை கோவில் திறப்பு 20 அமாவாசை,

அமாவாசை-20;   பௌர்ணமி-5;  ஏகாதசி- .1,15.

நவம்பர் முகூர்த்த தினங்கள்-10, 27, 30.

(P R Ramachandran’s translation is used from shastra.com; thanks)

நவம்பர் 1 சனிக்கிழமை

மனிதன் தவறான முடிவுக்கு என் வருகிறான் ?

அகந்தையால் கர்வத்தால்.

****

நவம்பர் 2  ஞாயிற்றுக் கிழமை

இன்பம் தருவது எது?

நல்லோருடைய நட்பு.

***

நவம்பர் 3  திங்கட் கிழமை

துக்கங்களை நீக்கும் நிபுணர் யார்?

எல்லாவற்றையும் துறந்தவனே அத்தகைய நிபுணர் .

***

நவம்பர் 4  செவ்வாய்க் கிழமை

மரணத்துக்குச் சமமானது எது?

முட்டாளாக இருப்பது

***

நவம்பர் 5  புதன் கிழமை

விலை மதிக்க முடியாதது எது?

மிகவும் தேவையான ஒன்றினை அந்த நேரத்தில் கொடுப்பது.

****

நவம்பர் 6  வியாழக் கிழமை

மரணம் வரை நமது மனத்தை உறுத்துவது என்ன?

ரகசியத்தில்l  செய்த தவறு / பாவச் செயல்

***

நவம்பர் 7  வெள்ளிக் கிழமை

எதனை அடைய பெரு முயற்சி எடுக்க வேண்டும்?

கற்பதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தர்மம் செய்யவும் பெரு முயற்சி தேவை.

***

நவம்பர் 8  சனிக்கிழமை

எதை எதை ஒதுக்க வேண்டும் ?

கெட்ட மனிதர்கள், மற்றவரின் மனைவியர், அடுத்தவர்களின் செல்வம்

***

நவம்பர் 9  ஞாயிற்றுக் கிழமை

அல்லும் பகலும் அனவரதமும் சிந்திக்க வேண்டியது என்ன?

வாழ்க்கையிலும் பெண்களிடத்திலும் பற்றுவைப்பதில் பொருளே இல்லை

***

நவம்பர் 10  திங்கட் கிழமை

எதில் பற்று தேவை?

துன்பம் அடைந்தோருக்கு கருணை காட்டு; நல்லோரின் நட்பினில் பற்று வை.

***

நவம்பர்  11 செவ்வாய்க் கிழமை

யாரைச் சீர்திருத்த முடியாது?

தீயோர், சந்தேகப்படுவோர் , எப்போதும் வாடிய முகம் உடையோர் , நன்றி மறந்தோர்.

***

யார் நல்ல மனிதன் ?

ஒழுக்கம் உள்ளவன் நல்ல மனிதன்

***

நவம்பர் 12  புதன் கிழமை

கெட்டவன் யார்?

தீய ஒழுக்கம் உடையவன்

***

நவம்பர் 13 வியாழக் கிழமை

யாரை தெய்வமே வணங்கும்?

கருணை உள்ளவனை.

***

நவம்பர் 14  வெள்ளிக் கிழமை

எதைக் கண்டு அஞ்சவேண்டும்?

இல்லற வாழ்வு என்னும் காட்டினில் நுழைய அஞ்சவேண்டும்.

***

நவம்பர் 15  சனிக்கிழமை

எல்லா உயிரினங்களையும் கட்டுப்படுத்த வல்லவன் யார்?

உண்மை விளம்பி, இனிமையாகப் பேசுபவன், பணிவுடையோன்.

****

நவம்பர் 16  ஞாயிற்றுக் கிழமை

கண்டதும் காணாததும் உள்ள இடத்தில் நாம் எங்கே நிற்கவேண்டும்?

நீதியின் பாதையில் .

***

நவம்பர் 17  திங்கட் கிழமை

யார் கண்ணிருந்தும் குருடன்?

தீய செயல்களைச் செய்யும் கற்ற மனிதன்

***

நவம்பர் 18  செவ்வாய்க் கிழமை

காதிருந்தும் செவிடன் யார்?

நல்ல சொற்களைக் கேளாதவன்

***

நவம்பர் 19 புதன் கிழமை

வாயிருந்தும் ஊமை யார் ?

உரிய தருணத்தில் ஆறுதல் தரும் சொற்களைச் சொல்லாதவன்.

***

நவம்பர் 20  வியாழக் கிழமை

எது விவேகம்?

கேளாமல் கொடுப்பது .

***

நவம்பர் 21  வெள்ளிக் கிழமை

யார் நண்பன்?

பாவச் செயல்களைச் செய்யாமல் நம்மைத் தடுப்பவன்

***

நவம்பர் 22 சனிக்கிழமை

எது அழகானது?

நன்னடத்தை

***

நவம்பர் 23  ஞாயிற்றுக் கிழமை

அழகான சொல் எது?

சத்தியம்/ உண்மை

***

நவம்பர் 24  திங்கட் கிழமை

மின்னல் போல மறைவது என்ன?

தீயோருடனும் பெண்களுடனும் உள்ள நட்பு.

***

நவம்பர் 25  செவ்வாய்க் கிழமை

ஜாதி தர்மத்திலிருந்து விலகாதவர்கள் யார் ?

கற்றறிந்த மக்கள்  .

***

நவம்பர் 26  புதன் கிழமை

விரும்பியதைக்கொடுக்கும் சிந்தாமணி போன்றது எவை?

இனிமையான சொற்களுடன் செய்யும் தர்மம்; அகந்தை இல்லாத அறிவு; பொறுமை மிக்க வீரம்; தியாகம் செய்யும் செல்வம்

***

நவம்பர் 27  வியாழக் கிழமை

பரிதப்படவேண்டிய செயல் என்ன?

கருமித்தனம் .

***

நவம்பர் 28  வெள்ளிக் கிழமை

செல்வம் உள்ளவர்களிடம் புகழத்தக்கது எது?

வாரி வழங்கும் வள்ளன்மை

***

நவம்பர் 29  சனிக்கிழமை

புத்திசாலிகள் யாரை வணங்க வேண்டும்?

இயற்கையிலேயே பணிவுடைய மனிதர்களை.

***

நவம்பர் 30  ஞாயிற்றுக் கிழமை

சூரியனைக் கண்ட தாமரை மலர்வது போல  எவரைக்கண்டவுடன் ஒரு குலமே மலரும்?

நல்ல குணமும் பணிவும் உள்ளோரைக் கண்ட குலம் தாமரை போல மலரும்

–subham–

Tags- நவம்பர் 2025 காலண்டர், ஆதிசங்கரர் மேற்கோள்கள்,

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா,

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 8 (Post.15,126)

Written by London Swaminathan

Post No. 15,126

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

(கூடுதல் தகவல்களைச் சேர்ப்பதற்காக சில தலைப்புக்கள் மீண்டும் வந்திருக்கலாம்; நூலாக வரும்போது அவை சரி செய்யப்படும்; ஆங்கில அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது)

அபய வர முத்திரை – கடவுள் அல்லது சாது சந்யாசிகள் கையை பாதுகாப்பு தருகிறேன் என்று காட்டும் சைகை; நாமிருக்க பயம் ஏன் -என்பது இதன் கருத்து

Abhaya vara mudra – gods or saints showing hand in protecting pose—why fear when I am here?  is the meaning.

