கும்பகோணத்திலும் ஆழ்வார் திருநகரியிலும் அற்புதக் கல் நாயனம்

HINDU MUSICAL WONDER கல்நயனம் என்னும் கல் நாதஸ்வரம்!

VEERAMANI VEERASWAMI ON FACEBOOK 21-11-2025

ENGISH VERSION INCLUDED

கும்பகோணத்திலும் ஆழ்வார் திருநகரியிலும் அற்புதக் கல் நாயனம் 

 posted on 21-11-2025

வரும் கார்த்திகை 12 ஆம் நாள் [ 28 ஆம் தேதி ] வெள்ளிக்கிழமை வாசிக்கப்படவுள்ளது. [ வாய்ப்புள்ளோர் கேட்டு இன்புறுக.]

கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மைத் திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாசிக்கப்படுகிறது.

இதுகுறித்து அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோவில் மேனாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் அவர்கள் கூறுகையில், “இது ஆறு துளைகளைக் கொண்ட திமிரி வகை நாதஸ்வரம். ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் டிசம்பர் முதல் நாள் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு வருகிற 28 ஆம் தேதி இந்த கல் நாதஸ்வரம் கோவிலில் வாசிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுத பூஜை நன்நாளில் இந்த கல் நாதஸ்வரத்தை நான் சுமார் ஒரு மணி நேரம் வாசித்தேன். அதைத் தொடர்ந்து தற்போது வருகிற 28 ஆம் தேதி எனது மகன் தமிழரசனுடன் சேர்ந்து, கோவிலின் தற்போதைய நாதஸ்வர வித்வானுடன் இந்த கல் நாதஸ்வரத்தை வாசிக்க உள்ளேன்” என்றார்.

அன்புடையீர், வணக்கம்.

நண்பர்களே…

இந்த “கல் நாதஸ்வரம்” பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..

தமிழகத்தில் மூன்றே மூன்று கல்நயனங்கள் உள்ளன. கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மைத் திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், ஆழ்வார்திருநகரி, சென்னை அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் மட்டும் கல்நயனங்கள் உள்ளன.

கல்நயனங்கள்,இசை உலகின் கலை பொக்கிஷம்!

கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது கல் நாதஸ்வரம் ஒன்று. சிற்பியின் கை வண்ணத்தில் கல் நாதஸ்வரமாக பிறந்து, இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும் இன்னிசையாக தவழ்ந்து ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும் இந்த கல் நாதஸ்வரம் உருவாகி ஆண்டுகள் பல நூறு இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இந்தக் கல் நாதஸ்வரம், சாதாரண நாதஸ்வரத்தை விட சுமார் ஆறு மடங்கு கூடுதல் எடையுடையது. சுமார் இரண்டடி நீளமுடையதாகவும் வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் மாதிரியான அமைப்பிலும் உள்ளதாகும். மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழர் இசையானது அதிகாலை துயில் எழுப்புவதில் தொடங்கி, நள்ளிரவு உறங்கும் காலம் வரை இசைக்கும் தமிழர் மரபாகும். பருவத்துக்கு ஏற்ற கருவிகளை உருவாக்கி அதில் உருவாகும் இசையினை இசைத்து இறைவனை வணங்கினர் ஆதி தமிழர்கள் என்பது வரலாறு.

மரத்தில் செய்வதற்கும் முந்தைய ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்குச் சான்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.

மற்றொரு கல் நாதஸ்வரம்:

தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதப் பெருமாள் கோயிலிலும் ஒரு கல் நாதசுரம் உண்டு. திருக்குடந்தை கல் நாதசுரம் போன்று தனித்தனி பாகமாக இல்லாமல் இக்கருவி ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது மிகுந்த வியப்பை தருகின்றது. நமது முன்னோர்கள் எத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு இதை செய்து இருப்பார்கள் என்று கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இத்தனை சிறப்பு வாயந்த இந்த பொக்கிஷம் இப்பொழுது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பெட்டியில் உறங்கி வருகிறது. முன்பு மார்கழி மாத பகல்பத்து/இராபத்து நிகழ்வுகளில் இசைக்கப்பட்டு வந்துள்ளது.

கல் நாதஸ்வரத்தின் உடல் அமைப்பு :

முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஒரு நாணல் புல்லில் செய்யப்படுகிறது. கல் நாதஸ்வரத்தில், உலவுப்பகுதி மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூணல் இணைக்கப்பட்டு வெங்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாகி உள்ளது இந்த கல் நாதஸ்வரம்.

“”மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும், ஆனால், கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்கள் மட்டுமே வாசிக்க முடியும். இதில் 3 முதல் 3- 1/2 கட்டை சுதியில் வாசிக்க இயலும். மேலும், சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும் எனவும் பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும்” என்கிறார் திருக்கோயில் வித்வான் சாமிநாதன் பிள்ளை.

