பகவத் கீதையிலிருந்து உத்வேகம் பெற்ற வள்ளுவர்!பிறவிப் பெருங்கடல்/சம்சார சாகரம்!! (Post.15,259)


Written by London Swaminathan

Post No. 15,259

Date uploaded in London –  10 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சம்சார சாகரம்/ பிறவிப் பெருங்கடல்  என்று ஏன் பெயர்வந்தது ?

SAMSAARA

சம்சார சாகரம் என்ற சொற்களை முதலில் பயன்படுத்தியவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் 12-7 அவர் இதை 5000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். பின்னர் காளிதாசன் ரகு வம்ச 12-60 காவியத்தில் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அதற்குப்பின்னர் வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பிறவிப் பெருங்கடல் என்று அதைத் தமிழாக்கி நமக்குச் சொன்னார் வள்ளுவர் பகவத் கீதையை மனப்பாடம் செய்து அப்படியே சொன்னதை பல குறள்களில் காண்கிறோம் தானம் தவம் என்று வார்த்தைகளை வரிசை பிசகாமல் கீதையிலிருந்து நமக்குத் தருகிறார் வள்ளுவர் .

குடும்ப வாழ்வினை சம்சார சாகரம்- பிறவிப் பெருங்கடல் என்று இந்துக்கள் ஏன் சொன்னார்கள்?

1. இகலோக வாழ்வும் எப்போதும் அலை வீசும் இடம்- அதாவது துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும்

2. கடல் போலவே குடும்ப வாழ்வு – ஆழம் தெரியாதது ; கங்கு கரை காண முடியாதது .

3. கடல் போல பயங்கர சுறாமீன்கள் நிறைந்தது

4.எளிதில் கடக்க முடியாதது; ஞானப்படகு (பகவத் கீதை 4-36) வேண்டும் அல்லது நீந்தத் தெரிய வேண்டும்;  இது குறுகிய கடல் பகுதியில் மட்டுமே சாத்தியம்!

5. ஐந்தாவது, அலை ஓய்ந்து எப்படி சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாதோ அதுபோலத்தான் குடும்ப வாழ்வும்! அதை உணர்ந்து பக்தி மார்க்கத்தில்- நாம சங்கீர்த்தனத்தில்- ஈடுபட வேண்டும். அது கடல் போல இரைச்சலாகத்தான் இருக்கும் ; பரவாயில்லை

6. கடைசியாக கடலின் அழகினை அதற்கு வெளியே இருந்து ரசிப்பது போல ரசிக்கவும் செய்யலாம்; எப்போது?

சம்சாரக் கடலிலிருந்து வெளியே வந்தபோது!

7. விவேக சூடாமணியில், கடலினை ஆனந்த சாகரத்துக்கும் , கருணைக் கடலுக்கும் ஆதி சங்கரர் ஒப்பிடுகிறார் சந்நியாசியின் ஆசைகளாலாகிய நதிகள், கடலிலே ஐக்கியமாகிவிடும் கடலில் லிழுந்த ஆலங்கட்டி மழைபோல அது தனது தனித்தன்மையை இழந்து விடும் என்கிறார்

****

சம்சாரம் என்றால் என்ன ?

Sanskrit dictionary

[«previous (S) next»] — Samsara in Sanskrit glossary

Saṃsāra (संसार).—

1) Course, passage. வழி, பாதை

2) The course or circuit of worldly life, secular life, mundane existence, the world; 

உலக வாழ்வு न स तत् पदमाप्नोति संसारं चाधिगन्छति (na sa tat padamāpnoti saṃsāraṃ cādhiganchati) Kath. 3.7; असासः संसारः (asāsaḥ saṃsāraḥ) Uttararāmacarita 1; Mālatīmādhava (Bombay) 5.3; संसारधन्वभुवि किं सारमामृशसि शंसाधुना शुभमते (saṃsāradhanvabhuvi kiṃ sāramāmṛśasi śaṃsādhunā śubhamate) Aśvad.22; or परिवर्तिनि संसारे मृतः को वा न जायते (parivartini saṃsāre mṛtaḥ ko vā na jāyate) Pañcatantra (Bombay) 1.27.

3) Transmigration, metempsychosis, succession of births. பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருதல் 

4) Worldly illusion. நிச்சயமற்ற வாழ்வு

Samsarasagara in Hinduism symbolizes the endless cycle of birth and rebirth within the illusionary realm, portrayed as an expansive sea, representing the ongoing journey of the soul through various existences.

***

பகவத் கீதை என்ன சொல்கிறது?

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।

भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ १२-७॥

teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt

bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7

என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன். பகவத் கீதை 12-7

***

ரகுவம்ச காவியத்தில், காளிதாசன் என்ன சொல்கிறான் ?

ப்ரவ்ர்த்தா உபலப்தாயாம் தஸ்யாஹா சம்பாதி தர்சநாத்

மாருதி: சாகரம் தீர்ண: சம்சாரமிவ நிர்மம:

சம்பாதியைக் கண்டவுடன், சீதாதேவி பற்றிய செய்தியைக் கேட்டவுடன் அநுமன் , உலகப் பற்றில்லாத ஒருவன் சம்சாரக்  கடலினை எவ்வாறு தாண்டுவானோ அப்படித் தாண்டினான்

प्रवृत्तावुपलब्धायाम् तस्याः संपातिदर्शनात्।

मारुतिः सागरम् तीर्णः संसारमिव निर्ममः॥ १२-६०

pravṛttāvupalabdhāyām tasyāḥ saṁpātidarśanāt|

mārutiḥ sāgaram tīrṇaḥ saṁsāramiva nirmamaḥ || 12-60

On meeting sampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]

****

வள்ளுவர் செப்புவது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் -குறள் 10

இறைவனுடைய திருவடிகளை  நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

***

அருணகிரிநாதர் உரைப்பது என்ன?