***

ஆதி சேஷன் – பாம்புப் படுக்கை ; பாற்கடலில் மஹாவிஷ்ணு பள்ளி கொண்டுள்ள ஆயிரம் தலைகள் உள்ள பாம்பு ; பூமியை ஆதிசேஷன் தாங்குவதாகவும் சொல்வர்.

Adisesha -aadisesha- snake bed on which Lord Vishnu is lying; earth is on the head of this snake with 1000 heads, according to Puranas. The king of serpents also called Ananthan. Lord Vishnu is on him in yogic sleep mentioned as Arithuyil in Tamil.

***

அக்னி – தீ ; நெருப்பு; வேதத்தில் போற்றப்படும் முக்கியக்கடவுள்; தென்கிழக்கு திசையின் அதிபதி

Agni – general meaning- fire; important Vedic God;  regent of the south east quarter.

***

ஐராவதம் – இந்திரனின் யானை வாகனம் ; தென் கிழக்கு நாடுகளின் சிலைகளிலும் தபால்தலைகளிலும் நான்கு தலைகளை உள்ளதாக காட்டப்பட்டுள்ளது

Airavata – Indra’s vahana/ mount. A sacred elephant. In South East Asian countries it appears with three or four heads on stamps and statues.

***

அகில் – பெண்கள் தலை முடியை உலர்த்தவும் நறுமணம் வீசவும் பயன்படுத்தும் மரம். இதன் புகையை அவர்கள் பயன்படுத்துவர்

Akhil – a fragrant wood- eagle wood-Aquila ; its smoke is used for drying and perfuming women’s hair

***

அலக்ஷ்மி– ஜேஷ்டா தேவி; மூதேவி; லட்சுமி அருளும் செல்வத்திற்கு எதிர்ப்பதம் / தரித்திரம்

Alakshmi – Jyeshta; Moodevi in Tamil; not auspicious; opposite of Lakshmi/wealth; sister of Lakshmi/symbol of poverty

***

ஆளுடைப் பிள்ளை – திரு ஞான சம்பந்தரின் பெயர்; இளம் வயதில் அற்புதங்கள் புரிந்து சைவ சமயத்துக்குப் புத்துயிர் ஊட்டியவர்

Aludaipillai- aaludaipillai- another name of great boy saint Tiru Gnana Sambandar who revived Saivism in Tamil Nadu. Period- 640 CE.

****

அநிருத்த -மஹாவிஷ்ணுவின் நான்கு நிலைகளில் நிற்கும் வடிவம்

Aniruddha – form of standing Vishnu

***

அர்ஜுனன் – பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் ; இந்திரனின் அருளால் யாதவ இளவரசி குந்தி தேவிக்குப் பிறந்தவர் ; இதனால் இடி இடித்தால் அர்ஜுனப்பத்து என்று இவருடைய பத்து பெயர்களையும் சொல்வது வழக்கம்

அர்ஜுனப்பத்து

அர்ஜுனன், பல்குனன் (பங்குனி நக்ஷத்திரத்தில் பிறந்தவன்), பார்த்தன்,கிரீடி, ஸ்வேதவாஹனன் (வெள்ளைக் குதிரைகள் கட்டிய தேரை உடையவன்), பீபத்சு (எதிரிகளை வெறுப்படையச் செய்பவன்) , கிருட்டினன் (அஞ்ஞானத்தை அகற்றுவோன்), சவ்யசாசி, தனஞ்சயன், விஜயன் (வெற்றி வீரன்)

Arjuna – one of the five Pandava brothers born with the grace of Indra to Kunti, the Yadava princess, mother of Pandavas. Tamils used to recite Ten Names of Arjuna when thunder and lightning strike to avoid catastrophes.

Ten Name of Arjuna recited during thunderclaps

Arjuna, Falguna, Paartha, Kreeti, Svethavaahana, Peebhatsu, Krushna, Savyasaachi, Dhanajaya, Vijaya

***

அரவான் – அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தார் ; மகாபாரத யுத்தம் துவங்கும் முன் சம்பிரதாயப்படி தன்னை பலி கொடுத்தார்; இன்னும் ஒரு கருத்து இவர் எட்டாவது நாள் போரில் கொல்லப்பட்டார் என்பதாகும். இவரை அலிகள் தெய்வமாகவும் வணங்குவர்.

Aravan – son of Arjuna and Naga Princess Ulupi; he sacrificed himself before the Mahabharata war; this type of self -sacrifice is practised throughout India before any war; transgender people worship him in festivals.

***

அண்ணாமலை – சிவ பெருமானின் பெயர்; இந்தக் கோவில் உள்ள இடம் திருவண்ணாமலை ; இன்னும் ஒரு பெயர் அருணாசலம் ; பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி வடிவத்தில் இறைவன் உள்ளார் என்பது ஐதீகம்; ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் முதலிய பல பெரியோர்களின் சமாதிகள் உள்ள புனித நகரம்

Annamalai – always added with prefix- tiru; god shiva’s name. Tiruvannaamalai – famous shiva shrine in Tamil Nadu with a big shiva temple. Another name Arunachalam where Samadhis- resting place — of Ramana Maharishi, Seshadri Swamikal and many other saints are located. One of the Pancha Bhuta Shrines representing the element Fire..

***

அபஸ்மார – நடராஜர் காலடியில் உள்ள அறியாமை என்ற அசுரன் ; முயலகன்  என்றும் கூறுவார்கள். மருத்துவத்தில் வலிப்பு நோய்க்கும் இதே பெயர்

Apasmara – a demon; also name of the disease epilepsy in medical dictionaries; Ignorance is shown as Apasmara under the feet of Nataraja idols and statues in Tamil Nadu. Tamil name Muyalakan .

***

அப்பர் (600 CE) – சைவ சமயத்துக்குப் புத்துயிரூட்டிய நால்வரில் ஒருவர்; சமண மதத்துக்குச் சென்று, மீண்டும் சைவ சமயத்தைத் தழுவி தேவாரம் பாடியவர்; நால்வர் என்று அழைக்கப்படும் நால்வரில் மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் இவர் ; நால்வரில் ஏனைய மூவர் – சம்பந்தர் ,சுந்தரர், மாணிக்கவாசகர்

Appar – Great Saivite saint who was reconverted to Hinduism from Jainism; lived during the reign of Mahendra Pallava (600 CE) ; one of the four great saints called Naalvar- The Four—other three saints are  Sambandar, Sundarar, Maanikkavaasagar .

***

அஸ்வினி தேவர்கள் – வேதத்தில் அற்புதங்களை புரிந்தவர்களாகவும் மருத்துவர்களாகவும் புகழப்படும் குதிரை வீரர்கள் ; இரட்டையர்கள்; மஹாபாரதத்தில் நகுல சகாதேவர்களின் தந்தை ; நாஸத்யர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் ; சில நேரங்களில் ஒருவர் பெயர் நாஸத்யர் இன்னும் ஒருவர் பெயர் தஸ்ரா என்றும் உளது இலக்கிய வரலாற்றில் தோன்றிய முதல் இரட்டையர்

Ashvins – Asvini devas – Horse riding twins – Vedic gods- physicians of the gods. Also known as Naasatyas. Sometimes one of them is referred to as Naasatya and another as Dasra. Oldest Twins in world literature.

