Space Travel ‘ஸ்பேஸ் டிராவல்’ இரண்டு ஆழ்வார் பாடல்களுக்கு புதிய பொருள்! (Post.15,285)

Written by London Swaminathan

Post No. 15,285

Date uploaded in London –  18 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விண்வெளிப்பயணம் “ஸ்பேஸ் டிராவல்” பற்றி நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் பாடினார்கள். ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை , அதாவது 48 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன் ஆனால் பெரியாழ்வார் பாடலில் ஒரு நொடிப்பொழுதில் விண்வெளிப்பயணம் முடிந்ததாக ஒரு பாடலில் கண்டவுடன் மீண்டும் சம்ஸ்க்ருத அகராதியை ஆராய்ந்தேன். புதிய உண்மை புலப்பட்டது; ரிக்வேதத்தில் முகூர்த்தம் என்பதை ஒரு நொடி என்றே ரிஷிகள் பாடியுள்ளனர் ஆகவே பெரியாழ்வார் சொன்னதும் சரி; நம்மாழ்வார் சொன்னதும் சரி. அதாவது ஒரு நொடிப்பொழுதில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் Space Shuttle ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்தில் யமலோகத்துக்குப் போய் இறந்த பிராமணச் சிறுவர்களை உயிரோடு பூமிக்குத் திரும்பி அழைத்து வந்துவிட்டனர் ஆகையால் ஐன்ஸ்டைன்  மற்றும் நாசா விஞ்ஞானிகள் சொன்னது எல்லாம் தப்பு !

(ஜெர்மன் மொழியில் அய்ன்- என்றால் ஒன்று ; ஸ்டைன் என்றால்  ஸ்டோன் ; ஆக அவர் பெயர் ஒற்றைக் கல் !)

****

Space Travel from Periyalvar poem

துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
      தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
      நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
      
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7.

70. You listened to the words of the strong cowherds,

fought and controlled seven strong bulls

and married the dark-haired Nappinnai, lovely as a peacock.

You went on a bright shining chariot,

searched for the lost children,

found them and brought them back to their mother.

O dear one, shake your head and crawl for me once.

You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

****

403:

பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்

இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்

மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்

சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2.

***

இறை = அணு , அற்பம், சிறுமை ; இன்னும் பல பொருள்களை அகராதி தருகிறது

403. The Thiruppadi of the lord

who brought the four children of his guru

back to life quickly

(Tamil Word IRAIP POZUTHU)

when they could not be alive as soon as they were born

is Srirangam where good Vediyars

skilled the Vedas live,

making sacrifices with fire

and receiving guests happily.

***

Muhurta in Sanskrit dictionary

[«previous (M) next»] — Muhurta in Sanskrit glossary

Muhūrta (मुहूर्त).—[hurch-kta dhātoḥ pūrvaṃ muṭ ca Tv.]

1) A moment, any short portion of time, an instant; नवाम्बुदानीकमुहूर्त– लाञ्छने (navāmbudānīkamuhūrta- lāñchane) R.3.53; संध्याभ्ररेखेव मुहूर्तरागाः (saṃdhyābhrarekheva muhūrtarāgāḥ) Pañcatantra (Bombay) 1.194; Me-ghadūta 19; Kumārasambhava 7.5.

2) A period, time (auspicious or otherwise).

3) A period of 48 minutes.

Muhūrta (मुहूर्त).—[masculine] [neuter] moment, instant; hour ( = 1/30 day); [instrumental] & [ablative] in a moment, after a little while, immediately, di-rectly.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dic-tionary

Muhūrta (मुहूर्तas mentioned in Aufrecht’s Catalogus Catalogorum:—jy. See Matsyendramuhūrta.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Aufrecht Catalogus Catalogorum

1)     Muhūrta (मुहूर्त):—[from muh] a m. n. a moment, instant, any short space of time, [Ṛg-veda] etc. etc. ([in the beginning of a compound], in a mo-ment; tena ind. after an instant, presently)

