Radha Kalyana Festival in London with Dr Udaiyalur Kalyanaraman Group (Post.15,213)

Written by London Swaminathan

Post No. 15,213

Date uploaded in London –  24 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Mitra Seva UK organised Radha Madhava Kalyana Mahotsava for the sixth consecutive year in London on 21, 22 and 23rd of November 2025. The event took pace in the huge Sattavis Patidhar Hall in Wembley. The hall was overflowing with more than 1000 people on each day. They came from different places like Scotland in the north and Southampton in the South . Devotees donated liberally and all the three days prasad was served in the morning and evening.

In between Sri Udaiyalur’s Bhajan, cultural programmes were performed by young and old artistes. Dancers and Musicians from various fields took part in it.

Sri Rajagopalan and Mrs Uma Rajagopalan, Sri Raj and Mrs Meena Raj lead the big volunteer group who made the event a grand success. Damp weather did not dampen the enthusiasm of the devotes. They all sang and danced.

Dr Udaiylaur Kalyanarama Bhagavathar was accompanied by efficient singers and instrumentalists such as Bruga Balasubramaniam, Babu, Mukund, Vindod and others. Please see the invitation for more details.

I could attend only a few hours on all the three days. I am posting some pictures. For each Ashtapathi, the stage backdrop was changing. All the modern technology was used to make the show a colourful event. In addition to decorations, stalls selling various products also attracted the crowd.

–subham—

Tags- Radha Kalyanam, Udaiyalur, London, November 2025.

GNANAMAYAM 23rd  November 2025 BROADCAST PROGRAMME

surya ji

GNANAMAYAM 23rd  November 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Mrs. Jayanthi Sundar Group- Miss Mridula from Bengaluru

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Mrs Brhannayaki Sathyanarayanan speaks on PUTTAPARTHI PRASANTHI NILAYAM OF SRI SATHYA SAI BABA

***

Talk by Prof. S Suryanarayanan on

Muthuswamy Dikshitar Kritis

****

SPECIAL EVENT-

Talk on Word Famous Historian and Archaeologist Late Dr Nagaswamy’s contribution to Indian Culture

By

Mohan Nagaswamy, South Florida, USA

I T Personnel

 ******

prayer

–subham–

GNANAMAYAM 23rd November 2025 BROADCAST PROGRAMME

mohan ji

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Mrs. Jayanthi Sundar Group- Miss Mridula from Bengaluru

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Mrs Brhannayaki Sathyanarayanan speaks on PUTTAPARTHI PRASANTHI NILAYAM OF SRI SATHYA SAI BABA

***

Talk by Prof. S Suryanarayanan on

Muthuswamy Dikshitar Kritis

****

SPECIAL EVENT-

Talk on Word Famous Historian and Archaeologist Late Dr Nagaswamy’s contribution to Indian Culture

By

Mohan Nagaswamy, South Florida, USA

I T Personnel

 ******Subham*****

ஞானமயம் வழங்கும் (23-11-2025) உலக இந்து செய்திமடல் (Post.15,212)

Written by London Swaminathan

Post No. 15,212

Date uploaded in London –  24 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா  யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 23- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

****

இன்று ஸ்ரீ சத்யசாயிபாபா பிறந்த தினம் .

முதலில்  பாபா நூற்றாண்டு விழாச்  செய்திகள் இதோ :

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா;

புட்டபர்த்தியில் பிரதமர் மோடி வழிபாடு:

புட்டபர்த்தி வந்த பிரதமர் மோடி, ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றர். முன்னதாக, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.

ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல் பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார். புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.

புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இவ்விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி நவ.,19 காலை புட்டபர்த்தி வந்தார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில் மரியாதை செய்தார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, கோசாலையில் இருந்த பசுக்களுக்கு தீவனம் வழங்கினார்.

விழாவுக்கு ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தலைமை வகித்தார். நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சத்ய சாய்பாபாவின் போதனைகள், சேவையின் மகிமைகளை பற்றி பேசினர்.

தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக 100 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து சத்ய சாய்பாபாவின் பெருமைகள் பற்றியும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

சத்ய சாய்பாபா தற்போது தம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துவதாகவும், மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

***

கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் : நீதிபதிகள் கருத்து!

