Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
10-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
வாழ்வு வளம் பெற ஜப்பானிய உத்தி ‘மா’(Ma)!
ச.நாகராஜன்
இடைவிடாத வேலை, தொடர்ந்த போன் கால்கள், ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாது சீரியல்களைப் பார்த்தல். வீடுகளில் நெருக்கி அடித்து வைக்கப்பட்டிருக்கும் மேஜை, நாற்காலிகள், எல்லா மூலைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் அழகுக்கான பூச்செடிகள். அப்பப்பா..
வாழ்க்கையில் ஒரு நிம்மதி வேண்டாமா, ஐயா/அம்மணீ?!
வேண்டும் என்று உடனே தலையை ஆட்டினால் நாம் செய்ய வேண்டியது ஜப்பானிய உத்தியான ‘மா’வைத் தான்.
மா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு இடைவெளி, என்று பொருள்.
எங்கும் மா! எதிலும் மா! – இதைக் கடைப்பிடியுங்கள் என்கிறது இந்த ஜப்பானிய உத்தி.
தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு அலுப்புடனும் சலிப்புடனும் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வப்பொழுது சற்று இடைவெளி விடுங்கள்; மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு சென்று அமைதியாக இருங்கள் என்கிறது மா.
நவீன உள்வியல் ஆய்வுகள் கூட இப்படி தொடர்ந்த வேலைக்கு நடுவே அவ்வப்பொழுது சற்று ‘சும்மா இருப்பது’ கவன சக்தியை அதிகரிக்கும்; வேலையில் திறனைக் கூட்டும் என்கின்றன.
வீட்டில் முழு இடத்தையும் எதையாவது வைத்து ஆக்ரமிக்காமல் நிறைய இடைவெளி விடுவது அழகைக் கூட்டும்.
ஒரு அறைக்கும் இன்னொரு அறைக்கும் கூட இடைவெளி விடுவது ஜப்பானிய மரபு. சமையலறையில் ‘மா’வைக் கடைப்பிடித்தால் ரிலாக்ஸாகச் செய்யப்படும் சமையலின் தரம் நிச்சயம் கூடும்.
சளசளவென்று பேசாமல் நடுவில் சற்று இடைவெளி விடுங்கள்; பேச்சில் மெருகு கூடும்.
இசையில் கூட ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதைப் பார்க்கலாம். நோட்ஸின் நடுவே உள்ள இந்த இடைவெளிகள் இசையை உயரத்தில் தூக்கி நிறுத்துபவை.
டிஜிடல் உலகத்தில் எப்போதும் போன். இதைத் தவிர்த்து தூங்கும் போது படுக்கை அறையின் வெளியில் போனை வைத்தால் அது தான் ‘மா’. தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடைவெளி விட்டால் அது தான் மா.
மா.வைப் பின்பற்றுவதால் லயம் கூடுகிறது. வாழ்க்கையில் சமச்சீர்தன்மை ஏற்படுகிறது.
ஜப்பானியக் கட்டிடக் கலையிலும் ஓவியக் கலையிலும் கூட இந்த மா ஒளிர் விடுகிறது.
மேற்கத்தியக் கட்டிடங்களில் ஆடம்பரமும் அலங்காரமும் இருக்கும். ஆனால் ஜப்பானியக் கட்டிடக் கலையிலோ எளிமை தாண்டவமாடும்.
நிறைய இடைவெளிகள் விட்டு விசாலமான கூடங்கள் அமைக்கப்படும். ஓவியத்திலும் கூட வண்ணங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பூசி மெழுகாமல் ஆங்காங்கே இடைவெளி இருக்கும்; ஓவியத்தின் சீர்மையைக் கூட்டும்.
ப்ரஜ்ஞானபாரமித ஹிருதய சூத்ரா என்பது புத்தமதத்தினர் அனைவராலும் ஓதப்படும் ஒரு சூத்திரம். அதன் ஆரம்பமே ‘சூன்யமே வடிவம். வடிவமே சூன்யம்’ என்ற பேருண்மையைச் சொல்லி ஆரம்பிக்கிறது. இருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சூன்யமும் கூட. ஆகவே எதிலும் ஒரு இடைவெளி வேண்டும். இந்த சூத்திரத்தின் செய்முறையே மா.
அரக்கப்பரக்க ஓடாமல், கசமுசவென்று எதையும் அடுக்காமல் நிதானமாக உரிய இடைவெளியை விடுங்கள். இதை அப்யசிப்பதற்கு தியானம் பெரிதளவும் உதவும். தக்கவர்களிடம் முறையாகப் பயிற்சி பெற்ற மூச்சுப் பயிற்சியும் உதவும்.
உணர்வுடன் கூடிய மௌன அநுஷ்டானம் மாவின் பயனைத் தரும்.
சும்மா தான் இந்த சும்’மா’ இருப்பதைக் கடைப்பிடித்துப் பாருங்களேன். அம்’மா’ ஆ.. இவ்வளவு பயன் இதற்கு உண்டா என்று சொல்ல ஆரம்பிப்பீர்கள்.
DharmaFest 2025, a vibrant youth-led celebration, was held at the Hindu Heritage Centre in Rotorua on Saturday, 22 November 2025. The festival serves as a unique platform for Dharmic communities to engage, collaborate, and showcase their cultural and spiritual heritage. This year’s event was organised in collaboration with the HOTA (Hindu Organisations, Temples, and Associations) Forum. Some of the audience had come from Auckland, Hawke’s Bay, Tauranga and even Sydney (Australia).
DharmaFest is an inspiring initiative of Hindu Youth New Zealand, bringing together Dharma-based organisations, temples, and spiritual groups to celebrate the theme “Vibhinnatāyām Ekatvam” — Unity in Diversity. The 2025 festival highlighted the profound ways Dharmic values continue to enrich New Zealand’s multicultural society, particularly through art, food, clothing, crafts, wellness practices, and knowledge systems such as Yoga, Ayurveda, and Meditation.
The event commenced with a warm welcome to leaders representing Dharma traditions, meditation communities, and yoga groups. This year’s dignitaries included Radha Dasi, Chairperson of Meditation NZ; Gurinder Singh, priest of Rotorua Gurudwara representing Sikh Dharma; and Ma Kalaadevi, who led International Yoga Day in Rotorua in 2024. Together with festival coordinator Komal Sahani, they ceremonially lit the lamp to inaugurate the festival.
Radha Dasi and Ma Kalaadevi shared brief reflections on meditation and yoga, while Gurinder Singh spoke about Sikh Dharma. As 2025 marks the 350th Shaheedi Diwas of Guru Tegh Bahadur, the ninth Sikh Guru, Gurinder Singh also spoke on the sacrifices made by Sikh Gurus. Many children participating in the fancy dress competition listened with great interest. This moment inspired Dr Guna Magesan to invite Gurinder Singh to visit Playtopia Educare—where nearly 80% of the children are from the Punjabi community—to share similar teachings so more children can benefit.
Following the opening ceremony, participants were guided through basic meditation techniques by Radha Dasi, followed by a yoga session led by Jennifer Carruthers. Both sessions were well received and greatly appreciated by attendees.
Throughout the day, guests explored a range of stalls featuring cultural displays, arts and crafts, jewellery, clothing, and other creative expressions. Visitors also enjoyed a delightful selection of authentic vegetarian dishes from two food stalls.
One of the major highlights of DharmaFest 2025 was the Mantra Band concert, held from 5:00 pm to 7:00 pm—their first-ever performance in Rotorua. Renowned for their uplifting and spiritually inspired music, the band captivated both locals and visitors. The concert was so well received that the Hindu Heritage Centre extended an open invitation for Mantra Band to return to Rotorua whenever they wishto perform.
