Madurai Collector Rose Peter gave it to Goddess Meenakshi after the miracle.
Written by London Swaminathan
Post No. 15,149
Date uploaded in London – 4 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Pendants with Gem Stones
Third part (Last Part)
அருள்மிகு மீனாட்சியம்மனின் திருவடிகளைத் தாங்கும் இரண்டு மிதியடிகள் கோவிலில் உள்ளன இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .1812 ஆம் ஆண்டில் ரோஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தார் . அக்காலத்தில் கோவில் மேற்பார்வையும் கலெக்டரிடம் இருந்தது ; பீட்டர் , குதிரை மேலிருந்தபடியே கோவிலை வலம் வருவார் அவருக்கு மீனாட்சி அம்மனின் அருள் கிடைத்தது . அது ஒரு அதிசய சம்பவம் !
ஒரு நாள் மதுரையில் இடைவிடாது இடி மின்னலுடன் பெருமழை பெய்து கொண்டிருந்தது . இடிகள் காது செவிடுபட இடித்தன இடை இடையே மின்னல்கள் மின்னின அப்போது பீட்டர் ரோஸ் மேல் மாடியில் ஒரு கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது ஒரு சிறுமி கைதட்டி அவரை எழுப்பிவிட்டு மிகவும் விரை வாக கீழே இறங்கி ஓடினார் துரையும் திடுக்கிட்டு எழுந்து அந்த சிறுமியை பின் தொடர்ந்தார்; மாளிகைக்கு வெளியே வந்தார், அடுத்த நிமிடம் அவர் தங்கியிருந்த மாடியில் இடிவிழுந்தது. மாடியில் இருந்த கட்டி லும் முறிந்து போயிருந்தது அதிர்ச்சியடைந்த பீட்டர் அந்த சிறுமியைத் தேடினார்
சிறுமி எங்கும் தென்படவில்லை. முடிவில் அந்தச் சிறுமி, கோவில் கோபுரத்துக்குல் நுழைவது போல ஒரு காட்சி துரை யின் கண்ணுக்குத் தோன்றியது. இந்த மீனாட்சிதான் தன்னை காப்பாற்றினார் என்று எண்ணி மகிழ்ந்தார் .பின்னர் குருக்களிடம் இதுபற்றி பேசி மீனாட்சி அம்மன் எழுந்தருளும் போது அவரது காடிகள் போல பயன் படுத்துவதற்காக இரண்டு மிதியடிகளை செய்து கொடுத்தார். இதிலும் மரகதக் கற்களும் பலச்ச வைரமும் முத்தும் நீலமும் வைடூரியமும் பதிக்கப்பட்டுள்ளன . அம்மன் குதிரை வாகனத்தில் புறப்படும் போது இவைகளை பொருத்துக்கிறார்கள் ; தான் இறந்த பின்னரும் அம்மன் கோவிலைப் பார்த்த வண்ணம் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று பீட்டர் ரோஸ் துரை வேண்டிக் கொண்டார். அவ்வாறே கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள மேங்காட்டுப் பொட்டலில் (Near Y M C A) துரையை அடக்கம் அடக்கம் செய்தார்கள்.
***
தங்க சந்தனக் கும்பா
Vibhuti Figure with Diamonds
கோவில் உள்ள தங்க சந்தனக் கும்பா மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் கொடுக்கப்பட்டது; அதில் தெலுங்கு மொழியில் விளக்கம் உள்ளது இதன் எடை 49 தோலா பொற்றாமகரைக் குளத்தின் மேற்குக் கரையில் கிளிக்கூண்டு மண்டபத்தின் பக்கத்திலுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வெள்ளிக்கிழமைதோறும் அம்மன் அப்பன் ஊஞ்சல் காட்சி நடைபெறும் .இந்த சாமியின் திருவுருவத்தையும் அம்மனின் திருவுருவத்தையும் தனித்தனி தங்கத்தில் திருமலை நாயக்கர் செய்து கொடுத்தார் .
சாமி உருவத்தின் எடை – 323 தோலா .
அம்மன் உருவத்தின் எடை-196 தோலா .
ஒரு தோலா – 11. 66 க்ராம்
1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams
Roman Coins Garland is below
நாகர் ஒட்டியாணம்
இடுப்பில் கட்டுவதற்காக பெல்ட் போல உள்ள நாகர் ஒட்டியாணம் தங்க இழைகளால் பின்னப் பெற்றது; இந்த ஒட்டியாணத்தின் நடுவில் ஐந்துதலை நாகம் உள்ளது; பெல்ட்டை மாட்டுவதற்கு இரண்டு பக்கமும் சதுரம் சதுரமாக அமைப்பு உள்ளது; .இதிலும் 113 உயர்ந்த ஜாதி மாணிக்கக் கற்கள், 8 மரகத கற்கள், 28 பலச்ச வைரங்கள் , 66 முத்துக்கள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளன . எடை – 33 தோலா .
நீல நாயக பதக்கம்
மன்னார் திருமலை நாயக்கர் பெரிய நீலப் பதக்கம் ஒன்றையும் செய்து கொடுத்து இருக்கிறர் . இது பெரிய
நீலக் கற்கள் உள்ளன. ஏழாவது எட்வர்ட் அரசர் இந்தியா வந்திருந்தபோது ,மதுரை கோவிலைப் பார்க்க வந்திருந்தார். இதில் உள்ள நீலக் கற்கள் பட்டை தீட்டப்படாத போதும் பளபள ப்புடன் இருப்பதைக் கண்டு தாயாரான விக்டோரியா மகாராணிபார்த்து மகிழ்வதற்காகலண்டனுக்கு கொண்டு சென்றார் என்றும் பின்னர் கோவிலில் சேர்த்தார் என்றும் சொல்வார்கள். எடை – 21 தோலா .
