
Post No. 15,236
Date uploaded in London – – 3 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அபாயமான தீவிரவாதிகளின் கூட்டம்! ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை – 2
ச.நாகராஜன்
தப்லிகிக்கும் தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு
ஃப்ரெட் பர்டன், ஸ்காட் ஸ்டீவர்ட், மும்தாஜ் அஹ்மத், ஷிரீன் கான் பர்கி (Fred Burton, Scott Stewart, Mumtaz Ahmad and Shireen Khan Burki) ஆகியோர் தப்லிகி ஜமாத்திற்கும் ஜிஹாதிஸமிற்கும் இடையே உள்ள தொடர்பை இப்படி விவரித்துள்ளனர் : “அவர்கள் தங்களுக்கிடையே ஒரே முக்கியமான கொள்கையையும் இறுதியான குறிக்கோள்களையும் (தார் இஸ்லாமை விரிவுபடுத்துவது மற்றும் உலகளாவிய காலிபேட்டை (Global Caliphate) உருவாக்குவதை) பகிர்ந்து கொள்கின்றனர்.“
இப்படியாக தப்லிகி ஜமாத் (TJ), அல் கொய்தா லக்க்ஷர்- இ- தொய்பா ஆகி ) ஜிஹாதி அமைப்புகளுக்கு ஒரு வளமான செழிப்பான ஆள்சேர்க்கும் பணியை மறைமுகமாகச் செய்கிறது.
அல்கொய்தாவை பாகிஸ்தான் முழுவதும் எல்லா மதரஸாக்களிலும் ஆள் சேர்க்கும் பணியிலும் மசூதிகளில் நிதி சேர்க்கும் பணியிலும், TJ உதவுகிறது.
அலெக்ஸ் அலெக்ஸியவ் (Alex Alexiev) கூற்றுப்படி “80 சதவிகித இஸ்லாமிய தீவிரவாதிகள் தப்லிகி அணியிலிருந்து வருகின்றனர். பிரெஞ்சு உளவுப்பிரிவு அதிகாரிகள் இவர்களை தப்லிகி ஜமாத்தின் முன்கூடத்தில் உள்ளவர்கள் என்கின்றனர்.”
பாட்ரிக் சுகாதியோ (Patrick Sukhadeo) கூறுகிறார்: “TJ ஒரு ரகசிய ஸ்தாபனம். அதில் உள்ள முக்கியமானவர்கள் அது எப்படி இயங்குகிறது என்பதைச் சொல்வதில்லை. அது அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உள்ள அரசியல்வாதிகளுடனும் மற்றும் ராணுவத்தினரிடமும் அவர்கள் தொடர்பைக் கொண்டுள்ளார்கள்.
தப்லிகி ஜமாத் யுனைடெட் கிங்டத்தில் அப்பே மில்ஸ் மசூதியை (Abbet Mills Moasque) மிகப் பெரிய மசூதியாக விரிவுபடுத்துவதில் முயற்சி செய்து வருகின்றனது. இந்தத் திட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவே, இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அமெரிக்க அரசாங்கம தப்லிகி ஜமாத்தை 2001 செப்டம்பர் முதல் மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தப்லிகி ஜமாத்தின் உபதேசங்களும் நம்பிக்கைகளும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளில் சேர்வதற்கான அஸ்திவாரமாக அமைந்துள்ளது என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
இவர்கள் சொல்வது என்ன என்பதை அடுத்துப் பார்ப்போம்.
தொடரும்