Ganesh, Skanda/Murugan in Madurai Temple
Post No. 15,221
Date uploaded in London – 27 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் – அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
கற்பகம் எனவினை – கடிதேகும்
என்ற முதல் திருப்புகழில் உள்ள விநாயகர் மஹிமை எல்லோருக்கும் தெரிந்ததே; அது தவிர மேலும் பல பாடல்களில் அவர் விநாயகரை வருணிக்கும் அழகே தனி . சில பாடல்களை மட்டும் காண்போம். பாடல்களில் பிள்ளையார் பற்றிய விஷயங்களை மட்டும் காண்போம்.
***
Lord Kartikeya/Subrahmanya/Muruga
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்– எங்கள் விநாயகன் என்று உரிமை கொண்டாடுகிறார் நமது புலவர் அருணகிரிநாதர்.
1
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் …… நகரேகை
………………………………………………………………………..
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம …… கணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை …… யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்தச டானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய …… பரிபாலா
துங்கக ஜாரணி யத்திலுத்தம
சம்புத டாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
Thanks to தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதிய ஸ்ரீ கோபால சுந்தரம். https://www.kaumaram.com/thiru/nnt0353_u.html
(பொது மகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க,
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே
உன்னுடைய திருவடி சேவையை நீ தந்து அருளுவது கூடும் ஒரு நாள் உண்டாகுமோ?
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்–
யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி,
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்
நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை
இளையோனே
துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே,
துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட
நிக்ரக –அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே,
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா
(மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*,
துங்க கஜாரணியத்தில் உத்தம
உயர்வு பெற்ற திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே,
சம்பு தடாகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து
உறை பெருமாளே.
சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்ர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே
* மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.
****
Lord Muruga – Deivanai Wedding, Tirupparankundram
2
காஞ்சிபுரத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் கணபதி பற்றி மட்டுமின்றி தேவி பற்றிய அரிய செய்திகளையும் வழங்குகிறார்; அவர் லலிதா சஹஸ்ரநாமத்தை நன்றாகக் படித்தார் என்பதும் தெரிகிறது .
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் …… பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் …… தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் …… செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் …… றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் …… திருவாயன்
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் …… றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் …… பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
புன மடந்தைக்கு தக்க புயத்தன் … தினைப்புனத்து மடந்தையாகிய
வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன்,
குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை … குமரன்
என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை,
நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும் … மனத்தில் கொண்ட
கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும்,
புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும் …
புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு* வகையான தத்துவ
உண்மைகளும் ஆக எல்லாவற்றையும்,
பற்றி பற்று அற நிற்கும் பொதுவை … பற்றியும், பற்று இல்லாமலும், நிற்கும் பொதுப் பொருளை,
என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை நாளும் … சூரியனுக்கு
ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை
நாள் தோறும்,
சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு … கோபத்துடன்
வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு
அறுவரும் கைக்குத்து இட்டு … அறு வகைச் சமயத்தாரும்
கைக்குத்துடன் வாதம் செய்து,
ஒருவர்க்கும் தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து …
ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து,
உன்செயல் பாடி … உன் திருவிளையாடல்களைப் பாடி,
திசைதொறும் கற்பிக்கைக்கு … திக்குகள் தோறும் (உள்ள
யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க,
இனி அற்பம் திரு உ(ள்)ளம் பற்றி … இனி மேல் நீ சற்று தயை
கூர்ந்து,
செச்சை மணக்கும் சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு
என்று அருள்வாயே … வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
… கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு,
கரும்பு இவைகளையும்,
சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி … சர்க்கரை, தேங்காய்,
கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு,
பிட்டொடு மொக்கும் திரு வாயன் … பிட்டுடன் விழுங்கும் திரு
வாயை உடையவர்,
கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண் … சோற்றுத் திரளை
உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர்,
திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன் …
விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர்,
சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி … அழகிய,
பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற
கணபதியைப் பெற்ற அந்தணி,
ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண் … (1+8) ஒன்பது கோணங்களை
உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண்,
கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் … கெளரி, செவ்விய
அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண்,
பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் … பழையவளும்,
அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்,
பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி …
தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி),
கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் … ஏகாம்பர நாதரைக்
கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து,
வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. … வரத்தைப்
பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.
***
Ganesh wood work, Madras Museum
Lord Skanda/ Muruga , wood work in Chennai Museum
3
பழமொழி எழுதிய கணபதி!
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத …… முளநாடி
…………………………………………………………………….
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் …… புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை …… பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி …… யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு …… குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை …… பெருமாளே.
—-திருப்புகழ் ஸ்ரீசைலம்
……… சொல் விளக்கம் ………
……………………………………………………..
பரிவுட னழகிய பழமொடு … அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட நல்ல பழங்களுடன்,
கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் … கடலை வகைகள், பயறு, சில பணியாரங்களை
பருகிடு பெருவயி றுடையவர் … உண்ணும் பெரு வயிற்றை உடையவரும்,
பழமொழி எழுதிய … பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான
கணபதி யிளையோனே … கணபதிக்குத் தம்பியே,
…………………………………………
திருமலை பெருமாளே. … திருமலையாகிய ஸ்ரீசைலத்தில்** உள்ள பெருமாளே.
–subham—
Tags- விநாயகர் ,கணபதி அருணகிரிநாதர், வருணனை, திருப்புகழ், பழமொழி, எழுதிய