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பது தொடர்பான வழக்கில், கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில் சொத்துக்களை மீட்டு பாதுகாக்கக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்த விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை தரப்பில் மீனாட்சி அம்மன் கோயிலின் உப சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இணை ஆணையர், வருவாய் துறை அலுவலர் இணைந்து கோயில் சொத்துக்களை ஆவணங்களின் அடிப்படையில் பொருத்தி, உறுதி செய்ய வேண்டும் எனவும், வரும் 22ஆம் தேதி அது தொடர்பான கூட்டத்தை நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் கிரானைட் கற்கள் புதிதாகப் பதிக்கப்படுவதாகவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக யானை மண்டபம் பகுதியில் உணவு சமைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு, கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

****

திருப்பதி பாலாஜி கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

2 நாள் பயணமாகத் திருப்பதி சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரை வழிபட்டார்.

இதனை தொடர்ந்து, திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 9.30 மணி அளவில் வராகச் சாமியை வழிபட்டார்.அப்போது, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு, வரவேற்பு அளித்துக் குடியரசுத் தலைவரை ஏழுமலையான் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

*** 

சபரிமலை ஆவணங்களை மாற்றி எழுதினார் தேவசம் போர்டு மாஜி‘ தலைவர் 

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைதான திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார், தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளுக்கு பதிலாக செப்புத் தகடுகள் என ஆவணங்களில் மாற்றி எழுதியது, சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான மூலஸ்தானத்தின் இருபுறமும் உள்ள துவார பாலகர் சிலையில் இருந்த தங்க தகடுகளில் இருந்து, தங்கம் திருடு போனது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் முக்கிய நிர்வாகியுமான பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 

அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கை:

 கடந்த, 201 9 மார்ச் 19ல் பத்மகுமார் தலைமையில் நடந்த வாரிய கூட்டத்திற்கு பின், தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவுகளின் சட்டங்களை அகற்ற பத்ம குமார் உதவினார். அவற்றை தங்க முலாம் பூசவும் ஒப்படைத்துள்ளார். 

இந்த கதவுகளில், தங்க முலாம் பூசப்பட்டதை அறிந்தும், பதிவேடுகளில் செப்பு தகடுகள் என மாற்றி எழுதினார். 

இதன் மூலம், தங்க தகடுகளை, உன்னிகிருஷ்ணன் பெற வழிவகுக்கப்பட்டது. அதன்பின் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு, அக்கதவுகளில் இருந்து தங்கத்தை அகற்றி திருப்பி அனுப்பப்பட்டது. இவற்றை, மீண்டும் சரிபார்க்க பத்மகுமார் தவறியுள்ளார்.

 ****

 சபரிமலையில் நெரிசல்: கேரள ஐகோர்ட் விளாசல் 

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம், ‘கடந்த ஆறு மாதங்களாக பக்தர்கள் வசதிகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என, கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதலே கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்பே செய்யாதது ஏன்? ஆறு மாதங்களுக்கு முன்பே, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். இதற்கு, தேவசம் போர்டின் அதிகாரிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்..பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேவசம் போர்டு ஏன் பின்பற்றவில்லை. என்று கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது 

கேரள உயர் நீதிமன்றத்தின் கவலையை கருத்தில் கொள்வதாகவும், உரிய ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்யும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நெரிசலை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சபரிமலைக்கு விரைந்தனர்.

****

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது.

அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை

தற்போது நீதிமன்ற உத்தரவின் படி வரும் நவம்பர் 30ம் தேதி மாலை 3 மணிக்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வருமாறு, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் பெரிய கார்த்திகை தீப விழா டிசம்பர் மூன்றாம் தேதிதான் நடைபெறுகிறது

****

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்த அறிவிப்பும் தேவையில்லைமோகன் பகவத்

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.அசாமின் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ஹிந்து என்பது ஒரு மதச் சொல் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கலாசாரத் தொடர்ச்சியில் வேரூன்றிய ஒரு நாகரிக அடையாளம். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தங்களது வழிபாடு முறைகளையும், பாரம்பரியங்களையும், விட்டுக்கொடுக்காமல், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி, இந்திய முன்னோர்களை நினைத்து பெருமை கொண்டால், அவர்களும் இந்துக்கள்தான். பாரதத்தில் பெருமை கொள்பவர் அனைவருமே ஹிந்துக்கள் தான்.

பாரதம் மற்றும் ஹிந்து என்பது ஒரு அர்த்தம் கொண்டவை. இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை. அதன் நாகரிக மரபே அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிறருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடங்கப்படவில்லை.

பண்பாட்டை வளர்ப்பதற்கும், உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் பங்களிப்பை வழங்கவே ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒன்றுபடுத்துவதே ஆர்எஸ்எஸின் நோக்கம், இவ்வாறு அவர் கூறினார்.

