அபாயமான தீவிரவாதிகளின் கூட்டம்! ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை – 1(Post.15,233)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,233

Date uploaded in London –   2 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அபாயமான தீவிரவாதிகளின்  கூட்டம்! ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை – 1

 ச.நாகராஜன் 

ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை. ஏனெனில் அவர்கள் சகிப்புத்தன்மை என்ற போலியான ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு சோம்பேறிகளாகவும், தூங்குமூஞ்சிகளாகவும், எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் “ மிக மிக பரந்த மனப்பான்மை” கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

 இதை மாற்ற வீட்டுக்கு விழிப்புணர்வுள்ள ஒரு ஹிந்து வீரன் வேண்டும். இவன் அர்ஜுனனைப் போலத் திகழ வேண்டும். அப்போது தான் ஹிந்து. மதம் இந்த நாட்டில் இருக்கும். இந்த பாரத தேசம் ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக முடியும்.

 இப்படிச் சொல்பவர்களை ஹிந்து பைத்தியங்கள் என்று கூறும் நிஜப் பைத்தியங்கள் நிறைய உண்டு.

 சில செய்திகளை இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 6-9-2025 தேதியிட்டு க்ளோபல் ஹிந்து ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் (Global Hindu Heritage Foundation) ஆந்திர முதல் அமைச்சருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.

 அதில் அபாயகரமான கூட்டமான Deviant Tablighi Jamaat கூட்டம் திருப்பதி அருகே கூடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறது.

திருப்பதி ஜில்லாவில் சந்திர மண்டலாவில் அகலரலா கிராமத்தில் தப்லிகி இஜிதிமா (Tabligi Izithima) ஒன்று நடத்தப்பட இருப்பதை இது எதிர்த்து அனுமதி வழங்கக்கூடாது என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.

 தப்லிகியின் நோக்கம் என்ன?

Mission of Tabligi! என்ன?

Tabligi Izithima என்றால் அர்த்தம் என்ன?

போதகர்களின் கூட்டம் (Gathering of Preachers) என்பதே இதன் அர்த்தம்.

பிரச்சாரக் குழு அல்லது போதனை செய்யும் குழு என்றும் அர்த்தம் கூறலாம்.

 இந்த தபிலிகி ஜமாத் குரான் மற்றும் ஹடித் உரைகளைப் பின்பற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று.

 இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் அவர்களின் உபதேச உரைகளின் படி வாழ்வதற்காக திரும்பி வந்து உபதேசத்தைக் கடைப்பிடிக்க இது ஊக்குவிக்கிறது. அது மட்டுமின்றி தவா (DAWAH) என்னும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அறைகூவல் விடுக்கவும் இது ஊக்குவிக்கிறது.

இறைதூதர் முகம்மது நபி அவர்களின் முக்கிய போதனைகளை மனதில் கொண்டு மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்ளவும் உபதேச உரைகளைக் கேட்கவும் இது ஞாபகப்படுத்துகிறது.

 ஒவ்வொரு செயலும் அல்லாவை சந்தோஷப்படுத்த வேண்டும், ஒருவனைத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.

 நிர்ணயிக்கப்பட்ட இந்த வழியில் ஒரு சிறிதளவு விலகினாலும் கூட அல்லாவின் கடுமையான கோபத்திற்கு ஆளாவார். தனது குழுவில் ஒரு அங்கத்தினராக அவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அதாவது குரானின் உரைப்படி செயலாற்ற இந்தக் குழு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

சரி குரான் என்ன சொல்கிறது என்றும் அஹ்லே சுனா நால் ஜமாத்லபாஹேன் ஜமியா மஜ்ஜித் ட்ரஸ்ட் (AHLE SUNNAH WAL JAMATHLABAHEEN JAMIA MASJID TRUST) என்ன சொல்கிறது என்றும் பார்ப்போம்.

 பாவங்களை மன்னிக்கச் சொல்லும் இந்த மஜ்ஜித் டிரஸ்டின் அறிவுரை குரானில் எழுதப்பட்டிருப்பதற்கு நேர் எதிராக உள்ளதாகும்.

 அதாவது அவர்கள் தபிலிகியின் உண்மையான நோக்கத்தைச் செய்வதற்கு முனைபவர்கள் அல்ல.

இந்தக் கூட்டம் அரசையும் மக்களையும் தவறான வழியில் கொண்டு செல்வதற்கான ஒரு உள்நோக்கத்தைக் கொண்டுள்ளது.

 இந்தக் கூட்டம் குழுமுவதற்கான உண்மையான காரணத்தை இது மறைக்கிறது.

அது என்ன? தொடர்ந்து பார்ப்போம்! –

தொடரும்

                             **

ஆதாரம், நன்றி ட்ரூத் வார இதழ்

Source : KOLKATA WEEKLY TRUTH Volume 93 Issue 24 Dated 269-2025

Leave a comment

Leave a comment