***

ஆவுடையார்

– சிவலிங்கத்தின் கீழுள்ள அமைப்பு. அபிஷேகம் செய்யும்போது அபிஷேக தீர்த்தம், பால்  முதலியன இதன் வழியாகக் கீழே செல்லும் வகையில் வடிகாலுடன் இருக்கும்.

Avudaiyar (Tamil word)- aavudaiyaar- pedestal of a Siva Linga

***

அவெஸ்தா

இது பார்ஸி மதத்தவர்களின் புனித நூல்

Avestaa – scripture of the Parsees (Persians who followed Zoroaster)

***

அவஸ்தா

இது மனத்தின் ஒரு நிலை ; அனுபவம்; அவை நான்கு – ஜாக்ரத – விழிப்பு நிலை ,ஸ்வப்ன -கனவு நிலை , சுசுப்தி ஆழ்ந்த உறக்க நிலை , துரீய – நாலாவது நிலை

Avasthaa– states of mind or consciousness or experience; they are four- jaagrat-waking, svapna- dreaming, susupti- deep sleep, turiiya – fourth state

***

அஷ்டாங்க யோகம்

யமம் – புலன் இன்பம் அனுபவிக்காமல் இருத்தல்;

நியம – சுய கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றுதல் ,

ஆசன- உடலினை யோகப் பயிற்சிக்காக விதிகளின்படி உடலின் உறுப்புகளை வைத்துக்கொள்ளும் முறை,

பிராணாயாம- மூச்சுப் பயிற்சி ; விதிகளின்படி சுவாசத்தை உள்ளே இழுத்தல் அடக்கி வைத்துக் கொள்ளுதல் பின்னர் வெளியிடுவதற்கான பயிற்சி ,

பிரத்யாஹார – புலனடக்கம் ,

தாரண –மனத்தை ஒருமுகப்படுத்தல் ,

தியான – ஒரே பொருள் குறித்து ஆழ்ந்த சிந்தனை,

சமாதி- தியானத்தின்  இறுதி நிலை- அப்போது பேரானந்தத்தை அனுபவித்தல்  – இன்னுமொரு பொருள் – ஒரு சந்நியாசி இறந்த பின்னர் அவரைப் புதைத்து அந்த இடத்தில் துளசி அல்லது வில்வம் அல்லது லிங்கம் வைத்து வழிபடும் இடம் .

Ashtaanaga yoga – the eight limbed yoga-

Yama-abstension or restraint.

Niyama – observance of self-discipline;

Aasana- posture.

Praanaayaama- control of breathing; breathing exercise.

Pratyaahaara – sensory control.

Dharana – concentration.

Dhyaana – deep concentration; meditation

Samaadhi- super concentration, ecstasy, final stage of meditation. Another meaning- tomb where bodies of saints are laid and worshipped. Tulsi plant or Bilva plant or Linga is placed in the place.

***

அக்ஷய பாத்திரம்

குறைவில்லாமல் தொடர்ந்து  உணவினை வழங்கும் அதிசய பாத்திரம் . இது பாண்டவர்களின் மனைவியான திரவுபதியிடம் இருந்தது. கிருஷ்ணன் இதை கொடுத்தார்.

Akshaya Patra

A mythical Food vessel which never becomes empty. Akshaya means never destroyable/indestructible. It supplied food to all the Rishis/seers who visited the Pandavas in the middle of the forest. Krishna gave it to Kunti, wife of Pandavas, with which she served food to all.

***

அலர்மேல் மங்கை

விஷ்ணுவின் பத்தினி; தாமரை மேல் அமர்ந்த அல்லது நிற்கும் லெட்சுமி.

Alarmel Mnagai

Lakshmi standing or sitting on lotus. Wife of Vishnu.

***

அக்ஷரம்

அ முதல் க்ஷ வரையுள்ள சம்ஸ்க்ருத எழுத்துக்கள்; 51 என்பது கணக்கு . இவை தேவியின் அங்கங்கள் என்பதும் நம்பிக்கை . எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா எண்களுக்கும் தெய்வீக பொருளையும் இந்துமதம் கற்பிக்கிறது எடுத்துக்காட்டு – ஒன்று என்றால் இறைவன் ஒருவன் எ  டுஎன்றால் அஷ்ட வசுக்கள்; ஒன்பது என்றால் நவக்கிரகக்ங்கள் ;11 என்றால் ஏகாதச ருத்ரர்கள்; 12 என்றால் 12 ஆதித்யர்கள் ; இவ்வாறு எல்லாவற்றுக்கும் ஒரு பொருள் வரும்; மூன்று, ஐந்து, எட்டு போன்ற எண்களை கவிஞர்கள் அடையாளமாக சங்கேதமாகப் பயன்படுத்துவார்கள்; உரைகாரர்கள்தான் நமக்கு சரியான பொருளைத் தருவார்கள்.

Akshara

In English Greek letters Alpha+Beta gave us the word alphabet. In Sanskrit A+ Ksha , that is the first letter and the last letter of Sanskrit, give us the word Akshara for alphabet. It has got 51 letters; all are attributed divine qualities. They are part of the body of the Goddess. Numbers also have sanctity in Hinduism. One means God is one. Eight-Ashta Vasus, 11- Ekadasa Rudras, 12- Adityas, Nine- Navagrahas, it goes on like this. Three, Five and Eight are used as symbols of many things. Poets say only numbers and the interpreters give us the meaning

To be continued……………………….

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, இந்துமத கலைச்சொல் அகராதி– Part 8

அற்புத மனிதர் மிஹாய் சிக்செண்ட்மிஹாய் (MIHALY CSIKSZENTMIHALYI)! (Post.15,125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,125

Date uploaded in London –   28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

MOTIVATION/CREATIVITY 

அற்புத மனிதர் மிஹாய் சிக்செண்ட்மிஹாய் (MIHALY CSIKSZENTMIHALYI)! 

ச.நாகராஜன், 

மனித வாழ்வில் மோடிவேஷன், படைப்பாற்றல், சந்தோஷம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்த ஒரு அதிசய மனிதர் ஹங்கேரிய அமெரிக்கரான , மிஹாய் சிக்செண்ட்மிஹாய்

(MIHALY CSIKSZENTMIHALYI)! (பிறப்பு: 29-9-1934 மறைவு: 20-10-2021) 

படைப்பாற்றலை வெகு காலம் ஆராய்ந்து ‘ஃப்ளோ’ என்ற படைப்பாற்றல் உத்தியை வலியுறுத்திய இவரை ‘தி அஃபாதர் ஆஃப் தி ஃப்ளோ’ (The Father of the Flow) என்று புகழ்கின்றனர்.

 இப்போது ரிஜேகா, க்ரோஷியா என்று கூறப்படும் பழைய கால இத்தாலி நக்ரான ஃப்யூமில் 1934ம் ஆண்டு பிறந்த இவர் 2021ம் ஆண்டு மரணமடையும் வரை படைப்பாற்றலை அக்கு வேறு ஆணி வேராக அலசி அது பற்றிய அறிவியல் பூர்வமான பல தகவல்களை உலகுக்கு அளித்தார்.

 அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பயின்று டாக்டர் பட்டத்தை 1960ல் இவர் பெற்றார்.

பின்னர் படைப்பாற்றலில் ஃப்ளோ என்ற கொள்கையை முன் வைத்தார்.

ஃப்ளோ தியரி என்றால் என்ன?