***

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார்

டெல்லி ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி அதிக அளவில் இடதுசாரி மாணவர்கள் உள்ள யுனிவர்சிடி.  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் J N U ஜேஎன்யூ யுனிவர்சிட்டிக்கு சென்ற பொழுது ஜேஎன்யூ மாணவர்கள் கருப்புக்கொடியை தூக்கிக்கொண்டு மன்மோகன் சிங்கே இங்கு நுழையாதே என்று பிரதமரையே மிரட்டியது

இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது

இந்து மத துறவி ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி ஜகத்குரு விதுசேகர பாரதி மகாஸ்வாமி ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் சென்ற வாரம்,

12 ம் நூற்றாண்டில் அத்வைதம் தழைக்க அவதரித்து இந்துக்களின் முதல் அரசான விஜய நகர பேரரசு உருவாக காரணமாக இருந்த சாரதா பீடத்தின் ஜகத்குரு வித்யாரண்ய மகா ஸ்வாமிகளின் சிலையை நிறுவினார்;  மேலும் ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் விகாஸ் என்கிற பாடத்திட்டத்தையும் சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி விது சேகர பாரதி ஸ்வாமிகள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா  யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  தேதியில் ஒரு மாற்றம் .

அடுத்த வாரம் நமது ஒளிபரப்பு கிடையாது ; ஆகையால் டிசம்பர் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்; 

அதற்கு முன்னதாக டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் கார்த்திகை விழாவுக்கு முன் கூ ட்டி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

எங்கும் தீப ஒளி பிரகாசிக்க ஞானமயம் குழு பிரார்த்திக்கிறது . வணக்கம்

—SUBHAM—-

Tags – World Hindu News, 23-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,

பக்தியினால் திருப்பிக் கிடைத்த மோதிரம் (Post No.15,210)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,210

Date uploaded in London –   24 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

பக்தியினால் திருப்பிக் கிடைத்த  மோதிரம்: ஷீர்டி சாயியாக இருந்த போது நடந்த சம்பவத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்! 

ச. நாகராஜன 

ஶ்ரீ சத்யசாயிபாப பிறந்த நாள் விழாவில் 23-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரை! 

வேத பண்டிதர்கள் வேதத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பார்கள். வேதங்கள் ஒரு மனிதனை சந்தோஷமாக இருக்க வைக்க முடியாவிடில் வேறு எது தான் சந்தோஷத்தைத் தரும்?

ஹோட்டல் வைத்து நடத்தும் ஒருவர் தனக்கு தலை வலிக்கும் போது மருந்துக் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரையை வாங்கிச் சாப்பிடுகிறார். மருந்துக் கடை வைத்து நடத்துபவரோ தனக்கு காப்பி வேண்டும் என்கின்ற போது அதே ஹோட்டலுக்குச் சென்று காப்பி அருந்துகிறார். மேலைநாடுகள் கீழை நாடுகளை நோக்கி மன அமைதிக்காக வருகின்றன; கிழக்கோ மன அமைதி என்று தாங்கள் நினைத்துக் கொள்வதை அடைய மேலை நாடுகளை நோக்கிச் செல்கின்றன.

உங்களுக்கு எனது முந்தைய பிறவியில் ஷீர்டி சாயியாக நான் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

எனது பக்தையான ஒரு எழுத்தறிவற்ற பெண்மணி பகல்ஹானில் வாழ்ந்து வந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளபளக்கும் பித்தளைக் குடங்களில் நீரை நிரப்பி வைத்துக் கொள்வாள்.   அந்த மூன்று குடங்களுக்கும் அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று பெயர் சூட்டியிருந்தாள். அவள் அந்தப் பெயரால் தான் அந்தக் குடங்களைக் குறிப்பிடுவது வழக்கம்.

யாரேனும் வழிப்போக்கர் ஒருவர் தாகமாக இருக்கிறது என்று அந்தப் பெண்மணியிடம் சொன்னால், அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நீரையும் கலந்து திரிவேணி சங்கமமாக வந்த வழிப்போக்கருக்குத் தருவாள்.

அவளது இந்தச் செய்கையைக் கண்டு அண்டை அயலார் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் அவளோ அந்த மூன்று குடங்களில் உள்ள தண்ணீர் நிலத்தடி வழியே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளுடன் இணைந்திருப்பதாக நம்பினாள்.அவளது இந்த நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.