குடந்தையில் வாழ்ந்து மறைந்த நாதஸ்வர மேதை கும்பகோணம் பக்கிரி சாமி பிள்ளை சுமார் 60 வருடங்களுக்கு முன் கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் திருக்கோயில் நாதஸ்வர வித்வானாக இருந்த குஞ்சிதபாதம் பிள்ளை, 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் வாசித்து வருபவர் தற்போதுள்ள நாதஸ்வர கலைஞர் ஆவார்.

“”சுமார் 15 வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனைவி கமலா கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு வந்தபோது கல் நாதஸ்வரத்தினை இசைக்க சொல்லி கேட்டு சென்றார் என்பதையும் அதன்பின் ஒரு விழா காலத்தில் நடைபெற்ற சப்தாவர்ணம் எனும் திருநாள் விழாவில் திருக்கோயில் இசைக்கலைஞர் இதனை வாசித்தார். அவரே மறுபடியும் 29 செப்டம்பர் 2017 அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கல் நாதஸ்வரத்தில் ஒரு மணி நேரம் வாசித்தார்” என்று திருக்கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரி,க,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மஹாபாரதம் கூறும். ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.

இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். சட்ஜமம் மயில் அகவுதலையும்; ரிஷபம் மாடு கத்துதலையும்; காந்தாரம் ஆடு கத்துவதையும்; மத்யமம் அன்றில் பறவை கூவுதலையும்; பஞ்சமம் குயில் கூவுதலையும்; தைவதம் குதிரை கனைப்பதையும், நிஷாதம் யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.

நன்றி;தினமணி.

DECCAN CHRONICLE நாளிதழில்,Oct 1, 2017,இல் வெளிவந்த செய்தியில் விளக்கம் இருக்கிறது.

கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரஸ்வாமி திருக்கோயிலில் உள்ள “கல் நாதஸ்வரம்” இசைக்கப்பட்ட செய்திதான் அது.

அந்த செய்தியை அப்படியே அன்பர்களுக்குத் தருவதில் மகிழ்வடைகின்றேன்.

STONE MUSICAL INSTRUMENT

From=DECCAN CHRONICLE Stone Nadaswaram makes a comeback after 15 years

DECCAN CHRONICLE. | G Srinivasan. 

PublishedOct 1, 2017, 8:32 am ISTUpdatedOct 1, 2017, 8:32 am IST

People of the temple town have been demanding that temple authorities play the nadaswaram.

The stone instrument was played by Kunchithapatham Pillai, former nadaswara vidwan of the temple in the earlier days (Photo: Representational Image)

Kumbakonam: It was a mellifluous nadaswaram programme by N. Swaminathan, asthana nadaswaram vidwan of Sri Adhikumbeswaraswamy temple at Kumbakonam on Friday to celebrate Saraswathi Puja. Sitting before the beautifully decorated Saraswathi idol, Swaminathan was at his best for one hour accompanied by Tiruvalankadu Sakthivel on the tavil.

The difference in this programme was the instrument. The nadaswaram which he played is made of stone. Weighing three kilos and 2.5 ft long, it is a unique possession of the temple for the last hundreds of years.

The stone instrument was played by Kunchithapatham Pillai, former nadaswara vidwan of the temple in the earlier days. Though it was played during Mahamaham and Masi Maham, its use was stopped for the last 15 years. After this long gap, it was played only on Friday.

People of the temple town have been demanding that temple authorities play the nadaswaram.

Accordingly, Kavitha, executive officer of the temple, handed over the stone nadaswaram to Swaminathan, present vidwan of the temple, and asked him to play it. Swaminathan played kritis set to ragas Bantureethi, shanmughapriya and hemavathi.

Hundreds of people enjoyed the music. Saraswathi puja was special on Friday as the stone nathaswaram was played after 15 years in the temple. “I have played this instrument in the past. After 15 years, I played it again with the blessings of Saraswathi, goddess of knowledge, art, music and culture,” said Swaminathan.

Are extra efforts needed to play the stone nadaswaram? “Yes, of course, as the instrument is heavy unlike normal nadaswarams which are made of wood,” Swaminathan said.

In the programme, the second nathaswaram made of wood was played by Darasuram Thamizharasan.

புகைப்படங்கள்:PHOTOS

முதற்கண், கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மைத் திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் “கல் நாதஸ்வரம்” புகைப்படம்.

தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதப் பெருமாள் கோயில் ஒரு கல் நாதசுரம்

அடுத்ததாக ,DECCAN CHRONICLE நாளிதழில்,Oct 1, 2017,இல் வெளிவந்த செய்தியில் வெளியான புகைப்படம்.

DECCAN CHRONICLE நாளிதழில்,Oct 1, 2017,இல் வெளிவந்த செய்தி.

 –subham–

Tags- Stone Nayanam, Stone Musical instruments, Kumbakonam, Alvar Tirunagari, கும்பகோணம், ஆழ்வார் திருநகரி, அற்புதக் கல் நாயனம் 

Leave a comment

Leave a comment