***

ஒருவரை ஒளி வடிவில் மாற்றி ‘மனோ வேக’த்தில் அனுப்ப முடியும்

. இதை சோம ரசம் பற்றிய பாடல்களிலும் காண முடிகிறது. தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றுதான் பொருள். அதீத சக்தி படைத்தோர் இப்படி ஒளியாக மாறி, ‘மனோ வேக’த்தில் செல்லலாம். த்ரி லோக சஞ்சாரியான நாரதர் இப்படிச் செல்லுவதை பழைய திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இப்போது மேலை நாடுகளில் விஞ்ஞான புனைக்கதை படங்களிலும் வெளிக் கிரஹ வாசிகள் இப்படி திடீரென்று ஒளி ரூபத்தில் வந்து செல்வதைக் காட்டுகிறார்கள். இது வெள்ளைக்காரன்  நம்மைக் ‘காப்பி’ (COPY CAT) அடித்து செய்யும் பல செயல்களில் ஒன்று.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகம் சரியே. அதை மிஞ்ச மனத்தால் முடியும். இதனால்தான் ராமாயண மஹாபாரதத்திலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் மனோ வேகம் (SPEED OF MIND) என்ற சொல் வருகிறது. இதனால் எங்கும் நொடிப் பொழுதில் செல்ல முடியும்; நமக்கு அருகிலுள்ள நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரை (PROXIMA CENTAURI) . 4.25 ஒளி ஆண்டு தொலைவில் (LIGHT YEAR) உளது. இதற்குப் போய்வர 9 ஒளி ஆண்டுகள் தேவை. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் சென்றால் !

மனிதன் ஏறிய விண் கலமோ இதுவரை மணிக்கு 26000 மைல்கள்தான்  சென்றுள்ளது. ஆனால் மனோ சக்தி உடையோர் ஒரு நொடிப்பொழுதில் சென்று திரும்பி விடலாம். அங்கு ஏதெனும் செய்ய நினைத்தால் ஒளி ரூபத்தில் சென்று செய்யலாம். இப்படி ஒளி ரூபத்தில் மாறும் கடவுளர், சோமம் என்னும் மூலிகை முதலியன பற்றி ரிக் வேதம் நெடுகிலும் காணலாம்.

***

என்னுடைய பழைய கட்டுரைகள்

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு: நம்மாழ்வாரும் சொல்கிறார்! (Post 8687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8687

Date uploaded in London – –15 SEPTEMBER 2020  

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு :நம்மாழ்வாரும் சொல்கிறார்

3107 இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

      உலகும் கழிய

படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற

      திண் தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

      வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி

      ஒன்றும் துயர் இலனே (5)                

திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224

பொருள்

அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி  பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்று பொருள்.ஆகவே நாம் ஒளி ரூபத்தில் ஒளி வேகத்தில் அல்லது அதற்கும் மேல், மனோ வேகத்தில் பயணம் செய்யலாம் என்பது இந்தப்பாடலிலிருந்து விளங்குகின்றது

*****

நம்மாழ்வார் திருவாய் மொழியில் அற்புதமான கதை சொல்கிறார்

என்ன கதை ?

YOU CAN TRAVEL BACK AND FORTH IN TIME; YOU CAN INTERFERE IN THE PAST EPISODES

நம்மாழ்வார் நமக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இந்த சம்பவம் நடந்ததோ 5125 ஆண்டுகளுக்கு முன்னர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தெளிவான அண்ட  வெளிப் பயணம் –  பற்றி விவரம் உளது

இது பாகவத புராணத்தில் தசமஸ்கந்தத்திலும், மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்சத்திலும் உளது

ஒரு நல்ல பிராமணனின் 10 குழந்தைகளும் அகால மரணம் (UNTIMELY DEATH OF TEN CHILDREN)  அடைந்தன. அவரை ஏற்றிக்கொண்டு ,அர்ஜுனனை துணைக்கு அழைத்துக் கொண்டு கண்ணன் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE — விண்வெளி ஓடத்தில் – புறப்படுகிறார். ஒரே முகூர்த்தத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் பரமபதம் சென்று ஜோதி ரூபத்தில் இருந்த விஷ்ணுவை தரிசித்து அங்கு இருந்த பத்து பிள்ளைகளையும் உடலோடு பூமிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

இதில் ஐன்ஸ்டைன் சித்தாந்தத்தைப் பொடிப்பொடியாக்கும் பல சொற்கள் உள்ளன  48 நிமிடங்களுக்குள் பரம பதம் சென்று மதியத்துக்குள் திரும்பி பூமிக்கு வந்தனர். உடலோடு பத்து பிள்ளைகளும் பூமிக்கு வந்தனர். பரமபதத்தில் ஜோதி ரூபமாக கடவுள் இருந்தார்.

ஸ்பேஸ் ஷாட்டிலில் 13 பேர் திரும்பி வந்தனர் .

பரம பதம் எங்கே உள்ளது?