அவளது கணவன் ஒரு முறை காசி யாத்திரைக்குக் கிளம்பினான். அவனது தாயார் அவனிடம் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தைத் தந்து அவனை அணிவிக்கச் சொன்னாள். அது அவனை  நன்கு காக்கும் தாயத்தாக இருக்கும் என்று அவள் கூறினாள். அவனும் அதை அணிந்து கொண்டு காசிக்குக் கிளம்பினான். கங்கையில் மணிகர்ணிகா துறையில் அவன் நீராடும் போது அந்த மோதிரம் நழுவி நீரினில் விழுந்து விட்டது. தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை.

அவன் திரும்பி வந்து நடந்ததைச் சொல்லி தாயாரிடம் ஆறுதலுக்காக,
“கங்கை அது வேண்டுமென்று விரும்பினாள் போலும், எடுத்துக் கொண்டாள்” என்றான்.

ஆனால் அவனது மனைவி இதைக் கேட்ட போது, “கங்கை ஒரு நாளும் ஒரு எளிய வயதான பெண்மணியின் மோதிரத்தை வலிய எடுத்துக் கொள்ள மாட்டாள். அன்புடன் எதைத் தருகிறோமோ அதை மட்டுமே அவள் பெற்றுக் கொள்வாள். அதை அவள் நமக்குத் திருப்பித் தருவாள்.  இது நிச்சயம். அவள் நமது சமையலறையிலேயே தான் இருக்கிறாளே!” என்றாள்.

இதைச் சொல்லி விட்டு நேராக சமையலறைக்குச் சென்ற அவள் கங்கை என்று பெயரிட்டிருந்த குடத்தின் முன்னர் கூப்பிய கையுடன் மனதார பிரார்த்தனை செய்தாள். பின்னர் குடத்தில் தன் கையை விட்டுத் துழாவினாள்.

என்ன ஆச்சரியம்! கங்கையில் தொலைந்து போன அந்த மோதிரம் அவள் கையில் கிடைத்தது.

அவள் த்வாரகாமாயிக்கு தன் கணவனுடனும் மாமியாருடனும் வந்தாள்.

நம்பிக்கையே முக்கியம். பெயரும் வடிவமும் முக்கியம் அல்ல! ஏனெனில் எல்லா பெயர்களும் அவனுடையவையே! எல்லா வடிவங்களும் அவனுடையவையே!

நம்பிக்கை என்பது தர்ம பூமியிலே வேதம் என்ற செழிப்பான மணல் உள்ள பூமியிலேயே வளரும். ஆகவே தான் இங்கு பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது!

***

ஆலயம் அறிவோம்: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் (Post No.15,211)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 15,211

Date uploaded in London – 24 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

23-11-25 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பில் ஒளி பரப்பப்பட்ட உரை

ஆலயம் அறிவோம்

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பகவான் ஶ்ரீ சத்யசாயிபாபா அவதரித்த புட்டபர்த்தி திருத்தலமாகும். இது பிரசாந்தி நிலையம் என்ற பெயரில் பிரசித்தமாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் தர்மாவரம் அருகே உள்ளது புட்டபர்த்தி என்னும் கிராமம்.

இந்த கிராமத்தில் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி காலை

மணி 5-06க்கு திருவாதிரை நட்சத்திரத்தில் ஶ்ரீ சாயிபாபா அவதரித்தார்.

அங்கு பெத்தவெங்கமராஜு என்பவருக்கும்

ஈஸ்வரம்மா என்ற புனிதவதிக்கும் மகனாகப் பிறந்தார் பாபா. குழந்தையைத் துணியிலே வைத்த போது அது அசைந்து ஆடியது. வியந்த அனைவரும் துணியை எடுக்கவே அதன் கீழிருந்த பாம்பு ஒன்று நெளிந்து ஓடியது.

பாம்புகள் நிறைந்த ஊர் புட்டபர்த்தி. ஆகவே ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் நிறைந்திருக்கும். புட்ட என்றால் புற்று என்று அர்த்தம். பர்த்தி என்றால் ஊர் என்று பொருள். ஆகவே புற்றுகள் நிறைந்த ஊரே புட்டபர்த்தி ஆயிற்று.இந்த ஊரின் அருகே ஊரை அரவணைத்து அழகிய சித்ராவதி என்னும் ஆறு ஒடுகிறது.

சத்யநாராயணன் என்று பெயரிடப்பட்ட குழந்தை இளம் வயதிலேயே பல அபூர்வ லீலைகளைக் காண்பிக்க ஆரம்பித்தது.

நாளுக்கு நாள் அவரை தரிசிக்க வரும் கூட்டம் அதிகமானது. ஆகவே அவர் பக்தர்களை சித்ராவதி நதிக் கரைக்கு அழைத்துச் செல்வார். மணலிலே கையை விட்டு அற்புதமான விக்ரங்களையும் பழங்களையும் இதர பொருள்களையும் எடுத்துத் தருவார்.

