Post No. 15,140
Date uploaded in London – 1 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அப்பர் என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய ஆறாம் திருமுறையில் நவரத்தினச் செய்திகள் நிறைய உள்ளன . சிவபெருமானை போற்றித் துதிக்கையில் முத்தே, பவளமே , மரகதமே, மாணிக்கமே, வைரமே! என்று துதி பாடுகிறார் . அது மட்டுமல்ல வைரத் தூண் வரை சென்று விடுகிறார் . நாம் எல்லோரும் வேலூர் அருகிலுள்ள ஸ்ரீபுரம் கோவிலில் தங்கத் தூண்களை பார்க்கும் போதே கண்கொட்டாமல் வியந்து பார்க்கிறோம். அப்பர் சுவாமிகளோ மனக் கண் முன்னால் வைரத்தூண்களையே கண்டார் . இவை எதைக் காட்டுகின்றன ? நவரத்தினங்களை அணிவதால் நன்மைகள் உண்டு அவைகளை இறைவனுக்கு அணிவிப்பதற்கு காரணமே அவைகள் மதிப்புமிக்கவை , சக்தியுடைவை நன்மை செய்பவை என்பதால்தான்.
***
அப்பர் பாடிய பதிகங்கள் 312; பாடல்கள் 3066; அவை நாலாம், ஐந்தாம் , ஆறாம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவர் பாடிய பதிகம் தோறும் ரத்தினைக் கற்களைக் காணலாம். ஆகவே ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் ஐந்தாம், திருமுறை ஆறாம் திருமுறையிலிருந்து தருகிறேன்.
1
திருப் பாண்டிக் கொடிமுடி பதிகம்
ஐந்தாம் திருமுறை திருப் பாண்டிக் கொடிமுடி பதிக விளக்கத்தில் வரும் செய்தி- வாயு தேவனுக்கும் ,ஆதிசேஷனுக்கும் நடந்த பலப்போட்டியில் மேரு மலையை ஆதிசேடன் மறைத்துக்கொள்ள , வாயு தேவனின் காற்றினால் மேரு மலையிலுள்ள ஆயிரம் சிகரங்களில் ஒன்று ஐந்து மணிகளாகச் சிதறி விழுந்தன என்பது புராண வரலாறு. அவைகளில்
சிவப்பு மணி – திருவண்ணாமலை
மரகதம் — ஈங்கோய் மலை
நீலம் – பொதிகை மலை
வைரம் – பாண்டிக்கொடு முடி
மாணிக்கம் – திருவாட்போக்கி என ஆயின.
ஐந்தாம் திருமுறைப் பாடல் 81 விளக்கம்.
இந்த விளக்கத்தை சம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறைப் பதிகம் எண் 205-லிருந்து பெரியோர்கள் எடுத்தாண்டுள்ளார்கள் . அங்கு ஒரு பாடலில் பருமணி என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
***
2
திருவலஞ்சுழி பதிகம்
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் sapphire ruby or Nagaratnam
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் ruby or Nagaratnam
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய் coral
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் pearl
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமருங் கொட்டையூரிற் kuruvindam /corundum
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.
விளக்கவுரை :
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் :
கருமணி – நீலநிற மணி.
“கருமை நிறம் போலத் தோற்றமுடைய கண்டம் உடைய அழகினைக் காணுங்கள், கல்லால் மர நிழலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு அருளியவனைக் காணுங்கள்.”
பருமணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவளக் குன்று அன்ன பரமன் கண்டாய் :
பருமணி – பருத்த பெரிய மாணிக்க மணி. ruby or Nagaratnam
“கொடிய நஞ்சுடைய நாகத்தின் பெரிய மாணிக்க மணியை அணிந்துள்ளவனைக் காணுங்கள், பவளக் குன்று போல நெடியத் தோற்றமுடைய பரமனைக் காணுங்கள்.”
வருமணி நீர்ப் பொன்னி வலம் சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் :
“அழகிய முத்துக்களைப் போல திரண்ட நீர்த்திவலைகளுடன் வலமாக சுழித்து ஓடி வரும் காவிரியின் இரு கரைகளிலும் வீற்றிருப்பவனைக் காணுங்கள், தன்னை அடைந்தார்க்கு வரங்கள் வாரி வழங்கும் வரதனைக் காணுங்கள்.”
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே :
குருமணி – அழகிய நிறம் கொண்ட மணி/ குருவிந்தம் kuruvindam /corundum
“அழகிய நிறம் கொண்ட உயர்ந்த மணியைப் போன்று திருக்கொட்டையூரில் திருக்கோடீச்சரத்தில் உறையும் எம் உயிரின் தலைவனைக் காணுங்கள்.”ஆறாம் திருமுறை
***
3
குடந்தைக்கீழ்க்கோட்டம் பதிகம்
குடந்தைக்கீழ்க்கோட்டம் ஆறாம் திருமுறை திருத்தாண்டகம்
75 வது திருப்பதிகம் – பாடல் எண் : 5
காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
நீலவுரு, வயிர, நிரை பச்சை, செம்பொன்,
Sapphire, diamond, emerald, gold, crystal
நெடும்பளிங்கு என்று அறிவரிய நிறத்தார் போலும் :
“நீல நிறம், வயிர நிறம், பச்சை நிறம், செம்பொன் நிறம், பளிங்கு நிறம் போன்று எந்நிறம் என்று அறியமுடியாத நிறம் உடையவர்.”
கோலமணி கொழித்து இழியும் பொன்னி நன்னீர் :
“அழகிய நவமணிகள் nava ratnas கொழித்து இழிந்து வரும் காவிரியின் நன்னீர் பெருகி வரும்…”
***
4
திருவானைக்கா பதிகம்
கலையானைப் பரசுதர பாணி யானைக்
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
Heap of diamonds, ruby
மலையானை யென்றலையி னுச்சி யானை
வார்தருபுன் சடையானை மயான மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. – திருவானைக்கா பதிகம்
***
Diamond Pillar, Coral Pillar திருமழபாடி – திருத்தாண்டகம் –
உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
பவளத்தின் Coral Pillar திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி Diamond Pillar வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
இவ்வாறு பதிகம் தோறும் ரத்தினக் குவியல்களையும் ரத்தினத் தூண்களையும் கண்டும் படித்தும் மகிழலாம்
–subham—
Tags-அப்பர் தேவாரத்தில், நவரத்தினங்கள், Diamond Pillar, Coral Pillar, வைரத் தூண்