நாம் ஒரு முனைப்பட்ட கவனத்துடன் நிகழ்காலத்தில் இந்த தருணத்தில் இருக்கும் போது நாம் ஃப்ளோ’ நிலையில் இருக்கிறோம். ஆகவே மோடிவேட் (உணர்வூக்கம் அடைகிறோம்) செய்யப்படுகிறோம். இதன் பயனாக நமக்கு நல்ல ஒரு பரிசு கிடைக்கிறது.

ஃப்ளோ நிலைக்கு எப்படிச் செல்வது? 

எதிர்நோக்கி இருக்கும் சவால்களுக்கும் செயல்திட்ட வாய்ப்புகளுக்கும் சரியாக திறமைகள் சிறிதளவேனும் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நமது குறிக்கோள்கள் (லட்சியங்கள்) குறுகிய காலத்தில் அடையக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது சரியாக வரையறுக்கப்பட வேண்டும். முழுத்தகவல்களுடனும் இருக்க வேண்டும்.

தொடர்ந்த முன்னேற்றத்திற்கு ஏதுவாக அவ்வப்பொழுது பின்னூட்டம் (Feedback) பெறப்பட வேண்டும்.

 ஒருமுக கவனிப்பு தீவிரமாக இருத்தல் வேண்டும். 

செயலும் நமது விழிப்புணர்வும் ஒன்றாக இணைய வேண்டும், 

காலமானது வேறுபடும் ஒன்று. திடீரென்று ஒரு நிமிடத்தில் எல்லாம் கிடைத்தது போல இருக்கும்.

அனுபவங்களுக்குத் தக்க பெரும் பரிசுகள் கிடைக்கும். செய்யப்பட்ட முயற்சி சரிதான் என்பது தெரியவரும். 

எதிரே இருக்கும் சவாலுக்கும் நமக்குள்ள திறமைக்கும் உள்ள சமநிலை வளர்ச்சியைப் பற்றி நன்கு தீர்மானித்து அதை அடைய வேண்டும்.

கீழ்க்கண்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம். 

இந்தச் செயலால் எனக்கு என்ன முன்னேற்றம் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்?

இந்தச் செயலைச் செய்யும் போது அது பிரமாதமாக செய்யப்படும் என்பதை எப்படி நான் அறிவேன்?

இப்போது எனக்கு இருக்கும் திறமைகளின் படி இந்தச் செயல் எப்படிப்பட்ட சவால் கொண்டதாக இருக்கும்?

 இப்படி யோசித்து நமது செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டால்

“ஃப்ளோ” என்ற மனோ ஒட்டம் என்ற நிலையை அடைவோம்.

 பிறகென்ன வெற்றி தான்! 

இதைப் பற்றி விரிவாக மிஹாய் சிக்செண்ட்மிஹாய் யூடியூபில் ‘FLOW, THE SECRED TO HAPPINESS’ என்று நிகழ்த்திய உரை கூட இருக்கிறது, காணொளியாகக் காண!லாம்!

பிறகென்ன, வெற்றி நம் கையில்!

**

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)


Written by London Swaminathan

Post No. 15,124

Date uploaded in London –  27 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் (GEM STONES) ரத்தினைக் கற்களை முந்தைய கட்டுரையில் கண்டோம் ; ஹயக்ரீவர் இதை அகஸ்தியருக்கு உபதேசித்தபோது புண்ணிய நாகரங்களின் பெயர்களையும் (HOLY CITIES) சேர்த்துள்ளார். தேவியின் நாமங்களை மக்கள் தங்களுடைய நகரங்களுக்கு, குறிப்பாக மன்னர்கள், சூட்டிக்கொண்டார்கள் என்பதே சரியான கருத்தாகும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீவிஜயம் என்ற நாமத்தைச் சூட்டிக்கொண்ட  தென் கிழக்கு ஆசிய  நாகரீகம்  நீண்ட காலத்துக்கு கொடி கட்டிப் பறந்தது. அதைப்  போல ஆதிசங்கரரும் ஹயக்ரீவரும்   பெயர் சூட்டிய ஸ்ரீநகர் இன்றுவரை காஷ்மீரின் கவர்ச்சிமிகு தலைநகராக இருந்து வருகிறது.

முதலில் எல்லா நகரங்களின் பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரி ஸ்லோகத்தை எடுத்துக்கொள்வோம்.

விஶாலா கல்யாணீ ஸ்புடருசிரயோத்யா குவலயை:

க்ருபாதாராதாரா கிமபி மதுராபோகவதிகா ।

அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகரவிஸ்தாரவிஜயா

த்ருவம் தத்தன்னாமவ்யவஹரணயோக்யா விஜயதே ॥ 49 ॥

தேவியின்  கண்கள் அகன்று இருப்பதால் – விசாலா ;

கல்யாணங்களை நடக்கச் செய்வதால் கல்யாணி ;

குவளை மலர்களாலும் வெல்லமுடியாத அழகுடையவள் என்பதால் அயோத்யா ;மழை போல் கருணை பொழிவதால் தாரா ;

இனிமையானவள் என்பதால் மதுரா;

போகத்தைத் தரும் பார்வையுடன் சிவனை நோக்குபவள் அல்லது

அபோகவதீ =நீண்ட பார்வை / நெடுநோக்குள்ளவள்  போகவதீ;

காக்கும் சக்தி உடையவள்  அவந்தீ ;

வெற்றியைத் தருபவள் விஜயா;

विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः

कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका।

अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया

ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते॥

viśālā kalyāṇī sphuṭarucirayodhyā kuvalayaiḥ

kṛpādhārādhārā kimapi madhurābhogavatikā |

avantī dṛṣṭiste bahunagaravistāravijayā

dhruvaṁ tattannāmavyavaharaṇayogyā vijayate ||

Meaning:-“All glories to Thy eyes which are wide (vishaalaa); auspicious (kalyaani) because of being brilliantly clear; undefeated (ayodhyaa) even by blue lillies; shedding a continuous flow of grace (kripaadhaaraa-dhaaraa); subtly sweet (madhura); long (abhogavathi); and offering protection to the world (avanthee). Surpassing all these great cities in their uniqueness, Thy glance is fit to be reffered to by the respective appellations.”

முதலில் ஆதிசங்கரரின் வியத்தகு பூகோள அறிவினை மெச்ச  வேண்டும் . எட்டு நகரங்களின் பெயர்களின் வாயிலாக தேவியின் அபூர்வ குணங்களை நமக்கு எடுத்துரைக்கிறார் . அயோத்தி, காசி முதல் விஜயவாடா வரை நமக்கு புவியியலையும் கற்பிக்கிறார் அப்படிப்பட்ட அறிவியல் நோக்கு இருந்ததால்தான் நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு சங்கர மடங்களை நிறுவினார்; காலடியில் துவங்கி  காஷ்மீர்  வரை கால் நடையாகவே சென்று நாட்டினை வலம் வந்தார்

எந்த அசட்டுப்பிச்சுக்களாவது வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டினை ஒற்றுமைப்படுத்தினான் என்று சொன்னால் புறநாநூற்றின் இரண்டாவது பாடலையும் இந்த ஸ்லோகத்தையும் அவர்கள் முகத்தில் வீசலாம்; இமயம் முதல் பொதியம் வரை என்று பாடினார் மிஸ்டர் நாகராஜன் புறநானூற்றில்! அதாவது முடிநகராயர்! இங்கு சங்கரர் அயோத்தியில் துவங்கி விஜயவாடா வரை வந்து விட்டார் என்பது எனதுரையாகும்.

