
Post No. 15,215
Date uploaded in London – 25 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்மாழ்வார் பாசுரங்களில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் சுவைப்போம்.
3410 வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே
சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.
***

அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்
திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்- த்திலுள்ளது . இது மதுர கவி ஆழ்வார் பிறந்த திருத்தலம் . குபேரன் தன் செல்வத்தை வைத்த இடம் அல்லது இன்வெஸ்ட் INVEST – முதலீடு செய்த இடமென்று சொல்லலாம்.
இந்தக் கட்டுரை இன்வெஸ்ட்மென்ட் – முதலீடு பற்றியது. வைத்த மாநிதி என்ற பெயர் மறக்க முடியாதது. நான் மதுரை தினமணிப் பத்திரிகையில் (1971-1986) சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியபோது ஒருநாள் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் (ANS) சப் எடிட்டர் உள்ள மேஜைகள் அருகே வந்து “ஏய், வைத்த மாநி என்றால் ஆங்கிலத்தில் என்ன தெரியுமா ? ப்ராவிடென்ட் பண்ட் PROVIDENT FUND ( PF) என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எங்கள் சப் எடிட்டர் குரூப்பில் ஒருவர் மட்டுமே அய்யங்கார் ; ஏனையோர் அய்யர், பிள்ளை, கோனார் (யாதவர்) ஜாதிகளை சேர்ந்தோர். அன்று அந்த அய்யங்கார் ‘ட்யூட்டி’யில் இல்லை என்று எண்ணுகிறேன். ஆகையால் திரு ஏ என் எஸ் சொன்னதன் பொருளை பாராட்டவோ மேலே விவாதிக்கவோ யாரும் இல்லை; அவரும் அதைச் சொல்லிவிட்டு அவர் உடகார்ந்துள்ள இடத்துக்குச் சென்றுவிட்டார். இப்போது நம்மாழ்வார் பாசுரத்தைப் படிக்கும்போது அவர் சொன்னதன் ஆழ்ந்த பொருள் விளங்குகிறது!
அவர் திருநெல்வேலி மாவட்ட ஆம்பூரைச் சேர்ந்தவர்;ஆகையால் அவருக்கு வைத்தமாநிதி திடீரென்று நினைவுக்கு வைத்தது போலும் .
இப்போது பிராவிடண்ட் பண்டு என்பதை ‘வருங்காலச் சேமிப்பு நிதி’ என்கிறார்கள். அதில் ஊழியர் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளியும் போட வேண்டும்; முதலாளி கூடுதலாகவும் போட்டு தொழிலாளிக்கு உதவ முடியும். அதை ஒரு தொழிலாளி வீடு கட்டவோ, வீட்டில் நடக்கும் கல்யாணம் முதலியவற்றுக்கோ பாதியில் எடுத்துக்கொள்ளவும் வழி உண்டு. இதை கடவுள் பெயருக்கு வைத்து எண்ணி எண்ணி வியப்படைகிறேன். நீங்கள் எந்தளவுக்கு பக்தி செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்குப் பெருமாளும் உங்கள் மீது முதலீடு செய்வார் அதாவது அருள் மழை பொழிவார்; எப்படி பி எப் -பில் முதலாளி கூடுதலாக உங்கள் பெயரில் பணம் போட முடியுமோ அது போல இறைவனும் உங்கள் பெயரில் அதிகம் அருள் மழை பொழிய- கருணை காட்ட -வாய்ப்பும் உண்டு. அதனால்தான் மாணிக்க வாசகர் போன்ற மகான்கள் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று பாடினார்கள் போலும்!இன்னும் கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம்; தொழிலாளி சம்பளத்தில் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளி உங்கள் பி.எப் பில் பணம் போட்டாக வேண்டும் இது போலத்தான் இறைவனும்! சத்தியம் என்னும் விதிக்கு கட்டுப்பட்டவர். ராவணன் ஆனாலும் பஸ்மாசுரன் ஆனாலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ற விகிதாசாரப்படி இறைவன் வரம் கொடுத்தே ஆக வேண்டும். எப்போது முதலாளி
நாம் செலுத்தும் பங்கினை விட நமது பெயரில் கூடுதல் பணம் போடுவார்? அவர்கள் கம்பெனி மீது நமக்கு நல்ல எண்ணமும் நல்ல ஈடு பாடும் இருந்தால் மனம் மகிழ்ந்து கூடுதல் பணத்தை நமது அக்கவுண்டில் செலுத்துவார். அதே போல நாமும் இறைவனிடத்தில் அவரது கம்பெனி/ கோவிலில் அதிக ஈடுபாடு காட்டினால் முதலீடு பெருகும். இந்த முதலீட்டுக்கு வட்டியும் கிடைக்கும். அந்த வட்டி, குட்டியும் போடும் என்பதை நினைவிற்கொண்டு வைத்த மாநிதியை வணங்குவோம்.
வைத்த மாநிதி- ஆழ்ந்த பொருள் உள்ள நாமம் !
–subham—
Tags- வைத்த மாநிதி, Provident Fund, ANS, Madurai Dinamani, Senior Sub Editor, நம்மாழ்வார்