(This Press Release has been published as received)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் – அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
கற்பகம் எனவினை – கடிதேகும்
என்ற முதல் திருப்புகழில் உள்ள விநாயகர் மஹிமை எல்லோருக்கும் தெரிந்ததே; அது தவிர மேலும் பல பாடல்களில் அவர் விநாயகரை வருணிக்கும் அழகே தனி . சில பாடல்களை மட்டும் காண்போம். பாடல்களில் பிள்ளையார் பற்றிய விஷயங்களை மட்டும் காண்போம்.
***
Lord Kartikeya/Subrahmanya/Muruga
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்–எங்கள் விநாயகன் என்று உரிமை கொண்டாடுகிறார் நமது புலவர் அருணகிரிநாதர்.
(பொது மகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க,
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே
உன்னுடைய திருவடி சேவையை நீ தந்து அருளுவது கூடும் ஒரு நாள் உண்டாகுமோ?
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்–
யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி,
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்
நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை
இளையோனே
துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே,
துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட
நிக்ரக –அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே,
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா
(மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*,
துங்க கஜாரணியத்தில் உத்தம
உயர்வு பெற்ற திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே,
சம்பு தடாகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து
உறை பெருமாளே.
சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்ர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே
* மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.
****
Lord Muruga – Deivanai Wedding, Tirupparankundram
2
காஞ்சிபுரத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் கணபதி பற்றி மட்டுமின்றி தேவி பற்றிய அரிய செய்திகளையும் வழங்குகிறார்; அவர் லலிதா சஹஸ்ரநாமத்தை நன்றாகக் படித்தார் என்பதும் தெரிகிறது .
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் …… பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் …… தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் …… செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் …… றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் …… திருவாயன்
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் …… றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் …… பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
புன மடந்தைக்கு தக்க புயத்தன் … தினைப்புனத்து மடந்தையாகிய
வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன்,
குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை … குமரன்
என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை,
நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும் … மனத்தில் கொண்ட
கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும்,
புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும் …
புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு* வகையான தத்துவ
உண்மைகளும் ஆக எல்லாவற்றையும்,
பற்றி பற்று அற நிற்கும் பொதுவை … பற்றியும், பற்று இல்லாமலும், நிற்கும் பொதுப் பொருளை,
என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை நாளும் … சூரியனுக்கு
ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை
நாள் தோறும்,
சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு … கோபத்துடன்
வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு
அறுவரும் கைக்குத்து இட்டு … அறு வகைச் சமயத்தாரும்
கைக்குத்துடன் வாதம் செய்து,
ஒருவர்க்கும் தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து …
ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து,
உன்செயல் பாடி … உன் திருவிளையாடல்களைப் பாடி,
திசைதொறும் கற்பிக்கைக்கு … திக்குகள் தோறும் (உள்ள
யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க,
இனி அற்பம் திரு உ(ள்)ளம் பற்றி … இனி மேல் நீ சற்று தயை
கூர்ந்து,
செச்சை மணக்கும் சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு
என்று அருள்வாயே … வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
… கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு,
கரும்பு இவைகளையும்,
சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி … சர்க்கரை, தேங்காய்,
கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு,
பிட்டொடு மொக்கும் திரு வாயன் … பிட்டுடன் விழுங்கும் திரு
வாயை உடையவர்,
கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண் … சோற்றுத் திரளை
உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர்,
திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன் …
விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர்,
சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி … அழகிய,
பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற
கணபதியைப் பெற்ற அந்தணி,
ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண் … (1+8) ஒன்பது கோணங்களை
உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண்,
கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் … கெளரி, செவ்விய
அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண்,
பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் … பழையவளும்,
அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்,
பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி …
தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி),
கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் … ஏகாம்பர நாதரைக்
கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து,
வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. … வரத்தைப்
பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.
***
Ganesh wood work, Madras Museum
Lord Skanda/ Muruga , wood work in Chennai Museum
3
பழமொழி எழுதிய கணபதி!
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத …… முளநாடி
…………………………………………………………………….
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் …… புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை …… பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி …… யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு …… குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை …… பெருமாளே.
—-திருப்புகழ் ஸ்ரீசைலம்
……… சொல் விளக்கம் ………
……………………………………………………..
பரிவுட னழகிய பழமொடு … அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட நல்ல பழங்களுடன்,
கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் … கடலை வகைகள், பயறு, சில பணியாரங்களை
பருகிடு பெருவயி றுடையவர் … உண்ணும் பெரு வயிற்றை உடையவரும்,
பழமொழி எழுதிய … பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான
கணபதி யிளையோனே … கணபதிக்குத் தம்பியே,
…………………………………………
திருமலை பெருமாளே. … திருமலையாகிய ஸ்ரீசைலத்தில்** உள்ள பெருமாளே.
–subham—
Tags- விநாயகர் ,கணபதி அருணகிரிநாதர், வருணனை, திருப்புகழ், பழமொழி, எழுதிய
உலகில் இருளை அகற்றுவது இரண்டே தான். ஒன்று சூரியன். இன்னொன்று தன் நேர் இல்லாத தமிழ்.
ஒன்று புற இருளை அகற்றுகிறது. இன்னொன்று அக இருளை அகற்றுகிறது.
இந்தத் தமிழின் பெருமையைக் காலம் தோறும் புதிய சுவையுடன் புதிய நடையில் பொலிவுடன் தந்தவர்கள் ஏராளம். அவற்றுள் காலத்திற்கேற்றபடி தமிழன்னை அருளால் தமிழுக்கு புதிய நடையைத் தர உதித்தவர் பேராசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி என்னும் கல்கி அவர்கள்.
உலக மொழிகளின் போக்கில் ஒரு மாறுதல் உருவாகி புனைகதைகள் நாவல் என்ற பெயரில் புது மறுமலர்ச்சியைத் தந்த காலத்தில் தமிழின் ஆற்றலை உலகுக்குக் காட்டியவர் கல்கி.
பன்முகப் பரிமாணம் கொண்ட இவரை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நாம் அடைவது வியப்பைத் தான்.
தேசபக்தர், சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகி, தமிழ் வல்லுநர், கீதம் புனைந்த கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், வசனகர்த்தா. நாவலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், நகைச்சுவை மன்னர், விமரிசகர், கட்டுரை ஆசிரியர், பேச்சாளர், பாரதிக்கு மணி மண்டபம் அமைத்தவர், தெய்வத்தைப் போற்றித் துதிக்கும் தூய பக்தர் … இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தேசபக்தியை மூச்சாகக் கொண்ட கல்கி, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அதைப் பிரதானமாகக் கொண்டு திகழ்ந்தார்.
காலத்திற்கேற்றபடி எழுச்சியைத் தர வேண்டும் என்று நினைத்த அவர் முன் வந்தது இரண்டு அம்சங்கள்: ஒன்று தமிழ் எழுச்சி இன்னொன்று தேசீய எழுச்சி.
இந்த இரண்டையும் கலந்து அள்ளி அள்ளி மக்களுக்குப் பல்வேறு விதமாக உதவியது அவரது தமிழ் ஆற்றல்.
பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று சரித்திர நாவல்களின் பின்னணியாக ஊடுருவும் ஒரு அம்சம் தேச எழுச்சியைச் சித்தரிப்பதாகும்.