போகவதி என்ற நகரம் நாகலோகத்தில் உள்ள நாகர்களின் தலை  நகரம் ; நல்ல அனுபவம் மிக்க பெண் என்பதால் பெண்களின் பெயர்களாகக் கதைப்புஸ்தகங்களில் காண்கிறோம்.

கல்யாணி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம் ;

மதுரா என்பது கிருஸ்ணன் பிறந்த பூமி; மதுரை மீனாட்சி அம்மனின் நகரம் என்றும் சொல்லலாம்

தாரா DHARA வில் ஒரு மசூதிக்குள் சரஸ்வதி கோவிலும் சித்திரக் கல்வெட்டும் உள்ளது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான உரையாற்றியுள்ளார்

ராமர் பிறந்த அயோத்தியின் பெருமை இப்போது உலகெங்கும் பரவிவிட்டது கோடிக்கணக்கானோர் அந்த ராமர் கோவிலுக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.

விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர்

காசியில் உள்ள விசாலாக்ஷி சமேத விஸ்வநாதரைத் தரிசிக்க ஆயிரக்கக்கான ஆண்டுகளாக இந்துக்கள் காசி யாத்திரை சென்று வருகின்றனர்

இதற்கு ஆதரவான சில நாமங்களை சஹஸ்ரநாமத்தில் காண்போம். லலிதா சகஸ்ரம் நாமத்தில் உள்ள  எல்லா  பெயர்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.

இதில் டாக்கீஸ்வரி கோவில் உள்ள பங்களாதேஷ் தலைநகரம் டாக்கா வருகிறது

பஞ்சாபில் உள்ள ஜலந்தரும் வருகிறது

ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகரும் வருகிறது

சண்டிகர் என்ற நாமத்தில் சண்டியைக் காணலாம்; சிம்லா  என்ற ஹிமாசலப்பிரதேச தலை நகர் சியாமளா என்பதன் மருவு ஆகும்.

கல்கத்தா என்பது காளிகாட் என்பதிலிருந்து வந்ததை நாம் அறிவோம்

மும்பை என்பது மும்பாயி தேவி பெயர்; சென்னை என்பது சென்னம்மா தேவியின் பெயர் காமரூபம் என்னும் அஸ்ஸாம் காமாக்யா தேவி கோவில்கொண்ட இடம் ; கன்னியாகுமரியின் பெயரிலேயே பகவதி உறைகிறாள் காஸ்மீர் முதல் கன்யாகுமரிவரை தேவியின் பூமி என்று சொன்னாலும் மிகை ஆகாது ; இதோ உங்கள் பார்வைக்கு சில நாமங்கள்-

கல்யாணீ – நாமத்தின் எண் 324; காமகோடிகா / காஞ்சி – 589; சண்டிகா-755டாகினீஸ்வரி – டாக்கா -484; துர்கா /துர்காபூர் – 190; திரிபுரா -626; பவானி-112; பாபநாசிநீ-பாபநாசம் – 167;  புவனேஸ்வரீ – புவனேஸ்வர் -294; புஷ்காரா – புஷ்கர் -804; மஹாகாளி – காளிகாட்-கல்கத்தா – 751; மாயா /ஹரித்வார் – 716; விஜயா / விஜயவாடா – 346; வைஷ்ணவீ ; வைஷ்ணவிதேவீ- 892; ஜயா  – ஜெயப்பூர் – 377; ஜாலந்தர ஸ்திதா -ஜலந்தர்– 378;ஸ்ரீ என்ற எழுத்துடன் துவங்கும் 12 பெயர்கள் அம்மனுக்கு உள்ளது ; இதன் தமிழ் வடிவம் திரு என்பதாகும் ; ஆகவே ஸ்ரீநகர் முதல் திருநகர் வரை உள்ள எல்லா ஊர்ப்பெயர்களையும் அம்பாளின் நகரங்களாகவே சொல்லலாம் .

–சுபம்—

Tags- லலிதா சஹஸ்ரநாமத்தில், புண்ணிய நகரங்கள் , ஆதி சங்கரரின், செளந்தர்ய லஹரி

GNANAMAYAM 26th October 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 GMT

Indian Time 5-30 pm (evening)

*****

nithya sowmy

GNANAMAYAM 26th October 2025

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer –

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

ALAYAM ARIVOM TALK ON

KATHIRKAMAM TEMPLE IN SRI LANKA

****

***

SPECIAL EVENT-

Significance of Famous Singer P Susila’s Devotional Songs -Presentation

By

Ms.Nithya Sowmy, London

(Active Social Worker, Producing Programs for Tamil and South Indian Organizations in Britain)

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 26 October 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் 

via Zoom, Facebook and You Tube at the same time.

***

இறைவணக்கம் —

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்,

லதா யோகேஷ் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —

சொற்பொழிவு– தலைப்பு  இலங்கை கதிர்காமம் முருகன் கோவில்,

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பிரபல பாடகி பி.சுசீலாவின் பக்தி கீதங்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி

பக்தி கீதங்களின் சிறப்பினை விளக்கிப் பேசுபவர்

லண்டன் நித்யா ஸெளமி ,

(சமூக ஆர்வலர்தமிழ்தென் இந்திய சங்கங்களில் தீவிர ஈடுபாடும் பங்களிப்பும் வழங்குபவர் )

—subham—

Tags-Gnanamayam Broadcast, 26-10- 2025, programme,

ஞானமயம் வழங்கும் (26 10 2025) உலக இந்து செய்திமடல் (Post.15123)

Written by London Swaminathan

Post No. 15,123

Date uploaded in London –  27 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துலதா யோகேஷு  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 26-ம் தேதி 2025-ம் ஆண்டு

****

முதலில் கேரள மாநிலச் செய்திகள்

guruvayur temple

சபரிமலையில் ஜனாதிபதி முர்மு தரிசனம்: இருமுடி சுமந்து 18 படியேறி வழிபாடு 

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இருமுடி சுமந்து சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்.சபரிமலை அய்யப்பன் கோவில், ஐப்பசி மாத பூஜையையொட்டி, கடந்த 17ல் திறக்கப்பட்டது. கடைசி நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு சென்றார். 

கார் மூலம் பம்பை நதிக்கரையை அடைந்த ஜனாதிபதி முர்மு, பாரம்பரிய முறைப்படி நதியில் இறங்கி கால்களை மட்டும் நனைத்து வழிபாடு செய்தார்.

அய்யப்ப பக்தர்கள் போல, ஜனாதிபதி முர்முவும், கழுத்தில் மணி மாலை அணிந்து, கருப்பு ஆடை உடுத்தி, பம்பையில் இருமுடி கட்டிக் கொண்டு, கன்னிசாமியாக தன் முதல் சபரிமலை யாத்திரையை துவங்கினார்.

கன்னிமூல கணபதி கோவில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி, குருசாமியாக இருந்து, இருமுடியை கட்டி, ஜனாதிபதி முர்முவை மலையேற அனுப்பி வைத்தார்.

