Post No. 15,242
Date uploaded in London – – 5 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகளாவிய அமைதி என்பது முஸ்லீம்களுக்கு வெறுப்பான ஒரு விஷயம். எப்படி என்று அடுத்துப் பார்ப்போம்.
தப்லிகி இஸிதிமா -வை (Tablighi Izithima) நடத்தும் அமைப்பாளர்கள் இந்தக் கூட்டமானது உலக அமைதிக்காவும் உலகளாவிய சகோதரத்துவத்திற்காகவும் நடத்துவதாகக் குறிப்பிடுகின்றனர்.
இஸ்லாமானது அமைதிக்காகவோ, சகிப்புத்தன்மைக்காகவோ உலகளாவிய சகோதரத்திற்காகவோ இல்லை. சரித்திரம் நமக்குக் கூறுவது, இஸ்லாமானது முக்கியமாக (போர்களில்) வெற்றி பெற்றும், இனங்களைத் துடைத்தும், அரசியலில் கொண்ட ஆதிக்கத்தினாலும், மக்கள் தொகை இடம் பெயர்வதாலும் மட்டுமே விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதுவே மத்தியக் கிழக்கில் இஸ்லாமானது பிரதான இடத்தைக் கொண்டதற்கு வழி வகுத்தது.
இந்தியாவில் எட்டு நூற்றாண்டுகள் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றதில், அது ஐந்து கோடி பேர் இறப்பிற்குக் காரணமாக அமைந்தது என்பதை புரபஸர் K.S. லால் ஆவணப்படுத்தியுள்ளார்.
ஹிந்து மக்களின் மீது சொல்லவொண்ணாத் துன்பம் ஏற்படுத்தப்பட்டது.
அவர்கள் காசி விஸ்வநாதர் ஆலயம், அயோத்தி ராமர் கோவில், மதுரா கிருஷ்ணர் கோவில் போன்ற எல்லா முக்கியமான பெரிய கோவில்களையும் அழித்தனர்.
பிரபல சரித்திர ஆசிரியரான வில் டியூரண்ட், இப்படி குறிவைத்துச் செயல்படுவதைப் பற்றி மொத்தமாக இப்படிக் குறிப்பிடுகிறார்:
The Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex of order and freedom, culture and peace can at any moment be overthrown by barbarians invading form without or multiplying within,”
இப்போது இஸ்லாமியர்களுக்கு நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டம் இந்தியாவை வெல்வது தான். இதுவே அவர்களின் லட்சியம் மற்றும் பணி. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் இந்த எண்ணத்தை அவர்கள் ஒளித்து வைக்கவில்லை.
இதனால் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு என்ன ஆபத்து என்பதை அடுத்துப் பார்ப்போம். அத்துடன் இந்தத் தொடரை முடிப்போம்.
ஹிந்துக்களுக்கு மிகவும் புனிதமான தலம் திருமலை – வேங்கடாஜலபதி எழுந்தருளி அருள் பாலிக்கும் இடம் இது.
முஸ்லீம்கள் இந்தத் திருப்பதி பகுதிக்கு தங்கள் மக்களை ஏராளமான அளவில் கூட்டமாக அனுப்பி, அந்தப் பகுதியின் மக்கள்தொகை எண்ணிக்கையை மாற்றத் திட்டமிடுகின்றனர்.
இதர புனித தலங்களில் செய்ததைப் போல திருப்பதி வேங்கடாஜலபதியின் புனிதத்தைப் பாழ்படுத்தி புனித நகரைத் தங்கள் கைவசம் கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.
Global Hindu Heritate Foundation ஆந்திர அரசை கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.
1. தப்லிகி இஸிதிமா (Tablighi Izithima) நடத்த அனுமதிக்கக் கூடாது.
2. மாநிலம் முழுவதும் தீவிரவாதிகளின் செயல்களைக் கண்காணிக்க வேண்டும்.
3. திருமலையில் நமாஸ் செய்வது போல இருக்கும் முஸ்லீம்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.
4. இதர நாடுகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு வரும் ஆவணமே இல்லாத முஸ்லீம்களின் நுழைவைக் கண்காணிக்க வேண்டும்.
Global Hindu Heritate Foundation இஸ்லாமின் சரித்திரத்தை உங்கள் அலுவலகம் கவனமாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறது. எண்ணூறு வருடங்களாக இந்தியாவிற்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள், இந்தியாவை எப்படி இஸ்லாமிய நாடாக ஆக்கப் போகிறோம் என்ற முஸ்லீம் தலைவர்களின் திட்டம் ஆகியவற்றைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
நாம் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். இந்த மதம் பற்றிய வரலாற்றை நாம் எப்போதெல்லாம் மறக்கின்றோமோ அப்போதெல்லாம் இதே கதி தான் நமக்குக் கிடைக்கும்.
வரலாற்றின் அடிப்படையிலும், இஸ்லாமின் கொடூரம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றின் அடிப்படையிலும் அது எப்படி இந்த புனித நகரைப் பாதிக்கும் என்பனவற்றின் அடிப்படையிலும் இந்த வேண்டுகோளை தயவு செய்து பரீசிலிக்க வேண்டும்.
தங்கள் உண்மையுள்ள
பிரகாஷ்ராவ் வெலகபுடி பி ஹெச். டி
தலைவர், உலக ஹிந்து பண்பாட்டு அறக்கட்டளை
(Prakashrao Velagapudi Ph.D)
President, Global Hindu Heritate Foundation
பிரதிகள் கீழ்க்கண்டோருக்கு அனுப்பப்படுகின்றன
Sri Pawanb Kalyan, Dy CM
Sri B R Naidy (ii) TTD Board Chairman
The commissioner, Municipal Corporation, Tirupati
The Dy Superintendent of Police, Tirupati
The Inspector of Police, Chandra Giri, Tirupati District
இந்தத் தொடர் முற்றும்
**
ஆதாரம், நன்றி ட்ரூத் வார இதழ்
Source : KOLKATA WEEKLY TRUTH Volume 93 Issue 24 Dated 26–9-2025
அன்பர்கள் இந்த வேண்டுகோளில் இருக்கும் உண்மைகளை சற்று சிந்திக்க வேண்டும் இல்லையா?