அங்கு அற்புதமான பஜனைப் பாடல்களை அனைவரையும் பாட வைத்தார்.

இடம் போதாத காரணத்தால் ஒரு கொட்டகை போட தீர்மானித்தது. அதுவும் போதவில்லை

பின்னர் பாதமந்திரம் என்ற இடத்தில் பக்தர்கள் கூட்டம் திரண்டது. ஶ்ரீ வேணு கோபால ஸ்வாமி கோவிலுக்கு அருகில் இது உருவானது. ஆனால் இதுவும் போதாது என்ற நிலையில் ஊருக்கு வெளியில் பிரசாந்தி நிலையம் என்ற ஒரு பெரும் கட்டிடம் அமைக்கப்பட்டது.

லட்சக்கணக்கானோர் இங்கு திரள்வது வழக்கமானது.

பகவானின் 25வது பிறந்த நாளான 23-11-1950 அன்று பாபா இங்கு குடியேறி அதைத் தன் தலைமை இடமாகக் கொண்டார்.

பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயி, பிரதமர் நரசிம்ம ராவ் உள்ளிட்ட, ஏராளமான அரசியல் தலைவர்களும் ஆகப் பெரும் விஞ்ஞானிகளும், இசை மேதைகளும், அறிஞர்களும், பல்துறை நிபுணர்களும், சாமானியர்களும் இங்கே குழுமலாயினர்; பாபாவின் ஆசிர்வாதத்தைப் பெறலாயினர்.

ஏராளமான அற்புத சம்பவங்களை நாள்தோறும் அவர் நிகழ்த்துவது வழக்கமானது.

சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

வால்டர் கோவான் என்பவர் அமெரிக்கவின் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி. அவர் மனைவி பெயர் எல்ஸீ 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் அகில இந்திய ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மாநாடு சென்னையில் நடைபெற ஏற்பாடானது

அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாபாவோ திட்டவட்டமாக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார். அதற்காக வால்டர் கோவானும் எல்ஸீயும் டிசம்பர் 23ம் தேதி சென்னைக்கு வந்தனர். கன்னிமாரா ஹோட்டலில் தங்கியிருந்த வால்டர் டிசம்பர் 25ம் தேதி காலையில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட வால்டரைச் சோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார். சவங்களை வைக்கும் சவ அறைக்கு அவர் உடல் அப்புறப்படுத்தப்பட்டது.

அலுவல் நிமித்தமாக வெளியே சென்றிருந்த டாக்டர் மீண்டும் திரும்பி வந்த போது வால்டர் உயிரோடு இருந்ததைக் கண்டார்.  அவர் காதுகளிலும் நாசித் துவாரங்களிலும் வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றப்பட்டது. டாக்டர் அதிசயப்பட்டார். சிவப்பு உடை அணிந்திருந்த ஒருவர் நோயாளியைப் பார்க்க வந்தார் என்றும் அதன் பின்னர் அவர் உயிர் பிழைத்தார் என்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் கூறினர்.

வால்டர் பாபாவுடன் தான் உயரமான ஒரு இடத்திற்குச் சென்றதாகவும் அங்கிருந்த ஒரு தலைவரிடம் பாபா வால்டரைத் தன்னுடன் அனுப்ப வேண்டுமென்றும் அவருக்குச் சில வேலைகளை அளிக்க இருப்பதாகவும் கூற, அவர் சம்மதிக்க, இருவரும் கீழே வந்ததாக வால்டர் கூறினார்.

அமெரிக்காவில் சாண்டியாகோவில் பிரபல சைக்கியாட்ரிஸ்டாகத் திகழ்ந்த டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் 1972 மே மாதம் பங்களூர் வந்து பாபாவை தரிசித்தார். பல அனுபவங்களைப் பெற்றார்.

“ஆச்சரியம்! நம்பமுடியாதது! நினைத்துப் பார்க்கவே முடியாதது” என்றெல்லாம் கூறிய சாண்ட்விஸ் ,’இனி சைக்கியாட்ரியே இல்லை. இனி உலகை சாயி-கியாட்ரியே ஆளும்” என்று வியந்து கூறினார்.  

CANCER IS CANCELLED என்று பலரின் கேன்ஸர் வியாதியை பாபா நீக்கி அருளியுள்ளார்.