திருத்தணிகை திருப்புகழ்

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி

     நிசமான தெனப்பல பேசி …… யதனூடே

நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி

     நினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி

     சலமான பயித்திய மாகி …… தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி

     தலைமீதில் பிழைத்திட வேநி …… னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத

     கவினாரு புயத்திலு லாவி …… விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை

     கடனாகு மிதுக்கன மாகு …… முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துடன் வாழ …… அருள்வேளே

பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு

     பவரோக வயித்திய நாத …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நிலையாத சமுத்திரமான … அகலம், ஆழம் இவ்வளவு என்று

காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற

சமுசார துறைக்கணின் மூழ்கி … சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே

மூழ்கி,

நிசமானதெனப் பல பேசி … மெய் போன்ற பல பொய்களைப் பேசி,

அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி … அந்த சம்சாரக்

கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,

பெரியோர்களிடைக் கரவாகி … பெரியோர்களின் கூட்டத்தில்

சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,

நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் … நல்ல

நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,

தலையான வுடற்பிணி யூறி … உடலில் முதன்மையான நோய்கள்

வந்து தாக்கவும்,

பவநோயின் அலைப்பல வேகி … இந்த சம்சார சாகரத்தில் பிறவி

நோய் என்னும் பல அலைகள் வீசவும்,

சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் … கோபம்

கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,

பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து … பிறவியின் மூல காரணத்தை

ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,

உனையோதி தலைமீதில் பிழைத்திடவே … உன் புகழ் ஓதி

இவ்வுலகில் உய்யுமாறு

நினருள்தாராய் … உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.

கலியாண சுபுத்திரனாக … மேன்மை தங்கிய கல்யாண

மாப்பிள்ளையாகவே

குறமாது தனக்கு விநோத … குறக் குல வள்ளி தேவியிடத்தில்

என்றும் விளங்கி உல்லாசமாக,

கவினாரு புயத்தில் உலாவி விளையாடி … அழகு நிறைந்த

அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து

களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை … மகிழும்

உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை

சுகப்பட வேவை கடனாகும் … இன்பம் அடையும்படியாகவே

வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும்.

இதுக்கன மாகு முருகோனே … அவ்வாறு என்னை அருளினால்

அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே.

பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்

கூறி … பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன்

திருப்புகழைப் பாடி

படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே … இவ்வுலகிலே

உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து

வாழும்படியாக அருளும் செவ்வேளே,

சிவலோக மெனப்பரி வேறு … இதுவே பூலோகத்தில் உள்ள

சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க

பதியான திருத்தணி மேவு … திருத்தலமாகிய

திருத்தணிகையில் வாழ்கின்ற,

பவரோக வயித்திய நாத பெருமாளே. … பிறவிப் பெரு

நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.

*****

அப்பர் அருளிய தேவாரம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப்

பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை

மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
பேரானை புள்ளிருக்கு வேளூரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே(6-548)

புள்ளிருக்கு வேளூர் = வைத்தீஸ்வரன்கோயில் 

***

ரகுநாயகா நீ பாத – தியாகராஜர் கிருதி

பல்லவி

ரகு நாயக நீ பாத யுக

ராஜீவமுல நே விட ஜால ஸ்ரீ (ரகு)

அனுபல்லவி

அக ஜாலமுல பார-தோலி

நன்னாதரிம்ப நீவே கதி காத ஸ்ரீ (ரகு)

சரணம்

பவ ஸாகரமு தாட லேக நே

பலு காஸி-படி நீ மருகு ஜேரிதினி

அவனிஜாதிபாஸ்ரித ரக்ஷக

ஆனந்த-கர ஸ்ரீ த்யாகராஜ நுத (ரகு)

raghu nāyaka, nī pāda yuga

rājīvamula nē viḍa-jāla śrī

O best among Raghus! Your pair of

lotus-feet, I cannot let go of.

Anupallavi

agha jālamula pāra tōli nannu

ādarimpa nīvē gati kādā śrī

To drive afar my accumulated sins

And care for me, aren’t you the only refuge?

Charanam

bhavasāgaramu dāṭalēkanē

palu gāsibaḍi nī marugu jēriti

avanijādhipa, śritarakṣaka,

ānandakara, śrī tyāgarājanuta

Unable to cross the worldly ocean,

After much pain, your shelter did I reach,

Husband of Earth’s daughter, Protector of those approaching you!

Maker of joy, Praised by Tyagaraja!

–subham—-

Tags– பகவத் கீதை,  வள்ளுவர் பிறவிப் பெருங்கடல், சம்சார சாகரம்,  ஏன் பெயர் வந்தது ? தியாகராஜர், அருணகிரிநாதர்

Leave a comment

Leave a comment