திருவோண நட்சத்திரம் முதல் வேகா என்னும் அபிஜித் நட்சத்திரம் வரை பல நட்சத்திரங்கள் விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. அவை அனைத்தும் 25 ஒளி ஆண்டு முதல் 50 ஆண்டு (Light years) தொலைவில் உள்ளன. ஐன்ஸ்டன் சொல்லும் ஒளிவேகத்தில் சென்றாலே 25 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும். இவர்களோ 48 நிமிடத்துக்குள் போய்விட்டனர்.

முடிவுரை என்ன?

YOU CAN TRAVEL FASTER THAN LIGHT !

ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஸ்பேஸ் ஷட்டில்களை இந்துக்கள் அறிவர்.

அதில் 13 பேர் வரை செல்லலாம்.

உடலுடன் பூமிக்குத் திரும்பிவரலாம்.

இறந்த பிள்ளைகள் பூமியில் இறந்தார்களே  தவிர வேறு இடத்தில் உடலுடன் வசித்தனர் .

இந்தக் கதை எப்படி முடிகிறதென்றால் வைகுண்டத்தைக் காணட்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே பிள்ளைகளின் உயிரை வாங்கியதாக விஷ்ணு சொல்கிறார்.

இனி இதன் பின்னுள்ள சித்தாந்தங்களை மீண்டும் காண்போம்

ஐன்ஸ்டைன் (Albert Einstein)  என்னும் விஞ்ஞானி  சில புதிய தத்துவங்களை உலகிற்கு உரைத்தார். இவற்றை சார்பியல் கொள்கை (THEORY OF RELATIVITY)  என்பர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்தப் பிரபஞ்ச்சத்தில் ஒளிதான்  அதிக வேகத்தில் செல்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் . இந்த வேகத்தில் செல்லவும் முடியாது. இதை மிஞ்சவும் முடியாது என்பது அவர்தம் கொள்கை . இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்கலம் கூட மணிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் தான் செல்கிறது. இது சூரியனை நோக்கிச் செல்லும் அமெரிக்க விண்கலம் . ஒரு மணி என்பதில் 3600 நொடிகள் இருப்பதை நம் நினைத்துப் பார்த்தால் மணிக்கு 2 லட்சம் மைல் என்பது இமயமலைக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது புலப்படும்  .

ஆக அறிவியல் சொல்லும் விஷயங்களுக்கு மேலே, நாம்  பல படிகள் நம் மேலே ஏறிவிட்டோம்.

*****

ஐன்ஸ்டைன் இன்னும் இரண்டு வியப்பான விஷயங்களையும் சொன்னார்.

ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டுக் கடிகாரத்தை வையுங்கள் . அதை விட  மிகவும் மெதுவாகச் செல்லும் இன்னொரு ராக்கெட்டில் உங்கள் வீட்டிலுள்ள இன்னொரு கடிகாரத்தை வையுங்கள் . காலை 10 மணி காட்டும் பொழுது இரண்டு விண்கலத்தையும் ஏவினால் ஒளிவேக ராக்கெட்டில் கடிகாரம் அதே மணியைக் காட்டும். ஆனால் இன்னொரு ராக்கெட்டில் கடிகாரம் வேகமாகச் செல்லும் (TIME DILATION) . அதாவது ஒளிவேக ராக்கெட்டில் போனால் நீங்கள் என்றும் 16. மார்க்கண்டேயன் போல எப்போதும் வாழலாம்.

ஐன்ஸ்டைன் கொள்கையை விவாதிப்போர் இன்று வரை ஒளிவேகத்தில் செல்ல முடியுமா அல்லது சுருக்கப் பாதை ஏதேனும் உண்ட என்று சொல்ல முடியவில்லை. சுவையான அறிவியல் புனைக்கதைகளை SCIENCE FICTION NOVELS  மட்டும் எழுதி வருகின்றனர்.

ஐன்ஸ்டைன் மறறொரு சார்பியல் கொள்கையையும் வெளியிட்டார். ஈர்ப்பு விசையானது ஒளியையும் பாதிக்கும் அதிக ஈர்ப்பு விசை இருந்தால் அது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் பிடித்துவிடும் என்றார். இதை வைத்து இப்பொழுது கருந்துளைகள்B LACK HOLE SECRETS  ரகசியங்களை ஆராய்ந்துவருகிறார்கள்

இந்துக்களின் நூல்களில் ஐன்ஸ்டைன் கொள்கைப் பிடிப்பாளர்களின் வாதங்களைத் தகர்க்கின்றனர்.

அது எப்படி?