ஒளிவட்டம் என்னும் அவ்ரா பற்றிய தலை சிறந்த நிபுணராகத் திகழ்ந்தார் அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்க் பாரனோஸ்கி. அவருக்கு ஒருவரின் ஒளிவட்டத்தை எந்த வித சாதனமும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கும் சக்தி உண்டு.

1978ம் ஆண்டு மே மாதம் பிருந்தாவன் அருகே கோடைகால பத்து நாள் வகுப்பு ஒன்று நடந்தது இதில் எட்டாம் நாளன்று பேசிய பாரனோஸ்கி தான் பாபாவிடம் கண்ட அதிசயம் ஒன்றை வெளியிட்டார். “நான் ஒரு விஞ்ஞானி. நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரையாடல்களை இவ்வுலகத்தில் பல இடங்களில் நிகழ்த்தியுள்ளேன்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்ட அவர், “சுவாமியிடமிருந்து வெளி வரும் ஒளி வட்டம் வரம்பை மீறி எல்லையற்றதாக இருக்கிறது. அவரது இளஞ்சிவப்பு வண்ணம் எங்கும் ஊடுருவிச் செல்கிறது. அவர் நடந்து வரும் போது அது அனைவரின் மீதும் பாய்கிகிறது. அவரை “LOVE WALKING ON TWO FEET “என்றே கூறலாம் என்றார்.

பாபா தனது 65ம் நாள் பிறந்த நாளன்று உலகிலேயே மிகச் சிறந்த அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய சூப்பர் – ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலை நிறுவி தேவையானோருக்கு இலவச சிகிச்சை அளிக்க தீர்மானித்தார். 1991ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இது திறந்து வைக்கப்பட்டது. மூன்று லட்சம் சதுர அடியில் இது அமைந்துள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கும் கூட்டத்தில் பாபா தெலுங்கில் உரை ஆற்றுவது வழக்கம். அப்போது பஜனைப் பாடல்களை இசைக்க அனைவரும் சாயி பஜனில் கலந்து ஐக்கியமாவர்.

உலகிலுள்ள பல நாடுகளிலும் சாயி இயக்கம் பரவ ஆரம்பித்தது.

சேவா தள் என்னும் அமைப்பின் வழியாக சேவை ஆற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே தொண்டு புரிய ஆரம்பித்தனர்.

தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பாபா 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மகா சமாதி அடைந்தார். ஐந்து லட்சம் மக்கள் அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொண்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, குஜராத் முதல் அமைச்சராக இருந்த  நரேந்திர மோடி, கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு திரண்டு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். ஏப்ரல் 27ம் தேதி அவர் சமாதி புட்டபர்த்தியில் நிறுவப்பட்டது.ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு அவள் அருளை இன்றும் பெற்று வருகின்றனர்.

அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் இன்று நாம் மனப்பூர்வமாக அவரை வணங்கித் துதிப்போமாக!லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ சத்யசாயிபாபா அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  நன்றி! வணக்கம்!!

**

GNANAMAYAM 23rd  November 2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM 23rd  November 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Mrs. Jayanthi Sundar Group- Miss Mridula from Bengaluru

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Mrs Brhannayaki Sathyanarayanan speaks on PUTTAPARTHI PRASANTHI NILAYAM OF SRI SATHYA SAI BABA

***

Talk by Prof. S Suryanarayanan on

Muthuswamy Dikshitar Kritis

****

SPECIAL EVENT-

Talk on Word Famous Historian and Archaeologist Late Dr Nagaswamy’s contribution to Indian Culture

By

Mohan Nagaswamy, South Florida, USA

I T Personnel

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 23rd  November 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் – Miss Mridula from Bengaluru

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்  வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் சொற்பொழிவு– தலைப்பு   ஸ்ரீ சத்யா சாய் பாபாவின்  புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம்

****

தமிழ்ச் சொற்பொழிவு

பேராசிரியர் எஸ் சூர்யநாராயணன்

தலைப்பு- முத்து சுவாமி தீட்சிதரின் கிருதிகள்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு– தலைப்பு-    தொல்பொருட் துறை பேரறிஞரும் வரலாற்று நிபுணருமான காலஞ் சென்ற டாக்டர் இரா நாகசாமிக்கு அஞ்சலி

அவரது நூல்கள், அகழ்வாராய்ச்சி பற்றிய உரை

பேசுனர்- மோகன் நாகசுவாமி , ப்ளோரிடா, அமெரிக்கா

I T Personnel

—subham—

Tags- Gnanamayam, Broadcast, 23-11-2025, Vaishnavi Anand, Mohan Nagaswamy

payer

news

puttabarthi

surya ji

mohan ji

Ancient Tamil Encyclopaedia -Part 35; One Thousand Interesting Facts -Part 35 (Post.15,209)

Written by London Swaminathan

Post No. 15,209

Date uploaded in London –  23 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Part 35 Item 210

Akananuru verse 13 by Perunthalaich Sathanar (Saaththanaar) has three interesting details:

Pandyan king is wearing pearl garland from the southern seas and Sandal garland from the Pohiya Hills (Western Ghats/ Sahyaadri in Sanskrit).