ஜிலுஜிலு என்ற தமிழ் நடையில் தொட்டால் முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் படிக்கத் தூண்டும் அவரது சிலிர்ப்பான தமிழ் நடை தனி நடையாகத் திகழ்வதைக் காணலாம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், குந்தவை, பூங்குழலி என அவர் வடித்த பாத்திரங்களை யாராலும் மறக்கவே முடியாது.
அலை ஓசையில் தேசபக்தர்களின் தியாகத்தை வடிவமைத்துக் காட்டினார்.
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ என்று தமிழ் உலகம் முழுவதையும் ஏங்க வைத்தார் அவர்.
விமோசனம், ஆனந்த விகடன், கல்கி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்த அவர் அவற்றில் செய்த ஜாலங்கள் எத்தனையோ!
இளம் வயதிலேயே தேசபக்தியால் உந்தப்பட்டு சிறை சென்றார். வாழ்க்கையில் மும்முறை சிறை சென்றார்.
இசை விமரிசகராக கர்நாடகம் என்ற பெயரில் மிளிர்ந்தார். எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவராக ஒளிர்ந்தார். மூதறிஞர் ராஜாஜியின் அணுக்கத் தொண்டராகி அவரது ஆசியையும் அன்பையும் நிரந்தரமாகப் பெற்றார்.
பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சமூக நாவல்கள், அரசியல் கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை வாரந்தோறும் அவர் வழங்கியதைத் தமிழ் உலகம் வியப்புடன் பார்த்தது.
வாழ்நாளில் அவர் எதிர்ப்புகளையும் சந்திக்காமல் இல்லை. அதைத் தெளிந்த மனதுடன் காழ்ப்புணர்ச்சி இன்றி ஏற்று அவற்றைத் தூள் தூளாக்கினார்.
1899ம் ஆண்டு செப்டம்பர் 9ம் நாளன்று அவர் தோன்றினார். 1954ம் ஆண்டு டிசம்பர் 5ம் நாளன்று அவர் மறைந்தார். இந்திய அரசு 1999ம் ஆண்டு அவரது நினைவாக அவரை கௌரவித்துத் தபால்தலை ஒன்றை வெளியிட்டது.
தமிழர்களுக்கு ஒரு கடமை உண்டு!
அது இது தான்– தமிழ் ஆர்வலர்களும், தமிழகப் பல்கலைக் கழகங்களும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து அவர் நினைவைப் போற்றும் வகையில் ஒரு அமைப்பை நிறுவி முன் நோக்கி நடக்க வேண்டியது தான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுவாமி சித்பவானந்தா
சித்பவானந்த சுவாமிகள் மதுரைக்கு அருகிலுள்ள திருவேடகத்திலும் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறை யிலும் ஆஸ்ரமம் , கல்லூரி, பள்ளிக்கூடம் வைத்து இந்து மதத்தைப் பரப்பிய பெரியார் . இவரது பகவத் கீதை பேருரையும் திருவாசகப் பேருரையும் அனைவரும் படித்துப் பொக்கிஷம் போல் காப்பாற்ற வேண்டியவை; 186 புத்தகங்களையும், சிறுவர்களுக்காக பல நாட கங்களையும் கதைகளையும் எழுதினார். மாதந்தோறும் அந்தர்யோகம் நிகழ்ச்சியை நடத்தி பக்தி யோகத்தைப் பரப்பினார். திருப்பராய்த்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் ஆசிரமத்தின் நிறுவனர் ஆவார்.
Swami Chidbhavananda (11 March 1898 – 16 November 1985)
Swami Chidbhavananda (11 March 1898 – 16 November 1985) was born in Senguttaipalayam near Pollachi.. His guru was Swami Shivananda who was a direct disciple of Ramakrishna Paramahamsa; he established Sri Ramakrishna Tapovanam in Tiruparaithurai, near Tiruchi He has authored more than 130 books in Tamil and English. Now under Sri Ramakrishna Tapovanam around 56 schools and colleges are running in TamilNadu. Swamiji delivered more than 70,000 talks on religious harmony, Hinduism. His commentary on Bhagavad Gita is his masterpiece.
***
கம்போடியா
தென் கிழக்கு ஆசியாவிலுள்ள இந்த நாட்டின் பெயர் காம்போஜம். கம்பு என்ற இந்திய மகரிஷியின் பெயரிலிருந்து வந்த பெயர் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்து மற்றும் புத்த மத மன்னர்களின் ஆட்சியில் இருந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அங்கோர்வாட் ஆலயம் உலகப் புகழ் பெற்றது இது முதலில் விஷ்ணுவுக்கு அமைக்கப்பட்டது; அதை பெளத்தர்கள் ஆக்ரமித்து புத்தமத சின்னங்களை எழுப்பினர் . உலகின் மிகப்பெரிய கோவிலான அங்கோர் வாட் அந்த நாட்டின் தேசீயக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.
Cambodia- Country’s name derives from the Sanskrit name कम्बोजदेश Kambojadeśa, referring to the descendants of Kambu (a legendary Indian sage from the ancient Indian kingdom of Kamboja). World famous The Khmer Empire was Southeast Asia’s largest empire during the 12th century. The empire’s centre of power was Angkor.
Angkor Wat is a Hindu-Buddhist complex in Cambodia. Located on a site measuring 162.6 hectares within the ancient Khmer capital city of Angkor, it was originally constructed in 1150 CE as a Hindu temple dedicated to the deity Vishnu. It was later gradually transformed into a Buddhist temple towards the end of the century. Hailed as the largest religious structure in the world, it is a symbol of Cambodia, depicted in Cambodian national flag.
***
சம்பா தேசம்
வியட்நாமின் பழைய பெயர் சம்பா தேசம்; தென் கிழக்கு ஆசியாவில் மிகப்பழைய ஸம்ஸ்க்ருத்க் கல்வெட்டு இங்குதான் கிடைத்தது; அதில் ஸ்ரீ மாறன் என்ற பெயர் இருப்பதால் அது தமிழ்நாட்டு பாண்டிய மன்னன் திருமாறனின் பெயராக இருக்கலாம் ; காலம் இரண்டாம் நூற்றாண்டு ; அதாவது தமிழ்ச் சங்க காலம்.
Champa– It is the old name of Vietnam. Lo of Hindu temples and Sanskrit inscriptions are in Vietnam. Sri Maran’s second century inscription is an important one.
***
சதுர்முகன்
பிரம்மாவின் பெயர்; தமிழில் நான்முகன்; நான்கு தலைகளை உடையவன் என்பது பொருள்
Chaturmukha
One of the names of Brahma, creator. Literally Four Faced. It means Brahma’s Four heads.
***
சண்டிகேஸ்வரர் –
சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருகிறார்.சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர்.
Sandesa Nayanar
Chandikeswra is one of the pancha murtis. His shrine is at the left side of lord Shiva’s main shrine. He is in charge of all the Siva’s treasures. And Shiva devotees believe that no one should take any one from a Shiva’s shrine because it will destroy the family; so, devotees before leaving Shiva’s shrine by showing their empty hands by clapping. Some people believe that the clapping is don to register their presence in the temple. This post is offered to any sincere , exemplary devotee.
Chandesa
Anugraha murti. In Saivite temples of tamil nadu one can see lord shiva decorating his devotee with a flower garland. Lord is decorating the devotee’s locks with it. Chadesa sits on the ground at the foot of siva, with bending knees and folded arms., and receives the divine favour with gratitude. Above the demi gods gather round to see the kindness of shiva shown towards his devotee-
***
சண்டேச நாயனார்
பெரிய புராணத்தில் போற்றப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர். இயற் பெயர் விசார சர்மர்.; மணலினால் சிவலிங்கம் செய்து பசும்பாலை அபிஷேகம் செய்ததை தந்தை கண்டிக்கவே யார் என்று தெரியாமல் குச்சியை வீசவே அது அவரது தந்தை யக்ஞ தத்தனின் காலைத் துண்டித்தது இருவருக்கும் இறைவன் வீடு பேற்றினை நல்கினார் சிவன் கோவில்களில் சண்டேச நாயனாருக்கு சண்டிகேஸ்வரர் பதவியைத் தாரும் காட்சியை சித்திரமாகவும் சிற்பமாகவும் வைத்துள்ளார்கள்.