ஐன்ஸ்டைன் ஆதரவாளர் கூற்றுப்படி “காலத்தில் பின்னோக்கி வேண்டுமானால் செல்லலாம். ஆனால் அதில் தலையிட முடியாது.”

என்ன அர்த்தம்?

 நான் வேகமாகச் செல்லும் கால யந்திரத்தைக் கண்டுபிடித்து அதில் போய் என் நண்பனின் தாத்தாவைக் கொன்றுவிடுகிறேன் என்று கற்பனை செய்யுங்கள் அப்படிச் செய்யமுடியுமானால் எனக்கு முன்னே நிற்கும் என் நண்பன் எப்படிப் பிறக்க முடியும்? நான்தான்  அவனது தாத்தா எல்லோரும் இல்லாமல் செய்துவிட்டடேனே !!!.

ஆனால் இந்துக்கள் சொல்கிறார்கள் ; காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியும். அதில் தலையிடவும் முடியும் . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இரண்டு சைவப் பெரியார்கள் காலப்பயணம் செய்ததைக் காட்டினேன் TIME TRAVEL BY TWO TAMIL SAINTS IN 2012 IN THIS BLOG.

இறந்துபோன ஒருவரை, திரு ஞான சம்பந்தர்,  கொண்டுவந்தபோது அவர் இன்று எந்த வயதில் இருப்பாரோ அதே வயதில் கொண்டுவருகிறார். பூம்பாவை என்னும் சென்னை நகரச் சிறுமி இறந்து போன சாம்பலை அவர் தந்தை கொண்டுவந்து காட்ட , அதன் மீது சம்பந்தர் ஒரு பதிகம் பாட , அந்தப் பெண் உயிருடன் வந்தாள் .

எப்படி வந்தாள் ?

13 ஆண்டுக்கு முன்னர் செத்துப் போன சிறுமியாக வரவில்லை. டீன் ஏஜ் கேர்ளாக TEEN AGE GIRL — பருவக் குமரியாக வந்தாள் .

இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன .

1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ஓளியின் வேகத்தை மிஞ்சி எங்கோ மேலுலகத்தில் இருந்த ஒருவரைக் கொண்டுவரமுடியும்.

2.முன்னர் நடந்த மரணத்தில் தலையிடவும், அதை மாற்றவும் முடியும்.

ஆக விஞ்ஞானிகளின் கொள்கை தவிடு பொடி!!! . இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!!!

இதே போல சுந்தர மூர்த்தி நாயனார் செய்த அற்புதத்தையும் விளக்கி இருந்தேன் . அவர் என்ன செய்தார?. ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான  வளர்ச்சி அடைந்திருந்தது என்றும்  கதை போகிறது!

இந்த இரண்டு சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன?

காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். முன்பு நடந்ததை மாற்றலாம். அப்படியானால் நம் உயிர்கள் வேறு ஒரு இடத்தில் உருப்படியாக இருக்கின்றன. இங்கு நாம் கண்டதெல்லாம் காலம் என்னும் மாயப்   (TIME IS AN ILLUSION ) புகைதான்.

இதோ இன்னொரு கொள்கை தவிடு பொடியாவதைக் காண்போம்

அர்ஜுனன் போர் செய்ய மறுக்கிறான். என் குருவையும் உறவினர்களையும் எப்படிக்கொல்லுவேன் என்று மயக்கம் உறுகிறான்.

“டேய் மச்சான!!! ; நீ ஒன்றும் அவர்களைக் கொல்லப்போவத்தில்லை. இதோ பார் ! என்று விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார் . அதில் ஏற்கனவே துர்யோதனாதிகள் கொல்லப்பட்டதை காண்கிறான் அர்ஜுனன். அந்த உருவத்தில் இறந்த, நிகழ், வருங்காலம் ஆகிய மூன்று நிலைகளையும் காட்டுகிறான் ஆக கண்ணன் போன்றோர் வருங்காலத்துக்கும் செல்ல முடியும் என்று காட்டுகின்றனர்.(YOU CAN TRAVEL TO FUTURE AND SEE THE PAST)

இதிலும் அறிவியல் கொள்கை தவிடு பொடியாகிறது. இது போன்றதே நம்மாழ்வார் சொல்லும் கதையும்.

இந்துக்களின் கொள்கைப்படி வேகமான வஸ்து  ஒளி அல்ல . மனம்தான் வேகமானது. மனோ வேகமே பெரிது என்று மஹாபாரத எக்ஸப் ப்ரச்னத்தில் காண்கிறோம்.