My comments
Please check whether the cunning British returned the actual sapphires .
***
திருமஞ்சன கொப்பரை
Bracelets and anklets of Gods
திருமஞ்சன கொப்பரையை ஒரு நீராகக் கப்பலின் உரிமையாளரான காட்ச் சகோதரர் கொடுத்துள்ளார்., மீனாட்சியம்மனின் சிறப்பைக் கேட்டு தனது நீராவிக்கப்பலு க்கு ஃப் S S M மீனாட்சி எனப் பெயரிட்டார். எதிர்பார்த்தபடி பெரிய லாபம் கிடைத்ததால் பெரிய வெள்ளிக் கொப்பரையை செய்து கோவிலுக்கு கொடுத்தார் ;இன்றும் விழாக் காலங்களில் அம்மனுக்கு அபிஷேகத்துக்கு உரிய பொருள்கள் இதில் நிரப்பப்படுகிறது ; கொப்பரையில் ஆங்கில மொழியில் விளக்கமாக எழுதியும் இருக்கிறார்கள்
இதனுடைய எடை 3020 தோலா ஒரு தோலா – 11. 66 க்ராம்
ஒரு தோலா – 11. 66 க்ராம்
1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams.
***
இரண்டு பெரிய தங்கக் குடங்கள்
செட்டிநாட்டு நகரத்தார்கள் இரண்டு பெரிய தங்கக் குடங்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள் ஒவ்வொரு குடமும் இரண்டரைக் கிலோவுக்கு மேல் எடை உடையது; மீனாட்சியம்மனுக்கு தங்கக் காசுமாலையும் கொடுத்திருக்கிறார்கள் இவைகளிலும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
தங்க காசுமாலை
தங்க காசுமாலையின் எடை – 23 தோலா; 53 காசுகள் உள்ளன.
அவைகளில் மரகதமும் சிவப்புக் கல்லும் பாதிக்கப்பட்டுள்ளன.
***
வைரக் கிரீடம்
பி டி ராஜன் தலைமையில் நடந்த கும்பாபிஷேகத்தின்போது கோவில் செலவில் வைரக் கிரீடம் செய்து வைக்கப்பட்டது.
அது 3500 கிராம் தங்கத்தில் அமைந்தது.வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள 3345 வைரங்கள் , 600 காரெட் எடையுள்ள 4100 சிவப்புக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன விலைமதிக்க முடியாத எட்டரை காரட் மரகதக் கல்லும் அதே எடையுள்ள ஒரு மாணிக்கக் கல்லும் இந்த வைர கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளன.வைர கிரீடத்தின் உயரம் 14 அரை அங்குலம்; சுற்றளவு 20 அங்குலம் . நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் சாஸ்திர ரீதியில் கிரீடத்தை வடிவமைத்துள்ளார்கள்.
***
தங்கக் கவசம்
மீனாட்சியம்மனுக்கு தங்கக் கவசம் இல்லாத ஒரு குறை இருந்தது அண்மைக் காலத்தில் 7000 கிராம் (ஏழு கிலோ) எடை தங்கத்தில் நுட்பமாக செய்யப்பட்ட கவசமும் செய்திருக்கிறார்கள் ; கோவில் செலவில் இது செய்யப்பட்டது.
முதல் முதலாக 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி இதையும் வைரக் கிரீடத்தையும் சேர்த்து அணிவித்தார்கள். அக்காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.
My comments- December 11 was Tamil Poet Bharatiyar’s Birth Day.
அதன் பிறகு திங்கட்கிழமை மாலை வேளையில் தங்கக் கவசமும் வைரக் கிரீடமும் அம்மனுக்கு சாத்தப்படுகிறது . பணம் கட்டினாலும் இதை சாத்துகிறார்கள்.
***
Close up pictures of Gem Crowns
நவரத்தினங்களின் மகிமைகளை தமிழில் சிலப்பதிகாரம் , திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களிலும் அதற்கு முன்னால் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட பிருஹத் சம்ஹிதா என்ற நூலிலும் காணலாம். இங்கு சொன்னபடி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஆபரணங்கள் செய்து கொடுத்த பெருமக்கள் இவ்வுலகத்தில் அழியாத புகழும் புண்ணியமும் பெற்றிருக்கிறார்கள்; அவர்கள் புகழ் ஓங்குக!
(மு தங்கவேல் தேசிகர் 1974-ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையை சுருக்கிக் கொடுத்துள்ளேன். முக்கியமாக ஆபரணங்களின் எடையை எழுதும் போது முழு எண்ணாக கொடுத்தேன். கால், அரை போன்றவற்றை விட்டுவிட்டதால் உண்மையில் நான் எழுதிய எடையை விட கூடுதலாகவே எடை இருக்கும்)
Coral Garlands
–subham—
Tags- Third part, Jewels in Madurai temple, தங்க மிதியடிகள் தங்கக் கவசம் , வைரக் கிரீடம் ,ரோஸ் பீட்டர், மதுரை மீனாட்சி கோவில், நவரத்தினக் குவியல்!-3