
Post No. 15,155
Date uploaded in London – 6 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 23
மானசா தேவி வழிபாடு
வங்காளத்திலும் அருகிலுள்ள பீஹார், அஸ்ஸாம் மாநிலங்களிலும் பாம்புகளுக்கு அதி தேவதையான மனசா அல்லது மானசா தேவியை வழிபடுகிறார்கள்; பார்வதியின் இன்னும் ஒரு உருவம் மனசா தேவி;. விஷக் கடிகளிலிருந்து விடுபட இந்த தேவி அருள்புரிகிறாள் . ருக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் கவிதை புனைந்த பெண் புலவரின் பெயர் சர்ப்ப ரஜினி ;அதாவது நாக ராணி . சிந்து சமவெளி முத்திரைகளில் ஒன்றில் இவள் இருக்கிறாள்; இரு புறமும் பாம்புகள் வழிபடும் தேவி அல்லது ஒரு தெய்வம் அந்த முத்திரையில் உள்ளது; சபரி மலை வரை இன்றும் நாக தேவதை வழிபடப்படுகிறாள். மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களில் நாக பஞ்சமி தினத்தன்று பாம்புகளையே வழிபடுகிறார்கள் அது மட்டுமல்ல, இந்து மதத்தில் பாம்புகளுடன் எல்லா தெய்வங்களும் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடைவர்கள்தான்; மேலும் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் பாம்புகளையும் ரிஷிகளான ஜரத் காரு, ஆஸ்தீகர், மன்னரான ஜனமேஜயர் ஆகியோர் பெயரையும் சொல்லி சந்தியா வந்தனம் செய்கிறார்கள். ஆக ரிக் வேத காலத்தில் துவங்கிய பாம்பு வழிபாடு 5000 ஆண்டுகளாக நீடித்து வருவது கண்கூடு கிரேக்கநாட்டிலும் பாம்புரணி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விஷ்ணு படுத்திருக்கும் அனந்தன் அல்லது வாசுகி என்னும் நாகத்தின் சகோதரி மனசாதேவி.
மானசா தேவி வழிபாட்டில் கள்ளிச்செடி

மானசா தேவி வழிபாடு தற்போது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது பாம்புகளின் ராணி அவள்.
சக்தி தேவியை இந்த ரூபத்தில் வழிபட்டால், பாம்புகளிடலிருந்து ஆபத்து வராது என்பது நம்பிக்கை. பாம்புகளின் தலைவியான மானசா தேவி எப்படிப் பெண்களைக் காப்பாற்றினாள் , குழந்தைகளை விஷக்கடியிருந்து காப்பாற்றினாள் என்று ஊருக்கு ஊர் பல்வேறு கதைகள் இருக்கின்றன.
இவளை விஷ ஹரி (விஷத்தைக் கொல்லுபவள் ) என்றும் நூல்கள் போற்றும் அவர் காஷ்யப முனிவரின் மகள் ;வாசுகியின் சகோதரி மற்றும் ஜரத் காரு முனிவரின் மனைவியுமாவார்.
நாக தேவதையான மானசா தேவியைப் பற்றிய கதை என்னவென்றால் ஒரு பெண்மணியின் கணவர் இந்த தேவியை வழிபடாமல் உதா சீனம் செய்தார் என்றும் அவருடைய குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தவுடன் தேவியை வழிபட்டார் என்றும் மனசா தேவி அவர்களனைவரையும் காப்பாற்றினாள் என்றும் சொல்கிறது.
மானசா தேவி. ஏழு நாகபாம்பை கொண்ட விதானத்தின் மீதுள்ள தாமரையின் மீது அமர்ந்திருப்பார். சில நேரம் தன் மடியில் தன் மகன் ஆஸ்திகனை வைத்திருப்பதைப் போலவும் இருப்பார்.
நாகர் என்ற பெயரில் பாம்பு உருவத்துடன் சிலைகள் இருப்தை நாம் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்களில் காண்கிறோம் .இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் கள்ளி வகைச் செடி (Cacti) களையும் பாம்பு தேவியாக வழிபடும் வழக்கமாகும் இந்த வழக்கம் வங்காளத்தில் இன்றும் இருக்கிறது. மானசா தேவிக்கு அதிகமான கோவில்கள் இருப்பது வங்காளம் மற்றும் அதை ஒட்டிய ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களாகும் . ஆயினும் மானசா தேவி கோவில்கள் ஆந்திரம் முதல் ஹரித்வார் வரை காணப்படுகின்றன.
_Eye_of_Horus_pendant,garuda%20namam%20naga.jpg)
இடதுபுறம் கருடன்; அதன் தலையில் நாமம்! வலது புறம் நாகம்; இது எகிப்தின் கண் சின்னம்
சிந்து வெளி முதல் சபரிமலை வரை பாம்பு வழிபாடு
அதிசயச் செய்தி: சுமேரியாவில் தமிழ்?
ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும் தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.
அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். பாம்பு விஷத்துக்கும் நாம் ஆலகாலம் என்கிறோம். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.
இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்
—subham—
Tags– மானசா, மானசா, வங்காளம், சப்ப ரஜினி , பாம்பு ராணி , சிந்து சமவெளி முத்திரை, ரிக் வேதம், Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 23