 இதைத் தொடர்ந்து, சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானத்தை அடைந்த ஜனாதிபதி முர்மு, இருமுடியை சுமந்தபடி பதினெட்டு படியேறி, கொடி மரம் அருகே வந்தார். அப்போது கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து அவரை வரவேற்றனர்.பின், கொடிமரம் அருகே உள்ள வாசல் வழியாக சென்று சுவாமி அய்யப்பனை பக்தியுடன் வழிபட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்தார்.பாதுகாவலர்களும் இருமுடி சுமந்து வந்து இருந்தனர். பின்னர் அவர்களது இருமுடிகள் பிரிக்கப்பட்டு, அதில் இருந்த நெய் தேங்காய்களை உடைத்து, சுவாமி அய்யப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மலையில் உள்ள மாளிகைபுறத்தம்மன், கொச்சு கடுத்த சுவாமி, மணி மண்டபம், நவக்கிரக கோவில்களிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்தார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி, சபரிமலை முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு, இரு நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து சென்று வழிபாடு நடத்திய முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை முர்மு பெற்றார்.

*****

குருவாயூர் கோவில் தங்கம் மாயம் 

குருவாயூர் கோவிலில் தங்கம், வெள்ளி பொருட்கள்… மாயம்!; 40 ஆண்டுகளாக கணக்கு பார்க்கவில்லை என குற்றச்சாட்டு

கேரள மாநிலம், சபரிமலையில் துவாரபாலகர் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலிலும் தங்கம், வெள்ளி, யானை தந்தம், குங்குமப்பூ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சபரிமலையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருவது போல, குருவாயூர் கோவிலை குருவாயூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.

 தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் குங்குமப்பூ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கோவிலின் கருவூலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கை மூலம் சந்தேகம் எழுந்துள்ளது.

 பக்தர்கள் காணிக்கை மூலம் கோவிலுக்கு வந்த விலை உயர்ந்த பொருட்களை நேரடியாக மதிப்பிடும் பணி கடந்த 40 ஆண்டுகளாக நடக்கவே இல்லை என, சமீபத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகம் இது குறித்து மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 கோவிலுக்கு, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட காணிக்கைகளுக்கு முறைப்படி எந்த ரசீதும் எழுதி தரப்படவில்லை. குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக நிறைய யானைகள் இருக்கும் நிலையில், அவற்றின் தந்தங்கள் குறித்து போதிய அளவுக்கு பதிவு செய்யவில்லை. யானை தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா என்பதற்கான சான்றுகளும் போதிய அளவுக்கு இல்லை.

  குங்குமப்பூ போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ஒரு லட்சத்து 47,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை, கிலோ கணக்கில் காணிக்கையாக பக்தர்கள் தினசரி செலுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், குங்கும பூவுக்கான கணக்கு தெளிவாக இல்லை. 

குருவாயூருக்கு வரும் பக்தர்கள் பாரம்பரியமாக குன்றிமணியையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அப்படி பக்தர்கள் வாயிலாக வந்த குன்றிமணிகள், 17 மூட்டைகளில் கட்டி கோவிலின் மேற்கு கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 முதல் அந்த மூட்டைகள் மாயமாகியுள்ளன.

தினசரி பூஜைகளுக்காக பயன்படுத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் விபரங்களை ஆராய்ந்ததிலும், அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பூஜைக்கு பின் ஒப்படைக்கப்பட்ட பல பொருட்களின் எடை கணிசமான அளவுக்கு குறைந்து இருக்கிறது. ஒரு வெள்ளி பானையின் எடை மட்டும், 10 மாதங்களில் 1.19 கிலோ குறைந்துள்ளது. மற்றொரு வெள்ளி விளக்கின் எடையும் சில நுாறு கிராம் அளவுக்கு குறைந்துள்ளது.

தங்க கீரிடத்திற்கு பதிலாக வெள்ளி ஆபரணம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்திற்கு பதிலாக வெறும் 750 கிராம் எடை கொண்ட வெள்ளி பாத்திரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.

 sabarimalai temple

*************

கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப அறநிலைய துறைக்கு உத்தரவு

கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, மாநிலம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என, அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, பெரும்பாலான சொத்துக்கள், பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டவை. பார்க் டவுன் நைனியப்பா நாயக்கன் தெரு, சவுகார்பேட்டை அன்ன பிள்ளை தெரு, பெரியமேடு கற்பூர முதலி தெரு போன்றவற்றில், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இங்குள்ள கட்டடங்களை இடித்து விட்டு, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணியை, அறநிலைய துறை துவக்கி உள்ளது.

அதுவும் முத்துகுமார சாமி கோவிலின் நிதியை வைத்து, வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. கோவில் நிதியில், வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை அறிந்தும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டும் பணியை, அறநிலைய துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட், 4ல், இது தொடர்பாக அளித்த மனுவுக்கு, அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை. இருப்பினும், வணிக வளாகங்கள் பணிக்கு கோவில் நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை தொடரலாம். அதேசமயம், அந்த கட்டுமானங்களை, அறநிலைய துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இந்த மனுவுக்கு, நவ., 21ம் தேதிக்குள், தமிழக அரசு, அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.

மேலும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு, அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கோவில் நிதியில் வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

***

அழகர்கோவிலில் மேம்பாட்டு பணிக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் மேம்பாட்டு பணியை ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மேலுார் வெள்ளரிப்பட்டி பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு:

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.40 கோடியில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கடைகள், பக்தர்கள் தங்கும் விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணியை மேற்கொள்ள தமிழக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் கோயில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பணியை கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபோல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். ஆக.,28 ல் இரு நீதிபதிகள் அமர்வு, ‘கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டது. நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒட்டுமொத்த கட்டுமான பணியையும் நிறுத்தி வைக்க வேண்டும். கோயில் அறங்காவலர்கள் குழு பதிலளிக்கும் வகையில் அவர்களை எதிர்மனுதாரராக இந்நீதிமன்றம் சேர்த்துக் கொள்கிறது. விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

***

திருச்செந்துார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை என்ன; உயர்நீதிமன்றம் கேள்வி

குருவாயூர், திருப்பதி கோயில்களில் உள்ளதுபோல் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரும்பு மேம்பாலம் அமைத்து பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது

***.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை முறையாக மீட்டு பராமரிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் உத்தரவிடக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.இதுகுறித்த விசாரணையில், கூடுதல் ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, மண்டபம் அருகே அடுப்பு வைத்து பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மாற்று வழி குறித்து கோயில் இணை ஆணையர் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

****

திருவாசகம் பாட கட்டணம் வசூல்திராவிட மாடலின் ஜிஸ்யா வரி

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில், திருவாசகம் பாட, கட்டணம் செலுத்த வேண்டும் என, வலியுறுத்தியதற்கு, ஹிந்து தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், கடந்த 25 ஆண்டுகளாக, சிவ பக்தர்கள், கயிலை கிருஷ்ணன் தலைமையில், திருவாசகம் முற்றோதல் பாடி வருகின்றனர். இக்கோவிலின் செயல் அலுவலர் பொன்னி, ‘தன் அனுமதி இல்லாமல், எதுவும் நடக்கக் கூடாது’ என, கோவில் உரிமையாளர் போல் நடந்து கொள்கிறார். ஹிந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கு முரணாக, அதிகார மமதையில், சிவனடியார்களை அவர் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. திருவாசக முற்றோதல் பாட கோவிலில் அனுமதி வாங்க வேண்டும்; நன்கொடை என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அடாவடியான செயல்.

கோவில் உபரிநிதியில், ‘தேவாரம் பரப்ப வேண்டும்’ என்பது சட்டம். ஆனால், கோவிலில் திருவாசகம் முற்றோதல் செய்வதற்கே, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, திராவிட மாடலின் ஜிஸ்யா வரி விதிப்பு.