இது தவிர நாரதர் நொடிப்பொழுதில் மூன்று உலகங்களுக்கும் சஞ்சரிப்பதையும் INTER GALACTIC TRAVEL OF NARADA  , வன பர்வத்தில் அர்ஜுனன் , மாதலி செலுத்தும் –ஸ்பேஸ் ஷட்டிலில் — இந்திர லோகம் சென்று  வந்ததையும்  அறிகிறோம்.

******

TIME DILATION IS HOUSEHOLD STORY IN INDIA

ஐன்ஸ்டைன் சித்தாந்தம் அத்தைப் பாட்டி கதை

இந்து மதத்தில் ஐன்ஸ்டைன் சித்தாந்தம் ஒரு அத்தைப் பாட்டி கதை யாகும்!! சின்னப் பேரப்பிள்ளைகளுக்கு , பள்ளிக்கூடமே போகாத பாட்டி சொல்லும் கதையில் ஐன்ஸ்டைனின் YHEORY OF TIME DILATION டைம் டைலேஷன் தியரி உள்ளது. நமக்கும் தேவர்களுக்கும் காலம் வேறு. பிரம்மாவுக்கு அதை  வீட வேறு. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் காலம் பெரிய எண் . விரிவடைந்த எண் DILATED . அவர்களுக்கு அது ஒரு சாதாரண நாள். ஒரு பொருள் வேகமாகச் செல்லச் செல்ல அது குறைவான காலத்தைக் காட்டும் நமக்கு அது பெரிதாகிக் கொண்டே போகும்.

எல்லாப் புராணங்களிலும் உள்ள இந்தக்கதையை,  பாட்டிமார்களும் பவுராணிகர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.

60 விநாழிகை = 1 நாழிகை

60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்

30 நாள் = 1 மாதம்

12 மாதங்கள் = 1வருடம்

60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)

3000 சுழற்சிகள் = 1 யுகம்

4 யுகங்கள் = 1 சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்

14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்

18 சதுர் யுகம் = 1 மனு

இந்த பிளாக்கிலுள்ள ரேவதி நட்சத்திரக் கதை இதை உண்மை என்றும் காட்டுகிறது. கீழே LINK லிங்க் கொடுத்துள்ளேன்.

*******

ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED

பெரிய பெரிய கொள்கைகளை எல்லாம் 100 ஆண்டு பழமையான பழமொழி அகராதி புத்தகத்திலும் காணலாம்

உள்ளது போகாது, இல்லது வாராது .

அதாவது சக்தி, ஆன்மா போன்றன எ   போதும் உள்ளன. அவை அழியாது. தோற்றத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். மெய்கண்ட சிவனாரின் சிவ ஞான போதத்தின் மூன்றாவது சூத்திரமும் இதை விளக்கும்.

பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் இதை விரிவாக விளக்கும்.

–subham–

உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

tamilandvedas.com › 2013/02/14உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

Feb 14, 2013 · அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார்.

உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

முதல் முதலில் ஒரு விண்கலத்தில் இந்தப் பூமியை வலம் வந்தவர் யார்? என்று கேட்டால் பலரும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் என்றே சொல்லுவார்கள். கலைக் களஞ்சியங்களும் அப்படியே சொல்லும். அது சரியல்ல. த்ரிலோக சஞ்சரியான நாரதர் கிரஹங்களுக்கிடையே பயணம் செய்ய வல்லவர். ஆயினும் பூமியை வலம் வந்ததாக தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால் முருகப் பெருமான பூமியை வலம் வந்த குறிப்பை  அருணகிரிநாதர் எழுதிய திருவகுப்பில் தெளிவாகக் காணலாம். அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார். இதை கற்பனை என்று யாராவது கருதுவார்களானால் குறைந்தது இந்தக் கொள்கையை முதலில் சொன்ன பெருமையையாவது அவருக்குக் கொடுக்க வேண்டும்.

அருணகிரிநாதர் 500 அண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்போது உலகம் உருண்டை என்பது கூட மேலை நாட்டினருக்குத் தெரியாது. நாமோ வட மொழியிலும் தமிழிலும் பூகோளம் முதலிய சொற்கள் மூலம் துவக்க காலத்திலிருந்தே இதை உருண்டையானது என்று சொல்லிவருகிறோம்.