That Sandal garland is not an ordinary one. That was the one given by mountain tribes after worshipping Lord Murugan/Skanda/Kartikeya. But the word in the poem is just God (Kadavul in Tamil)

This shows that 2000 years ago the mountain tribes were worshipping God/Lord Muruga.

***

211

Gaja Shastram

We come across a Pandyan army commander by name Panni. He used to catch forest elephants and donate them. Very interesting! Not selling!!

And we hear that he trained elephants with special language for them. The commentators give two words:

Ai ai

Apputhu apputhu

In another verse we come across they have trained them with Sanskrit. We will look at it later.

***

212

When the poet described the ripe paddy fields, he compared them to flame tip. When the fire is glowing, we can see the tip of the fire dancing. Nammalvaar, most famous Vaishnavite saint, was also from Pandya country. He compared the paddy crops dancing in the wind to Chowries. Servants will be showing fly whisks and fans to Gods and Kings on both sides in ancient Tamil Nadu.

***

213

Look at the name of the poet. His name is Big Head Saathhan

Tamils never hesitated to mention the body parts even if they look awkward. Just to differentiate him from other poets, they do it. I will show you more such names in Akananuru when we come across them. They used eyes a lot.

***

214

In Hindu culture Gods and Kings are equal. Here the King is portrayed as one where Goddess Lakshmi lives in his chest (heart). This appellation or epithet is used to Lord Vishnu by Aalvaars.

Tamil – Thiru VeeZ Maarban திரு வீழ் மார்பின் தென்னவன்

***

Here is the poem for Tamil lovers:

அகநானூறு 13பெருந்தலைச் சாத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்,

முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்

தெறல் அரு மரபின் கடவுள் பேணிக்,

குறவர் தந்த சந்தின் ஆரமும்

இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்  5

திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்,

குழியில் கொண்ட மராஅ யானை

மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,

வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,

வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்  10

பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின்

விழுமிது நிகழ்வது ஆயினும், தெற்கு ஏர்பு

கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்துச்,

சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்,

நோய் இன்றாக செய் பொருள், வயிற்பட  15

மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை

கவவு இன்புறாமைக் கழிக, வள வயல்

அழல் நுதி அன்ன தோகை ஈன்ற

கழனி நெல்லின் கவை முதல் அலங்கல்

நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப்  20

புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,

இலங்கு பூங்கரும்பின் ஏர் கழை இருந்த

வெண்குருகு நரல வீசும்

நுண் பல் துவலைய தண் பனி நாளே

To be continued…………………

Tags- Paddy fields, Fire tips, Elephant language, Mountain tribe, God Murugan

அர்ஜுனன் தேர்க்கொடியில் அனுமன் வந்த ரகசியம் (Post No.15,208)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,208

Date uploaded in London –   23 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

16-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

அர்ஜுனன் தேர்க்கொடியில் அனுமன் வந்த ரகசியம் : ஶ்ரீ சத்யசாயி பாபா விளக்கம்!

 ச. நாகராஜன் 

மஹாபாரதத்தில் வீரர்கள் ஒவ்வொருவரின் தேரிலும் தனித்துவம் வாய்ந்த கொடி ஒன்று உண்டு.

அர்ஜுனனனின் தேரின் மேல் இருந்த கொடியில் அனுமன் இருக்கிறார்.

அனுமன் எப்படி அங்கே வந்து அமர்ந்தார்?

இந்த இரகசியத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா அருமையாக விளக்குகிறார்.

 ஒவ்வொரு நகரமாக ஜெயித்துக் கொண்டே வந்த அர்ஜுனன் ராம சேது இருக்கும் இடத்திற்கு வந்தான். ராமர் கட்டிய சேதுவைப் பார்த்தான். அவனுக்கு தன் திறமை பற்றிய கர்வம் மேலோங்கியது. ராமரின் வில் திறமையை விடத் தனக்கு அதிகம் திறமை இருக்கிறது என்று அவன் எண்ணினான். அவர் வில்லினால் சேதுவை அமைக்கத் திறன் இல்லாததால் தான் ஒவ்வொரு கல்லாக வைத்து சேது பாலத்தை அமைத்தார் என்று நினைத்தான் அவன்.