சிவனடியார்களை, அவமரியாதையாக பேசிய கோவில் செயல் அலுவலர் மீது அறநிலையத்துறை கமிஷனர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனல், காசிவிஸ்வநார் கோவிலில், இந்து தமிழர் கட்சி சார்பில், மிகப் பெரிய திருவாசக முற்றோதல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

********

குளிர்காலம் தொடங்கியது ;கேதார்நாத் கோயில் மூடப்பட்டது!

குளிர்காலம் தொடங்கியதை அடுத்து கேதார்நாத் கோயில் நடை  மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் 4 புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வருவார்கள்.   கடந்த மே 2ஆம் தேதி கேதர்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது; .நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்தனர். 

கோயில் நடை மூடப்படுவதையொட்டி, கேதார்நாத் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது..

***

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷு  வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 26-10-2025, Gnanamayam, Broadcast

கதிர்காமம் !ஆலயம் அறிவோம்!! (Post No.15,122)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,122

Date uploaded in London –   27 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் நிகழ்ச்சியில் 26-10-2025 அன்று ஒளிபரப்பான உரை.

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்! வழங்குவது சந்தானம் நாகராஜன்

எதிரி லாத பத்தி …… தனைமேவி

     இனிய தாள்நி னைப்பை …… யிருபோதும்

இதய வாரி திக்கு …… ளுறவாகி

     எனது ளேசி றக்க …… அருள்வாயே

கதிர காம வெற்பி …… லுறைவோனே

     கனக மேரு வொத்த …… புயவீரா

மதுர வாணி யுற்ற …… கழலோனே

     வழுதி கூனி மிர்த்த …… பெருமாளே.

                           அருணகிரிநாதர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது இலங்கையில் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் தலமான கதிர்காமம்  ஆகும்.

 இத்தலம் கொழும்பு நகரிலிருந்து 232 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இது மிகவும் புகழ் பெற்ற பாத யாத்திரை தலமாகும்.

ஏமகூடம், பூலோக கந்தபுரி, வரபுரி, பிரமசித்தி, கதிரை எனப் பல்வேறு பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது.

அதே போல இங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கும் கதிர்காமன், சிங்காரவேலன், கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க ஸ்வாமி உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.

இங்கு அழகிய மாணிக்க கங்கை நதி ஓடுகிறது.

இத்தலத்தைப் பற்றிய பரம்பரை வரலாறு ஒன்று உண்டு.

சூரபத்மனை வதம் செய்யும் நோக்கில், முருகப் பெருமான் மாணிக்க கங்கை அருகே பாசறை அமைத்து வீற்றிருந்தார் என்கிறது புராண வரலாறு.

இத்தலத்திற்கு ஏற்பட்ட பெயருக்கான காரணமும் ஒன்று உண்டு.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறியாக- அதாவது கதிராக -சரவணப் பொய்கையில் முருகப் பெருமான அழகான முகத்தில் -அதாவது காமன் – தோன்றியதால் இந்தத் தலத்திற்கு கதிர்காமம் என்ற பெயரும் முருகனுக்கும் கதிர்காமன் என்ற பெயரும் அமைந்தது.

ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காமக் கந்தன் காட்சி அளிக்கிறான். அவன் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்தான். இதன் ஞாபகார்த்தமாக இங்கு வள்ளி பிராட்டியின் கோவில் கட்டப்பட்டது.

சுமார் முக்கால் ஏக்கர் பரப்பில் உள்ள கோவிலின் சுற்றுமதில் ஆறு அடி உயரத்தில் உள்ளது. கோவில் சதுர வடிவில் உள்ளது. கோவில் வீதியில் சிறிய கோவில்கள் உள்ளன. கணபதிக்கும், தெய்வானைக்கும் தனிக் கோவில்கள் உள்ளன.

பிள்ளையாருக்கு அருகில் உள்ள அரசமரம் விஷ்ணுவுக்கும் புத்த பெருமானுக்கும் புனிதமானது.

கோவிலுக்கு இரு வாயில்கள் உள்ளன. தெற்கே அமைந்துள்ள பிரதான வாயில் வில் போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தில் சிறிய கதவு ஒன்று உண்டு.

கோவிலின் எதிரே வள்ளியம்மையின் கோவில் அமைந்துள்ளது.

கோவிலின் கர்பக்ருஹ அறை விசேஷமான ஒன்று. இதற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் இது மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதில் காற்றோ, வெளிச்சமோ உட்புக முடியாதபடி சாளரமோ துவாரங்களோ இல்லை. இந்த கர்பக்ருஹத்திற்கு மத்திய அறைக்கும் இடையே ஒரு சிறிய கதவு மட்டும் உண்டு. இங்கு அர்ச்சகர் மட்டும் உள்ளே செல்வார்.

பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மத்திய அறை வரைக்கும் சென்று செலுத்தலாம்.

கதிர்காம விழாக்கள் மிகவும் சிறப்பானவை; பிரபலமானவை. வருடாந்திரப் பெருவிழாவின் போது தாமிரத்திலோ அல்லது தங்கத்திலோ அமைந்துள்ள மந்திர சக்தி வாய்ந்த யந்திரத்தை வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலமாக வரும்.

இந்த விழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். குறிப்பிட்ட நல்ல நாளனறு கந்தன் நீராடுவான். மாணிக்கை கங்கை ஆற்றில் பூஜையில் வைக்கப்பட்ட வாளினால் வட்டமிட்டுத் தண்ணீரை வெட்டுவான்.

இதே போல இங்கு ஆடி அமாவாசைத் திருவிழாவும் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. ஆடித் திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி பௌர்ணமி முடிய நடைபெறும். கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாளும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படும்.

முருகனின் ஆணையின் பேரில் அருணகிரிநாதர் அற்புதமான திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் நமக்கு இன்று பதிமூன்று பாடல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை-கதிர்காமத்தில் கோயில் கொண்டிருக்கும் வேலவன் மீது 30 பாடல்களில் பாடப்பெற்றுள்ளதே கதிர்காம மாலை ஆகும். இதில் முருகப்பெருமானது சிறப்புக்கள் பற்றியும் கோயிற் சிறப்புக்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.

இலங்கையில் புத்த பிரான் விஜயம் செய்த 16 இடங்களில் சிறப்பான ஒரு இடமாக இது கருதப்படுவதால் புத்த மதத்தினருக்கும் இது சிறப்பான வழிபாட்டுத் தலமாக அமைகிறது.

இங்கு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மாமன்னனின் மகளான சங்கமித்ரை புனிதமான இரு வெள்ளரசுக் கன்றுகளில் ஒன்றை அனுராதபுரத்தில் நட்டு விட்டு பிறகு இங்கு மற்றொரு கன்றை நட்டார்

2500 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஏராளமான மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

மணிதரளம் வீசி யணியருவி சூழ  மருவு கதிர்காமப் பெருமாள் காண்!

மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி சூழ்ந்து விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான் என்று இப்படி அருணகிரிநாதர் போற்றிப் புகழ்வதால் பண்டைய காலத்தில் காட்டின் நடுவே அமைந்துள்ள இந்தக் கோவிலின் வனப்பையும் பெருமையையும் நன்கு அறிய முடிகிறது.

