மஹாகவி பாரதியார் : சில கருத்துக்கள்!(Post No.15,261) Bharati’s Birth Day Article

மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின: தமிழில் பிரதமர் மோடி பதிவு; அமித்ஷாவும் தமிழில் வாழ்த்து !

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,261

Date uploaded in London –   11 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹாகவி பாரதியார் : சில கருத்துக்கள்! 

ச. நாகராஜன் 

காலத்தை வென்ற மகாகவிகளுள் மகாகவி பாரதியாரும் ஒருவர். 

அவரது கவிதை நயம் பற்றிப் பல நூல்கள் வெளி வந்து விட்டன. 

ஆனால் அவரைப் பற்றிய முழுத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டும்.

 காலவரிசைப் படுத்தப்பட்ட மகாகவியின் படைப்புகள் – கவிதைகள், கட்டுரைகள், கதைகள், அவர் நடத்திய இதழ்களில் அவர் எழுதிய செய்திகள் ஆகியவை முறையாகத் தொகுக்கப்பட வேண்டும். 

இந்த முயற்சியை மேற்கொண்டவர்கள் பலர்.

 அவர்களாலும் முழுமையாக அனைத்து படைப்புகளும் தொகுக்கப்படவில்லை.

 தற்போதைய தமிழக அரசு இதை நிச்சயம் செய்யாது. ஏனெனில் இதனால் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. 

ஆகவே பாரதி சிந்தனையாளர்கள் இணைய வேண்டும். 

சமீபத்தில் வெளியான ஒரு புத்தகத்தில் பாரதியார் ராமரைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்ற குறிப்பைக் கண்டு சிரித்தேன். அவர் பாரதியாரைச் சரியாகவும் படிக்கவில்லை; மற்றவர்களுக்கு உண்மையையும் எடுத்துச் சொல்லவில்லை. 

ஆகவே சரியாக பாரதியைப் படித்தவர்கள், புரிந்து கொண்டவர்கள் மட்டுமே இணைந்த குழு ஒன்று உருவாகுமா? 

வருடவாரியாக அவரது படைப்புகள் உரிய ஆவணங்களைச் சரி பார்த்த பின் அதிகாரபூர்வமான தொகுப்பு வெளி வருமா? 

பல பாரதி ஆர்வலர்கள் வெளி நாடுகளில் உள்ள நூலகங்களுக்கும் சென்று ஆவணங்களைச் சரி பார்த்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். 

இந்த வகையில் ஏராளமான பாரதி நூல்களின் தொகுப்புகள்

சேகரிக்கப்பட்டபோதிலும் அது போதுமானதாக இல்லை. 

திரு ரா.அ.பத்மநாபனில் ஆரம்பித்து இன்று வரை பலரும் எழுதியுள்ள நூல்களை ஆய்வு செய்து பல தலைப்புகளில் நூல்களை வெளியிடலாம். 

பாரதியாரும் குடும்பமும்

பாரதியாரும் நண்பர்களும்

பாரதியாரின் முற்பகுதி வாழ்க்கை (எட்டயபுரம், காசி)

பாரதியாரின் புதுவை வாழ்க்கை

பாரதியாரின் சென்னை வாழ்க்கை

பாரதியாரும் பல்வேறு தலைவர்களும் (மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்டோர்)

பாரதியாரும் அரவிந்தரும்

பாரதியாரின் கவிதைகள்

பாரதியாரின் கட்டுரைகள்

பாரதியாரின் கதைகள்

பாரதியாரின் நாடகங்கள்

பாரதியாரின் பத்திரிகைகள்

பாரதியாரின் பத்திரிகை மொழி பெயர்ப்புகள்

பாரதியாரின் இசை ஞானம்

பாரதியாரின் தமிழ் வளர்ச்சி பற்றிய முயற்சி

பாரதியாரின் பல்வேறு மொழிகளில் மொழிப் புலமை

பாரதியாரும் பாரதக் கவிஞர்களும்

பாரதியாரும் உலகக் கவிஞர்களும்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மகாகவி பாரதியார் தோற்றம் 11 டிசம்பர் 1882

மறைவு 11 செப்டம்பர் 1921.

ஆண்டுகள் நூறுக்கும் மேலாக ஓடி விட்டன.

நல்ல குழு ஒன்று அமைந்து எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரபூர்வமான படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டால் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் மகத்தான அஞ்சலியாக அமையும்.

வாழ்க பாரதி நாமம். வெல்க பாரத தேசம்!

**

Leave a comment

Leave a comment