நரகம் என்று ஒன்று இருக்கிறது! நிரூபித்த இரு சம்பவங்கள்! (Post No.15,183)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,183

Date uploaded in London –   15 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நரகம் என்று ஒன்று இருக்கிறது! நிரூபித்த இரு சம்பவங்கள்! 

ச. நாகராஜன் 

நரகம், சொர்க்கம் என்பதெல்லாம் புராணங்கள் கூறும் கட்டுக் கதைகள் என்று பலரும் நினைப்பதுண்டு. 

ஆனால் நரகம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்பதை இரு சம்பவங்கள் நிரூபித்துள்ளன.

அவற்றைப் பார்ப்போம்.

மாங்கிர் என்ற ஒரு பெண்மணி இறைவனுக்கு அழுகிய பழங்களையும் உலர்ந்த கரும்புச் சாறு கட்டியையும் நைவேத்யமாகப் படைப்பது வழக்கம்.

ஒரு சமயம் அவள் தீவிரமான ஒரு தொற்று நோயால் பாதிக்கப்பட்டாள். அதனால் அவள் மரணமும் அடைந்தாள். அவளை சுடுகாட்டிற்குக் கொண்டு போக ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவளோ திடீரென்று விழித்துக் கொண்டாள்.

அனைவரும் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தனர்.

அவள் கூறினாள் :” என்ன ஒரு மோசமான இடம் அது! என்னை நரகத்திற்குக் கொண்டு சென்றனர். இரண்டு பேர் என்னை வலுக்கட்டாயமாக தரதரவென்று இழுத்துச் சென்றனர். நான் மயக்கமே அடைந்து விட்டேன்.

எனக்கு உணர்வு வந்த போது ஒரு இருளடைந்த இடத்தில் நான் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். இருட்டில் மங்கலாக அனைத்தும் தெரிந்தது. ராஜா போன்ற ஒருவன் அங்கு உட்கார்ந்திருந்தான். அவன் கூறினான்: “ என்ன செய்திருக்கிறீர்கள் நீங்கள்! அவளது காலம் இன்னும் முடியவில்லை. அவளை அவள் இடத்தில் கொண்டு போய் விடுங்கள்.”

அப்போது நான் கூறினேன்: “எனக்கு ஒரே தாகமாக இருக்கிறது. நாக்கு வறண்டு விட்டது. கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்.”

“சரி” என்று கூறிய அவன், “ இவளுக்கு, இவள் கடவுளுக்குக் கொடுத்த அழுகிய பழங்களையும் உலர்ந்த கரும்புச் சாறு கட்டியையும் கொஞ்சம் கொடுங்கள்” என்றான்.

அங்கிருந்தவர்கள் அப்படியே செய்தனர். 

இன்னொரு சம்பவம் இது: 

ஒரு மனிதன் தீவிரமான நோயால் பீடிக்கப்பட்டு இறந்து விட்டான். அவனைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். பாதி வழியில் அவன் விழித்துக் கொண்டான்.

 அவன் கூறினான்: “என்னை நரகத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கே என்னைப் பார்த்த யமராஜன் ஆச்சரியப்பட்டு கூறினார்:” தப்பான ஒரு மனிதனை ஏன் இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்? இன்னும் பல வருடங்கள் அவனுக்கு வாழ்வதற்கு உண்டு.  அவனை அவன் இடத்திற்கே கொண்டு போய் விடுங்கள். போவதற்கு முன் இங்கு வந்ததன் அடையாளமாக எதையாவது கொடுங்கள்.”

“யமராஜன் கூறியதைக் கேட்ட யமதூதர்கள் ஒரு கறுப்பான வெற்றிலையையும் கறுப்பான பாக்கையும் எனக்குத் தந்தனர்” என்று கூறிய அந்த இறந்து பிழைத்தவன் தன் கையை நீட்டிக் காட்டினான்.

அதில் ஒரு கறுப்பு வெற்றிலையும் கறுப்புப் பாக்கும் இருந்தன.

 நரகம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்பதை இந்த இரு சம்பவங்கள் நிரூபிக்கின்றன!

 **

நன்றி TRUTH Vol IV No 36 Dated 8-1-1937

மறு பிரசுரம் :Vol 98 NO 28 Dated 7-11-2025

Leave a comment

Leave a comment