பக்தர்கள் தீமிதித்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வகையாலும் தங்கள் பக்தியையும் சிரத்தையையும் காண்பித்து முருகனின் அருளை இத்தலத்தில் பெறுகின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கதிர்காம முருகன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

**

 28-20-2025 அன்று இத்தலத்தில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி வைபவம் நான்கு மணி நேரம் சிறப்பு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கண்டு களிக்கலாம்

.—subham—

DECCAN CHRONICLE CARTOONS UPTO 26-10-2025

 BEST CARTOONS COME FROM DECCAN CHRONICLE NEWSPAPER.

DECCAN CHRONICLE CARTOONS UPTO 26-10-2025

–SUBHAM–

TAGS- CARTOONS, DECCAN CHRONICLE, 26-10-25

Tamil is not Mother, but Sister of Kannada and Telugu? – Part 27 (Post No.15,121)

Replica of Halmidi Inscription

Halmidi Kannada Inscription 450 CE

Ancient Tamil Encyclopaedia -Part 27; One Thousand Interesting Facts -Part 27 (Post No.15,121)

Written by London Swaminathan

Post No. 15,121

Date uploaded in London –  26 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

164

Tamil is not Mother, but only Sister of Kannada and Telugu! தமிழ் மொழி – தாய் அல்ல , சகோதரியே!

Let us continue with Maamuular (MM) in Akananuru………..

In Akam 197, MM gives us a beautiful simile of a worn-out pillow. A housewife’s voluptuous shoulders became skeleton like an old worn out pillow in our bed, because her lover/husband did not return on time. He also gave us one more simile when he compared an elephant calf playing on its mother with a child playing/rolling on its mother. In this verse, we get a historical reference to Ezini, a chieftain.

***

165

In Akam 211, he says illiterate (uneducated) Ezini; also MM used his favourite cliché மொழிபெயர் தேயம் Mozipeyar Theyam in Tamil which means lands where many languages spoken or a Non Tamil land. From this we know about ancient India which is described as 56 desams in Sanskrit literature and old story books. Even a story telling grandma in Tamil Nadu says to her grandchildren that “all the kings of 56 Desams came to…….

***

Thanjavur Brihadeeswara temple

Tiruvalankadu Copper Plates

(These three images are taken from an article by Sunitha Madhavan in Hinduism Today.)

166

Tamil language a Mother or a Sister of Telugu and Kannada?

Now and then politicians say something about the relationship between Tamil and other languages. Apart from political controversy, one must look at how many Tamil words are in Telugu and Kannada. Even old Tamil dictionaries and Nikandus (thesauruses) have MORE Sanskrit words than pure Tamil words. The reason is ancient scholars considered these languages as sisters.

In the recent years, many Kannada and Telugu inscriptions have been discovered and reported in newspapers. The big difference between ancient Tamil and Non-Tamil inscriptions is that they are longer than ancient Tamil inscriptions. Tamil Nadu is the less affected state in foreign invasions. Why didn’t we find longer inscriptions in Tamil? Even the longest old inscription found at Poolankurichi belongs to fifth century CE only. Another point to be noted is that ancient Tamil Brahmi inscriptions have Prakrit and Sanskrit words.

No one has done any research on the proportion of Sanskrit words in these South Indian inscriptions. Inscriptions from the same period in Tamil, Telugu and Kannada should be taken for research. Tamil may not be the Mother of Kannada and Telugu, but may be the Sister of these Languages. This argument can be settled only after finding the proportion of language wise words.

***

முகபடாம் , தழை உடை, கொற்கை பூலாங்குறிச்சி தமிழ், தெலுங்கு ,கன்னட கல்வெட்டுகள் , பழையர் , கடல் தெய்வம் , கொற்கை, எழினி , மொழிபெயர்த்தேயாம் , முத்து, வலம்புரி, பெருஞ்சோறு, கூளிச் சுற்றம் (Ghouls)

167

Worship of Sea God

In Akam 201, MM gives us very important news about worship of Sea God. In the oldest book Tolkaappiam, Vedic God Varunan is shown as one of the Gods Tamils worshiped. Commentator of this poem confirms it. The words Sea God is not in the poem. Ancient commentators interpret it on the basis of Tolkappiam. Pazaiyar, the coastal people wore garments made up of plants and leaves. Even today we see such leafy garments in Hawaii (USA) tourist pictures. Another interesting point is that the women worshipped Sea God with pearls and Right Whorled Conches.

Historical references in the verse: Korkai port (Kapata Puram?), Pazaiyar- sea people, Pandya King, Chozas and their Paddy Fields

Wealth of the Country: The elephants have golden Mukhapataam , that is the ornamental cloth or metal plate that is covering the head and trunk of an elephant.

MM adds the picture of a happy bear family in the forest . the hidden meaning is that your lover will hurry back when he sees the male and female bears playing with one another

201 அம்ம, வாழி – தோழி – பொன்னின்
அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, 5
தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித்துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே: அன்னையும் 10
பொருந்தா கண்ணள். வெய்ய உயிர்க்கும்’ என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைகுநர் அல்லர்- முனா அது
வான்புகு தலைய குன்றத்து கவாஅன், 15
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத்
தோல்முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

***

168

Akam 233 gives us information about Perunchoru. This word Perunchoru means Big Cooked rice, that is, big balls of cooked rice are offered to the departed souls who are in the heaven, by the Chera king Uthiyan Cheral.

The word Perunchoru occurs in Purananuru verse 2 as well, composed by Mudi Nagarayar (Mr Nagaraja or Mr Shiva who has snake /Naga on his head). There the previous lines refer to the fight between the Kauravas and Pandavas in the Mahabharata war. The commentators say that King Uthiyancheral supplied food for both the warring factions without any partiality.

I think this is wrong. How is it possible for Uthiyan cheral to live 3000 years before the Sangam age? So, the real meaning is, Uthiyan cheral offered balls of rice for the dead in Mahabharat battle. He did not take sides, so he offered Big Rice Balls for both the factions. Maamuulanar makes it very clear in Akam verse. Moreover, such Big Balls are taken by the Spirit/ Ghosts/Ghouls, he adds

The word in the Akam verse is Kooli where from Ghouls is derived . In Madurai Chellaththamman temple, every year on a particular night, ballas of rice mixed with animal blood will be thrown upwards/in the sky. The Madurai Corportaiion Council used to switch off the street lights for this event. I lived very near by this place. We were tod that the balls of rice thrown into the sky wont fall on the ground. Whatever may be the truth, offering balls of rice is a custom associated with dead people or their spirits. Brahmins do this in funeral rites but with small balls of rice called Pindam. The word Pindam is also in Sangam literature in this connection.

In short Perunchoru (big Cooked Rice) is a funeral rite.

In Akam verse Swarga is translated as Thurakkam


233 அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின்
அலர்முலை நனைய, அழாஅல்- தோழி!-
எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலப்
பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தென,
ஊனில் யானை உயங்கும் வேனில், 5
மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணியஉதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றைஇரும்பல்
கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்கு10
குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
சுரன்இறந்து அகன்றனர் ஆயினும், மிகநனி
மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅ,
பொருள்வயின் நீடலோ இலர் – நின்
இருள்ஐங் கூந்தல் இன்துயில் மறந்தே! -Akam 233

Tags- தமிழ் மொழி – தாய் அல்ல, சகோதரியே, Ancient Tamil 27; One Thousand Interesting Facts -Part 27 Encyclopaedia -Part, பெருஞ்சோறு, கூளிச் சுற்றம் (Ghouls)