

Written by London Swaminathan
Post No. 15,287
Date uploaded in London – 19 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணகிரிநாதர் கேட்டது
உடுக்கத் துகில் வேணு – திருப்புகழ்
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் …… யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் …… வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி …… ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ …… தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக …… வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் …… வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு …… வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
உடுக்கத் துகில் வேணும் … உடுப்பதற்கு உடைகள் வேண்டும்.
நீள்பசியவிக்கக் கனபானம் வேணும் … பெரும் பசியைத் தணிக்க
உயர்ந்த சுவைநீர் வேண்டும்.
நல்ஒளிக்குப் புனலாடை வேணும் … தேகம் நல்ல ஒளிவீசும்
பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும்.
மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் … உடல் நோயை
அகற்ற மருந்துகள் வேண்டும்.
உள்இருக்கச் சிறுநாரி வேணும் … வீட்டுக்குள் இருக்க இளமையான
மனைவி வேண்டும்.
படுக்க யொர் தனிவீடு வேணும் … படுத்துக்கொள்ள ஒரு தனி
வீடும் வேண்டும்.
இவ் வகையாவுங் கிடைத்து … இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று
க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி … குடும்பத்தனாகி, அந்த
வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி,
நீடிய கிளைக்குப் பரிபாலனாய் … பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக்
காப்பாற்றுபவனாகி
உயிர் அவமேபோம் … முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும்.
க்ருபைச்சித்தமு ஞான போதமும் … கருணை உள்ளத்தையும்
சிவஞான போதத்தையும்
அழைத்துத் தரவேணும் … நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும்.
………………………………………………………
கதிர்காம மேவிய பெருமாளே. … கதிர்காமத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.
***
பாரதி கேட்டது
காணிநிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும், – அங்கு தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்கு கேணியருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் – நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும், – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந் தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் – எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள் கொண்டுதர வேணும் – அந்தக் காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன் காவலுற வேணும், – என்றன் பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.
***
வள்ளலார் கேட்டது
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
—Subham—
Tags: எனக்கு, வேண்டும் , என்ன, வள்ளலார், பாரதியார் அருணகிரிகாணி நிலம், ஒருமையுடன் நினது, உடுக்கத் துகில் வேணும்