Chandeswara Nayanar-
Vichara sarman was one of the 63 Nayanmars who were ardent Shiva devotees. When he made a Shiva Linga with sand and did Milk Abisheka, some people complained to his father Yajna Datta. He came and kicked him and the milk pot thinking that he was wasting milk. Without seeing who it was Vichara sarman threw the stick at his father that cut him and he fell down. Lord Shiva appeared and praised his devotion and offered him the post of Chandikeswar.
***
சண்டி தாஸ்
இவர் பெரிய மகான்;14 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்தார்; ராதா, கிருஷ்ணன் மீது அவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம் ஆயின. அவற்றை சைதன்யரும் பாடினார் ;அவர் மேல் அதிக செல்வாக்கு ஏற்படுத்தியவர் இந்த சாது மகான் தான். சிறு வயதில் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தையால் தண்டிக்கப்பட்டார் பின்னர் காளி தேவியின் அருள் பெற்று கவிதை பாடத் துவங்கினார் ராமி என்ற வண்ணாத்தியின் அழகில் மயங்கி முதல் கவிதையைப் புனைந்தார்; பின்னர் அதுவே ஆன்மீகக் காதலாக மலர்ந்து ராதாவின் மீதும் கண்ணன் மீதும் கவிதைகளை இயற்றினார் .ஆஸ்தானப் புலவர் வித்யாபதி இவரைக் காண நீண்ட தூரம் நடந்து வந்தார். ஜாதி இன வேறுபாடுகளை அகற்றி பக்தியைப் பரப்பினார்.
Chandidas
One of the greatest Vaishnava poets of Bengal was Chandidas. He lived sometime before Vaishnava reformer Chaitanya. Chandidas was the eldest son of a Brahmin who was the priest at the shrine of Basholi in the village called Nannur. He hated formal education and was punished by his father
Chandidas with a heavy heart went to the Basholi Devi’s temple near the Ajay river and sat there alone brooding. Just as he was pondering there was no point in living, the Goddess spoke to him and blessed him to become a great poet.
On his way back home Chandidas met Tara more popularly known as Ramitara or only just Rami., a washerman’s daughter. To him Rami was the source of inspiration and strength. To him Rami was the embodiment of Radha of Brindaban which inspired him to describe the divine love of Radha and Krishna through his poems. He was the inspiration for Chaitanya Mahaprabhu.
Even the court poet Vidyapati hearing of Chandidas, travelled all the way on foot to meet him.
***
சொக்கன் ,சொக்கநாதன்
சுந்தரேஸ்வரன் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு; மதுரைக் கோவிலில் உறையும் சிவபெருமானை சொக்கா, சொக்கநாதா என்றும் அழைப்பார்கள் .
Chokkan
Shiva’s name in Tamil. Lord Shiva of Madurai Temple is called Sundareswar, the handsome one. And it is translated as Chokkan in Tamil.
***
கவரி / சாமரம்/ சவுரி
ஆங்கிலத்தில் செளரி என்று உச்சகரிக்கப்டும் இதனுடைய சரியான பெயர் கவரி. ஆண்டவன் அல்லது மன்னர்களின் இரு புறமும் நின்று சேவகர்கள் கவரி வீசுவர் மேலும் இருவர் இரு புறத்திலும் நின்று விசிறி வீசுவார்கள் . கவரி மானின் முடியால் செய்யாப்பட்ட இது வெண்மை நிறத்தில் இருக்கும் . அஷ்ட மங்கலங்களில் ஒன்று.
Chowry- Correct word is Kavari. It is the fly whisk made up of the hair (tail) of a kind of deer. It is one of the Ashtamangalam, that is Eight Auspicious Symbols. It is a royal as well as a divine thing. On either side of God’s idol or in the olden days, either side of kings, servants were used this like a fan. Even now temples use this.
***
சத்திரம்
யாத்திரை செல்லுவோருக்காக மன்னர்களும் தர்ம சிந்தனையாளரும் அமைத்த தங்கும் விடுதிகள் ஆகும். அண்மைக்காலம் வரை எல்லா புனிதத் தலங்களிலும் அல்லது வழிப்போக்கர்கள் செல்லும் முக்கிய சாலைகளிலும் இந்த விடுதிகள் இருந்தன. மதுரையில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் புகழ் பெற்றது சில இடங்களில் தங்கும் வசதியுடன் உணவும் வழங்கப்பட்டது இப்பொழுது காசு வாங்கி தங்க வைக்கும் ஹோட்டல்கள், லாட்ஜுகள் போன்றவை இவை.
Choultry-
Travellers Inns, rest houses similar to modern lodges and hotels. But in the olden days, kings and philanthropists established these Chaththiram/Choultries for pilgrims along the way to famous holy shrines. Pilgrims were given free food and shelter. Mangammaal Chaththiram and Marwaadi Chaththiram are famous ones in Madurai.
****
சின்மயானந்தர்
கேரளத்தில் எர்ணாகுளத்தில் பால கிருஷ்ண மேனன் என்ற பெயருடன் (May 8, 1916) பிறந்த சுவாமிஜி பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். பின்னர் சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டார். அரசியல் மீது வெறுப்பு உண்டாகவே ரிஷிகேசுக்குச் சென்று சுவாமி சிவானத்தாரின் கீழ் ஆன்மீக பயிற்சியில் முன்னேறி சன்யாசம் பெற்று சின்மயானந்தர்
என்ற நாமகரணம் சூட்டப்பட்டார் . அத்வைத வேதாந்தத்தை பரப்புவதற்கு 576 ஞான வேள்விகளை நடத்தினார்; பகவத் கீதையை முக்கிய நூலாகக்கொண்டு பிரசாரம் செய்தார். இத்தற்காக சின்மயா மிஷனை 1953-ஆம் ஆண்டு நிறுவினார் உலகெங்கிலும் பயணம் செய்து கிளைகளை நிறுவினார் 1993-ஆம் ஆண்டு (August 3, 1993) மஹா சமாதி எய்தினார்.
Swami Chinmayananda Saraswati
Swami Chinmayananda Saraswati, born Balakrishna Menon on May 8, 1916, in Ernakulam, Kerala, was one of the most influential spiritual leaders of modern India. He dedicated his life to reviving and spreading the timeless wisdom of Advaita Vedanta, making it accessible to people from all walks of life.
Balakrishna Menon started his life as a journalist and actively participated in India’s independence movement but grew disillusioned with political ideologies. His quest for deeper truths led him to Rishikesh, where he met Swami Sivananda Saraswati and took sannyasa (renunciation), adopting the name Swami Chinmayananda Saraswati. He later studied Vedanta intensively under Swami Tapovan Maharaj in Uttarkashi, living an austere life dedicated to the scriptures. In 1953, Swami Chinmayananda founded the Chinmaya Mission conducted over 576 jnana yajnas across the globe and authored numerous books on Vedanta. Swamiji attained Maha Samadhi on August 3, 1993.
