டிசம்பர் 2025 காலண்டர்: ஆதி சங்கரர் பொன்மொழிகள் (Post.15,224)

Written by London Swaminathan

Post No. 15,224

Date uploaded in London –  28 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கடந்த இரண்டு மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த டிசம்பர் மாதக் காலண்டரில் காண்போம்.

டிசம்பர் மாதப் பண்டிகைகள் :

03-12-2025 –  கார்த்திகை தீபத் திருநாள்; 11- பாரதியார் பிறந்த தினம்;16-மார்கழி மாதப் பிறப்பு; 19 ஹனுமத் ஜெயந்தி; 25- கிறிஸ்துமஸ்; 30-வைகுண்ட ஏகாதசி

04-12-2025 – வியாழன், பவுர்ணமி; 19-12-2025 – வெள்ளி, அமாவாசை

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்-  15 , 30

முகூர்த்த நாட்கள் : 01-12-2025 – திங்கள்,  08-12-2025 – திங்கள், 10-12-2025 – புதன்,  14-12-2025 – ஞாயிறு, 15-12-2025 – திங்கள்,

டிசம்பர் 1 திங்கட்கிழமை

சூரியனைக்கண்டால் தாமரை மலர்கிறதுஅதே போல யாரைக்கண்டால் ஒரு குலமே மலரும்?

நல்லகுணங்களும் அடக்கமும் உள்ளவர்களை க்கண்டால் குலமே மலரும்

***

டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை

யார் உலகத்தையே தனக்கு அடிமையாக்க முடியும்?

இனிமையான சொற்களை பேசி நன்மை தரும் உரையாடலைச் செய்வோருக்கும் தருமத்தைக் கடைப்பிடிப்போருக்கும் உலகமே அடிமை ஆகிவிடும்.

***

டிசம்பர் 3 புதன்கிழமை

கற்றோரின் மனத்தைக் கவர்வோர் யார்?

நல்ல கவிதைகளும் புத்திசாலிப்பெண்ணும்.

***

டிசம்பர் 4 வியாழக்கிழமை

யாருக்கு எப்போதும் ஆபத்து வராது?

பெரியோர்களின் சொல்லைக் கேட்டு அடக்கத்தோடு இருப்பவனுக்கு எப்போதும் ஆபத்து இல்லை

***

டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை

யாரை செல்வத் திருமகள் நேசிப்பாள் ?

நன்னடத்தையும் சுறுசுறுப்பான எண்ணமும் உடையவனை.

***

டிசம்பர் 6 சனிக்கிழமை

யாரிடமிருந்து லெட்சுமி ஓடிப்போவாள் ?

சோம்பேறிகளிடமிருந்தும் ஆசிரியர்களையும் பிராமணர்களையும் நிந்திப்போரிடமிருந்தும்

(பிராமணர்கள்= வேத விற்பன்னர்கள் )

***

டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை

நாம் எங்கே வசிக்க வேண்டும்?

நல்லோர் வாழுமிடத்தில்.

***

டிசம்பர் 8 திங்கட்கிழமை

எந்த நாட்டிலிருந்து வெளியேறவேண்டும்?

கருமியும் கொடுங்கோலும் உடையவன் நாட்டிலிருந்து.

***

டிசம்பர் 9  செவ்வாய்க்கிழமை

கவலையில்லாத மனிதன் யார் ?

அடக்கத்துடனுள்ள நல்ல மனைவி நிலையான வருமானம் இரண்டும் இருந்தால் .

****

டிசம்பர் 10  புதன்கிழமை

எப்போதும் துக்கம் உள்ளவன் யார்?

செல்வம் இருந்தும் அதை பிறருக்கு கொடுக்காதவன் துன்பத்தில் உழல்வான்.

***

டிசம்பர் 11  வியாழக்கிழமை

எப்போது கெட்ட பெயர் ஏற்படும்?

கீழ்த்தர மனிதர்களிடம் பிச்சை எடுக்கும்போது .

***

டிசம்பர் 12  வெள்ளிக்கிழமை

ராமபிரானைவிட பராக்ரமம் மிக்கவன் யார்?

காமதேவனின் அம்புக்கணைகளுக்கும் அசங்காதவன்

***

டிசம்பர் 13 சனிக்கிழமை

அல்லும்  பகலும் மனதில் இருக்க வேண்டியது எது?

இறைவனின் பாத கமலங்கள் நம்முடைய வாழ்க்கை அல்ல.

***

டிசம்பர் 14  ஞாயிற்றுக் கிழமை

கண்களிருந்தும் குருடன் யார்?

நாஸ்தீகன்

***

டிசம்பர் 15  திங்கட்கிழமை

முடவன் யார் ?

வயதான காலத்தில் யாத்திரை செல்பவன்

***

டிசம்பர் 16  செவ்வாய்க்கிழமை

புனித தீர்த்தம் எது?

மனத்திலிருந்து அழுக்கைப்போக்கும் எல்லாம் புனித தீர்த்தம்.

***

டிசம்பர்  17  புதன்கிழமை

எதை மனிதன் பேசவேண்டும்?

ஹரியின்  நாமத்தை .

***

டிசம்பர் 18  வியாழக்கிழமை

புத்திசாலிகள்  பேசக்கூடாதது எது?

பொய்யும் புரளியும் .

டிசம்பர் 19  வெள்ளிக்கிழமை

மனிதன் சம்பாதிக்க வேண்டியவை யாவை ?

அறிவுபணம்பலம்புகழ் புண்ணியம்

***

டிசம்பர் 20  சனிக்கிழமை

நல்ல குணங்கள் இருந்தும் அவை எப்போது பயனற்றுப்போகின்றன

கருமித்தனத்தால்.

***

டிசம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை

எதிரி யார் ?

காலம்

***

டிசம்பர் 22  திங்கட்கிழமை

அரசன் தவிர்க்க வேண்டிய அமைச்சு எது?

புத்திசாலிகளும் வயதானவர்களும் இல்லாத  அமைச்சரவை

***

டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை

இந்த உலகத்தில் விசுவாசமாக இருக்க வேண்டிய இடம்?

அரசாங்க சேவைகளில்.

***

டிசம்பர் 24  புதன்கிழமை

உயிரினும் அரியது எது?

குலதர்மமும் சத் சங்கமும்

***

டிசம்பர் 25  வியாழக்கிழமை

ஆலமரம் போல அழியாதது எது?

நல்லோருக்குக் கொடுத்த தானம் /நன்கொடை

***

டிசம்பர் 26  வெள்ளிக்கிழமை

எல்லோரிடமுள்ள ஆயுதம் எது?

எதையும் நியாயத்தின் அடைப்படையில் நிரூபிப்பது.

***

டிசம்பர் 27  சனிக்கிழமை

எல்லோருக்கும் தாயார் யார்?

கோ மாதா/ பசு மாடு

***

டிசம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை

எது ஒருவனுடைய படை /சேனை?

துணிவு

***

டிசம்பர் 29  திங்கட்கிழமை

எது மரணத்துக்குச் சமம் ?

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை .

***

டிசம்பர் 30  செவ்வாய்க்கிழமை

விஷம் எங்கே இருக்கிறது?

கெட்ட மனிதர்களிடத்தில்

***

டிசம்பர் 31  புதன்கிழமை

தீண்டத்த தகாதவன் போன்ற  நிலை ஒருவனுக்கு எப்போது ஏற்படுகிறது?

கடன் வாங்கிய பின்னர் அதைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது

–subham—

Tags- டிசம்பர் 2025 காலண்டர்,  ஆதி சங்கரர் பொன்மொழிகள், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா

Leave a comment

Leave a comment