“நானாக இருந்தால் பாணத்தை விட்டி அம்புகளினால் ஆன ஒரு பாலத்தைக் கட்டி இருப்பேன். அதன் மீது பெரும் படையே போகலாம்” என்று அவன் எண்ணினான்.

திடீரென்று அவனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது – அவனுக்கு முன்னால் அனுமன் தோன்றினார்.

அனுமன் அர்ஜுனனின் கர்வத்தைப் போக்க அவனை நோக்கிக் கூறினார்: “எங்கே வில்லினால் ஒரு அமைப்பை உருவாக்கு பார்ப்போம். அதில் ஒரு குரங்கு கூடப் போக முடியாது” என்றார்.

 அர்ஜுனன் இந்த சவாலை ஏற்றான். ஏராளமான அம்புகளை ஒன்றுடன் ஒன்று தொடுத்து மிக்க வலிமை மிக்க ஒரு பாலத்தை உருவாக்கினான்.

அனுமனோ சிரித்தார். இது எதற்கும் லாயக்கில்லாத வலிமையற்ற வில் கூடு” என்றார் அனுமன்.

உடனே அர்ஜுனன் “இதை மட்டும் நீங்கள் நிரூபித்தால் உடனே நான் தீயில் புகுந்து உயிரை விடுகிறேன்” என்றான்.

அனுமான் அந்த வில் பாலத்தின் மீது சில அடிகள் எடுத்து வைத்தார். அது அப்படியே விழுந்து நொறுங்கியது.

அர்ஜுனனின் கர்வம் போயே போனது. அவன் மிகவும் வருந்தினான்.

சொன்ன சொல்லின் படி தீயில் புக அவன் தயாரானான்.

அப்போது அங்கே கிருஷ்ணர் தோன்றினார்.

“என்ன விஷயம்” என்று ஒன்றுமே தெரியாதது போலக் கேட்டார் அவர்.

அர்ஜுனன் நடந்ததைச் சொன்னான்.

உடனே கிருஷ்ணர், “ சாட்சி இல்லாத எந்த ஒரு ஒப்பந்தமும் செல்லாது. இப்போது நான் இருக்கிறேன். நீ மீண்டும் வில்லினால் பாலத்தை அமை. அனுமன் நடக்கட்டும். அது நொறுங்குகிறதா என்று பார்ப்போம்” என்றார்.

அனுமன் ஒப்புக் கொள்ள அர்ஜுனன் மீண்டும் தன் வில் திறமையைக் காட்டினான்.

இப்போது அனுமன் அதன் மீது ஏறி நடந்தார். பாலம் உடையவே இல்லை.

திகைத்துப் போன அனுமன் தன் முழு பலத்தையும் காட்டினார்.

பாலம் வலிமையாக அப்படியே இருந்தது. அவர் குதித்துப் பார்த்தார்.

ஊஹூம்! பாலம் உடையவே இல்லை.

ரகசியம் என்னவென்றால் அனுமன் கால் வைத்த இடத்தில் எல்லாம் கிருஷ்ணன் பாலத்தின் அடியில் தன் முதுகை வைத்தார். மந்தார மலையைத் தூக்கிய அதே வலிமை அங்கு இருந்தது.

அனுமன் ஆச்சரியப்பட்டு காரணத்தைக் கேட்க கிருஷ்ணர் தன் முதுகைக் காட்டினார். அங்கே ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

இறைவன் தன் பக்தனைக் காக்க எப்போதும் உடனடியாக வருவான் என்பதை அனுமனும் அர்ஜுனனும் உணர்ந்தனர்.

அர்ஜுனனின் கர்வம் அகன்றது. அவன் அனுமனின் காலில் வீழ்ந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு நடக்க இருக்கும் போரில் தனக்கு உதவி புரிய வேண்டும் என்று வேண்டினான்.

அனுமனும் மனம் இரங்கினார். “உனது தேரின் கொடியில் நான் அமர்கிறேன். நீ ஜெயிப்பாய்” என்றார் அவர்.

அப்படியே அவர் அர்ஜுனனின் தேர்க் கொடியில் அமர்ந்தார்.

இப்படியாக பாபா அனுமன் அர்ஜுனன் தேர்க்கொடியில் அமர்ந்த ரகசியத்தை விளக்கினார்.

பிரசாந்தி நிலையத்தில் 16-10-1964ல் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

**

DR R NAGASWAMY’S BOOKS.


–SUBHAM—

TAGS-DR R NAGASWAMY, BOOKS