***
சோழ மன்னர்கள்
சைவத்திற்குப் பெரும் தொண்டாற்றிவர்கள் சோழ மன்னர்கள் ;காவிரி நதியின் இருபுறங்களிலும் எண்ணற்ற கோவில்களைக்க கட்டியுள்ளார்கள். ராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோவில் இதில் மிகவும் சிறப்பானது; ஆனால் அதற்கு முன்பாகவே பல சோழ மன்னர்கள் கோவில்களைக் கட்டி இருக்கிறார்கள்.
Chozas/Colas
Dynasty that ruled Tamil Nadu for several centuries. The Choza dynaasy kings were ardent supporters of Saivism. Under them hundreds of temples were built on either side of the Kaveri River (Cauvery). The most famous temple called Big Temple or Brihadeeswar temple in Thanjavur was built by Raja Raja Choza.
***
சரித்திரம்/ வரலாறு
வாழ்க்கைச் சரித்திரம் – பெரியோர் வாழ்க்கைக்குறிப்பு
Charithram – History
Life History- Biography
—Subham—-
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 20, இந்துமத கலைச்சொல் அகராதி 20 ,சரித்திரம், Chandidas , Chinmayananda, Chidbhavananda,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 28
Thos who visited shiva temples would have noticed many gods and goddesses around the main shrine/garbhagriha/sanctum sanctorum. Around the sanctum on its outer wall, are usually enshrined in specially formed niches the image of Dakshinamurti /Dakshinamurthy on the south, Lingodbhava on the west and Brahma or Durga on the north. In the enclosing verandah round the central shrine may be installed the images of 63 Nayanmars /Saiva saints and Lingas
Dakshinamurthy
Agamas mention twenty five sportive forms/leela murtis of shiva. Most of which are usually met with in South Indian temples. Dakshinamurti is one of the important forms. Shiva is shown engaged in yoga or philosophic contemplation. He is always conceived to be a youthful teacher, seated beneath a banyan tree, teaching saints and removing their doubts by his very silence. The general posture of the images of Dakshinamurti show him with his right leg bent vertically at knee and placed on the body of dark demon Apasmara and the left leg bent across so as to rest upon his right thigh. He has a calm countenance, indicative of perfect peace within. His matted locks are either dishevelled or are formed into a Jataamakuta tied together by a serpent. The body is besmeared with ashes and all the usual ornaments of shiva decorate him. The sages Narada, Jamadagni, Vasistha and Bhrigu sit at his feet on the right side, receiving instruction, while Bharadwaja, Saunaka, Agastya and Bhargava sit on the left.
The Nandhi, bull vehicle of the god, the denizens of the forest Kinnaras and other demigods are also seen on the Kailasa mountain on which the god is seated. His right fore arm points the Jnana Mudra—the pose conveying philosophical knowledge—and the back arm holds the rosary or the serpent. The left forearm shows the boon conferring- Varada—attitude or is sometimes freely attached, the back of the palm resting either case on the left knee. Some illustrations show a book in the place of the Varada posture. The remaining hand on the left side holds the fire pot or kettle drum or deer or the rosary.
Veena Dakshinamurti / Dakshinamurthy
When Dakshinamuurti holds lute/ veenaa in his fore arms and changes the posture of his left leg—apparently to keep the veenaa in position—he is called Veenaadhaara Dakshinamurti.
Jnaana muurti is another form of the same god in which the symbol Jnana Mudra of the right forearm is raised close to the heart with the palm of the god turned inwards. The name Yogamurti or Yoga Dakshinamurti is applied when the legs crossing each other from the root of the thigh are held in position by the left Yogapatta, passing round the waist and the fore legs, a little below the knee. The front arms in this case are stretched out and rest freely on the knees, while the back arms hold the rosary and water pot. The symbols may change and hold antelope or book.
This is the pose which lord shiva took after the Daksha Yajna episode where his wife burnt herself in the Yaga Kunda of Daksha.
Dakshina means South; Dakshinamurti means South Facing God.
****
சங்க இலக்கியத்தில் தட்சிணாமூர்த்தி
ஆலமர் கடவுள் – புறநானூறு 198;
ஆலமர் செல்வன் – சிறுபாணாற்றுப்படை 97;
கலித்தொகை 81;
ஆலமுற்றம் -சிவன் இருக்கும் இடம்- அகநானூறு 181.
****
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்கு முனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்.
கற்றுணர்ந்த, கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் (1.சனகர், 2.சனந்தனர், 3.சனாதனர், 4.சன்ற்குமாரர்) .
மெளனமாக இருந்து அழகான இளைஞன் ரூபத்தில் வயதான முனிவர்களுக்கு (அத்வைத ) தத்துவத்தை விளக்கும் தட்சிணாமூர்த்தியை நான் போற்று கிறேன் . குருக்களுக்கெல்லாம் ராஜாவாக விளங்கும் அவர் கைகளினாலேயே சின் முத்திரை மூலம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று விளக்குகிறார் அவர் ஆனந்த ஸ்வரூபி; வசீகரத் தோற்றமுடையவர்; ஆன்மஞானத்தில் திளைப்பவர்.
***
சிவன் கோவில்களில் சிவன் சந்நிதியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் தென் பகுதியில் தெற்கு திசையை நோக்கிய வண்ணம் மவுன ஸ்வரூபத்தில் முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் கோலம் இது. ஆலமரத்தின் கீழ் அவர் அமர்ந்து இருப்பதால் அவருக்கு ஆலமர் செல்வன் என்ற பெயரைச் சங்கப்புலவர்கள் பயன்படுத்துகின்றனர் .
தட்சிண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தென் திசை என்று பொருள். ஆகவே இவர் தட்சிணாமூர்த்தி. நான்கு கைகளில் அவர் வைத்திருக்கும் பொருட்கள் ஆங்காங்கே உள்ள சிலைகளில் மாறுபடும். பொதுவான அம்ஸங்கள் – ரிஷி முனிவர்களுக்கு மவுன உபதேசம். காலடியில் கீழ் அபஸ்மாரன் என்ற அறியாமை அரக்கனை மிதித்து துவம்சம் செய்யும் வடிவம்.
வீணா தட்சிணாமூர்த்தி
இதனால் இவரைத் தியானிப்பவருக்கும் அறியாமை அகன்று ஆன்ம ஞானம் பிறக்கும். கைகளில் வீணையை வைத்திருக்கும் வடிவம் வீணா தட்சிணாமூர்த்தி இவைதவிர யோக தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி வடிவங்களும் கோவில்களில் காணப்படுகின்றன.
இது சிவனின் லீலாமுர்த்திகள் இருபத்தைந்தில், ஞானத்தையும், யோகத்தையும் உபதேசிக்கும் முர்த்தி.
வெட்டுவான் கோயிலில் மிருதங்க தட்சிணாமுர்த்தியாக காட்சி தருகிறார். சோழர்களின் கோயிலான கொடும்பாளுர், துறையூர் ஆகிய இடங்களில் அரிய கலைப்படைப்பாக இடம் பெற்றுள்ளது.
***
நான்கு கைகளில் உள்ளவை என்ன ?
வலது காலைத் தொங்கவிட்டும் இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் இருக்கும். தொங்கவிடப்பட்ட வலது கால் அபஸ்மாரன் அல்லது முயலகன் மீதிருக்கும். முன்று கண்களையும், (நெற்றிக்கண்) நான்கு கரங்களையும், பெற்றிருப்பார். முன் வலது கை ஞான முத்திரையினையும், இடது கை வரத முத்திரையினையும் காட்டும் (முன் கை முழங்காலின் மீது வைத்து நீட்டியவாறு அமைந்திருக்கும்), பின் வலது கை அக்கமாலையும், பின் இடது கை அக்னியும் அல்லது சர்பமும் தரித்திருக்கும். தலையில் சடாமுடி தரித்திருக்கும் சகலாபரணங்களும் அணிவிக்கப்பட்டிருக்கும் மார்பில் திருநீறு பூசியிருப்பார். யக்ஞோபவீதம் அணிந்திருப்பார் நாரதர் ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பரத்வாஜர், சனகர் ,அகஸ்த்தியர் முதலியோர் சூழ்ந்திருப்பார்கள்
தட்சிணாமூர்த்தி படிமம் பலவித விலங்கினங்கள், ஊர்வனவைகள், ரிஷிகள், சித்தர்கள், வித்யாதரர்கள், பூதகணங்கள், கின்னரர்கள் ஆகியோர் சூழ அமைந்திருக்கும்.
அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார்.
ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி முதலிய வடிவங்களில் சில மாறுதல்களைக் காணலாம்
முன்கதைச் சுருக்கம்
தட்சன் நடத்திய யாகத்தில் சிவன் அவமதிக்கப்பட்டதால் சிவனின் மனைவியும் தட்சனின் புதல்வியான தாட்சாயணி தீக்குளிக்கிறாள்; கோபம் கொண்ட சிவன் தட்சனை அழிக்கிறார். இமயம் சென்று ஆலமரத்தினடியில் யோக நிலையில், யோக தட்சிணாமுர்த்தி வடிவில் சிவன் அமைதி பெறுகிறார்.
— SUBHAM —
TAGS—தட்சிணாமுர்த்தி, அபஸ்மாரன், முயலகன், ஆலமர் செல்வன், வீணா , யோக , தெற்கு திசை, சிவன் கோவில், Dakshinamurti, Veena, Yoga
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
அமெரிக்க பெண்மணிகளின் ஆர்வம் – ஜெல் நெய்ல் பாலிஷ் ஆபத்தானதா, இல்லையா?
ச. நாகராஜன்
அமெரிக்கப் பெண்மணிகளுக்கு திடீரென இந்த வாரம் ஆர்வம் மேலிட்ட விஷயம் நெய்ல் பாலிஷ் பற்றியது.
ஜெல் நெய்ல் பாலிஷ் (GEL NAIL POLISH) ஆபத்தானதா அல்லது இல்லையா என்பது தான் இந்த வார டாபிக் அவர்களுக்கு! (இந்த வாரம் என்பது 2025 செப்டம்பர் முதல் வாரம்)
அவர்களுக்கு உடனடி விடை கிடைத்து விட்டது.
ஜெல் நெயில் பாலிஷ் (GEL NAIL POLIOSH) ஆபத்தானது தான்!
ஜெல் பாலிஷ் என்றால் என்ன?
சாதாரண நெயில் பாலிஷுக்கும் ஜெல் பாலிஷுக்கும் உள்ள வித்தியாசம் அதைப் போடும் போது தெரியும். சாதாரண நெயில் பாலிஷைப் போட்டவுடன் அது உலர்வதற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது ஆகும். ஆனால் ஜெல் பாலிஷைப் போட்டால் ஒரு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடத்தில் அது எல் ஈ டி பல்பின் வெளிச்சத்தில் உலர்ந்து விடும்.
அல்ட்ரா வயலட் ரே மூலம் உலர வைக்கப்படும் நெய்ல் பாலிஷ், சர்மத்தை சீக்கிரமாக மூப்படைய வைக்கிறது. அது மட்டுமல்ல, டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை சேதமடையச் செய்வதோடு சீக்கிரமே கான்ஸர் வியாதியையும் தருகிறது.
உலர்வதற்கு நாங்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை உபயோகிப்பதில்லை என்று பல பெண்மணிகள் கூறுவார்கள். அப்படி இருந்தாலும் கூட ஜெல் நெயில் பாலிஷ் சரியான பொருத்தமான தேர்வு இல்லை. ஏன்?
ஜெல் பாலிஷில் அக்ரிலேட் மற்று மெதாக்ரைலேட் (Acrylate and Methacrylate) இருக்கிறது. இது ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்தி சொறி, சிரங்கை ஏற்படுத்துகிறது.
ஜெல் நெயில் பாலிஷை அடிக்கடிப் போட்டுக் கொள்ள பியூடி பார்லர்களுக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அழகு சாதன அறிவியல் நிபுணர்கள் கூறுவது இது தான் : அடிக்கடி போவதை நிறுத்தி விடுங்கள். முக்கியமான நாட்களுக்காக மட்டும் இதைப் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் அழகாகப் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையா, சொல்லுங்கள்!”
ஜெல் நெயில் பாலிஷ் சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கே நீடிக்கும். அந்த பாலிஷை நீக்குவதும் சரியாகச் செய்ய வேண்டிய ஒரு வேலையாகும். விரல்களை அசிடோனில் 15 நிமிட நேரம் வைத்திருக்க வேண்டும். அல்லது அசிடோனில் நனைக்கப்பட்ட சின்ன பஞ்சு உருண்டைகளை அலுமினியம் ஃபாயிலில் வைத்து விரல்களில் சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
நகங்களைப் பளபளப்பாக அனைவரையும் கவரும் விதத்தில் பாதுகாக்க முக்கியமான குறிப்புகள் உள்ளன. அவை இதோ:
நகங்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
நகங்களைச் சரியாக வெட்ட வேண்டும்.
வெட்டியவுடன் அதை சீராகத் தேய்த்து விட (ஃபைலிங்) வேண்டும்.
நீளமாக இருப்பதை விட சிறியதாக இருந்தால் அழுக்கும் சேராது; பாக்டீரியாக்களும் சேராது.
நகங்களின் மேல் புறத்தை ஃபைல் செய்யக் கூடாது.
சரியான சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
பாத்திரங்களைத் துலக்கும் போது கையுறைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
நகங்களைப் பற்களால் கடிப்பது கூடாது.
கடைசியாக ஒரு செய்தி.
TPO எனப்படும் Trimethylbenzoyl Diphenytphosphine Oxide சில ஜெல் நெயில் பாலிஷில் பயன்படுத்தப்படுகிறது. இது அல்ட்ரா வயலட் ஒளியில் பாலிஷ் கெட்டியாக உதவுகிறது. கான்ஸரை உருவாக்கும் அபாயம் இதில் இருப்பதால் ஐரோப்பாவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பல திருப்புகழ் பாடல்களில் மனிதனின் கிழப்பருவம் பற்றி அருணகிரிநாதர் அழகுபட சந்தத் தமிழில் பாடியுள்ளார்; அதே போல பல பாடல்களில் மனிதனுக்கு வரும் நோய்களின் பட்டியலையும் அடுக்கியுள்ளார். ஆனால் மிகவும் அரிதாகவே மருந்துகள் என்ன என்று சொல்கிறார். தள்ளாத வயதினிலே நெஞ்சில் கபம் கட்டி, மருந்துகளைச் சாப்பிட்டு, வாய் குழறி முருகா என்ற நாமத்தைக் கூடச் சொல்ல முடியாத காலம் ஒன்று வரும். அதற்கு முன்னரே உனது நாமத்தைச் சொல்லி அருளைப்பெற வேண்டும் என்பது அவர் நமக்குச் சொல்லும் செய்தி. இந்த முக்கியச் செய்தியுடன் திரிபலா சூர்ணத்தின் மகிமையையும் நமக்குத் தெரிவிக்கிறார்.
