Post No. 15,179
Date uploaded in London – 13 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருநாவுக்கரசர் /அப்பர் தேவார பாடல்
அப்பர் பாடிய தேவாரப் பாடல்களில் திருக்குறளின் தாக்கத்தைக் காண முடிகிறது பல இடங்களில் அவர் பயன்படுத்திய சொற்களைப் பார்க்கும் பொழுது அவர் திருக்குறளை நன்றாகப் படித்தவர் என்றும் உணர முடிகிறது. சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
இரண்டு அதிசயமான விஷயங்களைக் காண முடிகிறது
ஒன்று திருக்குறளைப் போலவே தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் ஒரே பதிகத்தில் பயன்படுத்துகிறார்
இரண்டாவது திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள வருணனைகளைப் பயன்படுத்துகிறார்
தமிழ் எழுத்துக்கள் அ– வி துவங்கி, ன்-ன வில் முடிகிறது.
வள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம்………. என்று துவங்கி , முயங்கப்பெறின் என்று 1330 ஆவது குறளில் சொல்லி முடிக்கிறார் . இதே போல ஐந்தாம் திருமுறை பதிகத்தில் சித்தத் தொகை திருக்குறுந்தொகை பாடலில் அ -முதல் துவங்கி , ன வரை வைத்து பாடுகிறார் .இது ஆச்சர்யமான ஒற்றுமை!
***
உடல் உறுப்புகள் எதற்காக? அப்பர் சொல்கிறார்: தலை வணங்குவதற்காக
நான்காம்-திருமுறை, திருஅங்கமாலை
தலையே நீவணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய். என்று துவங்குகிறது
இதுவும் கடவுள் வாழ்த்தில் உள்ளது, அதற்கு முன்னால் வேதத்தில் உள்ளது
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
***
ஆறாம் திருமுறையில் திரு நல்லூர் பதிகத்தில் எழுமை/ ஏழு பிறப்பு என்ற சொல் வருகிறது
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்– இது எழுமை என்ற வள்ளுவன் சொற்களை நினைவுபடுத்தும்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. – குறள் 398
***
திருக்குறள் கடவுள் வாழ்த்து

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
இந்த சொற்கள் எல்லாம் அப்பர் பதிகங்களில் வருகின்றன. அத்தனையும் ஓர் அதிகாரத்தில் திருக்குறளில் இருப்பது கவனிக்க வேண்டியது ஆகும்/
***
திருவிடைமருதூர் பதிகத்தில் எண்குணத்தார் வரும்.
திருவாரூர் பதிகத்தில் ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை என்று அப்பர் பாடுகிறார் இதுவும் திருக்குறளை நினைவுபடுத்தும் .
திருநாகேஸ்வரம் பதிகத்தில் அறம் பொருள் வீடு இன்பம் வீடு ஆறு அங்கம் வேதம் என்று அப்பர் பாடுகிறார்
இதில் அறத்துப்பால் பொருட்பால், இன்பத்துப்பால் என்ற முப்பால் வந்துவிடுகிறது அதுதான் திருக்குறளின் பெயர்.
***
வேண்டாமை வேண்டுவதும் இலான் தன்னை என்ற திருவாவ டுதுறை பதிக வரிகள் கடவுள் வாழ்த்து திருக்குறளை எதிரொலிக்கிறது.
***
திருவாரூர் பதிகத்தில்
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து
உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் என்று வருகிறது
***
ஆடுதுறை பதிகத்தில் ஊழ்வினை வந்து உற்றால் என்ன? என்று பாடுகிறார் இது
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்- 380
என்ற வரிகளை நினைவுபடுத்தும்.
–subham—
Tags- அப்பர் தேவாரத்தில் திருக்குறள் !