இதோ திருவகுப்பு பாடல்:

“ ஆகமம் விளைத்து அகில லோகமும் நொடிப்பொழுதில்

ஆசையொடு சுற்றும் அதிவேகக் காரனும்

இலகு கனி கடலை பயறொடியல் பொரி அமுது செயும்

இலகு வெகுகட விகட தட பார மேருவுடன்

இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற

எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்”  (திருவகுப்பு)

ஒரே நொடியில் உலகம் முழுதையும் சுற்றி வந்தார் முருகன். 1961  ஆம் ஆண்டில் ககாரின் ஒரு முறை பூமியை வலம் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று!!

***

இசைகேட்கும் ‘ஐ பாட்’ கருவியும் சிவபெருமானும்

ஐபாட் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லோரும் காதுகளில் இயர்போனை (ear phone) வைத்துக் கொண்டு இசை கேட்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அந்தக் காலத்தில் விமானத்தை ஓட்டும் பைலட்டுகள் இசைத்துறை இயக்குனர்கள் அல்லது டெலிபோன் துறையினர் பெரிய இயர் போன்களை காதுகளில் வைத்திருப்பதை பழைய திரைப்படங்களில் பார்த்தோம். இன்றோ இசைக் கருவி காதில் சொருகாத இளஞர்களே இல்லை.

சோனி நிறுவனத்தார் (Sony’s Walkman) வாக்மேன் கண்டுபிடித்த பின்னர் இப்படி எல்லோரும் இசைகருவியும் இயர் போனும் வாங்கினர். பின்னர் எம் பி 3 கருவிகள் ஐ-பாடுகள் வந்தன. உண்மையில் இந்தக் காதில் இசை கேட்கும் வழக்கத்தை உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவர் சிவபெருமான் தான். சம்பந்தர் தேவாரத்தின் முதல் பாடலான ‘தோடுடைய செவியன்’ பாடல் உரையில் இச் செய்தி உள்ளது.

கிருபானந்தவாரியார் ஒரு கதையை அடிக்கடி சொல்லுவார்.:  அஸ்வதரன், கம்பதரன் என்ற இரண்டு கந்தர்வர்கள் மிக அழகாகப் பாடுவர். ஆனால் அவர்களுக்கு ரசிகர்களே இல்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்து சிவ பெருமானை நோக்கி தவம் செய்தனர். சிவனோ வீணை வாசிப்பதிலும் சாம கானம் கேட்பதிலும் அதி சமர்த்தர்.  ஆகவே கந்தர்வர்கள் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க அவர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் எங்கள் இசையை நீங்கள் கேட்க வேண்டும் என்றனர். சிவன் அதற்கு இசைந்தார். ஆனால் நடை முறையில் இவர்களோடு எப்போதும் இருக்க முடியாதே!

சிவனுக்கு ஒரு யோசனை உதித்தது. உங்கள் இருவரையும் தோடுகளாகச் செய்து காதில் அணிந்து கொள்கிறேன். பாடிக்கொண்டே இருங்கள் என்றார். அவர்களுக்கு எல்லை இலா மகிழ்ச்சி. இப்போதும் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த எம் பி-3 பிளேயரையும் விட அதிக பேட்டரி அந்த தோடுகளில் இருக்கிறது. ஆண்டு முழுதும் சிவன் பாட்டுக் கேட்கிறார். இந்த ‘ஐடியா’தான் வாக் மேனாகவும் ஐ பாடாகவும் பிற்காலத்தில் பரிணமித்தது என்றால் பிழை ஏதும் இல்லையே!

உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி)  பேடண்ட் உரிமையும் கந்தனுக்கும் அவன் தந்தை முக் கண்ணனுக்குமே உரித்தானவை.

வாழ்க கந்தன்! வாழ்க சிவன்!

முந்தைய கட்டுரைகளில் லேசர் ஆயுதம் கண்டு பிடித்த பெருமையும் ஸ்டார் வார் ஆயுதங்கள் கண்டு பிடித்த பெருமையும் சிவனுக்கே உரித்தானவை என்று நிலை நாட்டி இருக்கிறேன். பறக்கும் செம்பு, வெள்ளி தங்கம் கோட்டைகளை நெற்றிக் கண்ணில் உள்ள லேசர் ஆயுதம் மூலம் தகர்த்தவர் சிவன்.. இதே போல பூமராங் ஐடியாவும் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தில் இருந்தே வந்தது என்பதையும் நிலை நாட்டி இருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரைகளில் முழு விவரமும் காண்க.

–subham—

tags -Space Travel ‘ஸ்பேஸ் டிராவல்’ பெரியாழ்வார் , நம்மாழ்வார் , அந்தணர் பிள்ளைகள் 

Leave a comment

Leave a comment