இன்னும் ஒரு பாடலில் இக பர செளபாக்யம் அருள்வாயே என்கிறார் ஆக மனிதனுக்கு இகத்திலும்–அதாவது இந்தப் பூவுலகில் வாழும் போதும் , பரத்திலும்- அதாவது இறந்த பின்னர் நமக்கு ஏற்படப்போகும் நிலையிலும் நலமாக இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார். ஆகவே நாம் திரிபலா சூரணத்தைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல் கபம் முதலியன பாதிக்காத போதும் குளிர் காலத்தில் சாதத்துடன் கொஞ்சம் நெய்யில் இந்தச் சூர்ணப்பொடியைப் போட்டு ஒரு சிறிய கைப்பிடி சாப்பிடுவது நல்லது. ஏதோ திருப் புகழைப் படித்துவிட்டு எழுதுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம் . எனது தந்தையார் மதுரைத் தினமணி பொறுப்பாசிரியர் (காலஞ்சென்ற) திரு வெங்கட்ராமன் சந்தானம் இவ்வாறு தினமும் சாப்பிடுவார். அதைப்பார்த்த எனக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டு லண்டனுக்கு திரிபலா சூர்ணப்பொடியை வாங்கி வந்து பல மாதங்களுக்குச் சாப்பிட்டேன். பின்னர் உடம்பில் நெய் சேர வேண்டாம் என்று விட்டுவிட்டேன் . நெய்யோடு சாப்பிடுவது நல்ல ருசியாகத்தான் இருந்தது; இந்தப் பொடியின் வாசனை பிடித்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!
அருணகிரிநாதர் சொன்ன முக்கியமான விஷயம் இப்படியெல்லாம் மருந்துகள் சாப்பிடும் நிலை வருவதற்கு முன்னர் உன்னுடைய திருப்புகழைப் தினமும் பாடிப்பழக வேண்டும் என்பதேயாம் ; அதை மறந்து விடக்கூடாது.
***
திரிபலா சூர்ணம் என்றால் என்ன என்பதை அறியாதோர் என்னுடைய பழைய கட்டுரையைப் படியுங்கள்; கடைசியில் கொடுத்துள்ளேன்.
குலகிரி யிற்புக் குற்று … மேலான மலையிற் சென்று பொருந்தி
உறை யுக்ரப் பெருமாளே. … வீற்றிருக்கின்ற பெருஞ்சினத்துப்
பெருமாளே.
****
தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
Meanings in Tamil and English by
Sri Gopala Sundaramhttps://www.kaumaram.com/thiru/nnt1321_u.html#
***
QUIZ மருந்துப் பத்து QUIZ (Post No.12,171)
Post No. 12,171
Date uploaded in London – – 22 June , 2023
1. திரி கடுகம் என்று தமிழ் நூலுக்கு மருந்தின் பெயர் இட்டது ஏன்
2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலின் பெயரில் உள்ள 5 வேர்கள் என்ன ?
3. ஏலாதி என்பன என்ன?
4.அஷ்ட சூர்ணத்தில் உள்ள எட்டு மருந்துச் சரக்குகளை சொல்ல முடியுமா?
5. திரிபலா சூர்ணம் என்பது என்ன ?
6.ரோஜா இதழ்களை வைத்து தயாரிக்கும் சாப்பிடக்கூடிய பண்டம் எது?
7.நெல்லிக்காயை வைத்து தயாரிக்கப்படும் லேகியத்தின் பெயர் என்ன?
8.கரிசலாங்கண்ணி மூலிகை என்ன நோய்க்குச் சிறந்த மருந்து ?
9.பாம்பின் பெயருள்ள இருதய நோய் சிகிச்சை மூலிகையின் பெயர் என்ன ?
10.மருத்துவத்தின் தந்தை ஹிப்பாக்ரடீஸ் என்ற கிரேக்கர் என்பர் மேலை நாட்டினர். ஆனால் இந்துக்கள் சொல்லும் மருத்துவத் தந்தை யார் ?
****
Answers
1.திரி கடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகும்;அவை வியாதிகளைப் போக்குவது போல தீமைகளை அகற்ற , ஒவ்வொரு பாடலிலும் 3 வழி களைக் குருகிறது இந்த நீதி நூல்.. திரிகடுகம் நூலாசிரியர் நல்லதனார்
2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலில் உள்ள 5 வேர்கள் :கண்டங்கத்திரி, சிறுவழு துணை , சிறு மல்லி, பெரு மல்லி,நெருஞ்சில் செடிகளின் வேர்கள் ஆகும்.இவை எப்படி உடலுக்கு நன்மை செய்கின்றனவோ அது போல மனிதனுக்கு நன்மை செய்யும் நீதிகள் இந்த நூலில் உள்ளன . ஆசிரியர் காரியாசான்.
3. நீதிகளைக் கூறும் தமிழ் நூலுக்கு ஏலாதி என்று நூலாசிரியர் கணி மேதாவியார் பெயரிட்டார். ஈழம், சிறு நாவற் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவை காலத்தை மருந்துபி போட்டிகள் எப்படி உடலுக்கு நன் மை பயக்குமோ அப்படி ஒவ்வொரு பாடலிலும் 6 நீதிகளை வழங்குகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்மாழ்வார் பாசுரங்களில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் சுவைப்போம்.
3410 வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே
சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.
***
அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்
திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்- த்திலுள்ளது . இது மதுர கவி ஆழ்வார் பிறந்த திருத்தலம் . குபேரன் தன் செல்வத்தை வைத்த இடம் அல்லது இன்வெஸ்ட் INVEST – முதலீடு செய்த இடமென்று சொல்லலாம்.
இந்தக் கட்டுரை இன்வெஸ்ட்மென்ட் – முதலீடு பற்றியது. வைத்த மாநிதி என்ற பெயர் மறக்க முடியாதது. நான் மதுரை தினமணிப் பத்திரிகையில் (1971-1986) சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியபோது ஒருநாள் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் (ANS) சப் எடிட்டர் உள்ள மேஜைகள் அருகே வந்து “ஏய், வைத்த மாநி என்றால் ஆங்கிலத்தில் என்ன தெரியுமா ? ப்ராவிடென்ட் பண்ட் PROVIDENT FUND ( PF) என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எங்கள் சப் எடிட்டர் குரூப்பில் ஒருவர் மட்டுமே அய்யங்கார் ; ஏனையோர் அய்யர், பிள்ளை, கோனார் (யாதவர்) ஜாதிகளை சேர்ந்தோர். அன்று அந்த அய்யங்கார் ‘ட்யூட்டி’யில் இல்லை என்று எண்ணுகிறேன். ஆகையால் திரு ஏ என் எஸ் சொன்னதன் பொருளை பாராட்டவோ மேலே விவாதிக்கவோ யாரும் இல்லை; அவரும் அதைச் சொல்லிவிட்டு அவர் உடகார்ந்துள்ள இடத்துக்குச் சென்றுவிட்டார். இப்போது நம்மாழ்வார் பாசுரத்தைப் படிக்கும்போது அவர் சொன்னதன் ஆழ்ந்த பொருள் விளங்குகிறது!
அவர் திருநெல்வேலி மாவட்ட ஆம்பூரைச் சேர்ந்தவர்;ஆகையால் அவருக்கு வைத்தமாநிதி திடீரென்று நினைவுக்கு வைத்தது போலும் .
இப்போது பிராவிடண்ட் பண்டு என்பதை ‘வருங்காலச் சேமிப்பு நிதி’ என்கிறார்கள். அதில் ஊழியர் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளியும் போட வேண்டும்; முதலாளி கூடுதலாகவும் போட்டு தொழிலாளிக்கு உதவ முடியும். அதை ஒரு தொழிலாளி வீடு கட்டவோ, வீட்டில் நடக்கும் கல்யாணம் முதலியவற்றுக்கோ பாதியில் எடுத்துக்கொள்ளவும் வழி உண்டு. இதை கடவுள் பெயருக்கு வைத்து எண்ணி எண்ணி வியப்படைகிறேன். நீங்கள் எந்தளவுக்கு பக்தி செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்குப் பெருமாளும் உங்கள் மீது முதலீடு செய்வார் அதாவது அருள் மழை பொழிவார்; எப்படி பி எப் -பில் முதலாளி கூடுதலாக உங்கள் பெயரில் பணம் போட முடியுமோ அது போல இறைவனும் உங்கள் பெயரில் அதிகம் அருள் மழை பொழிய- கருணை காட்ட -வாய்ப்பும் உண்டு. அதனால்தான் மாணிக்க வாசகர் போன்ற மகான்கள் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று பாடினார்கள் போலும்!இன்னும் கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம்; தொழிலாளி சம்பளத்தில் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளி உங்கள் பி.எப் பில் பணம் போட்டாக வேண்டும் இது போலத்தான் இறைவனும்! சத்தியம் என்னும் விதிக்கு கட்டுப்பட்டவர். ராவணன் ஆனாலும் பஸ்மாசுரன் ஆனாலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ற விகிதாசாரப்படி இறைவன் வரம் கொடுத்தே ஆக வேண்டும். எப்போது முதலாளி
நாம் செலுத்தும் பங்கினை விட நமது பெயரில் கூடுதல் பணம் போடுவார்? அவர்கள் கம்பெனி மீது நமக்கு நல்ல எண்ணமும் நல்ல ஈடு பாடும் இருந்தால் மனம் மகிழ்ந்து கூடுதல் பணத்தை நமது அக்கவுண்டில் செலுத்துவார். அதே போல நாமும் இறைவனிடத்தில் அவரது கம்பெனி/ கோவிலில் அதிக ஈடுபாடு காட்டினால் முதலீடு பெருகும். இந்த முதலீட்டுக்கு வட்டியும் கிடைக்கும். அந்த வட்டி, குட்டியும் போடும் என்பதை நினைவிற்கொண்டு வைத்த மாநிதியை வணங்குவோம்.
வைத்த மாநிதி- ஆழ்ந்த பொருள் உள்ள நாமம் !
–subham—
Tags- வைத்த மாநிதி, Provident Fund, ANS, Madurai Dinamani, Senior Sub Editor, நம்மாழ்வார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
MOTIVATION
கான்பாரு!(GANBARU) முடிந்ததைச் செய்வோம்!
ச. நாகராஜன்
கான்பாரு! கான்பாரு! (GANBARU)
இந்த ஜப்பானிய வார்த்தைக்கு அர்த்தம் – நம்மால் முடிந்ததை செய்வோம்!
எவ்வளவு தடை நேர்ந்தாலும், எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சளைக்க மாட்டோம், ஓய மாட்டோம், கான்பாரு – முடிந்ததைச் செய்வோம்!
ஒரு காரியத்தில் நமக்கு இருக்கும் மன உறுதியையும், விடாமுயற்சியையும் குறிக்கும் இந்தச் சொல் பல்லாயிரக்கணக்கானோருக்கு வெற்றியைக் காண்பித்த சொல்லாகும்.
உடனடி விளைவுகளையோ நலன்களையோ கருதாமல் எடுத்த காரியத்தில் இறுதிக் குறிக்கோளை அடையச் செய்வது கான்பாரு!
பிரம்மாண்டமான ஒரு திட்டத்தில் நாம் ஈடுபடும் போது இதை எப்படி முடிக்கப் போகிறோம் என்ற மலைப்பை விட்டு விட்டு ஒரு முனைப்பட்ட கவனத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நமது குறிக்கோளை விடாமுயற்சியுடன் அடையச் செய்வது கான்பாரு.
ஒரு சின்ன உதாரணம் இதோ>
நடைப்பயணம் மேற்கொண்ட ஒரு பெண் பாலைவனத்தில் வழிதவறி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாள். ஒரே தாகம். ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்காதா என்று அழுதவாறே மனம் கலங்கிப் போய்க் கொண்டிருந்த அவளுக்கு எதிரே திடீரென்று ஒரு பெரிய ஏரி தென்பட்டது.
ஓட்டமாக ஓடி அதன் அருகே சென்று அவள் நின்றாள். நிர்மலமான நீர்.
அவள் அதைப் பார்த்து மலைத்தாள். அவளது தாகம் அவளை வாட்டியது. அவளால் நீரை எடுக்க முடியவில்லை.
அப்போது அருகே ஒட்டகம் ஒன்றில் ஒரு மனிதன் வந்து நின்றான்.
“சகோதரி! ஏன் இப்படி மலைத்துப் போய் நிற்கிறாய்? தாகத்தினால் தவிப்பது போல் தெரிகிறதே. நீரை அள்ளிக் குடி” என்றான் அவன்.
கலங்கி நின்ற அவள்,”இவ்வளவு தண்ணீரையும் எப்படிக் குடிக்க முடியும்?’ என்றாள்.
“இதோ இப்படி” என்ற அந்த மனிதன் இரு கைகளாலும் நீரை வாரி எடுத்தான். அவள் கைகளை நீட்டச் சொன்னான். “குடி” என்றான்.
அவளும் குடித்தாள். “தாகம் தணிந்ததா! ஒரு மடக்கு போதும் உன் தாகத்தைத் தணிக்க. ஒவ்வொரு வாயாக கொஞ்சம் கொஞ்சமாக நீரைக் குடி” என்றான் அவன்.
அவள் மலைப்பதை விட்டாள்; காரியத்தில் இறங்கினாள். ஒவ்வொரு மடக்காக அவள் தாகம் முற்றிலுமாகத் தணியும் வரை நீரைக் குடித்தாள். அந்த சகோதரனுக்கு நன்றி கூறினாள்.
இது தான் வாழ்க்கை!
ஒவ்வொரு அடியாக நம்மால் முடிந்ததைச் சிறப்பாக கவனத்துடன் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நீண்ட நெடிய பாதை, ஒரு சின்ன அடியில் தான் துவங்குகிறது.
ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் நீண்ட பாதையும் ஒரு நாள் முடிந்தே விடும்.
இன்றைய நவீன உளவியல், ஒரு செயலின் ஆதாயத்தை விட அதில் ஈடுபடும் முயற்சியையே ஆதரிக்கிறது.
கான்பாருவுக்கு உதாரணமாக ஒரு நிஜமான சம்பவத்தைக் கூறலாம்.
இது நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி.
இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த சமயம்.
ஷோய்சி யோகோய் (பிறப்பு 31-3-1915 மறைவு 22-9-1997) என்பவன் ஜப்பானியப் படையில் ஒரு சார்ஜெண்ட். 1945ல் உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் காம் என்ற இடத்திலுள்ள காடுகளில் மறைந்திருந்த அவனுக்கு போர் முடிந்ததே தெரியாது. காட்டில் தகவல் தொடர்பே இல்லை. அவன் போரைத் “தொடர்ந்து” நடத்திக் கொண்டிருந்தான். 28 வருடங்கள் கழித்து, 1972ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி அவனைக் காட்டில் கண்டுபிடித்தார்கள். காட்டின் அருகில் ஓடிக் கொண்டிருந்த நதியில் மீன் பிடிக்க வந்த இரண்டு உள்ளூர்க்காரர்கள் அவனைக் கண்டார்கள்.
சரணாகதி என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாது என்று கூறிய அவன் டிவி காட்சிகளில் பிரபலமானான். 2006ம் ஆண்டு அவன் பெயரில் நகோயா நகரில் ஒரு நினைவுக் கூடம் திறக்கப்பட்டது.
போரில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட மூன்று ஜப்பானிய வீரர்களில் ஷோய்சியும் ஒருவர்.